கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 August, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா..?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
இது என்னுடைய 400-வது பதிவு...


இதை வடிவமைத்த வீடு சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றி...
 தங்கள் வருகைக்கு ஆதரவுக்கும் நன்றி..! 

30 August, 2012

காணாமலேபோய் விட்ட டெரர் கும்மிஸ்...! என் சவாலை ஏற்பார்களா..?


அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30-ம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 


உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


"அனைத்துலக காணாமற்போனோர் நாள்" குறித்து பல்வேறு உலக தன்னார்வ அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் இன்னும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் இந்நாள் உதவுகிறது. (விக்கிபீடியா)


இந்நாளில் பதிவுலகில் இருந்து காணாமல் போய்விட்ட இந்த டெரர் கும்மிஸைப்பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் இந்த டெரர் கும்மி குழுவினர்கள் டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய சொந்த தளங்களிலும் நையாண்டி, நக்கல், மொக்கை, அறுவை, சண்டை, எகத்தாளம், ரம்பம், பிளைடு, என்ற பதிவுலகமே கேட்டிராத தலைப்புகளில் லேபிள்களில் பதிவிட்டுவந்தனர். அவைகள் படிப்பதற்கும் ஒருமாதிரியிருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும்.


இவர்கள் தினம் ஒரு பதிவை எடுத்துக்கொண்டு அதில் வெட்டு குத்து நடக்கும் அளவுக்கு கருத்துக்கள் குவியும்... இவர்களின் கருத்துக்கள் இடம்பெறாதா என்று ஏங்கிய பதிவர்களில் நானும் ஒருவன். இவர்கள் கும்மியடிக்க ஆரம்பித்தால் அடுத்த வருபவர்கள் பதிவை படிப்பதை விட்டுவிட்டு இவர்களின் கும்மிகளைத்தான் படிப்பார்கள். பதிவுகளும் மிக வித்தியாசமானதாகவே இருக்கும். நான்கூட எவ்வளவு முயன்றும் இதுபோன்ற வித்தியாசமான மொக்கை பதிவுகளை போடமுடியவில்லை.
 

யாரின் கண்பட்டதோ என்று தெரியவில்லை இவர்களின் ஆதிக்கம் பதிவுலகை விட்டே தற்பேர்து போய்விட்டது. இவர்கள் இல்லாத குறையால் அதிகமான மொக்கை பதிவுகள் படிக்க முடிவதில்லை. தினம் ஒரு கருத்துச்சண்டைகள் இல்லை. சுவாரஸ்யமான பதிவுலக மோதல்கள் இல்லை. (ஆனா நிம்மதியா இருக்கு..)

ஆகையால் கீழ்கண்ட இப்பதிவர்கள் தன்னுடைய பழைய பாணியில் மீண்டும் பதிவுலம் வரவேண்டும் என்று வரவேற்கவே இப்பதிவு...


  
டெரர் கும்மி குழுவின் உறுப்பினர்கள் :  மேற்கண்ட இந்த குழுவினர்கள் எங்கிருந்தாலும் வந்து டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய தளத்திலும் எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. மீண்டும் பழைய பாணியில் அவர்கள் திரும்புவார்கள் என்று நான் சவால் விடுகிறேன்.. என் சவாலை ஏற்பார்களா..?

  கோரி‌க்கையை ‌ஏற்று களத்தில் இறங்குவார்களா..? அல்லது அப்படியே காணாமல் போய் விடுவார்களா...?   இதற்கு தங்களின் பதில் என்ன..? நீங்களே சொல்லுங்கள்...!

  29 August, 2012

  இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...  ன் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
  உன் நடவடிக்கைகள்..!

  ன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த 
  ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து 
  சூடிக்கொண்டாய்... 
  கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!

  சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
  நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
  தற்போது யாரின் சிணுக்களை 
  நான் கவிதையாக்க...!

  ற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
  அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
  காயப்பட்டு காத்திருக்கிறது
  என் வார்த்தைகள்..!

