கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 August, 2016

மனைவிதான் துன்பத்திற்கு காரணமா...! எப்படி...?


டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. 
ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

********************************

 

நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு
சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !

இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு ! 


********************************

 

பல்லு எப்படி விழுந்திச்சு ?

அத வேற யாருகிட்டயாவது சொன்னா 
மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி 
சொல்லியிருக்கா டாக்டர்! 

********************************
 
 

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு 
அர்ச்சனை பண்றீங்க?.... 

வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, 
அதான் திருப்பி நான் பண்ணுறேன்! 

********************************


 
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. 
எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் 
தேர்தல்லே நிற்கணுமாமே? 

********************************

 
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. 
இப்படி செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. 
மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

 ********************************


என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...

என்னோட மனைவி ஒரு மாசம் என்கூட 
பேசமாட்டேன்னு சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...

எப்படிங்க...
இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே... 

********************************


கோபு- : எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது 
என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

நண்பன்-: தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

கோபு-: இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

********************************


 
ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு 
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

எப்படி?

என் மனைவியை நான் “ஆசை”ப்பட்டுத்தான் 
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 ********************************


நேத்து உன் மனைவிக்கும், 
உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, 
 யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி 
போய் நின்னுக்கிட்டேன்.  

 ********************************

01 August, 2016

காவல் நிலையத்தில் இப்படித்தான் இருக்குமோ

நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன் போனா...
போலீஸ்காரர்கள் பேசுகிற மொழிக்கு அர்த்தம் இப்படித்தான் இருக்கும்...
அந்தப்பக்கம் போகாதவங்க தெரிஞ்சிக்கங்க...!

"வாங்க சார்!" 
-போலீஸ்காரர்களை நன்கு புரிந்த அரசு ஊழியர் சங்கத் தலைவர்.
 
"வாப்பா!" 
- கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிற தற்குறி.
 
 "வாடா...!" 
-சில்லுண்டி கேசில் அடிக்கடி சந்திக்கிற ஆசாமி.
 

"வாய்யா!" 
-அடிக்கடி புகார் கொடுக்க வருபவர்.
 

"வாங்க தலைவா!" 
-சில்லறை திருட்டுகளுக்கு ஜாமீன் எடுக்க வருபவர்.
 

 "வா தலைவா!" 
- இரவு குடிக்கு ஏதாவது தேற்றித் தருபவர்.
 

 "வாங்க..ஒன்னும் விஷேசம் ஏதுமில்லீங்க..
நீங்கதான் சொல்லணும் !"
- தினசரி நிருபர்.

"வாடா..வா...உன்னதான் எதிர் பார்த்தோம்!" 
- சில்லறை தகராறு ஆசாமி.
 

 "வாங்க தலைவரே!"
அடிக்கடி தகவல் உரிமை சட்டப்படி மனு போடும் டம்மி பீஸ்.
 

 "எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் போயிருக்கார். 
போயிட்டு சாயங்காலம் வாங்களேன். பேசி முடிச்சிரலாம். சாப்பிட்டு சின்ன தூக்கம் போட்டுட்டு வந்துடுங்களேன்."
-எதோ ஒரு லட்டர் பேடு கட்சி பிரமுகர்.
 

 "அடிக்கடி வந்து தொல்ல பண்ணாதீங்க. நெறைய வேலை கெடக்குது. இப்ப எதுவும் நடக்காது. அடுத்த திங்கள் கிழமை வாங்க! உங்க அவசரத்துக்கு நடக்காது! " 
-நம்மளைப் போன்ற அப்பாவி கோவிந்தன்கள்!


எப்பவும் காவல்துறை தன் கடமையை செய்யுது...
இது சும்மா நகைச்சுவைக்காகத்தான்...! (எஸ்கேப்.....)

27 July, 2016

அம்மா சொன்ன உண்மை... அப்துல்கலாம் நெகிழ்ச்சி..!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். 
 
ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் தனது வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள்.
 
குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். 
 
அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. 
 
கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். 
 
கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். 
 
இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். 
 
ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இந்த இடத்தில் இதைசொல்வதில் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்... இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.

மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தனஞ்செய் வாரின் தலை.

அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.
 
# 57-வது குடியரசு தின விழாவில் அப்துல்கலாம் ஐயாவின் உரையில் இருந்து...!

26 July, 2016

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள...!


