கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

10 January, 2019

உன் பசிக்கு இரையாகிறேன்...


*******************************


*******************************


*******************************


*******************************


*******************************

சும்மா ஒரு ஜோக்...
------------------------------------

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவிய கண்காட்சில உங்க ஓவியந்தான் பாக்கற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமாம்.. மத்த ஓவியங்கள சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல..

ஓவியர் : ....!!!!!

*******************************

ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும். 
இது இறந்த காலமா? எதிர் காலமா? 

மாணவன் : அய்யோ சார், சூரியன் மறஞ்சா 
அது சாயுங்காலம் சார்...

ஆசிரியர் : 😐😐

*******************************

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

16 April, 2018

இனம் இனத்தோடுதானே சேரும்...



ளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகவே
 இருக்கிறது...
உன்னோடான 
உரையாடல்கள்...

விலக விலக 
மறைவதில்லை நீ...
அப்போதுதான் 
எனக்குள் 
விஸ்வரூபம் 
எடுக்கிறாய்...!

னம் 
இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் 
உன் காதலும் 
என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் 
சம்மதம் தானே
இந்த நாள்வரை 
அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் 
சம்மதம் மட்டுதான் 
கிடைக்க வில்லை..!

காதலை 
நம்பினோர் 
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை 
எழுதுவோம்
அன்பே...! 
கைகொடுத்து விடு...!


23 March, 2018

சிலர் வாழ்வில் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது....!


*****************************


 *******************************



  *****************************


  *****************************



  *****************************



ஒருவேளை இப்படி நடந்துவிட்டால்....

ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்....

விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்...

அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தை உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அவ்வளவு தான் நடிகை துண்ட காணோம், துணிய காணோமுன்னு இடத்தை காலி செய்தாராம்....

  ******************************

வருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..!

22 March, 2018

பஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்



இன்னும் அறிமுகமாகாத
என் சி‌‌‌நேகிதியே...


தற்போதெல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...


ஏறுவதும்.... இறங்குவதும்...
நீ முன்வழியில்...
நான் பின்வழியில்....


வலபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே 
சிறகடிக்கிறது உன் மனசு...


நான்... 
இடபுற ஜன்னலில்....


அருகில் அமர்ந்திருப்பது 
யாரென்று அறிந்திலர் 
இருவரும்...


நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது....


ஏறியது போலவே 
இறஙகும் ‌போதும்
நீ முன்வழி.. 
நான் பின் வழி...


இது  தான்  வாடிக்கை
பல நாட்களாய்...


ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
‌ஒரு செய்தி வந்துக்‌‌கோண்டிருக்கிறது.....

இருவரும்...
தினமும்....
”ஒன்னாதான் போறாங்களாம்...
”ஒன்னாதான் வாறாங்களாம்....”
என்று...


திருமணமாகாத 
ஏக்கத்தில் நீயும்....

தங்கைகள் திருமணம்..., 
வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்...
நடை பிணமாய் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...


ஊரார்க்கு என்ன தெரியும்....

பேருந்தில்... 
நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் 
நம் மனங்கள் சுமக்கும்
வேதனைகள்.... 

(மீள்)

11 July, 2016

பகல் கனவு பலிக்காதா..?




உற்சாகமாய்
உன்னை வரைந்து 
முடித்தப்பின்பு...

உயிரோட்டமாய் சிரித்த
உன் அழகைப்பார்த்து...

வெட்கப்பட்டு 
சிரித்துக்கொண்டன
அத்தனை தூரிகைகளும்...!

************************************


என்னவளை கட்டியணைத்து
முத்தமிடுவதுபோல்
கனவு வந்ததென கூறினேன்
நண்பர்களிடம்...

பகல் கனவெல்லாம்
பலிக்காது என்று 
கேலிப்பேசினார்கள்...!

உன்மைதான் 
பகலில் எப்படி
நிலவை 
முத்தமிடமுடியும்...!