  ன்னால் மட்டும்தான் முடிகிறது
  என் கவிதைக்கு
  எனக்கே தெரியாத  விளக்கங்கள் சொல்ல...

  யிரம் முறை எழுதியும்
  இன்னும் புதியதாகவே இருக்கிறது 
   உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!

  வ்வொறு முறையும்
  நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
    உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!

  துவரையில் முடியவில்லை 
  உன்னை கலக்காமல் 
  கவிதையை முடிக்க...!

   வருகைப்புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்...!

  28 August, 2012

  அப்போது கூட தண்ணியில் இருந்தவர்கள்.... படங்களுடன்...


  வணக்கம் மக்களே..!
  எல்லாம் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையில் நடந்தேரியது. அதற்காக பாடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும், விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து பதிவுலக பெருமக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இதுபோன்ற சந்திப்புகள் வருடாவருடம் தமிழகத்தின் வேற்வேறு இடங்களில் நடைப்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.... அடுத்த சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்... நன்றி..!

  ****************************************

  Fun In The Flood
   
  டாக்டர் : ரெண்டு வாரத்துக்கு முப்பது மாத்திரைகள் கொடுத்திருக்கேன். தினமும், காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை எடுத்துக்கனும்...!
   
  பெண் : சரிங்க டாக்டர் .. எடுத்த மாத்திரையை எங்க வைக்கனும்..?
   
  **********************************************
   
  Fun In The Flood
   
  நண்பர் 1 : எதுக்கு காதலிக்கிட்டே கடன் கேட்கற..?

  நண்பர் 2 : கடன் அன்பை முறிக்கும்ன்னு சொன்னாங்க.. அதான்..!
   
  **********************************************

  Fun In The Flood

   
  போலீஸ் : திருடப்போற இடங்களுக்கு சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டு போறியாமே, ஏன்?

  திருடன் : திருடற பொருட்கள் முழுசா வீடு வந்து சேர்றதில்லைன்னு புலம்புறா. அதான்...!
   
  **********************************************

  Fun In The Flood

   
  நண்பர் 1 : மூணு வேளையும் டிப்பனே சாப்பிடுறியே ஏன்..?

  நண்பர் 2 : யாரும் என்னை தண்ட சோறுன்னு சொல்லிடக்கூடாது பாரு அதான்..!
   
  **********************************************

  Fun In The Flood

   
  நீதிபதி : சாமி தலையில் இருக்கிற கிரீடத்தை திருடினியா..?

  திருடன் : ஆமாய்யா..?
   
  நீதிபதி : ஏன்..?
   
  திருடன் : சாமிக்கு - மொட்ட போடுறதா வேண்டிக்கிட்டேன் அதான்..!
   
  **********************************************

  Fun In The Flood

   
  நண்பர் 1 : அந்தப்படத்துல எதுக்கு அடிக்கடி சாராய பாட்டிலை காட்டுறாங்க..?

  நண்பர் 2 : யாரோ ஒருத்தர் படத்துல சரக்கே இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்... அதான்..!
   
  **********************************************

  Fun In The Flood

   
  வேலைக்காரி :  அய்யா..! நான் முழுகாம இருக்கேன்..!

  முதலாளி : இதை ஏம்மா என் கிட்ட சொல்ற..?

  வேலைக்காரி : மாசமானா வந்து சம்பளம் வாங்கிக்கனு நீங்க தானே

  சொன்னீங்க..!
   
  **********************************
   
  நீங்க என்னங்க நினைச்சிங்க...!

  24 August, 2012

  இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்லிக்கொள்வது.. ( இது ஒரு எச்சரிக்கை பதிவு)


  அன்புள்ளம் கொண்ட பதிவுல நண்பர்களுக்கு வணக்கம்...

  வரும் 26-08-2012 அன்று நடைபெற இருக்கின்ற பதிவர் மாநாட்டிற்கு தங்களை மகிழன்புடன் அழைக்கிறேன்.

