கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 September, 2019

இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பினர்...
 கணவனும் மனைவியும்..

கதவில் போட்டிருந்த பூட்டு மக்கர் செய்தது....

 "இந்தாங்க, நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய்" நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அதன்பிறகு அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

#இப்படியெல்லாம் யோசிச்சி... ரசிச்சி கணவரை திட்டிதீர்க்க இவர்களால் மட்டும்தான் முடியும்... நாம எது செய்தாலும் குறையாகத்தான் பார்க்குறாங்க.... இப்படித்தான் போயிகிட்டு இருக்கும் இங்குட்டும்...

**********************


தலைவர் செடி நடும்போது கூடவே ஒருத்தர் இருக்காரே... 
அவரு யாரு?

அவரா... கூடவே இருந்து குழி பறிப்பவர்..!

#செமையான சிந்தனை... அழகிய ரசிக்கும்படியான நகைச்சுவையும் கூட... இப்பெல்லாம் தலைவர்கூட மட்டுமல்ல எல்லார்கூடையும்....

**********************

நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாக்குறீங்களே...
ஒரு நர்ஸ் வச்சுக்கிட்டா என்ன டாக்டர்?"

"அதுக்கு என் மனைவி ஒத்துக்கமாட்டாங்க."

"ஏன் டாக்டர்?"

"ஏற்கெனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க!"

#அடேய் இப்படித்தான் வலைச்சிபோட்டயா.... அப்ப எப்படி ஒத்துப்பாங்க...
*********************************நகர சாலை ஒன்றில் விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டது....

அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம்
கூடி இருந்தது....

அப்போது அங்கு வந்த ஒரு பத்திரிகை நிருபர்...

அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்....

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது....

இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான் என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும், தயவு செய்து வழிவிடுங்கள் என்று கதறும் தோனியில் நடித்தார்....

உடனே, அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று, அவருக்காக வழி விட்டனர்....

நிருபர் அருகில் சென்றவுடன், விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்....

அது ஒரு கழுதை...!

#இப்படிதான் பலபேர் அவசரப்பட்டு முட்டாள்தனமா யோசிச்சி அவமானம்படுறோம்....

#இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....

******************************
ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

இவைகள் சும்மா ஒரு ரீ-எண்ட்ரிக்காகத் தான்....!
மீண்டும் தொடர்வோம்...
கவிதைகளுடன்...

15 January, 2019

கிராமத்தோடு புதைக்கப்பட்டவை....


முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
* உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
** அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.


* காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
** காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.


* கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
** ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.


* கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
** கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.


* கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
** உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.


* வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
** கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
* கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
** இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.* தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
** அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.


* தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் 
இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
** உடலில் காற்றின் அழுத்தம் கூடி 
வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.


* முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
** உடலில் அதிக எடை கூடிவிட்டது 
அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.* உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, 
பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
** உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் 
குறைந்துவிட்டது என அர்த்தம்.


கிராமங்கள் மறந்துவிட்ட முழுக்க முழுக்க கிராமத்தின் பசுமையை ஞாபகப்படுத்தும் 
அழகிய ஓவியங்களுடன்...

படங்களுடன் நோய் மற்றும் அது வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

10 January, 2019

உன் பசிக்கு இரையாகிறேன்...


*******************************


*******************************


*******************************


*******************************


*******************************

சும்மா ஒரு ஜோக்...
------------------------------------

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவிய கண்காட்சில உங்க ஓவியந்தான் பாக்கற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமாம்.. மத்த ஓவியங்கள சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல..

ஓவியர் : ....!!!!!

*******************************

ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும். 
இது இறந்த காலமா? எதிர் காலமா? 

மாணவன் : அய்யோ சார், சூரியன் மறஞ்சா 
அது சாயுங்காலம் சார்...

ஆசிரியர் : 😐😐

*******************************

09 January, 2019

எந்த டாக்டராவது இப்படி செய்வாங்களா..?வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் நண்பர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு  நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் எலியை ஒழிக்க என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த நண்பரிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி அப்படி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".

