கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சமூக அவலம். Show all posts
Showing posts with label சமூக அவலம். Show all posts

13 April, 2018

அம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...

திரை உலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ ரெட்டி பல்வேறு பிரபலங்களுடன் மிகவும் கீழ்தரமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார்...

அந்த சாட்டிங் தகவல்கள் தற்போது சிவா வர்ஷா அவர்கள்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்....





17 June, 2013

காதலில் இப்படிகூடவா நடக்கும்...! துணைப்போகும் தகவல் தொடர்புகள்..!

 
கண்டதும் காதல் என்பது போய், காணாமலே காதல் கொள்ளும் தன்மைகள் வளர்ந்து, இன்று விபரீதங்களை விளைவித்து வருகின்றன. 
 
பேஸ்புக், தொலைபேசி, அலைபேசி காதல்கள், வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற வாழ்வும் சீர்குலைந்து வருகிறது. தன்னுடன் படித்த சக கல்லூரி மாணவனைக் காதலித்து, அதன் பின், பேஸ்புக் மூலம் குறுந்தகவல்களை அனுப்பி பழகத் துவங்கியதும், ஏற்கனவே, காதலித்தவனை விட்டு விட்டு, பேஸ்புக் மூலம் நண்பனானவனை, பெண்ணொருத்தி காதலித்ததன் விளைவு, கொலையில் முடிந்ததை, ஓர் மாணவன் கொலை நிகழ்வு சொன்னது.

அலைபேசி மூலமாக, சுகாஷ் எனும் ஆண் சொன்ன ஆசை வார்த்தையை நம்பி மோசம் போனது, வழக்குகளில் சிக்கி, கைதாகி, சிறையிலிருக்கும், நடிகை லீனா மரியா பாலின் காதல் வாழ்க்கை அறிவுறுத்தியது.
 
காதலித்து கலப்புத் திருமணம் செய்து, இரு சமூகங்களும், இரு கட்சிகளும் மோதிக் கொள்ளும் அளவிற்கு, தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசனும், திவ்யாவும் திருமணம் செய்து கொண்ட, 10 மாதங்களுக்குப் பின், பிரிந்து வாழத் துவங்கிய காதல் வாழ்வையும், சமீபத்தில் தமிழகம் கண்டது.
 
காதலித்தவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து, அவன் வீட்டின் முன்னே போராட்டத்தில் ஈடுபடும் பெண்களும், சில நேரங்களில் காதலித்தவனோடு கொண்ட தகாத உறவின் காரணமாக, பிறந்த குழந்தையுடன் போராடும், காதலில் ஏமாந்த பெண்களின் எண்ணிக்கையும், அதிகரித்த வண்ணம் உள்ளன.



"காதல் காதல் காதல்; காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்ற முன்னோர் மொழி, கொலை, தற்கொலை என, வெவ்வேறு வடிவங்களில் வருவது ஆபத்தானது.
 
பெற்றோர் சொல் கேளாமல், முன்யோசனைகள் எதுவுமின்றி, ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு, காதலனாலும், காதலியாலும் மோசம் போவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இதனால், கலவரங்கள் வெடிக்கவும், கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளவும், அமைதியற்ற சூழல்கள் ஏற்படவும், நவீன யுகக் காதல்கள் காரணிகளாகிப் போயுள்ளன.
 
காதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல! அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது. 
 
அகத்தை அறிவிக்காது, முகத்தை மட்டுமே அறிவிக்கும் முகநூல் காதல்களுக்கும்; அகத்தை அறிவிக்காது, ஆசை வார்த்தைகளை மட்டுமே அறிவிக்கும், அலைபேசி காதல்களுக்கும் விடை கொடுத்து, மனம் ஒத்த காதலை வரவேற்க, இளையோர் முன் வருவார் எனில், வாழ்வாங்கு வாழலாம்.

08 May, 2013

இது கள்ளக் காதலைவி்ட மோசமானதாக இருக்குதே..!


உன்னை  மறந்து 
விழிகள் தூங்கினாலும்...
இதயமொன்னவோ
விழித்துக் கொண்டுதான் இருக்கிறது...