  கடந்தவாரம் பதிவுலகில் நடந்த சிலபல சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் சங்கடப்படவும் செய்கிறேன். நாம் ஒன்றும் சாதாரண ஆட்கள் இல்லை அனைவரும் பெரிய பெரிய படிப்புகள் படித்தவர்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து உடையவர்கள். 

  தங்கள் படைப்பு மற்றும் தங்களின் நல்லுள்ளத்தால் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள். அப்படியிருக்க தேவையில்லாத சில விஷயங்களை வைத்துக்கொண்டு கருத்துக்களால் போர் தொடுப்பதில் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இங்கு யாருக்கும் யாரும் சலைத்தவர்கள் இல்லை. படைப்பால் யாரும  மாமேதைகள் தான் இதை சண்டையிட்டுதான் நிறுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


  அதற்காக பிரச்சனைக்குறிய பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ இருக்கூடாது என்று சொல்ல வரவில்லை அது எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 

  தற்போது ஒரு பொது இடத்தில் கூடப்போகிறோம். அதுவும் இதுவரை முகம்கூட பார்க்காத பலரை அப்போதுதான் பார்க்கப்போகிறோம். அப்போது  நட்பும் பாராட்டி, அன்போடு அரவணைத்து பழகி நம்முடைய நட்பின் எல்லையை விரிவூபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

  நான்கு சுவற்றுக்குள், தனிமையில், சந்தர்ப்ப சூழ்நிலையில், சூரியன் அஸ்தமனத்திற்கு பின் யாரும் உத்தமர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை விட்டு வெளியில் வரும்போதும் நாம் நல்லவர்களாக ஒழுக்கம் உடையவர்களாவே காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உலகமும் அப்படித்தான் இருக்கிறது. இதில் யாரும் மாற்றுக்கருத்தை சொல்லிவிடமுடியாது.


  தனிப்பட்ட ஒருவரின் மதம், பழக்கவழக்கங்கள், சொந்த விருப்பு வெருப்புகளில்  தலையிட யாருக்கும் உரிமைக்கிடையாது. நாம் கடைபிடிக்கும் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் மற்றவர்களை பாதிக்கவோ வெறுப்படைய செய்யவோ, முகம்சுளிக்க கூடிதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒரு தனிமனிதனின் கடமை. அந்த கடமையில் இருந்து எந்த ஒரு பதிவரும் விலகிவி்டகூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.


  வயதில், பதிவுலக நுழைவில்,  ஆக்க சிந்தனையில், திறனில், வசதி வாய்ப்பில், வேலையில், உடல்பலத்தில் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அன்பு காட்டுவதில் அனைவரும் சமம் என்பதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.  நம் வாழ்க்கை பதிவுகள் ஒவ்வொறு மணித்துளியும் அடங்கும். அந்த மணித்துளிகள் நான் என்னவற்றை பதிவுசெய்கிறோம் என்பது மிகமுக்கியம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷயம் கலந்துவிட்டாலும் அத்தனையும் வீணே..! பலப்பேர் கூடியிருக்கும் அவையில் ஒருவரின் ஒழுங்கின்மை அந்த விழாவையே கலங்கடித்துவிடும். 

  ஆகையால் முதல்முதலாக இவ்வளவு பதிவர்கள் சந்திக்கும் இந்தவிழாவில் முகம் சுளிக்கும் அளவுக்கோ அல்லது அநாகரீகமாகவோ யாரும் நடந்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது நம்முடைய முழுகடமை.

  நாளைய வரலாற்றுக்கு இன்றைய சந்திப்பு ஒரு வசந்தகாலம் போன்றது. கலந்துக்கொள்ளும் நாம் யாவரும் இந்த நிகழ்வில் அன்பையே அடையாளமாக விட்டுச்செல்வோம். அப்போது தான் பிற்காலத்தில் இந்நிகழ்வு அசைப்போடதக்கதாக இருக்கும்.

