கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

14 January, 2016

பிரியாணி மாஸ்டர் பொங்கல் செய்தா எப்படியிருக்கும்..!


பிரியாணி மாஸ்டர பொங்கல் செய்ய சொன்னது தப்பா போச்சு..

ஏம்பா? என்னாச்சு?

பொங்கல் பொங்கி முடிச்சவுடனே மூடிய வச்சி மூடி 
அதுமேல நெருப்போட அடுப்புகரியப் 
போட்டு 'தம்'முல வச்சிட்டாரு.!..
**************************************


"புரட்சி வெடிக்கப் போகுதுன்'னா 
தலைவருக்குப் புரிய மாட்டேங்குது! "

"என்ன பண்றார்? "

"ரெண்டு காதையும் பொத்திக்கிறார்! "

**************************************


ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: !!!!!!
**************************************


"இந்தக் கால பசங்க 24 மணி நேரமும் 
வாட்ஸ்அப்-ல அடிமையாயிட்டாங்க தலைவரே!":

"நான்லாம் அந்தக் காலத்துல லாக்அப்-லதான்
அடிமையா இருந்தேன்!"
**************************************


ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… 
ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?

நோயாளி : டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
**************************************


நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. 
அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
**************************************


ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான 
காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. 
அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...

மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. 
நீங்க கவலைப் படாதீங்க.

**************************************


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

31 May, 2013

அறிவாளிங்க திமிரா பேசுவாங்களா...? ம்.. பேச்சி பேச்சாத்தான் இருக்கனும்...!


என்ன மச்சி பேச்செல்லாம் திமிர்த்தனமா இருக்கு?

”அறிவாளிங்க கொஞ்சம் திமிராத்தான் மாப்பு இருப்போம்”

போடா முட்டாப்பயலே

“என்ன மாப்பு, திமிரா?”

நீதான மச்சி சொன்ன அறிவாளிங்க கொஞ்சம் திமிராத்தான் இருப்போம்னு அதான்..

நாங்களும் அறிவாளின்னு காட்டணும்ல

“அறிவாளிங்க எதைச் சொன்னாலும் உடனே நம்ப மாட்டோம் மாப்பு”

“????”

*****************************************


X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....

ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி, சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு.

போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான், ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு, நாளிக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான். தன் நண்பனிடம் கேட்க அவனும் "அதனால என்னடா... வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி செஞ்சி போட்டுகிட்டான் X.

ஒரு மாசம் கழிச்சி X ன் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம் போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற வழியில தானே நம்ம நண்பன் Y வீடு அங்க ஒரு அரை மணி நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன் கிட்ட கேட்டான்.... Y வாயிலேயே வயலின் வாசிச்சி "ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்டே புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்.

# பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம் மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா, நான் பெரியவனான்னு கப்பித்தனமா சண்ட போடாம போய் புள்ளைகுட்டிகள படிக்க வைங்க...#

*******************************************



மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.

இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது.

அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்!

ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...

"இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை.

ஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்! ஜெயித்தால் ஆடாதீர்!

********************************


 

அய்யோ போச்சேன்னு யாராவது பெருமூச்சி விட்டிங்க அவ்வளவுதான்...
இந்த ஆட்கொள்ளிகளை உலகம் முழுவதும் ஒழிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை....

(முகநூலில் தொகுத்தவைகள்)

25 May, 2013

எப்படி புரிஞ்சிக்கிட்டாலும் சிரிப்புதான்...! / Weekend special Jokes


"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"

"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"

"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."

"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."

"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"


என்ன சொல்றீங்க, உங்க வீட்டுக்காரரை தினமும் திட்டுனீங்களா? ஏன்?"

"நீங்கதானே டாக்டர் மருந்து எழுதிக்கொடுத்து, தினமும் ஒரு டோஸ் கொடுக்க சொன்னீங்க!"


சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”

அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”

நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?” 
 

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சுப்ரமணியசாமி.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டு கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,

"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால்,

நீ ரொம்ப அழகாயிருப்பே,

அப்புறம்,

வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் நல்ல கருப்பாகிவிடும் ­....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு நம்ம சுப்ரமணியசாமி சொன்னார்,

"மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!

LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!

LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?
நல்லது மக்களே...!

01 April, 2013

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி...! திமுக தலைவராகிறார் அழகிரி..! தமிழகத்தின் தற்போதைய பரபரப்புகள்..!

உலகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் பொய்யான தகவல்களைக் கூறி ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயல்வது சகஜம். மேலும் வதந்தி பரப்புவதற்கும் இந்த நாள்தான் உகந்தது என்பது மக்களின் கருத்தாகும்..

முதன் முதலில் பிரான்ஸில்தான் இந்த ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடியுள்ளனர். உண்மையில் இது முட்டாள்கள் தினமாக முன்பு இருந்ததில்லை.

ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16-ம் நூற்றாண்டில் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 

1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. 

எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர். அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1-ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். 

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு. ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர். 

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள். 

அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு. 

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005-ம் ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. 'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ஜோக் என்றது நாசா. 

அதேபோல் 2003-ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது. 

ஆனால், வரலாற்றில் ஏப்ரல் - 1 என்ற தினத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை அறிவித்தபோது அதை பெரும்பாலானவர்கள் நம்பவில்லை. முட்டாள்கள் தினத்தை ஒட்டி போலி அறிவிப்பை செய்வதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மையில் அதே தினத்தில் இருந்துதான் அந்த சேவை தொடங்கப்பட்டது. 

அதோடு இந்திய ரிசர்வ் வங்கியே இந்த நாளில் தான் 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆக, முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு. 

ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். (தொகுத்தவை).

டிஸ்கி : ஓ.. தலைப்பா...? உலகத்துல இம்பும்டு பேர் இப்படி செஞ்சியிருக்காங்க நான் ஒரு தலைப்பு இப்படி போடக்கூடாதா..?  ‌தேங்ஸ் பாஸீ...!

25 February, 2013

இதற்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க...!


குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,

''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''

"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.

அவன் சொன்னான்,

''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.'' (பேஸ்புக்கில் படித்தது)

07 December, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..!
(Re-Post)
Related Posts Plugin for WordPress, Blogger...