######################################################


எனக்குத் தெரியாமலே 
ஏதேதோ நடந்து விடுகிறது...
காதல் உள்பட... 

######################################################


வார்த்தை வசமிருந்தும் 
“கவிதை“ எழுதவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்காதாம்...

####################################################


 உன்னிடம் 
நிறைய பேச வேண்டும்
ஒரே வார்த்தையில்....

#################################################

 
 
எவ்வளவு நேரம்
என்றாலும்
உனக்காக காத்திருப்புகள்
எனக்குள் சுகமானவை...

############################################################ 

 

பயமில்லை...!
வலிக்கு பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 

பயந்திருக்க வேண்டும்..

############################################################


காதல் மென்மையானது
ஒரு துளி கண்ணீர் கூட
அதற்கு சுமைதான்...
###########################################################

படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..
கவிதை என்னுடைய காதல் கவிதைகள்....
படங்கள் நாட்டுக்கு கேடான சங்கதிகள்...

இந்தமாதிரியான காதலை ‌என்னவென்று சொல்வது....
(Re-Post)

02 January, 2013

உண்மையில் ரஜினியா இப்படி சொன்னது...! நம்பமுடியவில்லை...!


புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது.

கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.


சைதாப்பேட்டையில் சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து ரசிகர்களை நேற்று சந்தித்து புகை பழக்கத்தை விட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறினர். ரஜினியிடம் ரசிகர்கள் கூறும்போது, தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள் என்றனர்.


இதற்கு ரஜினி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் மேலும் நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர்.
 
 

உண்மையில் கொண்டாட வேண்டிய செய்திதான் இது. இன்னும் இருக்கும் அனைத்து பிரபலங்களும் சமூதாயத்தில் சில தீய பழக்கங்களை மக்களிடம் இருந்து அறவே ஒழிக்க முன்வரவேண்டும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள். இவரே மரணத்தின் தருவாய்வரை சென்று வந்தவர். இவருடைய அறிவுரை என்பது அனுபவத்தினால் வந்தது. 


கோடிகோடியாய் பணம்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியே இந்தபழக்கத்தை விட்டுவிட்டார் என்றால் சாமானியர்களுக்கு இந்த பழக்கம் எதற்கு...

புகையில்லா இந்தியா செய்வோம்...!

10 December, 2012

யாவரும் சந்திக்கும்... இராத்திரி நேரத்து இம்சைகள்...



ண்ணீரால் நனைந்த 
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...

“தயவுசெய்து செய்வதாய் சொன்ன 
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”


நிலை அறிந்தும் 
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...

“தேர்வுக்கட்டணம் செலுத்த 
இந்த வாரம்தான் இறுதி”


யங்கியும் தவிப்போடும் 
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..

“நேற்றோடு மாத்திரைகள் 
தீர்ந்துப்போனது..”

ந்த நாள் முதல் 
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை 
கண்னை கசக்கிகொண்டு மனைவி சொல்கிறாள்...

“உங்க வீட்டார்க்கே 
‌எல்லாத்தையும் செய்றீங்க”

கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை 
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
ன் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்...


இந்த கவிதை உங்களை பாதித்திருந்தால் 
அந்த பாதிப்பை இங்கே பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்..

-மீள் பதிவு-


05 November, 2012

தினமலரில் அரசு செய்தியும், அதிர வைத்த கருத்துக்களும்.


 //////////// தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ////////// என்று தினமலரில் ஒரு ‌அரசின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது...


அந்த செய்தியை படித்த நான், அந்த செய்தியில் வாசகர்கள் தந்த சில கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...

அவைகள் சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும், சுவாரஸ்யமாக இருந்தது அவைகளில் நான் ரசித்தவைகள் மட்டும் கீழே....