  இக்கருத்து என்னுடைய சொந்தக்கருத்து. இக்கருத்தில் கூட சிலருக்கு உடன்படு இல்லாமல் இருக்கலாம். அதையும் நாகரீகத்தோடு வெளிப்படுத்துங்கள்.

  இன்றைய சந்திப்பை... நாளைய சரித்திரம் பேசவைப்போம்...!

  பலம் அடைவோம்.. புதியஉலகின் தலைஎழுத்தை நிர்ணயிப்பவர்கள்  நாமாகக்கூட இருக்கலாம்....!


  சென்னை வரும் பதிவர்களின் பெயர் பட்டியலை காண இங்கு சொடுக்கவும்.

  23 August, 2012

  சென்னை பதிவர் சந்திப்பில் பவர் ஸ்டார்...! புதிய தகவல்...!


  பதிவுலக பெருமக்கள் கலந்துக்கொள்ளும் சென்னை பதிவர்கள் மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களை யாராவது அழைக்கலாம் நான் முடிவு செய்துக்கொண்டிருந்தேன். உலகின் சிலபல ஸ்டார்கள் எல்லாம் அழைத்தால் நன்றாக இராது. அழைத்தால் உலகின் அனைத்துக்கும் 
  ஒரே ஸ்டார் பவர் ஸ்டார் அழைப்பது என்ற உறுதியுடன் அ‌வரை தொடர்புக்கொண்டேன்....

  ஆனால்... பல்வேறு படங்களில் படுபிஸியாக இருப்பதாகவும் இன்னும் ஒர் ஆண்டுக்குள் ஆஸ்கார் நிச்சயம் என்பதால் நடிப்பில் மட்டுமே கணவம் செலுத்தப்போவதாகவும், இதுபோன்ற பொது மாநாட்டுக்கும் வரமுடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்தார். (மிகவும் வருத்தத்துடன்)

  அன்னார் அவர்கள் ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று தமிழ் திரைஉலகிற்கு பலசாதனைகளை செய்யட்டும் என்று வாழ்த்தி அவருடைய பாதையில் நாம் நடப்போம்...
   
  வாழ்க பவர் ஸ்டார்... !    ஓங்குக பவர் ஸ்டாரின் புகழ்...!!

  சரி...! இவங்களை வச்சி நடத்துவோம்....

  வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் 
  தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..  பதிவர் பெயர் விபரங்கள் :

  சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
  சங்கவி,ஈரோடு
  நண்டு@நொரண்டு,ஈரோடு
  சுரேஷ் (வீடு)ஈரோடு
  பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
   
  ரிஷ்வன்,சென்னை
  டி.என்.முரளிதரன்,சென்னை
  வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
  சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
  இக்பால் செல்வன்,சென்னை

  ஆரூர் முனா செந்தில் சென்னை

  சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
  செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
  சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
  புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
  மாடசாமி(வானவில்)சென்னை
  இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
  அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
  சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
  நிலவு நண்பன்,திருநெல்வேலி

  மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
  ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
  நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
  ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
  தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
  ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
   
  சைத அஜீஸ்,துபாய்
  மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
  சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

  மூத்த பதிவர்கள்

  லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
  ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
  ரேகாராகவன்,சென்னை
  வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

  வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
  ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
  சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
  புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
  கணக்காயர்,சென்னை

  கவியரங்கில் பங்குபெறுவோர்
   
   ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
  மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

  சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
  தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

  ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
  ஷீ-நிசி கவிதைகள் சென்னை
  கணக்காயர்,சென்னை


  நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.... நன்றி


   கொலை வெறியொடு வராதீர்கள்...!

  22 August, 2012

  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்...!  தெரு‌வோரம் வீசிய தென்றல்
  ஓலை குடிசைக்குள்ளே
  ஓய்யாரமாய் புகுந்தது...
   

  குறைவான எண்ணெய்யிலே
  கண்சிமிட்டியது
  வீட்டு மூலையில் காடை விளக்கு...
   
