கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

27 June, 2016

கடவுளானாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...!




உண்மையைத் தேடி ஒருவன்... ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட சாத்தான் முடிவு செய்தது. அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழையமுடியாதபடி அந்த மனிதனுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.

அழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சு மொழியில் பேசி அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்ற உடன் சட்டென சுய உணர்வு பெற்றவனாக அவளிடம் இருந்து விடுபட்டு திரும்பி விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.

அந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்று விடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன் பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.

எந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றை எல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான் அவன். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போய் சாத்தான் ஒரு மூலையில் போய் சோர்ந்து ஒடுங்கினான்.

ஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.

ஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனை பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது, இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லை என்று எண்ணினான்.


சற்றுநேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ, கோட்பாடோ, ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசி கூட இதைவிட சிறப்பாகவே பேசுவான் என்று எண்ணிய அவனுக்குள் ஏளனப் புன்னகை உதித்தது. மக்கள் மடையர்கள், யாரையாவது தொழுது வணங்கவேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள் எல்லாக் காலங்களிலும் என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான்.


அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூளையில் உற்றுப் பார்த்தார். நீ இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்தில் இருந்தே உன்னுடையவன்தான் என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே. (ஜென் கதைகள் என்ற நூலிலிருந்து)

நீதி : இறைவனைத் தேடும் பொழுது பொருள், புகழ், பெருமை, ஆசை, எல்லாவற்றையும் உதறத்துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துக்களில் இருந்து விடுபட மாட்டார்கள்

தற்போது... இன்னும் ஒருபடி மேலேபோய் எவ்வளவு நேரத்தில் கடவுளை பார்க்க வேண்டும்... எவ்வளவு ரூபாயில் கடவுளை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் கூட பக்தர்கள் முடிவுசெய்யும் காலம் எப்போதோ வந்துவிட்டது...!

இறுதியாய் கடவுள்  அவரவர் எண்ணங்களிலே வாழ்கிறார்...!

07 April, 2015

வெற்றியை கண்டடையும் வழி



உழைப்பின்றி எந்த ஒரு சமூகமும் முன்னேற்றம் அடைந்ததில்லை. அதிர்ஷ்டத்தை நம்பியோ, ராசியை நம்பியோ, நேரத்தை நம்பியோ ஒரு காலமும் வெற்றியின் உச்சியை அடைந்துவிடியாது. வெற்றி என்ற சொல்லின் அடிநாதமாய் அமைந்திருப்பது உழைப்பு... உழைப்பு... என்ற உறுதியில் மட்டுமே. லட்சத்தில் யாரோ ஒருவருக்கு அதிர்ஷ்டத்தில் வெற்றி கிடைத்ததே என்று அனைவரும் முயற்சிப்பது புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்ட ‌கதைப்போல்தான் ஆகிவிடும். 
 
இக்கறைக்கு அக்கறை பச்சை என்று சொல்லுவார்கள்... ஆனால் அங்கு சென்று பார்த்தால்தான் அங்குள்ள நி‌லைமை நமக்கு விளங்கும். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்‌கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே” என்ற பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது... எப்போதும் நம்மிடத்தில் நாமே நம்பிக்கை வைப்பதை மறந்துவிடுகிறோம். நம்முடைய நம்பிக்கை, நம்முடைய உழைப்பு நமக்கு உதவாத போது அடுத்தவர் உழைப்பு நமக்கு உதவப்போவதில்லை... அடுத்தவர் நம்மீது வைக்கிற நம்பிக்கையை கூட நாம் நம்மீது வைப்பதில்லை...!

இன்றை வேகமான உலகில் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நேர்மை, தர்மம், ஒழுக்கம் போன்றவற்றை குழிதோண்டி புதைத்துவிடுகிறார்கள்... குறுக்குவழியில் விரைவாக சம்பாதிப்பது என்பது கைதேர்ந்த சமூகத்தின்மீது அக்கரையில்லாத ஒருசிலருக்குமட்டுமே சாத்தியம் அதை பார்த்து அனைவரும் முயற்சிப்பதுதான் காலக்கொடுமை.


