கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 May, 2018

சாமிக்கு மொட்டை போட்டா தப்பா...?மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு...
எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க?

கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா
ரெண்டு கோட் போடணும்னு பெயிண்டர்தான் சொன்னார்.

மனைவி : ???????????????

இது மாதிரி கிறுக்குத்தனாமா இருந்தாதான் மனைவிக்கு ரொம்ப பிடிக்குது... மத்தவங்ககிட்ட பேசும்போது அவருக்கு ஒன்னும் தெரியாதுங்க.. அப்படின்னு சொல்றதுல அவங்களுக்கு அப்படி ஒரு பெருமை... 

ஆண்களும் எனக்கு எல்லாம் தெரியும்ன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிக்கிறத விட இது மாதிரி இன்னசென்டா நடந்துகிட்ட குடும்பம் குதுகளமா இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்... 

இங்க பாருங்க நம்ம ராஜி அக்கா இருக்காங்க... மாமாவுக்கும் எல்லாம் தெரிஞ்சாலும் அவருக்கு எதுவும் தெரியாதுன்னு ஓட்டறது தான் அவங்களுக்கு வேலையே.... என்ன நான் சொல்றது...!

**************************************


மகன் : அப்பா படிப்புக்கு முதல் எதிரி டிவி தான்னு நீங்க
அடிக்கடி சொல்வீங்க இல்லையா?

அப்பா : அதுக்கென்ன இப்போ?

மகன் : அந்த எதிரியை கிரிக்கெட் பாலால ஓங்கி
ஒரு தட்டுத்தட்டினேன் டிவி உடைஞ்சுபோச்சு...

அப்பா : ?!!!!!!!!!

இது எல்லாம்  வீட்லையும் நடக்கிறதுதான்.... ஆன என்ன நாம செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு தண்டனை வாக்கிறது ஒரு வகை... இது மாதிரி புத்திசாலிதனமா சமாளிக்கிறது ஒரு வகை... எப்படியிருந்தாலும் அடி கன்பார்ம்தான்...

**************************************வருண் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும்போது
மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மதன் : பொங்கலில் இருந்த முந்திரியை
எடுத்து திண்ணுட்டேன். அதான்..

வருண் :.........

பாருங்க பக்கி மாட்டுக்கு வச்ச பொங்கல்ல இருந்து எடுத்திருக்கு... பின்ன மாட்டுக்கு கோவம் வராது....

சிலப்பேர் இருக்காங்ப காக்கைக்கு வைக்கிறத எடுத்து சாப்பிடுவாங்க...

**************************************மன்னர் : மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்...

மகாராணி : இது மரபு இல்லையே?

மன்னர் : உனக்கு சமைச்சுப் போடுறேன்,
துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?

மகாராணி :?????

நாட்டுக்கு வேண்டுமானால் மன்னனாக இருக்கலாம் வீட்டுக்குள் அவர் ஒரு பெண்ணின் கணவர் தானே... கணவர் என்ற ஸ்தானம் வந்தப்பிறகு எப்படியாவது வீட்டு வேலையை வாங்கி விடுவதுதான் பெண்களின் புத்திசாலிதனம்...

கொஞ்சம் ஏமாந்தால் மொத்த வேலைகளையும் ஆண்கள் தலையில் கட்டிவிடும் பெண்கள் ஏராளம்...

முடிந்தவரை வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வேலையில் பங்கெடுத்துக்கொள்வதில் தப்பில்லைதானே..

**************************************நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான்.. சாமிக்கு மொட்டை போடுறதா
வேண்டிகிட்டேன். அதான்.

நீதிபதி : 😌😌

நாமதாம்பா சரியா செய்யறதில்லை... சாமிக்கு மொட்டை பொடுறதாகத்தானே வேண்டிக்கிறோம்... ஆனா நமக்கு மொட்டை போட்டுக்கிறோம்... இவர்தான் சரியா செஞ்சிருக்கார... அவரை குற்றவாளின்னு சொல்றீங்களே....