  சிக்கு வெந்நீர் குடித்து
  தாயின் பாதி மாராப்பி‌லே
  தாலாட்டு கேட்டது பச்சிளங்குழந்தை...


  ட்சிக்கு ஓட்டிட்டு - தன்
  ஆடை ஓட்டைகளை மறைக்க வழியில்லாமல்
  நாணி குனிகிறாள் இளம்தாய்...
   
  வாழ்க்கை தூரத்தில்
  எங்களை வாட்டிடும் ‌எல்லைகள்
  வறுமை... வறட்சி... பசி... பட்டினி...
   
  ந்து மாத கருவிலே
  கணக்கெடுக்கப்படட நாங்கள்

  மொழி்யென்று எங்களை முழம் தள்ளி
  இனமென்று எங்களை இடம் தள்ளி
  ஜாதி மாதமென்று எங்களை
  மண்ணில் தள்ளி...

  ருவம் இழந்து
  எங்கள் உணர்ச்சி இழந்து
  புழுவுக்கும் பூச்சிக்கும்  
  இரையாகிறோம் நாங்கள்..!
   
  தயம் நொந்து
  எங்கள் இமைகள் நொந்து
  வயிற்றுப் பசிக்கு பஞ்சணையிட்டு..
   
  நாளும் காலத்தால் அழிவாகும்
  எங்கள் கண்ணீரால் நனைகின்ற
  எனதருமை தாய்நாடே...


  நாங்கள் வாழ்வதற்காக பிறக்கவில்லை...
  ஏதோ பிறந்ததற்காக வாழ்கிறோம்...

  09 August, 2012

  வீடுதிரும்பல் மோகன் குமாரும், ஆவேசமடைந்த தாய்குலமும்...!  அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கு... வணக்கம்...!
  கவிதைவீதியை பெருமைப்படுத்தும் விதமாக 500 பாளோயர்ஸ் இணைந்துள்ளனர். இம்மகிழ்ச்சி தருணத்தை தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்...


  கவிதைவீதியில் 500-வது பதிவராக வந்தமைக்கு மரியாதைக்குரிய நண்பர்

   திரு. வீடுதிரும்பல் மோகன் குமார் அவர்களுக்கும்... 

  கவிதை வீதியில் குடியேறியிருக்கும் 499 அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

   நண்பர் திடம்கொண்டு போராடு சீனு அவர்களுக்கும்... அவர் (என்வலைதளத்தின் 499-வது விருந்தினர்...)


  அதற்கு அடுதது பாயோயர் 501 என அடுத்த கணக்கை துவக்கி வைத்துள்ள
  அவர்கள் உண்மைகள் குழுவிற்கும் எனது நன்றிகள்...!   தங்களின் எதிர்பார்ப்பையும்,  நம்பிக்கையும் நான் என்றும் மறந்திடமாட்டேன். தங்களின் ஆதரவுக்கு என்றும் என் நன்றிகள்...!

  *******************************************

  ஒரு வரலாற்று சம்பவம்...

  தேச பக்தர் திருக்கூடசுந்தரம் பிள்ளை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

  திருக்கூடசுந்தரத்தின் நண்பரான யக்ஞேசுவர சர்மாவுக்கு திருக்கூடசுந்தரம் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. திருக்கூடசுந்தரத்தின் வயது முதிர்ந்த அன்னை கவலைப்படகூடும் என்று எண்ணிய அவர், திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசிக்கும் திருக்கூடசுந்தரத்தின் தாயாரைச் சென்று சந்தித்தார்.

  உண்மையில் அம்மையாருக்கு யக்ஞேசுவர சர்மா ஆறுதல் கூறினார். “இதைப் பற்றிப் பெரிதாக கவலைப் படாதீர்கள். இனிமேல் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்று திருக்கூடசுந்தரம் எழுதிக் கொடுத்துவிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவார்கள்” என்றார் சர்மா.