அதிர்ஷ்டம், வெற்றி, எங்கிருக்கிறது என்ற உண்மையைச்சொல்லும் அழகிய ஜென் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது....


ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் பொக்கிஷம் இருப்பதாக பேசிக்கொண்டனர்.


இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்று, தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.


அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் பொக்கிஷத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் "இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது. அதுவும் அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை, உன்னுள் தான் உள்ளது" என்று சொல்லிச் சென்றார்.

பொக்கிஷங்களும், செல்வங்களும் வரவைக்கிற திறமை ஒவ்வொறு மனிதருக்குள்ளும் இருக்கிறது ஆனால் நாம்தான் அதை பயன்படுத்துவது இல்லை. தூண்டிகளோடு ஒரு நாள் வீணடித்து ஒரு கிலோ மீன்பிடிக்கும் நபர் வேலைக்குச் சென்றால் இரண்டு கிலோ மீன்களை வாங்கலாம் என்று நம்பிக்கைவைப்பதில்லை. எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை விட்டுவிட்டு எதிர்காலத்தையே அதிர்ஷ்டமாக மாற்றுங்கள்

17 December, 2013

கடவுள் எங்கு இருக்கிறார் தெரியுமா..?



இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். 

குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.  மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.


குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.


அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.

அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.


பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.

இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது.

11 November, 2013

குழந்தைகளே ஜாக்கிரதை...


 

கோடி அணுக்களிலிருந்து பிரிந்து
ஒற்றை அணுவாய் உயிர்வளர்த்த
கர்ப்பத்திலிருந்து தப்பியதற்கு ஆச்சரியமா..?

ஆனந்தமா...!
பத்துமாதம் ஓய்வெடுத்த
கர்ப்பத் தடையை உடைத்ததற்கு...

இந்த பூமியில் மையம் கொள்ள வந்த
புத்தம்புது இளம் புயலே
ஒரு சேதி தெரியுமா உனக்கு..?

மூடிக்கிடந்த ஓட்டை உடைத்து
புதிதாய் உயிர்பித்து விட்டாய்
பசியோடு இருக்கின்றன பருத்துகள்...

உனக்கு வித்தியாசமான
தூண்டில்கள் தொட்டில்களாக இங்கு
அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன

உனக்கொரு தாலாட்டு 
சினிமா பாட்டில் மட்டுமே...
 

ஒவ்வொரு கனமும் உன் நம்பிக்கை
கூண்டில் நிறுத்தப்படும் கலங்காதே...

புகழாரங்கள் கேட்டு 
வீண் கனவு வளர்க்காதே...
 

மீனுக்காக வலை விரித்து
கானலில் காத்திருக்காதே...

வளரும்போதே வளர்க்கப்பார்
 வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையை...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

20 April, 2013

இரவு நேர மின்தடையும்... விஜய் நம்பும் அதிர்ஷ்மும்...!

தமிழகம் எங்கும் பல்வேறு இடங்களில், சூழ்நிலைக்குத் தக்கபடி, பல நேரங்களில் மின் வெட்டு இருப்பது, அனைவரும் அறிந்ததே. ஆனால், இரவு, 12:00 மணி முதல், 1:00 மணி வரையிலும், அதிகாலை, 3:00 மணி முதல், 4:00 மணி வரையிலும் உள்ள மின்வெட்டு, குழந்தைகள், பெரியவர்கள் என, அனைவருக்கும் மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இரவு சரியாக தூங்க முடியாததால், மாணவ, மாணவியர் பள்ளியில் சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை. பெரியவர்களுக்கும் அடுத்த நாள் பணிகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். குடும்பத் தலைவிகளும், அடுத்த நாள் எழுந்து, கடமைகளைச் சரிவர செய்ய முடிவதில்லை.
மின்சாரம் நிறுத்தப்பட்ட உடனேயே, கொசுக்களின் தொல்லை மிகுதியாகி விடுகிறது. இந்த இரண்டு மணி நேர மின்வெட்டும், திருடர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. 
எனவே, மாணவ, மாணவியர், வயதானோர், குடும்பத் தலைவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் நலனை கருத்தில் கொண்டு, இரவு, 10:00 மணிக்கு மேல் மின் நிறுத்தம் செய்யாமல் இருந்தால், அனைவருக்கும் பயனாக அமையும்.  யோசிக்குமா மின்சாரவாரியம்.