************************************

வார்த்தைகளை கொண்டு
நான் எழுதி வைத்த
அத்தனை கவிதைகளையும்...

எனக்கு பிடிக்கவில்லை என்று
நிராகரித்து விட்டுப் போகிறாய்...

தற்போது
குழம்பிக்கொண்டிருக்கிறேன்....

சொற்களை தவிர்த்து
பூக்களை வைத்து
எப்படி கவிதை எழுதுவது
என்று...
******************************


இளையராஜா ஓவியங்களும்...
எனது முகநூல் பதிவுகளும்....!

15 February, 2016

இது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...!



அப்புறம் என்ன சாப்பிட்ட
இன்னைக்கும் அதே தயிர்சாதம் தானா....?

உங்க வீட்டுல பூச்சொடிகளுக்கு
தண்ணி ஊத்தியாச்சா...?

டிவி-ல நேத்து போட்ட புதுப்படம்
செம மொக்க இல்ல...?

நீ டைரியில வச்ச மயிலிறகு
குட்டிப்போட்டுச்சா...?


இப்ப இருக்கிற மாணவர்கள்
சின்ன வயசிலே கெட்டுப்போதுங்கல்ல...?


உங்க அப்பா அந்த கொடுவா மீசைக்கு
என்ன உரம்‌ போறாரு...?

ஆமா... இப்பவர தேர்தல்ல
நீ யாருக்கு ஓட்டுப்போடபோற..?


இப்பெல்லாம் ‌பேப்பர்ல வரும்
செய்திகளை பார்த்தா கோவமா வருதுல்ல...?


விஜய் தெறி படம் வந்தா
முதல் நாள் காட்சி பார்க்கலாமா...?


கவிதை தொகுப்பு ஒன்னு கொடுத்தேனே
படிச்சி முடிச்சிட்டியா...?


இப்படியாய் 
அவளிடத்தில்
 சம்மந்தமின்றி உளறினேன்...

காதலை சொல்ல நினைத்து

இதயம் படபடத்த தைரியமற்ற 
அந்த நிமிடங்களில்....!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

29 April, 2014

என் அவதாரங்கள்...



என் தலைமுடியை பிடித்து
உன் பச்சைநிற ரிப்பனில்
உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்...

உன் நெற்றி பொட்டு எடுத்து
என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது
என்று குதுகலித்தாய்...

சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க...!
நீயே கற்பனை செய்துகொண்டு
விழுந்து விழுந்து சிரித்தாய்....
 

கொஞ்சுகையில் மீசை வேண்டாம் ‌‌என்று..கிறாய்
கெஞ்சுகையில் அதையே அழகு என்று..

என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்...

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு...
தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு

நெடிக்குகொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..!

வீட்டில் இன்முகம்கூட காட்டாத நான்
ஒரு விகடகவியாகி
சிரிப்பால் உன்னை அழகுபடுத்துகிறேன்...!



இப்படியாய் உன்னை மகிழ்விக்க 
இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுக்கவும் 
நான் தயார்தான்...!

(உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை வாய்க்கவில்லை)

01 April, 2014

பெண்ணே..! தயவு செய்து இப்படி செய்யாதே...!


 
ந்தவனங்களைவிட்டு இடம்மாறி
கூடைகளில் பூத்திருந்த பூக்களை 

நீ ஒருமுறை பார்க்கையில்
மூர்ச்சையாகிறது அனைத்தும்...!


உன்னைப்பார்த்த வேளையில்
மயங்கிப்போன அனைத்தையும்
நீர்தெளித்து எழுப்பிவிடுகிறாள்
பூக்களின் வேதனைபார்த்து பூக்காரி...!


ஒவ்வொரு பூவாய்
தொட்டு... தடவி... இதழ்பிரித்து...
வாய்ப்பளிக்கிறாய்
ஏதோஒரு ஒற்றை ரோஜாவுக்கு...!