  அந்த பதிலைக் கேட்ட திருக்கூடசுந்தரத்தின் தாயார் ஆவேசமடைந்தார். ”மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு கோழையாகத் திரும்பி வருவதற்கா என் மகன் சிறைக்குச் சென்றான்.? என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? மறந்தும் கூட இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான யோசனைகளை என் மகனைச் சந்தித்தால் சொல்லிவிடாதீர்கள்..! இந்த ‌மாதிரியான யோசனையை அவன் காதில் கூட போட்டுக் கொள்ள மாட்டான்” என்றார்.

  திகைப்பினாலும், வியப்பினாலும் யக்ஞேசுவர சர்மா செயலற்று நின்றுவிட்டார்.


  *******************************************
  ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.....

  அன்புடன்..
  கவிதைவீதி செளந்தர்..
  திருவள்ளூர்.
  9042235550  9443432105

  08 August, 2012

  பதிவர் சந்திப்பை புறக்கணிக்கும் பிரபல சென்னை பதிவர்கள்... மறைக்கப்படட உண்மைகள்.!

  (தமிழ் பதிவர் சந்திப்பிற்கான அழைப்பிதழ்
  கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்)
  அனைத்து பதிவர்களையும் என்னுடைய சார்பில் அழைப்பு விடுக்கிறேன்...

  சென்னை மற்றும் தமிழக பிறபகுதிகளில் சிறுசிறு அளவில் நடந்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 26 -ந் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தமிழின் முன்னணி மற்றும் பிரபல பதிவர்கள் கலந்துக்கொள்ளும் பதிவர் சந்திப்பிற்காக ஏற்பாடுகள் மிகவும் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.
  (வீடு திரும்பல் மோகன்குமார், அரசன்.சே.,  ஜெயக்குமார், கணேஷ் ஐயா)

  புலவர் ராமானுஜம் ஐயா அவர்களின் சீறிய முயற்சியிலும், சென்னை பித்தன், பால கணேஷ்  ஐயா அவர்களின் ஆதரவோடும் நண்பர் மதுமதி அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை சீறிய முறையில் செய்துவருகிறார். இவர்கள் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பதிவர் நண்பர்களின் கூட்டு முயற்சியில் இப்பதிவர் சந்திப்பு சாத்தியப்பட்டிருக்கிறது.
  (தென்றல் சசிகலா, மதுமதி, நானும் மெட்ராஸ் பவன் சிவாவும்)

  விழாகுறித்த ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் நிறைவு செய்வது குறித்து சூலை 29, மற்றும் ஆகஸ்ட் 5 ந் தேதியும் சென்னையை சார்ந்த சில பதிவர்கள் கலந்து பேசி நல்லதொரு முடிவெடுத்தார்கள். அந்த இரண்டு சந்திப்பிலும் நானும் கலந்துக்கொண்டு என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்தேன்.

  முதல் மற்றும் இரண்டாவது ஆலோசனை கூட்டத்திலும் சென்னைபித்தன் ஐயா அவர்கள் கலந்துக்கொள்ள வில்லை. ஒருவேளை அவர் பதிவர்சந்திப்பை புறக்கனிக்கிறாறோ என நினைத்தபோது, அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. இருந்தாலும் ஆலோசனையின்போது அவர் போன் செய்து வாழ்த்துகூறினார்.

  கணேஷ் ஐயா, மதுமதி, செல்வின், ஆருர் முனா செந்தில், சிவா, சிராஜ்)

  ஆகஸ்ட் 5-ந் தேதி கூடிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நிரலும் இறுதி வடிவம் பெற்றது. இந்த கூட்டத்தில் டீக்கடை சிராஜ் அவர்கள் கலந்துக்கொண்டது சிறப்பாக இருந்தது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருவதாக வாக்குகொடுத்திருந்த கேபிள் சங்கர் வருவரா மாட்டாரா என்ற எண்ணம் சில பதிவர்களுக்கு இருந்தது. ஆனால் அதற்கு இடம்கொடுக்காமல் ஆலோசனைக்கூட்டத்தில் கேபிள் சங்கர் அவர்கள் கலந்துக்கொண்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். முக்கியமாக மதிய உணவு குறித்து அதிகமாக அவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