+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+**+*+*+
“ஒரு படத்திலாவது, உங்களுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் மகன் சஞ்சய், அவரிடம் ஆசையாக கேட்டார். அதையடுத்து, “வேட்டைக்காரன் படத்தில், “நான் அடிச்சா தாங்கமாட்டே என்ற பாடலில், மகனை, தன்னுடன் சிறிது நேரம் நடனமாட வைத்தார் விஜய். 
அந்த வகையில், நானும், ஒரு நண்பன் போலதான் என்று சொல்லும் விஜய், மகன் மூலம் தான், தன் படங்கள் பற்றி, வெளியே என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்கிறார். “என் படங்களின் பாடல்களை முதலில், அவனிடம் போட்டுக் காட்டுவேன்.

அவனுக்கு, எந்தெந்த பாடல்களெல்லாம் பிடித்திருக்கிறதோ, அதெல்லாமே கண்டிப்பாக ஹிட்டாகும். “துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற, “கூகுள் கூகுள் பாடலை கேட்டு விட்டு, இந்த பாட்டு, கண்டிப்பா ஹிட்டாகும்னு சஞ்சய் அடிச்சி சொன்னான். அதே போன்றே ஹிட்டானது என்கிறார் விஜய்.

07 January, 2013

என்னை கலங்க வைத்த பட்டாம்பூச்சி....


பூக்களை பறிக்கும் 
பொழுதுகளிலெல்லாம்
முட்களோடு வதைப்படாமல்
திரும்பியதில்லை என் கைகள்...!


ஓய்வைத்தேடி கயிற்றுக்கட்டிலில்
தலைச்சாயும்போதெல்லாம்
உறுத்திக்கொண்டே இருக்கும்
இன்றைய நாளைய தேவைகள்...!


ஆறுதல் சொல்ல 
ஆளில்லாத பலதருணங்களில்
என் சோகத்தையும் சேர்த்து

பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!

 வண்ணமிகு கோலத்துடன்
வானவில் வந்தவுடன் பதறித்தான்போகிறேன்
ஒழுகும் குடிசை என்னுடையது...!


காலங்களும் தருணங்களும்
எனக்கு இப்படியாய் இருக்க...
தற்போது புதியதாய் ஒரு வேதனை
என்னை சூழ்கிறது...!


நேற்று ஒரு பயணத்தின்போது 
என் முகத்தில் பட்டுத்தெறித்து சிதறிய 
ஒரு பட்டாம்பூச்சிக்காக...!

 
வாசித்த அனைவருக்கும் நன்றி...!

20 September, 2012

என்ன செய்யலாம் இந்த உலகை...?



நம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு,
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

நம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

தற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!

மீள் பதிவு...

26 July, 2012

ஆடி மாச அனுபவங்கள்..! நீங்களும் தெரிஞ்சிக்கங்க...

தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந்து பக்தியோடு,  கூழ் ஊற்றுதல், அம்மன் தரிசனம் என இம்மாதமே விழா கோலத்தோடு இருக்கும். 

24 January, 2012

மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..!



‌அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருத்தி, சுவாமி விவேகானந்தரைப் பார்த்து இறைவன் எல்லை கடந்தவர், மனம், வாக்கு, செயல்களுக்கு அப்பாற்பட்டவர் என்றகிறீர். ஆனால் உங்கள் நாட்டில் உருவமற்ற பரம்பொருளுக்கு உருவம் வைத்து வழிப்படுகின்றீர்களே எதற்காக..? என்று விளக்கம் கேட்டாள்.