தெளித்த நீர்த்துளிகளை
கண்ணீர் துளியாய் காட்சிப்படுத்தி
கவலையோடு கலங்கி நிற்கிறது
மற்ற பூக்கள் அனைத்தும்...!


கோதிவிட்ட கூந்தலோடு
சேர்ந்துக்கொண்டு கர்வப்படுகிறது ஒன்று
தவிர்த்துவிட்ட வே‌தனையில்
தவிக்கிறது மற்றவைகள்...!


கூடி குழைந்து வாடி வதங்கி
உதிரும் வேளையில் கூட
சிரித்துக்கொண்டே சிதைந்துப்போகும்
வாய்ப்பு உன்னோடிருக்கும் பூக்களுக்குத்தான்...!


நொந்து வெந்து வலித்து சகித்து
மாலைவேளையில்
மயக்கிக்கொண்டே மரணிக்கும் வாய்ப்பு
உன்னை அடையா பூக்களுக்கு...!


உனக்கு எத்தனை முறை சொல்லுவது
பூக்கடைகளுக்குச் சென்று
பூக்களுக்குள் கலவரம் 

ஏற்படுத்தாதே என்று...!

வேண்டுமென்றால்
அனைத்து பூக்களையும் அரவணைத்துக்கொள்
இல்லையென்றால்
பூக்களை சூடுவதை நிறுத்திக்கொள்...!


உன்னைப்பார்த்து 

சில பூக்கள் கர்வப்படுவதையும்
சில பூக்கள் காயப்படுவதையும்
பார்த்து சகிக்கும் மனசு
என்னிடத்தில்லை...!




25 March, 2014

பேருந்து பயணமும்... மனசுக்குள் மலரும் ஆசையும்...!




குளித்துமுடித்து
எண்ணெய் தேய்த்து படியவாரிய

தலைமுடியை கலைந்துவிட்டாலும்...

நெடிக்கொருமுறை புழுதிகிளப்பி
மரம்... கெடி... கிளை.... உரசி

கண்ணில் தூசி பட்டாலும்...

பின் இருப்பவர்களைபற்றி 
கவலைப்படாத முன்னிருக்கைக்காரரின் எச்சில் 
ஆடைகளில்பட்டு தெரித்தாலும்....

சில்லூட்டும் பனிப்படலமே
முகம் நனைக்கும் மழைத்துளியோ
சுட்டெரிக்கும் வெயில் கதிரோ....


உயரத்தில் பறந்துப்போகும்
பெயர் தெரியாத பறவையோ
இல்லை வித்தியாசமான எதுவோ....


விரையும் எதிர்பேருந்தில்
புன்னகைக்கும் அடையாளம் 
தெரியாத எதோ ஒரு முகமோ...

கொய்யா வேண்டுமா அல்லது
வேர்கடலை வேண்டுமா
என பரிதாபக்குரல்கள் இம்சித்தாலும்...!


இப்படி எதாவது ஒன்று
ஒவ்வொரு பயணத்தின்போதும்
வாய்க்கிறது என்றாலும்.....


அந்த ஜன்னலோர பயணத்தைதான் 
எதிர்பார்த்து சிறகடிக்கிறது
பேருந்துப் பயணங்களில் மனசு....



17 March, 2014

அவள் இல்லாத தனிமைகளில்..!


   
னித்திருந்து
வானம் பார்க்கும் இரவுகளில்
சட்டென்று விழும்
எரி நட்சத்திரமோ...!

யாருமற்ற ஒரு நாளில்
பின்புற கொல்லையில்
இறகு உதிர்த்து சென்றிருந்த
பறவையோ...!

முற்றத்தில் ஓடும் நீரில்
படகுவிட ஆளில்லா
வெறுமையைத் தந்த
ஒரு மழையோ...!

விழாவற்ற ஒரு நாளில்
தெருவில் ஆடிஅசைந்து
ஆசீர்வதித்து வந்துகொண்டிந்த
ஒரு யானையோ...!