//////////s.maria alphonse pandian - chennai , இந்தியா
04-நவ-201211:11:03 IST Report Abuse
s.maria alphonse pandian எதற்கெடுத்தாலும் புரட்சி தலைவியை குறை சொல்வதெற்கென்றே ஒரு கூட்டம்....தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டாலும் தடையில்லா மது வழங்குகிறாரே...அதை பாராட்டலாமே? கல் நெஞ்சுகாரர்கள் ...///////////////

//////p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-நவ-201210:49:43 IST Report Abuse
p.manimaran சீக்கிரம் குடிச்சிட்டு சாவுங்கடா?? நாட்டில் மக்கள் தொகை குறையட்டும்.  ////////////

7malai - Chennai,இந்தியா
04-நவ-201209:46:21 IST Report Abuse
7malai பிள்ளைகளுக்கு 13 வகை உணவு வழங்கவேண்டுமானால் அப்பனிடம் இப்படி காசைப்பிடுங்கிதானே ஆகவேண்டும்.



AyyalurMagideshwaran - Muscat,ஓமன்
04-நவ-201209:15:00 IST Report Abuse
AyyalurMagideshwaran குடிச்சி குடிச்சி குடலெல்லாம் அரிச்சு, சந்துலயும் சகதிலயும் சாஞ்சு கெடந்து, மான மருவாதியெல்லாம் எழந்து, முடிவெடுக்க முடியாதபடி மூளையும் ஒருநாள் மக்கிப்போய் நீ சாகக்கிடக்க ரெண்டு நாளைக்கி முன்னாடியே தேர்தல் வரும்... அப்பவும் கூட நன்றிக்கடனா மீண்டும் இதே ஆட்சிக்கு ஓட்டுபோட்டுட்டு செத்துப்போவாயடா ஞானக்குடிமகனே...


SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
04-நவ-201208:41:00 IST Report Abuse
SENTHIL KUMAR (தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது) வாவ் சூப்பர்.. இது ஒரு நல்ல இலக்கு உங்கள் இலக்கு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.ஓட்டு போட்ட குடிமக்களின் ஆசையை நிறைவேத்தும் முதல்வர் அம்மா அவர்களே நீர் வாழ்க. 


arun kumar - UK,யுனைடெட் கிங்டம்
04-நவ-201208:10:11 IST Report Abuse
arun kumar ஜனநாயகக் கடமையாற்ற வாரீர் குடிமகன்களே ...




s.maria alphonse pandian - chennai ,இந்தியா
04-நவ-201206:44:25 IST Report Abuse
s.maria alphonse pandian நல்ல வேலை...காந்தி பிறந்த நாளன்று கடைகளை மூட மத்திய அரசின் ஆணை உள்ளது...இல்லாவிட்டால் அன்றைக்கும் 125 கோடிக்கான இலக்கை நிர்ணயித்திருப்பார்கள்...இந்த "டாஸ்மாக்" ஆட்சியாளர்கள்...


"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
04-நவ-201206:23:06 IST Report Abuse
தமிழனை தப்பவிடகூடதுன்னு "target" வச்சு அடிக்கிறான்யா..... ஆஹாஆ

saravanan - Tuas South Ave 06,சிங்கப்பூர்
04-நவ-201206:09:42 IST Report Abuse
saravanan இதுவும் அம்மாவின் ஓராண்டு சாதனையோ? தடையில்லா மின்சாரம் கேட்டா,நீங்க தடையில்லா மதுபானம் கொடுக்குறீங்க பெருமையா இருக்கு.குடிப்பவனை யாராலும் திருத்த முடியாது,குறைந்ததது அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுக்காமல் இருந்தால் போதும்.நீங்க செய்ற இந்த சாதனை இன்னும் பல குடிமகன்களை தமிழ்நாட்டுக்கு பெற்று தரும் என்பது என் கருத்து
ammaiyatimai - chennai,இந்தியா
04-நவ-201205:58:45 IST Report Abuse
ammaiyatimai அண்டா குண்டானவ அடகு வச்சு பத்தல பத்தல பத்தல மப்பு பத்தல. போத இறங்கி போச்சு பைத்தியம் புடிச்சி போச்சி என்ன செய்ய இப்ப......... அம்மா ஆயியம்மா விலையில்லா ஒரு கட்டிங் குடும்மா.................ஓம் கிரீம் கிலீம் மிடாஸ் ச்வாஹா..........புத்தி கெட்ட தமிழன் மரண குழிக்கு போஹா....

