கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label வரலாற்று சம்பவம். Show all posts
Showing posts with label வரலாற்று சம்பவம். Show all posts

26 May, 2013

இதயத்தை நொருக்கும்...! உலகை உலுக்கிய புகைப்படங்கள் !

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.
******************************
போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !


ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

******************************
வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

******************************

கற்பிழந்த இந்திய ஆர்மி !


மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.

******************************
பிரபாகரன் இல்லை !


"பிரபாகரன் இல்லை.. இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம் வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

******************************
ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !


செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன. அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

******************************

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு



இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.
******************************
தொகுப்பு : நன்றி தமிழ் இணையம்

02 December, 2012

அசைவற்று நின்ற சர்ச்சிலும்...! பன்னிக்குட்டி ராமசாமி புகைப்படமும்...!

 
ஒரு வரலாற்று நகைச்சுவை சம்பவம்.
 
இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த சமயம். அப்பொழுது ஒரு நாள் இரவு பி.பி.சி.யின் தேசிய ஒலிப்பரப்பில் சர்ச்சில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சில் பி.பி.சி. நிலையத்திற்கு புறப்படும் நேரத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. போரின் காரணமாக குண்டு மழை பொழிவதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

சாலைக்கு விரைந்து வந்த சர்ச்சில் வழியில் வந்த ஒரு டாக்சியை நிறுத்தி பி.பி.சி. நிலையத்திற்குப் போக வேண்டும் என்று கூப்பிட்டார்.

அதற்கு டாக்ஸி டிரைவர் டாக்சி வராது சார். இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்காகத்தான் நான் அவசர அவசரமாக வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன், என்றார்.

அதைக் கேட்ட சர்ச்சிலுக்குப் பெருமை பிடிபடவில்லை. தனது பேச்சுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் அந்த டாக்சி டிரைவருக்கு அன்பளிப்பு கொடுக்க நினைத்தார். உடனே தன் கோட் பைக்குள் கையைவிட்டு பத்து பவுண்ட் நோட்டு ஒன்றை எடுத்தார்.

வெளியே இருட்டு சூ‌ழ்ந்திருந்ததால் அவர்தான் சர்ச்சில் என்பதை அறியாத அந்த டாக்சி டிரைவர், சர்ச்சில் பணத்தை எடுத்ததைக் கவனித்ததும் அவர் கையிலிருந்த பணத்தை பிடிங்கியவாறு நீங்க வந்து உட்காருங்க சார். சர்ச்சில் பேசினால் பேசிக்கொண்டு போகட்டும். நான் உங்களைக் கொண்டு போய் பி்.பி.சி. நிலையத்தில் விட்டு விடுகிறேன், என்றார்.

சர்ச்சில் ஒரு நிமிடம் அப்படியே அசைவற்று நின்று விட்டார்.
 
***********************************************
 
 
அடுக்குமொழியில் கவிதையோ
அற்புதமாய் அறிவுரையோ
பலவடிவில் பஞ்ச் டயலாக்கோ
தற்போது சொல்ல போவதில்லை...
 
மனித குலம் வளர
மரம் வளர்ப்போம்...

******************************************************
 
funny-scraps-3

இதை பன்னிக்குட்டி ராமசாமியின் புகைப்படம்-ன்னு ஒருத்தர் சொன்னார்...
உங்களுக்கு தெரிஞ்ச அடையாளம் சரியா இருக்கான்னு பார்த்துக்கங்க....

24 August, 2012

இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்லிக்கொள்வது.. ( இது ஒரு எச்சரிக்கை பதிவு)


அன்புள்ளம் கொண்ட பதிவுல நண்பர்களுக்கு வணக்கம்...

வரும் 26-08-2012 அன்று நடைபெற இருக்கின்ற பதிவர் மாநாட்டிற்கு தங்களை மகிழன்புடன் அழைக்கிறேன்.

கடந்தவாரம் பதிவுலகில் நடந்த சிலபல சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் சங்கடப்படவும் செய்கிறேன். நாம் ஒன்றும் சாதாரண ஆட்கள் இல்லை அனைவரும் பெரிய பெரிய படிப்புகள் படித்தவர்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து உடையவர்கள். 

தங்கள் படைப்பு மற்றும் தங்களின் நல்லுள்ளத்தால் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள். அப்படியிருக்க தேவையில்லாத சில விஷயங்களை வைத்துக்கொண்டு கருத்துக்களால் போர் தொடுப்பதில் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இங்கு யாருக்கும் யாரும் சலைத்தவர்கள் இல்லை. படைப்பால் யாரும  மாமேதைகள் தான் இதை சண்டையிட்டுதான் நிறுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


அதற்காக பிரச்சனைக்குறிய பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ இருக்கூடாது என்று சொல்ல வரவில்லை அது எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 

தற்போது ஒரு பொது இடத்தில் கூடப்போகிறோம். அதுவும் இதுவரை முகம்கூட பார்க்காத பலரை அப்போதுதான் பார்க்கப்போகிறோம். அப்போது  நட்பும் பாராட்டி, அன்போடு அரவணைத்து பழகி நம்முடைய நட்பின் எல்லையை விரிவூபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நான்கு சுவற்றுக்குள், தனிமையில், சந்தர்ப்ப சூழ்நிலையில், சூரியன் அஸ்தமனத்திற்கு பின் யாரும் உத்தமர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை விட்டு வெளியில் வரும்போதும் நாம் நல்லவர்களாக ஒழுக்கம் உடையவர்களாவே காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உலகமும் அப்படித்தான் இருக்கிறது. இதில் யாரும் மாற்றுக்கருத்தை சொல்லிவிடமுடியாது.