★★★★★★★★★★★★★★★★ஒரு டாக்டர் தன் பேஷண்ட் கிட்டே, 
உங்களுக்கு மறுபடி ஆபரேஷன் செய்யணும் அப்படின்னார்.


ஏன் டாக்டர்?


மறந்தாப்ல என் க்ளவுஸை உங்க வயித்தில வைத்து தைச்சிட்டேன், அதை எடுக்க தான் மறுபடி ஆபரேஷன், அப்படின்னாரு டாக்டர்.


போங்க டாக்டர், போய் 20 ரூபாய் கொடுத்து புது க்ளவுஸ்
வாங்கிக்கோங்க-ன்னாரு பேஷண்ட்....

டாக்டர், ஙே...ஙே!

இவ்வளவு திறமையான டாக்டர் எங்க இருக்காரு பாருங்க
நமக்கு வேண்டப்படங்களை கொஞ்சம் அனுப்பி வச்சி பார்ப்போம்...

★★★★★★★★★★★★★★★★


என்ன டாக்டர், 
இந்த நடு ராத்திரியில கிளினிக்கைத் திறந்து வச்சுகிட்டு இருக்கீங்க?

தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் 
எவனாவது வருவான்னுதான்.

பகலில் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து வெறுத்துப்போன யரோ ஒரு டாக்டர்தான் இப்படி யோசிக்கிறாரு போல... 

★★★★★★★★★★★★★★★★


மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா
இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?

கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தற,
பேசாம உன் தங்கச்சியை வர சொல்லு!

மனைவி : ....

இதுக்கூட செம ஐடியாவா இருக்கே... ஆனா இப்படி கேட்டப்பிறகு அவரோ நிலைமையை நினைச்சாதான் பாவமா இருக்கு... அனேகா இப்ப அவர் மருத்துவமனையில இருந்தாலும் இருக்கலாம்... யாரு கண்டா... ஹா..ஹா....

★★★★★★★★★★★★★★★★

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

07 January, 2019

அவிழ்த்து விட்டு விடுங்கள்...!வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நாம் கற்றுக்கெள்ளும் பாடம் தான்... வாழ்க்கையை நகர்த்துவதற்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. நமக்கு ஏற்படும் மனகசப்பு, துயரங்கள் கேள்விகள் போன்றவற்றுக்கு விடை தருவது காலமும்.. அதனோடு இனைந்து வரும் இந்த உலகமும்தான்

நாம் சில சம்பவங்கள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கவிதைகள் படிக்கும்போது அல்லது கேட்கும் போதோ நம்மனதில் சில உறுத்தலையோ அல்லது சிறு தாக்கத்தையோ விடடுச்செல்லும்... இதுசரிதானே என்று நம்மிலே நம்மை கேட்டு நச்சரிக்கும். அவற்றில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் உணர்வோம்..

அப்படி சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு கதையைத்தான் தற்போது தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்... படித்த நேரம் முதல் என் மூளையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஏதோ செய்துக்கொண்டு இருக்கிறது... அவற்றை தங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்..


துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.  பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். I

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.  ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்......??? என்று கேட்டான்.

துறவி அவனிடம் சொன்னார்....

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய்.

"ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும்.

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி.

இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன், என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கரீங்க.....???

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!

உண்மைதானே... நாம் இன்னும் பலகோடி ஆண்டுகளாய் பல்வேறு அழுக்குகளை மனதிலே தேக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்... அதை விடமறுத்துவிட்டு கலாச்சாரம், பாரம்பரியம், என்று வியாக்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறோம்..

சிலர் அதை தனித்தன்மை, பிடித்தவை, கொள்கை, என் தனிவழி என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேற எது நமக்கு தடையாக இருக்கிறதோ அதை அப்படியே காலில் போட்டு மிதித்து முன்னேற பழகிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதுவே நம் காலில் கட்டப்பட்டுள்ள சங்கிலிப்போல் நம்மை நகரவே விடாது.