லாடு லபக்கு தாஸ்... - லாடு லபக்கூர், இந்தியா
04-நவ-201201:45:38 IST Report Abuse
லாடு லபக்கு தாஸ்... தீபாவளியன்று "சரக்கு&39 விற்பனை இலக்கு ரூ.125 கோடி என்பது போதுமானதாக இல்லை../// மேலும் முயற்சி செய்தால் 250 கோடி இலக்கை எளிதாக அடையலாம்..//

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:08:56 IST Report Abuse
tamil Selvan எல்லா மக்களுக்கும் விலையில்லா குவார்ட்டர் கொடுத்தா மின்சாரம் இல்லா நேரத்தில் கொசு கடி தெரியாமல் தூங்கலாம்,அரசின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கவே மின்வெட்டை அமல் படுத்துகிறார்கள். 

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:03:17 IST Report Abuse
tamil Selvan தமிழ்நாட்டில் எது தட்டுப்பாடு வந்தாலும் இவர்களுடைய மிடாஸ் கம்பெனி சரக்குக்கு மட்டும் தட்டுப்பாடே வராது.தீபாவளி வருது பிறகு கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பொங்கல் எல்லாம் வருது என்ஜாய் பண்ணுங்க மக்கா.


தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-201202:57:28 IST Report Abuse
தமிழவேல் ஆனா சரக்கு தரலைன்னா குடிமகன்க கிட்டேருந்து 70 கோடி கறக்க முடியாது......

Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
04-நவ-201203:18:46 IST Report Abuse
Sentamil karthikஒழுங்கான நிர்வாகம் கொடுக்க கூடியவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் ( இதை இன்னொரு முறை படியுங்கள் )... // இதை தான் இதையே தான் நானும் சொல்கிறேன் ... எங்கு கேட்கிறார்கள் அவர்கள் கண்களுக்கு கருணா , ஜெயா தவிர மற்றவர்கள் தெரிவதில்லை ... திமுக அப்படி செய்தது என்றால் அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா ?? என்கிறார்கள் .. இரண்டும் பணம் தின்னி கழுகுகள் என்று யாவரும் நன்கறிவர் ... இருப்பினும் அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றி போடுவார்கள் ..நேர்மை , மனசாட்சி , தன்மானம் போன்றவை முதலில் இந்த கற்றோர் சபையான தினமலர் வாசகர்களிடமே இல்லை .. அப்பறம் எப்படி மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ???...

அந்த பக்கத்தை பார்க்க

//////////....இது என்னுடைய கருத்து....////////

ஒரு நாடும்  அந்த நாட்டின் அரசும் மக்களுக்கு எது நல்லதோ எது அவசியமோ அதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நாட்டில் இருந்து போதைப்பழக்கத்தை அறவே நீக்கிவிடமுடியாது அது சாத்தியமில்லாத விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியை துவங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இலைறை காய் மறைவாக இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவான விஷயம்போல் ஆக்கியிருப்பதுதான் வேதனைக்குறியதாக இருக்கிறது.

குடியில்லாத சமுதாயம் செய்வோம்.....

22 August, 2012

இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்...!



தெரு‌வோரம் வீசிய தென்றல்
ஓலை குடிசைக்குள்ளே
ஓய்யாரமாய் புகுந்தது...
 

குறைவான எண்ணெய்யிலே
கண்சிமிட்டியது
வீட்டு மூலையில் காடை விளக்கு...
 
சிக்கு வெந்நீர் குடித்து
தாயின் பாதி மாராப்பி‌லே
தாலாட்டு கேட்டது பச்சிளங்குழந்தை...


ட்சிக்கு ஓட்டிட்டு - தன்
ஆடை ஓட்டைகளை மறைக்க வழியில்லாமல்
நாணி குனிகிறாள் இளம்தாய்...
 
வாழ்க்கை தூரத்தில்
எங்களை வாட்டிடும் ‌எல்லைகள்
வறுமை... வறட்சி... பசி... பட்டினி...
 
ந்து மாத கருவிலே
கணக்கெடுக்கப்படட நாங்கள்

மொழி்யென்று எங்களை முழம் தள்ளி
இனமென்று எங்களை இடம் தள்ளி
ஜாதி மாதமென்று எங்களை
மண்ணில் தள்ளி...