வீதியில்
போவோர் வருவோரை

ஏக்கத்தோடு 
பார்த்துக்கொண்டிருந்தது...

தன் துயர்துடைக்க
யாராவது உதவுவார்களா என்று...

சரியாய் மூடப்படாத
குழாய் ஒன்று...!

***********************************


விடிந்துவிட்டன என்று
கரைந்துவிட்டு சென்றன 
காகங்கள்....

கனவு குதிரையை விட்டு
இறங்க மறுக்கின்றன 
என் நம்பிக்கைகள்...

படுக்கையில் 
கேட்பாரற்றுக்கிடக்கிறது
என் மெய்...!

***********************************இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள...

என்றே 
முடிக்கவேண்டியுள்ளது...

பொய்யாக காரணம் சொல்லி
விடுப்பு எடுக்கும்
அத்தனை
விடுப்பு விண்ணப்பத்திலும்....!

***********************************
எனது முகநூலிலிருந்து....!

25 July, 2016

கபாலி நகைச்சுவைகள் / Kabali joks

கபாலியை சட்டையப் புடிச்சு
இழுத்துட்டு வரச் சொன்னேனே....

ஐயா...!!! அது வந்து ......

என்னைய்யா வந்து போயீ.... . .

கபாலி சட்டை போடலீங்களே ....

********************************
கபாலி : ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன்.
உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...

வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?

கபாலி: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து
என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.

********************************நீதிபதி : ஏம்பா.. திருடிட்டு இல்லவே இல்லேங்குறியே..
அப்ப உன்னைப் புடிச்ச போலீஸ் சொல்றதெல்லாம் தப்பா..?

கபாலி : இதிலே ஏதோ 'டெக்னிக்கல் எர்ரர்' இருக்கு எஜமான்..
எனக்கு நைட் ட்யூட்டி அடுத்த வாரம்தான் வருது..!

********************************வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய
பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..

கபாலி : ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில
நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

********************************
"ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...

கபாலி: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...

********************************
வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா
என்ன கொடுப்பே..?

கபாலி : அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி..
என்ன சொல்றீங்க..?

********************************கபாலி : திருடுவியா.. திருடுவியான்னு
போலீஸ் அடி பின்னிட்டாங்கபா.

நண்பன்: அப்புறம்

கபாலி : திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம்தான் விட்டாங்க

********************************கபாலி : டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை
 
 போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்...
மரியாதையா எடு மாமூலை

********************************கபாலி, நேத்து டாஸ்மாக் பக்கத்துல ஒருத்தர்கிட்டே
சரக்கு திருடினியாமே…?

நான் ‘செயின் பறிப்பு’செய்யற கௌரவமான திருடன்..
‘ஒயின் பறிப்பு’ செய்யற சில்லறைத் திருடன் இல்ல
ஏட்டய்யா..!

********************************‘‘பேங்க்ல பணத்தை கொள்ளை அடிச்சதும் இல்லாம,
செக்யூரிட்டியை ஏன் கடத்திட்டுப் போனீங்க..?’’

‘‘கொள்ளையடிச்ச பணத்தை நாங்க பாதுகாப்பா எடுத்துப் போக வேண்டாமா சார்..?’’

********************************

 
ஆதிகாலத்து கபாலி ஜோக்குகளும்...
அழகிய சுவர் ஓவியங்களும்....
சௌந்தர்டா...!

23 July, 2016

கபாலி சினிமா விமர்சனம் / kabali movie review


தமிழ் சினிமாவில... அதிரடி பாடல் காட்சியில அறிமுகமாகி... ஆரம்பத்தில வில்லனை பகைத்துக்கொண்டு... ஹீரோயினை காதல் பண்ணிகிட்டு.. நாலு பாட்டு... பாம்பு காமெடி... தனித்தனி ஸ்டைல்...  அம்மா சென்டிமென்டு... பலசில பஞ்ச் டயலாக் பேசி.. இறுதிகாட்சியில் அத்தனைபேரையும் பறக்கவிட்டு துவம்சம் செய்து, சுபம் போடுவாங்கல... அந்தமாதிரி ரஜினி படம்ன்னு நினைச்சையாடா... 

இது கபாலிடா... இது வேற மாதிரி ரஞ்சித் படம்டா...