  (என்னுடன், ராமனுஜம் ஐயா, ‌ஜெயக்குமார், பிரபாகரன்)

  பிலாசபி பிரபாகரன், அஞ்சா சிங்கம் செல்வின் ஆகியோர் வந்திருந்தார்கள் இதில் செல்வின் நிறைய பேசினார், பிரபா ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஒருவேளை இவர் பதிவில்மட்டும்தான் போசுவார்போல... இன்னும் பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார் மிகவும் உதவிகரமாக இருந்தார். (இவர்தாங்க நிகழ்ச்சியின் பொருளாளர்).
  (ஜெயக்குமார், பிரபா, சிராஜ், சிவா, செந்தில், செல்வின், மதுமதி)

  பிரபல சென்னை பதிவர்களான கேபிள் சங்கர், ‌ஜாக்கி சேகர், மெட்ராஸ்பவன் சிவா, பிரபாகரன், என சென்னைப்பதிவர்கள் அனைவரும் இந்த நி‌கழ்ச்சிக்கு சீரிய முறையில் ஒத்துழைப்பு நல்கிவருகிறார்கள். ஆகையால் சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு ஒருதலை பட்சமாகவோ அல்லது சிலபதிவர்கள் புறக்கணிப்போ என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் சென்னை பதிவர் சந்திப்பை சென்னை பதிவர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகையால் இன்னும் தன்னுடைய பெயரை பதிவு செய்யாத பிற பகுதி பதிவர்கள் தன்னுடைய பெயரை பதிவு செய்துகொள்ளும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்ய).

  வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வரும் பதிவர்களுக்காக சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உளள்து. இந்த பதிவர் சந்திப்பை அனைத்து பதிவர்களும் எந்த வித பேத, ஏற்றதாழ்வுகளை மனதில் கொள்ளாமல் சிறந்த முறையில் நடத்தி நாளைய வெற்றி பாதைக்கு வழிவகுப்போம்.

  இடம், பகுதி, ஜூனியர் சீனியர் பாகுபாடின்றி நடைப்பெறும் இப்பதிவர் சந்திப்பில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பானதாக மாற்றுமாறு அன்போடு அழைக்கிறேன்.

  இவரைப்பார்த்தா ரொம்ப பாவமா இருக்குங்க...!


  குடும்பத்தின் வறுமை தாங்காமல் கோழியைத் திருடிய ஒருவன் அவ்வூர் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பதற்காகச் சென்றான்.


  “என் குடும்பத்தோட வறுமை தாங்காமல் திருடி விட்டதால் பாவம் செய்ததாக நினைக்கிறேன். எனக்கு உறுத்தலாக உள்ளது. அதனால் நீங்களே கோழியை வைத்துக்கொள்ளுங்கள்” என்று பாதிரியாரிடம் கூறினான்.

  பாதிரியார் கோழியை வாங்க மறுத்து விட்டார். இதை என்ன செய்வது என்று பாதிரியாரிடமே கேட்டான். திருடியவனிடமே திரும்பக் கொடுத்து விடுமாறு கூறினார் பாதிரியார்.


  “கோழியைக் கெர்டுத்தேன். ஆனால், அவர் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்.” என்றார். யோசித்தார் பாதிரியார். கோழியை சமைத்து குடும்பத்தோடு சாப்பிடுமாறு கூறிவிட்டார். நன்றியுடன் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வீட்டுக்குப்போனான் கோழி திருடன்.


  ஜெபத்தை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குப் போனார். கூடைக்குள் இருந்த கோழி ஒன்று காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பாதிரியார். 