உடனே சுவாமிஜி அவள் வீட்டில் உள்ள ஒரு போட்டோவை சுட்டிக்காட்டி “அது யார்”? என்று கேட்டார்.


என் தந்தையார் என்று பதில் சொன்னால் அந்தப் பெண்.

வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும், ஓவியமாக இருக்கின்ற இது உன் தந்தையா? என்று கேட்டார் சுவாமிஜி.

இது என் தந்தையல்ல. ஆனால் என் தந்தையை நினைவூட்டுகின்ற அடையாளம் என்றால் அப்பெண்.

இதேபோல்தான் எங்கள் நாட்டிலுள்ள விக்ரகங்களுக்ளும் இறைவனை நினைவூட்டுகின்ற அடையாளமாகத் திகழ்கின்றன... என்று விளக்கமளித்தார்.



இந்த உலகில் வாழும் மக்கள் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பவும்,  அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், தன்னுடைய சமூக பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உறுவானதுதான் சமயங்கள்.


பண்டைய காலங்களில் எதற்கெல்லாம் பயந்தார்களோ, எதன்மீதெல்லாம் நம்பிக்கை வைத்தார்களோ அவையெல்லாம் இந்த பூமியில் தெய்வமாக மலர்ந்தது. சாதாரண செங்கல் முதற்கொண்டு வானுயர்ந்த சிகரங்கள் வரை இங்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.


அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கடவுள்களின் உருவங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், வழிபாடு முறைகளும் தோன்றியது. இன்றைய காலகட்டத்திற்கும் சிறிதளவும் மாற்றம் அடையால் இந்த உலகில் சமயங்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


இந்த உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் தன்னுடைய தனித்தன்மையை காட்ட பலவகையில் வித்தியாசப்படும். அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இந்த உலகில் பிரதான சமயங்களாக உள்ளவைகள் மூன்று மட்டுமே அவை, கிறிஸ்துவம், இஸ்லாமியம், இந்து மதம், இந்த உலகம் முழுவதும் பரவிக்கிடப்பவர்கள் இவர்களே. இந்த மூன்று மதங்கள் சொல்கின்ற தத்துவமும், வாழ்க்கை முறையும் ஒன்று தான் அது சில இடங்களில் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடலாம்.


அந்த மாறுபாட்டை மற்ற மதத்தவர் மதித்து நடந்துவிட்டால் இந்த உலகில் சண்டைசச்சரவுகள் இல்லாமல் இருக்கும். ஆனால் சில தீயசக்திகள் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என மற்றவரை விமர்சித்து அதில் எழும் சண்டைகளில் குளிர்காய்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே சாதாரண வாழ்நாளைக்கொண்ட நாம் யுகம் வாழ்பவர்கள்போல் மற்ற மதத்தவரை இழிவுபடுத்தியும், அவர்களை சாடியும் இந்த உலகின் சகமனிதர்கள்மீது அக்கறைகொள்ளாமல் வாழ்வது வீணே.


மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.


எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை அவ்வளவுதான்.

15 December, 2011

என்ன செய்யலாம் இந்த உலகை...?



நம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

நம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

தற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!


01 November, 2011

இதை என்னவென்று நான் சொல்ல...!


தென்றல்காற்று வீசும்
மாலைப் பொழுது...!
 
அந்திவானம் 
தங்க நிறத்தில்..!

காக்கைகள் படபடத்தது
கூட்டை நோக்கி...!

மாலை நேரப்பூக்கள்
மலர்ந்த மயக்கத்தில்...!

விழியோரம் தீபம் ஏற்றி
உலா வந்தது மின்மினி...!

மூன்றாம் பிறையாய்
முகம் காட்டி சிரித்தது நிலா...!

மகரந்த சேர்க்கையை முடித்துவிட்டு
கூட்டுக்கு திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி...!

சூரியனை வணங்கி முடித்து
தலை தாழ்கிறது நெற்கதிர்..!

காற்றைக்கிழித்துக்கொண்டு
தடக்.. தடக்.. சத்தத்துடன் புகைவண்டி...!