04 January, 2019

இதுதாங்க ரஜினியின் பேட்ட படத்தின் கதைதலைவர் ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா இருக்கார். ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்ட் அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் வார்டன். பசங்க எப்படி பேஸ்புக் போஸ்ட் போடனும் எப்படி டிக்டோக் பாக்கனும்னு எல்லாத்துலயும் அவ்ளோ ஸ்ட்ரிக்டா இருப்பார். 

அவரை மீறி ஹாஸ்டல்ல ஒரு ஈ காக்கா நுழைஞ்சிட முடியாது. ஒரு நாள் ரொம்ப கம்பீரமா பெருமையா ஸ்டூடண்ட்ஸ் படை சூழ வராண்டாவுல நடந்துட்டு வந்துட்டு இருக்கார். அப்போ ஒருத்தன் தலை முழுக்க ஹெவியா பங்க் வெச்சிட்டு வராண்டாவுல நின்னு தம்மடிச்சிட்டு நிக்கிறான். 

தலைவர் பக்கத்துல வந்து கோவமா ஒரு லுக்கு விடுறார். அப்பவும் அவன் கண்டுக்காம தம்மடிச்சிட்டு நிக்கிறான். தலைவருக்கு செம கோவம் வந்து டேய் இங்க வாடானு கூப்ட்டு இந்த உன் பீசுனு கைல காச எடுத்து கொடுத்து இப்பவே நீ காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துல இருந்தும் டிஸ்மிஸ் போடா வெளியனு அடிச்சு விரட்டுறார். 


அதைப் பாத்து மத்த ஸ்டூடண்ட்ஸ்லாம் திகைச்சு போய் நிக்கிறாங்க. எல்லாரையும் பாத்து தலைவர் பாருங்க டிசிப்லின் இல்லைனா இது தான் கதினு வார்னிங் குடுக்கிறார். 

அதைக்கேட்ட ஒரு ஸ்டூடண்ட் சார் அவன் நம்ம ஸ்டூடண்ட் இல்லை கூரியர் கொடுக்க வந்தவன் சார்னு சொல்றான். தலைவருக்கு உடனே கடுமையான கோவம் வருது. அந்த கூரியர் பாயை தேடிக்கண்டு பிடித்து அடிக்கிறார். 

அவன் பணத்தை கொடுக்க முடியாது என்று சவால் விட்டு 20 அடியாட்களை அனுப்பி வைக்கிறான். அனவைரையும் வெளுத்து அனுப்புகிறார். யார் இவன் என்று ரவுடிகள் அனைவரும் குழம்புகின்றனர். கடைசியில் அது ஒரு ஹாஸ்டல் வார்டன் என்று கண்டுபுடிக்கின்றனர். 

இதற்கிடையில் ஹாஸ்டல் பணத்தை யாருக்கோ கொடுத்து விட்டார் என்று ஹாஸ்டலில் இருந்து தலைவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அதை அறிந்த சிம்ரனுக்கு தலைவர் மேல் காதல் வருகிறது. தலைவருக்கும் சிம்ரனுடன் டூயட் பாட 20 வருடங்களுக்குப் பின்னர் வாய்ப்பு வந்திருப்பதை அறிந்து தவறவிடாமல் டூயட்டை முடிக்கிறார். வில்லன்கள் ஒருவழியாக பெரிய பவர்புல் வில்லனை மும்பையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து கூட்டி வருகிறார்கள். 

தலைவரும் அவர்களை கண்டுபிடிக்க ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றுகிறார். சைடு வில்லனுக்கு ஸ்வீட் பிடிக்கும் என்று கண்டுபிடித்து ஸ்வீட் சாப்பிடலாம் என்று கூட்டிக்கொண்டு போய் வில்லன்கள் கூட்டத்தை மொத்தமாக பிடிக்கிறார். 

அனைவரையும் அடித்து உதைத்து அந்த கூரியர் பாயை கண்டுபிடித்து அவனிடம் கொடுத்த பணத்தை மீட்டு மீண்டும் வார்டன் பதவியை அடைவதே மீதிக்கதை.

இந்த பேட்ட கதையின் ஆசிரியர் #பன்னிக்குட்டி ராமசாமி தானுங்கே...
Related Posts Plugin for WordPress, Blogger...