புல்வெளிகளில் காத்திருக்கையில்
அங்கு சிறகடித்துவரும்
வண்ணங்களில் வசப்படுத்தும்
ஏதோ ஒரு பட்டாம்பூச்சியோ..!


சப்பதங்களற்ற 

ஒரு ‌ஏகாந்த வேளையில்
வீற்றிருந்த என் நினைவை
எழுப்பிவிட்டு போகும் ஒரு குயிலோ..!

இன்னும் எதுவெதுவோ
வந்துப்போகிறது ஞாபக சுவடுகளாய்
அவள் இல்லது தவிக்கும்
என் தனிமைகளில்...!



17 January, 2014

இப்படியும் பெண்களா...?



ஒரு குளிர்கால மழைப்போல்
என்னை ‌அதிகம் சிலிர்க்க வைத்தவள் நீ....

ஒரு கோடைகால நிழல் போல்
என்னை அதிகம் ரசிக்க வைத்தவள் நீ...

ஒரு கடலோர படகுப்போல்
என்னை அதிகம் தடுமாற வைத்தவள் நீ...

ஒரு குறிஞ்சி பூத்த பள்ளத்தாக்குப்போல்
என்னை அதிகம் ஆக்கிரமித்தவள் நீ...

ஒரு இரவு ‌நேர வீண்மீன்களைப்போல்
என்னை அதிகம் வியக்க வைத்தவள் நீ...

ஒரு வசந்தகால பூக்களைப்‌ போல்
என்னை அதிகம் மிளிர வைத்தவள் நீ...

ஒரு அவசரக்கால ஒலிப்பானைப் போல்
என்னை அதிகம் பரபரக்கவைத்தவள் நீ...

ஒரு ஏழையின் மகிழ்ச்சிப்போல
என்னை விண்ணில் மிதக்கவைத்தவள் நீ....

நீயின்றி தோற்றுவிடுகிறது என் விதிகள்
நீயிருந்தால் மாறிவிடும் என் புவியீர்ப்பு விசைகளை...!


 

16 December, 2013

இது ஒரு பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது...!



எனக்கான இன்றைய
பேருந்து பயணத்தில்
காதலாய் ஒரு கவிதையை 
தந்துவிட்டு செல்கிறாள் அவள்..

எனக்கு முன்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி...
எனக்குப் பின் 
ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குகின்றாள்...

அவள் ஏறிய இடமும்
இறங்கிய இடமும் தெரியாது
 இந்த பயணத்தில்...

ஜன்னலுக்கு வெளியே
ரசித்துக்கொண்டு வந்த அவளை
ரசித்துக்கொண்டிருந்தேன் நான்...!

ஒரு காதல் காவியத்தில்
தொலைந்துப்போன பக்கங்கள் போல
இறங்கிப்போகிறாள் அவள்...

ஐகூக் கவிதையில்
மூன்றாம் வரியை தவறவிட்ட
வாசகன்போல் தவிக்கிறேன் நான்...


சஞ்சலப்பட்ட மனதோடு
தற்போதைக்கு
இறங்கும் இடத்தை மறந்துவிட்டு
பயணிக்கிறேன் நான்...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

30 November, 2013

இரண்டாம் உலகம் மகிழ்ச்சியே




மெல்லியதாய் இருந்த காற்று
இனிய தென்றலாகிறது...!

மரங்களில் பூத்த மலர்கள்
சாலைகளில் கோலம் போடுகிறது...!

சூரியனுக்கு வலப்புறத்தில் வண்ணமயமாய்
ஒரு வானவில் காட்சியளிக்கிறது...!

பட்டாம்பூச்சிகள் பறக்கும் திசையில் பார்க்கையில்
அட... நீ தான் வந்துக்கொண்டிருக்கிறாய்...!



*******************************


எல்லாம் தெரிந்தவள் போல்
மௌனித்திருக்கிறாய்...!

எதுவும் தெரியாதவள்போல்
பாவனை செய்கிறாய்...!