ருவம் இழந்து
எங்கள் உணர்ச்சி இழந்து
புழுவுக்கும் பூச்சிக்கும்  
இரையாகிறோம் நாங்கள்..!
 
தயம் நொந்து
எங்கள் இமைகள் நொந்து
வயிற்றுப் பசிக்கு பஞ்சணையிட்டு..
 
நாளும் காலத்தால் அழிவாகும்
எங்கள் கண்ணீரால் நனைகின்ற
எனதருமை தாய்நாடே...


நாங்கள் வாழ்வதற்காக பிறக்கவில்லை...
ஏதோ பிறந்ததற்காக வாழ்கிறோம்...

02 August, 2012

மதுபான கடை விமர்சனம்



கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தி என்னவென்றால் டாஸ்மாக் பற்றியதுதான். தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15 அன்றோ அல்லது அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ‌ஜெயந்தி அன்றோ அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளையும் மற்றும் விவாதங்களும் மறைமுகமாக அரசு நடத்திக்கொண்டிருப்பாக ஊடங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விவாதம் பல்வேறு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ராம்தாஸ் அவர்களும், மதிமுக வைகோ அவர்களும் தமிழத்தில் டாஸ்மாக் கடைகளை அறவேநீக்கி மதுவிலக்கை முழுமையாக கொண்டுவரவேண்டும் என்று வலியுருத்திவருகிறார்கள்.

அண்ணாவின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் திமுக-வும், மற்றும் அதிமுக-வும்தான் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகின்றன. மதுவின் பிடியில் சிக்கி லட்சக்கனக்காக இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்..



நாட்டில் நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசுகளே, வீதிகள்தோறும் மதுபான கடைகளை திறந்து “குடி“மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  தற்போது மதுவின் பிடியில் இருந்து மீள முடியாத அளவுக்கு பல இளைஞர்களை குடிகாரர்களாக்கியதுதான் தமிழகஅரசுகளின் சாதனைஇருந்து வருகிறது.

தமிழகத்தில் கிட்டதட்ட 6 ஆயிரத்திற்க்கும் இதிகமான டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கடைகளை அரசே ஏற்று நடத்துவது என்பதான் இதுவரை யாராலும் சகித்துக்கொள்ள முடியாத விஷயமாக இருந்துவருகிறது.
இன்றை அனைத்து தவறுகளுக்கும் துவக்கமாக இருக்கும் இடம் இந்த மதுபானகடைதான். கடந்த சிலவாரங்களாக கூடுதல் மதுவிற்ற பலரை காவல் துறை கைதுசெய்து வருகிறது. குடிப்பதற்கு பணத்தேவைக்காகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவருகிறது. சிறுமி, குழந்தைகளைக்கூட பலாத்காரம் செய்யும் ஈனத்தனம் இந்த குடித்தவர்களுக்கு மட்டுமே வருகிறது.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தை விட குடிப்பதால் ஏற்படுகின்ற விபத்துக்கள், நோய்கள், சமூக சீர்கேடுகள், சமூகக்குற்றங்கள் என இவைகளுக்கு அரசு அந்த வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறது.

கடந்த இந்த ஆறுமாதத்தில் தமிழக சாலைவிபத்துகளில் 73 சதவீத விபத்துக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்றட்டதாகும் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


தற்போது 16 வயது நிரம்பிய கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் சமூக ஆர்வளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ஆகையால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வந்தால் அதை தமிழக மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி வருவேற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

வணக்கம் மக்களே...! மதுபானகடை விமர்சனம் என்று உங்களை அழைத்ததின் உள்நோக்கம் ஏதோ ஹிட்ஸ் எடுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது தற்போதைக்கு தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனை இது என்பதால்தான்.  எனவே தங்களுடைய கருத்தை விரிவாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

23 July, 2012

நீங்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்...!



அடுக்கடுக்காய் தவறுகள் செய்துவிட்டு
அதையும் சரி என்று நியாயப்படுத்தும்
ஆறறிவு அற்பர்களை கண்டு மனம் கொதிக்கிறீர்களா..?


