கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சர்வதேச தினஙகள் (World Days). Show all posts
Showing posts with label சர்வதேச தினஙகள் (World Days). Show all posts

12 April, 2018

வீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...



***********************************



வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். 

***********************************


மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.


உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

***********************************

பார்க்க சிரிக்க...


***********************************

பார்க்க சிந்திக்க...

15 March, 2018

நுகர்வோர் இப்படியும் செய்யலாமா



நாம் பணம் கொடுத்து பொருளை அல்லது சேவையைப் பெறுகிறோம். ஆனாலும் பல நேரம் பொருள் மற்றும் சேவைக் குறைப்பாட்டால் ஏமாற்றப்படுகிறோம். நமது இயலாமையை பலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சம்பாதிக்கிறார்கள். இதை முற்றிலும் தடுத்து நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கவே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு வழக்கில் உள்ளது. இதை தெளிவாக அறிந்து வைத்துக் கொண்டால் ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பதோடு நம்மைப் போன்று பிற நுகர்வோர் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவலாம். இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து பாதுகாருங்கள்.


நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான சொற்கள்:

1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை

2.Defect = பொருளில் உள்ள குறைபாடு

3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு

4.Service = சேவை

5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்

6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்





1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?

தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.


நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:


1. குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை

2. கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.

3. தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.

4. குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.

5. இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.

6. தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.

2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?


கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.


3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?

இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.



4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அனுக வேண்டும்?


விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அனுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.


5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அனுக முடியுமா?

எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள்/சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.




6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?

இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.


1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்

2. குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்

3. இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்

4. குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்

5. பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்

6. உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்

7. அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்


7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?

இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.


8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?

ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுக முடியும்.


9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அனுக வேண்டுமா?

தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அனுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அனுகுவது நல்லது.

10  நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?

1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்

2. வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்

3. இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது

4. எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?

5. குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அனுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்

6. பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?

பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.


12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?

நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.


இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.




14.  மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?

நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.


15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.


இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?

இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.


16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?

குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது. ( நன்றி நுகர்வோர் வழி காட்டுதல் ஆணையம்)

மார்ச் - 15 
உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

19 August, 2013

உங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா..?


புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. 
வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 
1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 



முதல் படம்:

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 
1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. பல்வேறு அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.


அன்று கடினம்:

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. 
குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

08 March, 2013

வண்ணங்களால் எண்ணங்கள் செய்கிறேன்...! இது தாய்குலங்களுக்காக...!

வானம் தாண்டியும்
சிறகு விரியுங்கள்
உங்கள் உயரங்களை தடுக்க 
எந்த வானத்தாலும் முடியாது...

பாதங்களில் பயணிக்கும்
வேர்கள் அறுத்து புறப்படுங்கள்
நின்று பூத்து காய்ந்து போக
மரங்களல்ல நீங்கள்...!

 *********************************

பூக்களை கெர்டுத்து உங்களுக்கு
வாழ்த்துசொல்ல முடியாது...

பூவைக்கே பூகொடுத்து வாழ்த்தினால்
பூக்கள் சிரிக்கும் எனைப்பார்த்து...!

 *********************************

மலர்வனங்களும்
மகிழ்விக்கும் உன்னை...!

இந்த உலகளின் உயிர்களுக்கு
நீ அன்னை...!

*************************

கால்களின் விலங்குகளுக்கு 
இனி விலக்கு அளியுங்கள்...
 
கைகளின் சங்கிலிகளுக்கு 
இனி முடிவு கட்டுங்கள்...
கண்களின் கடிவாளங்களை 
அவிழ்த்தெரிந்துவிட்டு நடைபோடுங்கள்...

நாளை உலகை சுமக்கும்
உன்னத பொறுப்பு உங்களிடமே...!
 *********************************
பெண்கள் பேசும் ஓவியங்கள்...

 *********************************

 
 வண்ணங்களினால் எண்ணங்கள் செய்கிறேன்
இந்த உலகிற்கு வசந்தங்கள் தரும்
இனிய வண்ணத்துபூச்சிகளுக்கு...!

 *********************************

தாய்குலங்களின்
தாய் இவள்..!
 
அன்பு என்ற குழந்தைக்கு 
நிரந்தர அன்னை இவள்...!
 
பெண்ணினத்தில் போற்றவேண்டிய 
பொக்கிஷம் இவள்...!

உலகம் என்ற ஓடையில் நீந்திய
பொறுமையின் பொருள் இவள்..!

உன்னைபோற்றி பெருமைபடுகிறோம்
உன்னை நினைத்து உலகைபார்க்கிறோம்.....

 *********************************

 
பெண்மையை போற்றுவோம்...!

மார்ச் 8
உலக மகளிர் தினம்...!

07 May, 2011

யிர் +மெய்=யிர்மெய்.....



ம்மா 
உயிரும் மெய்யும்  கலந்த
உயிர்மெய்...

நானே விளக்குகிறேன்...
  உயி‌ரெழுத்து
ம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து
 
ம்... அம்மா 
உயிரும் மெய்யும் கலந்த 
உயிர்மெய்...

நாத்திகர் வீட்டில் கூட 
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய 
அன்னப்பறவை...
 
திட்டி தீர்க்கும் கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கெர்டுக்கும் 
வலையல்கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன்
“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
அக்கரையில் அக்கா..

“காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
ஆதங்கத்தில் அப்பா...

“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா...
 
ள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...

அம்மா..
குடும்பம் தழைக்க
அரவணைத்துப்போதும் 
மனித ஆலமரம்....

அனைவரும் அம்மாவை போற்றுவோம்....
மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம்....
(இது ஒரு மீள் பதிவு)

08 March, 2011

சேவல்களே உரக்க கூவுங்கள்..



சேவல்களே உரக்க கூவுங்கள்
இந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...
 
ன் குரல் கேட்டவுடன் விடிந்துவிட
இது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...
பல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..
 
பூவாசம் பொன் வாசத்துடன்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..

தாளிப்புகளின் ஆரிராரோ கேட்டு
அடுப்புகளின் அடிமனையில்தான்
இவர்களின் ஆனந்த உரக்கம்...

டுப்பு புகைகளின் படிமங்கள் 
அடுக்கடுக்காய் படிந்துக்கிடக்கிறது
இவர்கள் தேகம் முழுவதும்..

விழிகளுக்கும்.. மொழிகளுக்கும்..
புகையின் பூச்சுக்களே ஒப்பனையாகிறது..

ருபது நூற்றாண்டுகளாய் 
இவர்கள் உலகம் இதைச்சுற்றியே..

சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..
 
ந்த பெண்களுக்காக 
சேவல்களே கொஞ்சம் உரக்க கூவுங்கள்
 
ந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..

  
இன்று மார்ச் 8  உலகப் பெண்கள் தினம்..
(1910-2010) 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
கவிதை வீதி கைகூப்புகிறது..


Related Posts Plugin for WordPress, Blogger...