உனக்கு எது தெரியும் எது தெரியது
என்று புரியவைத்துவிட்டு போகிறது உன் புன்னகை...!


*******************************

என்னுடைய இரண்டாம் உலகத்தில்
நான் எடுத்து வைக்கும்
அத்தனை அடியையும்
அழுத்தமாய் பதியவைக்கிறேன்

உன் நினைவுகளை
இருக்கமாய் பற்றிக்கொண்டு....!


*******************************

மணித் துளிகள் மறந்து
நிறைய பேசுதால் வேண்டாம்...

மௌனத்தில் விழிகள் மாறி
பார்வைகள் பறிமாறவோண்டாம்...

தோள்கள் உரசி என்னருகே அமர்ந்திருக்கும்
அத்தனை நிமிடங்களும்தான் எனக்கு நிம்மதி...!
 

 *******************************

என் நினைவுகளை
எங்கே சென்று நிறுத்தினாலும்

அது தண்ணீரை தேடி பயணிக்கும்
வேர்களைப்போல ...

நித்தம் நித்தம் மறவாது
உன் திசையை தேடியே பயணிக்கிறது
 
 


21 November, 2013

மழையில் கூடவா காதல் இப்படி செய்யும்...!





விலகி நடந்த உன்னை
நெருங்க வைத்தது...

சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....

வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....

ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...

 ஆகையால் மழை நல்லது...!


நீ நட்டு வைத்த பூச்செடி
என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...

மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!

ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?

அழிக்கவும் அழகாக்கவும்
செய்கிறது மழை...!

நீ போட்ட கோலத்தை
அழித்துவிடுகிறது...

நனையும் உன் கோலத்தை
அழகாக்குகிறது...

எதை அழிக்க வேண்டும்
எதை அழகாக்க வேண்டும்
என்று தெரிந்த மழையை...

ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து..!

 
#மழைக்_கால_கவிதைகள்

06 November, 2013

இப்படிக்கூட பரவசப்படலாம்....!




நிலைக்கண்ணாடி முன்பு
நின்றுக் கொண்டு
எனக்குள் ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை...!
 

என்னை மறந்து உறங்கினாலும்
விழித்துக்கொண்டிருக்கிறது
எனக்குள் உன் நினைவு...!


*****************************
 
அம்மா அம்மா என்று அழைக்கும்
மழலைகள் போல்...

உன்னை பொழிப்பெயர்க்கும்
என் முயற்சிகளையும்...

உன்னை காட்சிப்படுத்தும்
என் கற்பனைகளையையும்....

கவிதை என்று சொல்லிவிட்டுப்போகிறது
இந்த உலகம்....!

 
*****************************

எழுதி எழுதி பார்த்தாலும்
தீர்ந்துப்போகாத காதலை
எனக்குள் விதைத்து விட்டாய்...!


தழுவித் தழுவித் தீர்த்தாலும்
தீர்ந்தப்பாடில்லை
எனக்குள் ஊடுருவும் இன்பத்தை..!

தற்போதைக்கு உனக்குள்ளும் எனக்குள்ளும்
புன்முறுவலோடு உறங்கட்டும்
நம் காதல்...!



*****************************

உன்னை கலக்காத
என் கவிதைகளுக்கு
உயிர் இருப்பதில்லை...

உன்னை கலக்காமல்
கவிதை எழுத
இன்னும் கற்றுக்கொள்ளவில்லை...

உனக்கும் எனக்கும்
உயிராக இருந்து தவித்துக்கொண்டிருக்கிறது
என் கவிதைகள்...!


*****************************


உன் கண் பார்வை கிடைத்ததிலிருந்து
கர்வப்பட்டு கொள்கின்றன என் ஆண்மை...!

உன் மூச்சுக்காற்று என்னை உரசியதிலிருந்து
எனக்குள் உயிர்பித்துக் கொள்கிறான் பாரதி...!