 

மலேசியாவில் வேலை செய்துவரும் தமிழர்களுக்கு சரியான சம்பளமும், மரியாதையும் தருவதில்லை... மற்றமொழி பேசும் மக்களுக்கும் கிடைக்கும் மரியாதை போல், தமிழ் பேசும் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை... இப்படியாய் அல்லல்படும் மக்களுக்காக போராட களத்தில் குதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை.

தமிழகத்தில் இருந்து ராதிகா ஆப்தே-வை காதல் திருமணம் செய்துக்கொண்டு வேலைத்தேடி மலேசியாவுக்கு இடம் பெயர்கிறார்...  அங்கு வேலை செய்யும் இடத்தில்  பாதிக்கப்படும் தமிழர்களுக்காக துணிந்து குரல்கொடுக்கிறார் கபாலிஸ்வரன் என்கிற கபாலி.... 


எங்கெல்லாம் தமிழர்களுக்கு எதிராக, யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை எதிர்த்து நின்று கேட்கிறார்.. கடைசியில் மலேசிய தமிழ் மக்கள் மனதில் ஒரு தலைவனாக உறுவெடுத்து நியாயத்துக்காக துப்பாக்கி எடுக்கும் ஒரு கேங் லீடராகவே மாறுகிறார் ரஜினி..!மலேசியாவில் பல்வேறு சட்டவிரோதமான வேலைகளை செய்துவருகிறார் டோனி லீ.. இவருடன் கிஷோர் உள்ளிட்டோர்... போதை, கடத்தல், விபச்சாரம் என பெரிய கேங் ஸ்டாராக இருக்கிறார்கள்.... தமிழர்களை தவறான வழியில் பயன்படுத்தும் இவர்களை எதிர்த்து கேட்கிறார் கபாலி...

கபாலியை வளரவிட்டால் நமக்குதான் ஆபத்து என்று கபாலியை காலிசெய்ய முடிவெடுத்து ஒரு திருவி‌ழாவில் சுற்றி வளைக்கிறார்கள்.... இதில் கர்ப்பமான மனைவியை தன் கண்முன்னே சுடுகிறார்கள்... கோவத்தில் ரஜினியும் சில ரவுடிகளை கொன்று குவிக்கிறார் இந்த நேரத்தில் மலேசியா போலீஸ் அவரை கைது செய்து 25 ஆண்டுகள் காவலில் வைத்துவிடுகிறது.... இது பிளாஸ்பேக் கதை... 


25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார் கபாலி... மனைவி.. தன் குழந்தை இல்லாத ஏக்கம் அவரை வாட்டுகிறது... மேலும் இதற்கு காரணமானவர்கள் தீயசெயல்களில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறார்... தன் பங்குக்கு போதையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு இல்லம் நடத்துகிறார்...


தன் கண்முன்னே சுடப்பட்டாலும், தன் மனைவியும், குழந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவரின் உள்ளுணர்வு சொல்கிறது... அதன்படியே தன் குடும்பத்தை தேடும் பணியில் இறங்குகிறார்...

இப்படியாய்... தன் குடும்பத்தை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்.. அங்கு வாழும் தமிழ்களுக்கு எதிராக அராஜகம் செய்யும் சமூக விரோதிகளை எப்படி பழிவாங்குகிறார்... என்பதை கொஞ்சம் இ‌ழுத்து சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

படத்தைப்பற்றி...!

தமிழர்களுக்காக தட்டிக்கேட்கும் தைரியமான இளைஞன், சிறைச்சாலை சென்று 25 வருடங்களை கழித்து வயதான தோற்றத்தில் பெரிய கேங் லீடர்... மனைவி, மகளுக்காக உருகும் தந்தை என தான் ஏற்றுள்ள கதாப்பாத்திரத்தை திறம்பட நடித்திருக்கிறார் ரஜினி... நடிப்பில் ரஜினியின் புதிய பரிமாணம் இது... (கலகலப்பு இல்லாமல்)


ரஜினியும் தன்னுடைய பாணியை மாற்று கதைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்... தன்னுடைய முகபாவனை, சோகம், பொறுமை, ஆக்ரோஷம் என ரஜினியின் நடிப்பு பாரட்டக்குறியதாக இருக்கறிது...