**************************************

18 May, 2018

இதுபோல யோசிக்க சுஜாதா அவர்களால் மட்டுமே முடியும் போல..சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
———————————

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு
‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.

இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
————————————-

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
————————————–

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும்
இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே;
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும்.
சிவனுக்கு எப்படி? 

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?

உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன்.
————————————–

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான
பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச்
சிரிக்கின்றன.
————————————–

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா?
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார்.
இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை;
அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில்
இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
——————————————

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது.
ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது.
நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
—————————————-

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா?
உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!

உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’
என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை
வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
————————————

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?
-ந.வந்தியக்குமாரன், சென்னை.
இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது
அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள்
சொக்கிலேற்றுகளாய்‌த் தித்திக்கும் என்று நம்மால்
அவதானிக்க முடிகிறது.

கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால்
சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில்
கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத்
தமிழ் அதுதான்.
—————————————–

காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
சரிதான்… துப்பறியும் கதை எழுத கொலை செய்ய
வேண்டும் என்பீர்களா?
—————————————-
ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
————————————-
ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு
அறம் செய்வது. - நற்பயன் தரக் கூடியது?
‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது
படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார்
திருமூலர்.

ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ்.
ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
—————————————–
தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில்
உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
—————————————–
இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக
வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப்
போல் வேறு ஏதாவது? 

‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள்
வெண்பாவே இப்படி இருக்கிறது.
‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
———————————————–
அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?
‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.

-----------------------------

இணைய இதழ் ஒன்றில் வாசகர் கேட்ட கேள்வி பதில்களுக்கு
சுஜாதா எழுதிய  நறுக் சுருக்  பதில்கள்

17 May, 2018

புட் டெக்கரேஷன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

காய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று  ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்குகிறோம்.

நம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறை செய்திருக்கிறது நம்முடைய பாரம்பரிய மருத்துவம்.

காலத்துக்கு ஏற்ற உணவுகள்
வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். இதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும்.
 கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம். குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

வேளைக்கேற்ற உணவு 

காலை எழுந்தவுடன் திரவ உணவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக் கும்படி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றில் செய்த இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

காலை உணவு முடிந்து, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மதிய உணவைச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், பருப்பு, கைக்குத்தல், சிறுதானியங்களை சாப்பிடலாம்.

எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் இரவில்  சிறந்தவை. இரவு 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம். தூங்கும் முன், பாலில் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் கபத்தை அதிகரிக்கும் உணவுகளான தயிர், இனிப்புகள், கீரை உடலில் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்கவும்.

இடத்துக்கு ஏற்ற உணவுகள் 

எந்த இடத்தில் வாழ்கிறோமோ, அந்த இடத்தைச் சுற்றி விளையும் உணவுகளே உடல்நலத்திற்கு ஏற்றவை. பழங்களில் கொய்யா, நெல்லி, மாதுளை, திராட்சை, வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, கமலா, போன்றவையும், காய்களில் கத்திரிக்காய், தக்காளி, பரங்கிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் எனப் பயன்படுத்தலாம்.

எப்படி சாப்பிடக் கூடாது?
பிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்னைகள் வரக்கூடும். பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின்,  செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.

புளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.

மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது.  அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.

பிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.
மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.

மது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது.  இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.

‘ஜெனரல் டயட்’ எனப்படும் பொதுவான உணவுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி தனக்கான உணவுமுறையை பின்பற்றலாம். 

16 May, 2018

Tamil Nadu HSC +2 Result - +2 தேர்வு முடிவுகளும்... விடைத்தாள் பெறும் வழிமுறைகளும்...
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2018ம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16/05/2018 இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. 