தனிப்பட்ட ஒருவரின் மதம், பழக்கவழக்கங்கள், சொந்த விருப்பு வெருப்புகளில்  தலையிட யாருக்கும் உரிமைக்கிடையாது. நாம் கடைபிடிக்கும் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் மற்றவர்களை பாதிக்கவோ வெறுப்படைய செய்யவோ, முகம்சுளிக்க கூடிதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒரு தனிமனிதனின் கடமை. அந்த கடமையில் இருந்து எந்த ஒரு பதிவரும் விலகிவி்டகூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.


வயதில், பதிவுலக நுழைவில்,  ஆக்க சிந்தனையில், திறனில், வசதி வாய்ப்பில், வேலையில், உடல்பலத்தில் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அன்பு காட்டுவதில் அனைவரும் சமம் என்பதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.



நம் வாழ்க்கை பதிவுகள் ஒவ்வொறு மணித்துளியும் அடங்கும். அந்த மணித்துளிகள் நான் என்னவற்றை பதிவுசெய்கிறோம் என்பது மிகமுக்கியம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷயம் கலந்துவிட்டாலும் அத்தனையும் வீணே..! பலப்பேர் கூடியிருக்கும் அவையில் ஒருவரின் ஒழுங்கின்மை அந்த விழாவையே கலங்கடித்துவிடும். 

ஆகையால் முதல்முதலாக இவ்வளவு பதிவர்கள் சந்திக்கும் இந்தவிழாவில் முகம் சுளிக்கும் அளவுக்கோ அல்லது அநாகரீகமாகவோ யாரும் நடந்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது நம்முடைய முழுகடமை.

நாளைய வரலாற்றுக்கு இன்றைய சந்திப்பு ஒரு வசந்தகாலம் போன்றது. கலந்துக்கொள்ளும் நாம் யாவரும் இந்த நிகழ்வில் அன்பையே அடையாளமாக விட்டுச்செல்வோம். அப்போது தான் பிற்காலத்தில் இந்நிகழ்வு அசைப்போடதக்கதாக இருக்கும்.

இக்கருத்து என்னுடைய சொந்தக்கருத்து. இக்கருத்தில் கூட சிலருக்கு உடன்படு இல்லாமல் இருக்கலாம். அதையும் நாகரீகத்தோடு வெளிப்படுத்துங்கள்.

இன்றைய சந்திப்பை... நாளைய சரித்திரம் பேசவைப்போம்...!

பலம் அடைவோம்.. புதியஉலகின் தலைஎழுத்தை நிர்ணயிப்பவர்கள்  நாமாகக்கூட இருக்கலாம்....!


சென்னை வரும் பதிவர்களின் பெயர் பட்டியலை காண இங்கு சொடுக்கவும்.

09 August, 2012

வீடுதிரும்பல் மோகன் குமாரும், ஆவேசமடைந்த தாய்குலமும்...!



அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கு... வணக்கம்...!
கவிதைவீதியை பெருமைப்படுத்தும் விதமாக 500 பாளோயர்ஸ் இணைந்துள்ளனர். இம்மகிழ்ச்சி தருணத்தை தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்...


கவிதைவீதியில் 500-வது பதிவராக வந்தமைக்கு மரியாதைக்குரிய நண்பர்

 திரு. வீடுதிரும்பல் மோகன் குமார் அவர்களுக்கும்... 

கவிதை வீதியில் குடியேறியிருக்கும் 499 அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 நண்பர் திடம்கொண்டு போராடு சீனு அவர்களுக்கும்... அவர் (என்வலைதளத்தின் 499-வது விருந்தினர்...)


அதற்கு அடுதது பாயோயர் 501 என அடுத்த கணக்கை துவக்கி வைத்துள்ள
அவர்கள் உண்மைகள் குழுவிற்கும் எனது நன்றிகள்...!



 தங்களின் எதிர்பார்ப்பையும்,  நம்பிக்கையும் நான் என்றும் மறந்திடமாட்டேன். தங்களின் ஆதரவுக்கு என்றும் என் நன்றிகள்...!

*******************************************

ஒரு வரலாற்று சம்பவம்...

தேச பக்தர் திருக்கூடசுந்தரம் பிள்ளை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

திருக்கூடசுந்தரத்தின் நண்பரான யக்ஞேசுவர சர்மாவுக்கு திருக்கூடசுந்தரம் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. திருக்கூடசுந்தரத்தின் வயது முதிர்ந்த அன்னை கவலைப்படகூடும் என்று எண்ணிய அவர், திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசிக்கும் திருக்கூடசுந்தரத்தின் தாயாரைச் சென்று சந்தித்தார்.

உண்மையில் அம்மையாருக்கு யக்ஞேசுவர சர்மா ஆறுதல் கூறினார். “இதைப் பற்றிப் பெரிதாக கவலைப் படாதீர்கள். இனிமேல் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்று திருக்கூடசுந்தரம் எழுதிக் கொடுத்துவிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவார்கள்” என்றார் சர்மா.

அந்த பதிலைக் கேட்ட திருக்கூடசுந்தரத்தின் தாயார் ஆவேசமடைந்தார். ”மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு கோழையாகத் திரும்பி வருவதற்கா என் மகன் சிறைக்குச் சென்றான்.? என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? மறந்தும் கூட இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான யோசனைகளை என் மகனைச் சந்தித்தால் சொல்லிவிடாதீர்கள்..! இந்த ‌மாதிரியான யோசனையை அவன் காதில் கூட போட்டுக் கொள்ள மாட்டான்” என்றார்.

திகைப்பினாலும், வியப்பினாலும் யக்ஞேசுவர சர்மா செயலற்று நின்றுவிட்டார்.


*******************************************
ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.....

அன்புடன்..
கவிதைவீதி செளந்தர்..
திருவள்ளூர்.
9042235550  9443432105
Related Posts Plugin for WordPress, Blogger...