(சில காட்சிகளிலும் அவருக்கு வயதாகிவிட்டது என்று தெளிவாக காட்டுகிறது... இந்த வயசிலும் இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறார் என்று என்னும் போது அது பெரிதாக தெரியவில்லை...!  இன்னும் அந்த ஈர்ப்பு அப்படியே இருக்கிறது..) 
‌தொலைந்த குடும்பத்தை தேடும் ரஜினி.. தன் மகள் கிடைக்கும் போது பாசத்தால் அனைவரையும் நெகிழவைக்கிறார்... தன் மனைவியை கண்டுபிடிக்கும்போது அனைவரையும் அழவும் வைக்கிறார்...

கதாநாயகி ராதிகா ஆப்தே... பெரிய அளவுக்கு காட்சிகள் இல்லை எளிமையான தோற்றம் கவர்கிறார்...


ஒரு வசனத்தை இங்கு சொல்லியே ஆகணும்...

ரஜினி : நீ செத்துட்டேன்னு நினைச்சிட்டேன்...

ராதிகா ஆப்தே : ஆமாம் செத்துதான் போயிருந்தேன்... இப்போ உன்னை பாக்குறவரைக்கும்...
 

ரஜினி மகளாக தன்ஷிகா... அப்பாவுடன் இணைந்து அதிரடி காட்டும் ஆன்ஷன் ரோல் நன்றாகவே வந்திருக்கிறது...

ரஜினியுடன் கேங்கில் இருக்கும் அட்டக்கத்தி தினேஷ் தன் துருதுரு அழகிய நடிப்பால் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார்...

இன்னும் படத்தில் கலையரசன், கிஷோர், நாசர் என அனைவரும் அளவோடு வந்துப்போகிறார்கள்..
பாடல்கள் எல்லாம் தனித்தின்றி படத்தோடே கலந்து வருகிறது... நெருப்புடா பாடல் அதிக ஆரவாரப்படுத்துகிறது...! சந்தோஷ் சுப்பிரமணியத்தின் பின்னணி இசை பரவாயில்லை...

ரவுடி கேங் லீடராக டோனி லீ என்ற கதாபாத்திரத்தில் இருக்கும் வில்லன் மிகவும் கொடுரத்தனம்... உடனிருக்கும் கிஷோர் உள்ளிட்ட வில்லன்கள் பட்டாளம் தன் பங்குக்கு வேலை செய்திருக்கிறது...!

ரஜினி படம் என்றால் இளசுகள் முதல்  பெரிசுகள் வரை மிகவும் ஆரவாரத்துடன் தான் பார்த்து பழகியிருக்கிறது. ஆட்டம் பாட்டம், நகைச்சுவை.. அதிரடி என அத்தனையும் இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்... அவைகள் இந்த படத்தில் மிஸ்ஸிங் அது இந்த படத்துக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்...

அட்டக்கத்தி, ‌மெட்ராஸ் என இரண்டு படங்களுக்கு பிறகு மூன்றாவது படமே ரஜினி படம் என்ற பெரிய அதிஷ்டம் ரஞ்சித்தை வந்தடைந்திருக்கிறது. இதை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மெட்ராஸ் படம்போல் தன்னுடைய பாணி படம் என்று இயக்குனர் கதையை கையாண்டிருக்கிறார். அது ரஜினிக்கு ஒரளவுதான் பொறுந்தியிருக்கிறது.


ரஜினி தன் குடும்பத்தை தேடுகின்ற காட்சிகளின் நீளத்தை குறைத்துக்கொண்டு இன்னும் அதிரடிகளையும்.. இன்னும் வசனங்களையும் கையாண்டிருந்தால் படம் இன்னும் சக்கைப்போடு போட்டிருக்கும்...
படம் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகும் வரை பல்வேறு எதிர்பார்ப்புகள் இந்த படத்துக்கு இருந்துவந்தது. நெருப்புடா... என ஒரு உசுப்புகிற பாடல் வரிகள் படம் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ என நினைக்க வைத்துவிட்டது... ஆனால் செண்டிமென்ட் கலவை அதிகமாகிவிடவே கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது... மற்றப்படி ரசிக்கும் படமே கபாலி...


மகிழ்ச்சி...!

20 July, 2016

கபாலி ரஜினியும்... வாட்ஸ்அப் அலப்பறைகளும்...
Related Posts Plugin for WordPress, Blogger...