வகுத்து வைத்த விதிகள் எதையும் 
சட்டைசெய்யாதவரின் சட்டையை பிடித்து
இரு கன்னத்திலும் அறைய நினைக்கீறீர்களா..?


பாதியில் மரணமென்று தெரிந்தும்
‌பேருந்தில் படிக்கட்டில் பயணிக்கும் வம்பர்களை
வீதியில் வைத்து தண்டிக்க  துடிக்கிறீர்களா...?


கால்கடுக்க முறையாய் வரிசையில் நிற்போரிருக்க
அத்துமீறி குறுக்குவழியில் நுழைவோரை
பொருத்துக்கொள்ள சகியாமல் சபிக்கிறீர்களா...?


தன்கடமை செய்யவே லஞ்சம்  கேட்கும்
கயவர்களைக்கண்டு விட்டுவிடத்தோணாமல்
அவர்களை அப்படியே சுட்டுவிடத் தோன்றுகிறதா....?


நவநாகரீகம் என்ற போர்வையில்
தினம் நாட்டை பாழ்படுத்தும் பதர்களை
பார்க்க சகிக்காமல் மனவேதனை அடைகிறீர்களா..?


காவிநிறம் பூண்டு பக்தி என்ற வேடத்தில்
கடவுள்களையும் மீறி எழுச்சிப்பெறும்
இழிவானவர்களை கண்டு உமிழ்கிறீர்களா...?


புனிதம் நிறைந்த அரசியலை கலங்கடித்து
நல்லர்களாய் காட்டிக்கொள்ளும் நயவஞ்சகர்களை
வாய்ப்பு கிடைத்தால் சாக்கடையில் போட நினைக்கிறீர்களா...?


மனிதர்களாய் பிறந்துவிட்டதை மறந்து
பகுத்தறிவு வழியில் பயணிக்காத யாவரையும்
விலங்கினும் கீழானவர்கள் என்று நினைக்கிறீர்களா..!


சந்தேகம் வேண்டாம்.. தோழரே...
நீங்களும் நானும்
ஓர் இனம்தான்....




கவிதையின் வேர்... :
அநியாயங்களையும், அக்கிரமங்களையும் 
கண்டு உன் மனம் கொதித்தால் 
நீயும் என் தோழனே! 
–சேகுவேரா.

18 July, 2012

இதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...!

வணக்கம் மக்களே...! அனைவரும் நலமா..!


பதிவுலகை விட்டு கொஞ்ச ஓய்வுக்கு பிறகு தற்போது திரும்பியிருக்கிறேன். ராஜி அக்கா மட்டும்தான் I CAME BACK - ன்னு பதிவு போடுவாங்களா..!  நாங்களும் அப்படி போடுவோம்ல என்று தெரியப்படுத்தத்தான் இந்த பதிவு. நானும் திரும்பியாச்சிங்க...


இந்த படத்தைப்பாருங்க அப்படி என்னதான் மேஜிக் இருக்குன்னு தெரியல.. அசையறமாதிரியே தெரியுது ஒரு வேளை... நான் கண்டாக்டரை பார்க்கனுமா இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் தெரியுதா ?  எல்லோருக்கும் இந்த படம் அசையறமாதிரி இருந்தா நான் பயப்படவேண்டியதில்லை...


பார்க்கிறேன் பதிவுலகம் என்ன சொல்லபோகிறது என்று..? ( அம்மாடி தலைப்பை ஒரு வழியா பதிவுல போட்டாச்சி....)
....

13 December, 2011

The Dirty Picture (New Year Special)

2011-ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். உலக நாடுகள் 2012-ம் ஆண்டை வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் நாம் முல்லைபெரியாறு பிரச்சனை, கூடங்குள அணுமின் நிலைய பிரச்சனை, மீனவர் தாக்கப்படுகிற பிரச்சனை, விலை உயர்வு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

 இந்த பிரச்சனைகளை சந்திக்கும் நம் தமிழ்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தவே இந்த பதிவு...  விரைவில் எல்லா பிரச்சனைகளும் முடிவுபெற்று புதிய வருடத்தை வரவேற்போம்...