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் 
ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 

21/05/2018ம் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அதே நாளில் www.dge.tn.nic.in என்கிற இணையதளத்தில் தங்களது பிறந்த நாள் மற்றும் பதிவெண் ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தால் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17/05/2018ம் தேதி முதல் 19/05/2018 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.க் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலும் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் பின்வருமாறு; 

பகுதி-1 மொழி பாடத்திற்கு ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) பாடத்திற்கு ரூ.550 மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் பகுதி-1 மொழி, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் ரூ.305 (இரு தாள்கள் சேர்த்து), ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். 

விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வெழுதப் பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 May, 2018

தங்கச்சியும்... தமிழ் சினிமாவும்... மறக்க முடியாத சில தருணங்கள்..


தமிழ் சினிமா மறக்கமுடியாத காட்சிகள் - பகுதி - 2

தமிழ்சினிமா எவ்வளவு புதுமைக்குள் வந்தாலும் எப்போதும் சில காட்சிகள் தமிழ்சினிமாவை விட்டு விலகாமல் எல்லாப்படத்திலும் ஒட்டுக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு காட்சியை பற்றி பதிவு ஒன்றில் எழுதினேன்... அடுத்த காட்சிகளாக தமிழ் சினிமாவில் தங்கச்சியை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்...

ஒரு திரைப்படம் பார்க்கும் போது அதில் வரும் காட்சிகள் வித்தியாசமாகவும், புதுமையாகவும் காட்ட மிகவும மெனக்கிடுகிறார்கள்... ஆனால் படம் பார்க்கும் நம்ம குப்பனோ... சுப்பனோ சொல்லிவிடுகிறான்... இது அந்த படம் மாதிரி இருக்கு... இந்தப்படம் மாதிரி இருக்கு அப்படின்னு...


இன்னும் சினிமா விமர்சகர்களும்... முகநூல் ஞானிகளும் ஒவ்வொறு காட்சியும் எந்தப்படத்தில் இருந்து எந்த காட்சியில் காப்பி இது என்பதை தெளிவாக எழுதி கிழித்து தொங்க விட்டுவிடுவார்கள்... அப்படி இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயக்குனர்கள் தங்கள் பணியை செம்யைமாகவே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் 70 முதல் 2000 வரை வந்த பெரும்பாலான படங்களில் ஒரு  கேரட்டர் இருக்கும் அது தங்கச்சி கேரட்டர்... தங்கச்சி கேரட்டர் இருந்தா கொஞ்சம் செண்டிமென்ட் மசாலாவை தூக்கலாகவே தூவலாம் என்பது ஒவ்வொறு இயக்குனர்களின் நினைப்பு அதனாலதான் மசாலா படமாக இருந்தால் கூட அதில் சிறிதளவு தங்கச்சி கதாபாத்திரத்தை புகுத்தி கொஞ்சநேரம் ரசிகர்களை தன்வசம் இழுக்க முயற்சிப்பார்கள்...


பொதுவாக கதைப்படி வில்லனுக்கு தங்கச்சியாக இருந்தால் பிரச்சனையில்லை.. ஏனென்றால் பெரும்பாலான படங்களில் வில்லனுடைய தங்கச்சிதான் ஹீரோயினாக இருப்பார்கள்.. அதனால் அவர்களுடைய கதாப்பாத்திரம் வலுவானதாக இருக்கும்...ஆனால் அதேசமயம் மிகவும்  ஹீரோவுடைய தங்கச்சிதாங்க ரொம்ப பாவம்... ஹீரோக்கு தங்கச்சியா இருந்தா கண்டிப்பாக வில்லன்களால் கற்பழிக்கபடுவார்... மேலும் அடிக்கடி வில்லன்களால் விரட்டுவது.... துரத்துவது... அடிவாங்குவது... கடத்துவது என அத்தனை சீன்களிலும் தங்கச்சிதான் மாட்டிக்கொண்டு விழிப்பார்.