என்னை சுற்றி வலைத்திருந்த தடைகளை நீக்கி
இந்த உலகைவிட்டு பறக்க
சிறகு கொடுத்துவிட்டுப்போகிறது
உன் காதல்...!
 

#பரவசக்_கவிதைகள்  

என் முகநூலிலிருந்து

*****************************

10 September, 2013

ஒருபோதும் உடன்பாடில்லை எனக்கு...!



 ஒவ்வொறு சந்திப்பிலும் 
முழுதாய் பேசிவிட முடியவில்லை
நினைத்த அத்தனையையும்...!

ஒவ்வொறு கடிதத்தையும்
எழுதி முடிக்கும்போது மிச்சம் இருக்கிறது 
சொல்லவந்த வார்த்தைகள்...!

ஒவ்வொறு விடியலிலும்
என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய்
இன்னும் முடியாத கனவுகளில்...!

இதயம் சென்றுவிட்டு திரும்பும்
என் அத்தனை அணுக்களும்
உன்னைப்பற்றிய நினைவோடே திரும்புகிறது...!

இன்னும் எவ்வளவு முயன்றும் 
என்னால் தவிர்க்க முடிவில்லை
என் கவிதைகளில் உன் ஆக்கிரமிப்பை...!

காதலை சொல்லி விடுதலை கொடு...!
நான் நானாக இருந்துக்கொண்டு
நீயாக அலைவதில் உடன்பாடில்லை எனக்கு...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

30 August, 2013

இதைக்கூட அறியாமல் பெண்களா...? என் அனுபவம் பேசுகிறது...!



நான் அறிவேன் 
என் எழுத்தின் பிறப்பும்.. ஆயுளும்...

நான் அறிவேன் 
என் எழுத்தின் நிர்வாணமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வியப்பும்... வேதனையும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் உயர்வும்.... தாழ்வும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின் அரவணைப்பும்... எதிப்பும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வீரியமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  புகழ்ச்சியும்..  இகழ்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  அமைதியும்.. ஆர்ப்பரிப்பும்...


ஆனால் என் உயிரே....
இதை நீ அறிவாயா..?


நீதான் என் எழுத்தின்
உயிரும்... இயக்கமுமென்று...!


12 August, 2013

அட.. இந்த பெண்களே இப்படித்தானா?




இருக்கும் கருமையை விலக்க விரும்பி
எத்தனை முயச்சிகள் இங்கு...

வெட்கப்பட்டால் சிவக்கும் கன்னத்துக்கு
வெட்கமில்லாமல் எதையோ பூசுகிறாய்...

மெய்பூச  வேண்டிய உதடுகளுக்கு ஏன்
பொய் பூசிக்கொண்டிருக்கிறாய்...

சிரிக்கும் பூக்களை சிதறவிட்டுவிட்டு
அப்படி என்ன சிநேகம் உனக்கு செயற்கைகளோடு...

ம்...
இன்னும் எத்தனை  எத்தனை முயற்சி
உலகிற்கு பொய்முகம் காட்ட...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

16 July, 2013

இப்படித்தான் ஆகிவிடுகிறது சிலநேரங்களில்...!

விஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்..
ஒவ்வொரு முறையும்
உன்னை சந்திக்க காத்திருக்கும்‌போது
இப்படித்தான் நடந்துவிடுகிறது...

தூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து
ஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர
நீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..

உடலில்... உயரத்தில்....
குரலில்... நடையில்....
உன்னைப் ஞாபகப்படுத்தி
நொடிக்கொருத்தி என்னை ஏமாற்றுவாள்...

தேடும் கண்களும்...  நினைப்பும்..
உன்னையே உருவகப்படுத்தி
பார்க்க வைக்கிறது அனைவரையும்...!

ஆனால்...
உண்மையில் நீ அருகில்
அமர்ந்து இருக்கும்போது
யாரும் இருப்பதில்லை உன்னைப்போல்...!

 தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!

Related Posts Plugin for WordPress, Blogger...