(பதிவர்களான தங்கள் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். 
யாரும் தப்பா எடுத்துகாதீங்க...)

 
அச்சச்சோ.. சேரு பட்டுடிச்சா...
அழாதேம்மா... அப்புறம் மனோ கத்தி எடுத்துகிட்டு வரபோறாரு...

சன்டேவில் கூட எங்களை நிம்மதியா இருக்க விடாம பண்ற இந்த கரண் சாரு வீட்டை இப்படித்தான் அசிங்கப்படுத்தணும்....

யாரும்மா அது...  சேற்றில் இப்படியா ஆட்டம் போடுறது...
இப்படியே குளிச்சிட்டுகிட்டு இருந்தே...
அப்புறம் நம்ம விக்கி அண்ணன் கிட்டே சொல்ல வேண்டியிருக்கும்..

ஐயா.. கணேஷ் ஐயா... வண்டியை இப்படியா வச்சிகிட்டு இருக்கிறது...
அதில் மின்னல் வரிகள் மாதிரி யாரோ எழுதியிருக்காங்க பாருங்க...
சீக்கிறம் கழுவிடுங்க தல....


வீட்ல இருக்கிற துணிகளை துவைக்காம... ஒரு கில்மா படம் விடாம பார்த்துகிட்டு இருந்தா எப்படிங்க...
(சிபி செந்தில் குமாரிடம் அவரது மனைவி)

உணவு ஆபிஸர்.. அவரது பொண்ணு நிச்சயதார்த்த  வேலையா பிஸியாயிட்டாரு..
நம்மள கண்டுக்க யாரும் இல்ல...

தம்பி சசி.. டுடே லொள்ளுக்கு என் படத்தை போட்டா என்ன...
நான் நல்லா லொள்.. லொள்.. ன்னு குறைப்பேன்..
வேணும்ன்னா பாரு... லொள்... லொள்...

யோவ்... ராஜபாட்டை ராஜா இப்படி வீட்டை கூட சுத்தம் செய்யாம என்ன எப்ப பார்த்தாலும் விஜயை புடிச்சி இம்சைபடுத்திகிட்டு இருக்கிற...


தம்பி... கோகுலு... அப்படி என்ன விஷேசம் இந்த கிளாஸை பத்திரமா வச்சிருக்கே...
பார்த்து..? அப்புறம் பாண்டிசேரியில் குடியேற வேண்டியிருக்க போகுது...

இது மாதிரி புகையை விட்டு காற்றை பாழ்படுத்துறாங்களே....
ஐயா இராமாநுசம் ஐயா இதுக்கு நல்லதா... நாலுபேருக்கு உரைக்கிற மாதிரி ஒரு மரபு கவிதை எழுதிபுடுங்க ஐயா..!


எப்புடி... நான் தமிழ்வாசி பிரகாஷ் போல டெரரா இருக்கேனா...


மிஸ்டர் பன்னிக்குட்டி என்ன இந்த கீபோர்டை இப்படி வச்சியிருக்கீங்க...
நல்ல டாக்டரா பார்த்து காட்டுங்க...

அண்ணே ரஹீம் கசாலி அண்ணே இந்த ஆட்சியிலே நம்ம ஏரியா எப்படி இருக்கு பாருங்க...

இதுக்கு காட்டமா ஒரு பதிவு போடுங்கன்னே...!


எவ்வளவு காலம் ஆனாலும் எங்களுக்கு விடிவே இல்லையா....
உணவுக்குதான் பஞ்சம், தண்ணீருக்குமா..?
- குழந்தையை பார்த்து மனம் ‌கொதிக்கிறார் தமிழ்பேரண்ஸ் சம்பத்குமார்.

இது மாதிரி தற்போதைய அரசியல்வாதிகள் இருந்துவிட்டால் 
நல்லாதானே இருக்கும்... By..  பாட்டு ரசிகன்.

எப்படியோ என்னால முடிஞ்ச அளவுக்கு கலாய்சாச்சி....
மக்களே.. தங்களுக்கு என் நன்றிகள்..
Related Posts Plugin for WordPress, Blogger...