அதனாலே 70 வது 80 பதுகளில் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு சில நடிகைகள் நடிக்கவே தயங்கினார்கள் என்று பல்வேறு கட்டுரைகளில் படித்திருக்கிறேன்... மேலும் ஒருமுறை தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால் மீண்டும் அந்த ஹீரோவுடன் ஜோடிபோட்டு நடிக்கமுடியாது அதுமட்டுமில்லாமல் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு மட்டுமே அழைப்பார்கள் ஆகையால் பல பேருக்கு இந்த தங்கச்சி கதாபார்த்திரத்தில் நடிக்க மிகவும் தயங்கினார்கள்.


சமீபத்தில் கூட கில்லி படத்தில் நடித்த விஜய் தங்கச்சி நடிகை நான் குமரியாகிவிட்டப்பிறகு கூட என்னை விஜய்யின் தங்கையாகவே பார்க்கிறார்கள் என்று கலங்கியிருந்தார்.தங்கையை மையமாக வைத்து ஓடிய படங்களும் இங்கு ஏகப்பட்டது இருக்கு அதில் முக்கிய படங்களான பாசமலர், பச்சை விளக்கு, என் தங்கை கல்யாணி, தங்கைக்கோர் கீதம், நான் சிகப்பு மனிதன், தாவணி கனவுகள், கீழக்குச்சீமையிலே, போன்ற காலத்தால் அழியாத படங்களும்... 

சமீபத்தின் விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம் போன்ற படங்களில் தங்கை கதாபாத்திரம் மிகவும் வலுவானதாகவும் என்றும் பேசும்படியான கதாப்பாத்திரங்களாக அமைந்திருந்தன அதனால்தான் இன்றளவும் அந்தப்படங்களும் அந்த கதாபாத்திரங்களும் போற்றப்படுகிறது....

தங்கச்சி சென்டிமெண்டை சரியாக பயன்படுத்திகொண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர். தான்... தங்கை பாசத்தை வைத்து  அதிக ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான்.. சிவாஜி, ரஜினி, கமல் என அத்தனை நடிகர்களும் தங்கச்சி சென்டிமெண்ட் படங்கள் நிறையவே இருக்கு...

இன்னும் குறிப்பாக டி.ஆர். மற்றும் பாக்கியராஜ் அவர்கள் தன் படங்களில் தங்கச்சி கதாபாத்திரத்தை உருகி உருகி உறுவாக்கியிருப்பார்... இப்படி என அத்தனை நடிகர்களும் சென்டிமெண்ட் விஷயத்தில் தங்கச்சியை பயன்படுத்திய விதம் மிக அருமை

இயக்குனர் வரிசையை எடுத்துக்கொண்டால் எனக்கு தெரிந்து தான் எடுத்த அனைத்துபடங்களிலும் தங்கச்சி சென்டிமெண்ட் மையமாக வைத்தவர் இயக்குனர் பேரரசு தான்...  திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருத்தணி இப்படி எல்லாபடங்களிலும் தங்கச்சி சென்டிமெண்டுதான்...தனித்து நிற்கும் தங்கச்சி படங்கள்...

பாசமலர்... ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கைபாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.


என் தங்கை.... சி. எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் அவருக்கு விழியிழந்த தங்கையாக ஈ. வி. சரோஜா நடித்தார்.


திருப்பாச்சி.... பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதில் தங்கையாக நடித்திருந்த கற்பகத்தின் (மல்லிகா) மீது பெரிதும் பாசம் காட்டும் அண்ணனாக விஜய் அசத்தியிருப்பார்....


கிழக்கு சீமையிலே... படத்தில் வரும் விஜயகுமார்..நெப்போலியன்.. ராதிகா என தங்கச்சி கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது...

பாசத்துடன்...
கவிதைவீதி சௌந்தர்
14-05-2018

11 May, 2018

படுக்கையறை சம்பவங்கள்...!

கனவுகளின் 
தொழிற்சாலை...


ஏக்கங்களின் 
உற்பத்திக்கூடம்...


ஓடிய படகுகள் 
ஒதுங்கும் கறை...


பாடும் பறவைகளின் 
பல்லவி தேசம்...


வாழ்க்கை தேசத்து 
வசந்த மண்டபம்...


இளைய தலைமுறையின் 
அந்தப்புறம்...


பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் 
அவஸ்தைகள்...


ஏழை வாசிக்கு
இங்கு சொர்கத்தின் 
சுகங்கள்...


நாணம் கொள்ள 
இது நாடகமேடை...


மோகம் கொள்ள 
இது பள்ளியறை...


குடுமபத் தலைவிக்கு 
இது விண்ணப்ப மையம்...


பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...


சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் 
இங்குதான்...


மோங்களை அள்ளி அனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் 
இங்குதான்...


சீறும் சிங்கங்களை
பாயும் காளைகளை
சீறிய ரத்தத்தை 
சிறுக வைத்து
கால் கட்டு போட்டு 
கவிழ்த்தி கிடப்பதும் இங்குதான்..


கட்டில் வெறுத்து 
தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை 
முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் 
இங்குதான்...


காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் 
முட்களை விதைக்கிறது...


காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் 
மலர்களை விதைக்கிறது...


இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...


நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை 
மலர வைக்கும்...
வாலிப மனதை 
வாட வைக்கும்...

பல்லவி வரும்
அதை பாடித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை
பாடாய் படுத்தும்...


கவிதை வரும்
அதை எழுதித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை 
எதிரியாய் நடத்தும்....


ஜீவன் சுமந்து 
ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை 
ஒரு சுதந்திரசிறை...


படுக்கை அறையில் 
சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் 
வென்றவர் தோற்பார்


படுக்கை அறையில் 
மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம்... 
மயக்கத்தில் கொஞ்சம்...


இறுதியாய்...


படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...


படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது... 
03 May, 2018

இரவுக்குள் தான் இப்படி நடக்கிறது...


ஒவ்வொறு இரவும்
கனவுகளாலே நிறைகிறது...

அழகிய
சோலையாக இருக்கும்
ஆபத்தான
சாலையாக இருக்கும்...

சிலசமயம்
சோகமானதாக இருக்கும்
சொர்கமாகவும் இருக்கும்...

வானத்தில் பறப்பது
ஆகாயத்தில் குதிப்பது
இப்படியாய் ஒவ்வொறு கனவும்...

அழகிய வேடங்களை 
தரித்து வருகிறது
தினம்... தினம்...

விடிந்தவுடன் 
முடிந்துவிடுகிறது
இரவில் வரும் கனவுகள்...

கற்பனைக்கு 
எட்டாத காட்சிகள்...
திகைப்பூட்டும் 
சம்பவங்கள்...

காதல் பரவசங்கள்...
காம களியாட்டங்கள்...

ஆனால்
இறுதியில் ஏதும்
நினைவில் நிற்பதில்லை
விடிந்தவுடன்...!

இதில் ஒன்று மட்டுமே உண்மை
எல்லா கனவுகளிலும்
பிரிதிபலிப்பது

நம்மால் வாழ முடியாத
வாழ்க்கையையும்...!

நாம் வேண்டாம் என்கிற
வாழ்க்கையையுமே...!

இரவுக்கே தெரியாமல்
விழிகளுக்குள்
விடிந்து மறையும்
இந்த கனவுகள்...

கனவுகளாகவே
இருந்துவிட்டுப்
போகட்டும்...!


02 May, 2018

மனைவியுடன் தனியாக செல்லும் ஆண்களே உஷார்...!


"சார், கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?"

"உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா???"

"நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்....!"

"ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"

"சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்.... தாங்க மாட்டீங்க..!"

"பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம், அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!

இப்ப சொல்லு பணம் பெருசா?? அறிவு பெருசா???" :)

******************************


ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.

5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,

அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு

\"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.

லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.

வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.

நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..) மகிழ்ச்சி 😂

இந்த கதையின் நீதி.
ஒரு கண்ணால் இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......

உஷாரய்யா .... உஷாரய்யா....

******************************( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்...
எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.

அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்.....

******************************


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

******************************


Related Posts Plugin for WordPress, Blogger...