மாலைப் பொழுதை தழுவிக்கொள்ள
மடைத்திறக்கிறது இருட்டு...!

தினம் தினம் இப்படித்தான்
மாலை பொழுதுகள்...!

ஆனால் எனக்கோ..?

நேற்று சுடுச்சோறு..!
இன்று பழையது...!
நாளை...?


தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே...!

09 October, 2011

இது என் அன்புள்ள எதிரிகளுக்கு...


இதுவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...

தோழர்களோடு மட்டுமே ‌தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...

முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..

என் அன்புள்ள எதிரியே..
தற்போது
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..

நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
எப்படியாவது அதை அடைந்து விட...

நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே...
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது...

உன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
‌அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது...

என் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!

என் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும்தான் காரணம்

காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!

என்னோடு போரிட 
நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....

ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..

 

அதுவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...

தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள .........களுக்கும்
என் நன்றிகள்...


06 October, 2011

இதை விடவா மனிதன் உயர்ந்தவன்...!



ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

ஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...




ஒரு பாறையின் மூச்சு....

ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....

நான் வலிகளால்
கடவுளாகிறேன்...




ஒரு பனித்துளியின் சுவாசம்..

ஒ.. மனிதா.. 
நீ நீரில் மூழ்கையில் 
மூர்ச்சையாகிறாய்...

நான் மூச்சடக்கி 
முத்தாகி‌றேன்....


 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

09 August, 2011

சுயமரியாதையை விட்டு வாழ்வதா..?


காலையில் 
பூக்களைப்போல் மலர்கிறேன்...!
மாலைக்குள் மனித சூரியன்களால்
மரணிப்போம் ‌என்று தெரிந்தும்.... 

சிகரங்களில் விழுந்தாலும்
அடிவாரத்தை நோக்கி பாயும் மழைபோல
மேல் நோக்கி எழும்போதெல்லாம் 
சூழ்ச்சியால் வீழ்த்தப்படுகிறேன்....

வானம் நோக்கி சிறகு விரிக்கையில்
கால்களுக்கு சங்கிலிபிணைப்பு...

காலத்தோடு போர்கொடி ஏந்தி
காத்திருக்கிறேன் என்விடியலுக்காக...

உலகத்திற்கு என்னதெரியும்
பாறைக்குள் முளைத்திட்டு
நீருக்காக அலையும் 
என்வேர்களைப்பற்றி... 

சுயமரியாதையை விட்டுவிட்டு
இங்கு யாருக்கும் தலைவணங்க
இடம் கொடுக்கவில்லை 
என் உயிரணுக்கள்....

காலத்திற்கும் இடத்திற்கும்
நேரத்திற்கும் ஏற்றார்போல்
வண்ணம் ‌கொண்டு மாறிக்ககொள்ள
நான் ஒன்றும் பச்சோந்தியல்ல...

தனிமையை சுவாசித்து
மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
வெட்டும்போதும் கூட 
எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
மரத்தினைப்போல...

நாளை துளிர் விடலாம்
என்ற நம்பிக்கையில்...!


நல்ல பதிவுகளுக்கு 

கருத்திட்டு வாக்களித்து கௌரவப்படுத்துங்கள்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

25 July, 2011

பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது..?




ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்

ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி

ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

22 July, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
கண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..! 

03 July, 2011

நான் எதுவாக விழ வேண்டும்..


கரிசல் காட்டில் விழுந்தேன்
தானியமாக முளைத்தேன்....

பூக்களின் இதழ்களில் விழுந்தேன்
நறுமணமாய் முளைத்தேன்...
 
 
கடல் ‌ஆழத்தில் விழுந்தேன்
முத்துக்களாய் முளைத்தேன்...


 குயிலுக்குள் கருமையாய் விழுந்தேன்
ராகமாய் முளைத்தேன்...


செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
கவிதையாய் முளைத்தேன்...
 
எதுவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....


Related Posts Plugin for WordPress, Blogger...