  (அவன் என்னுவோ திருப்பி கொடுத்தான் வாங்கிடவேண்டியதுதானே.. பாவங்க பாதிரியார்) 

  07 August, 2012

  இது இல்லாமல் மனிதனா...? வாழ்வது வீண்தானே...!  மூடிவைத்த உள்ளங்களில்
  புதிய புதிய சிந்தனைகள்
  முளைக்க மறுக்கும்...

  காய்ச்சிய இரும்பில் தானே
  பாயும் அம்பின் கூர்மையை
  அறிய முடிகிறது...!

  டிவரும் காற்றினத்தை
  திசைத்திருப்புங்கள்
  உலர்ந்துப்போன மூங்கில் கூட
  ராகம் இசைக்கும்...!

  நாம் என்று முயல்கிறோமோ 

  அன்றைய நாளில் தான்
  சகதியாய் இருக்கும் நம் மனதில்
  செந்தாமரைகள் முளைக்கும்..!

  வீழ்கின்றபோதெல்லாம்
  எழுவதைப்பற்றியே யோசிப்போம்
  ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!

  ழைப்பின்றி ஓய்வெடுத்தால்
  நாம் சிதைய வேண்டியிருக்கும்..

  புதியதாய் வியர்வைகள் மலரும்போது
  இதயத்தை ஊடுருவும் குருதியின் வாசனையை
  நம் நாசி உணரும்...

  வறில்லா உறுதியோடு 
  ஒவ்வொறு நாளும் உழைப்போம்
  நாளை வெற்றியின் மகுடங்கள்
  நம் தலையை அழகுப்படுத்தும்...

  பூமியில் நாம் சிந்திய வியர்வை
  கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...
   
  துவரை முடியாமல் தொடரட்டும்
  நம் உழைப்பு பயணம்....
  (1996 ம் ஆண்டு +2  படிக்கும்போது நடந்த கவிதைப்போட்டியில்
  உழைப்பு என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை...
  நீண்ட நாட்களுக்குபிறகு... அடிமாறாமல்...)


  06 August, 2012

  காமம் பேசும் ஓவியங்களும்...! காதல் பேசும் மொழிகளும்...!
  ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
  மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
  உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!

  ****************************************************


  எத்தனை பூக்கள் சூடினாலும்
  உன்னால் தான் அழகு
  அவைகளுக்கு..!

  ****************************************************


  பூகம்பங்களுக்கிடையே
  நீ பூத்தாலும்
  என் கவிதைகளில்
  உனக்கு இடமுன்டு...!

  ****************************************************


  கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
  இவளை அனுப்பியிருந்தால்
  நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!

  ****************************************************  எனக்கு எப்போதும் பயமில்லை... 
  வலிக்கு பயந்திருந்தால் 
  நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
   
  ****************************************************  என்ன ‌அதிசயம் 
  உன் பெயரை உச்சரிக்கும்போதே 
  உதடுகள் இனிக்கிறது..!

  ****************************************************


  மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே... 
  உன் மௌனங்களையெல்லாம் 
  மொழி பெயர்க்கும் அகராதி 
  என்னிடம் மட்டுமே உள்ளது...!

  ***************************************************


  காகிதத்தில் 
  நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
   
  மையாக
  கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
   
  ****************************************************


  எனக்கே தெரியாமல்
  ஏதேதோ நடக்கிறது...
  காதல் உள்பட...!

  ***************************************************


   
  இனிமேல் நீ தரும்
  தண்டனைகள் எல்லாம்
  முத்தங்களாகவே இருக்கட்டும்....!

  **********************************************  எவ்வளவு நேரம் என்றாலும்
  உனக்கான காத்திருப்புகள்
  எனக்கு சுகமானவையே...!

  ***********************************************


  யாருக்கும் தெரியாமல்
  ஒவ்‌வொறு சாயங்காலமும்
  என்னை மரணப்படுத்துகிறது
  உன்னை நினைவுபடுத்தி....!
   
  ******************************************
  காமம் பேசும் அழகிய ஓவியங்ளோடு
  காதல்பேசும் என் கவிதை வரிகள்..
  Related Posts Plugin for WordPress, Blogger...