கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

25 March, 2024

இந்தபதிவை படித்தால் புரிந்துவிடும்... அவ்வளவுதான்....




இதை படித்தால் புரிந்துவிடும்... அவ்வளவுதான்.... இந்த நூலைப்பற்றி சுருங்கச் சொல்ல... ஐயா விமலன் அவர்களுக்கு என் நன்றிகள்

எனது நூல் பற்றிய திறனாய்வு பதிவு...!

படித்து முடித்தவுடன் அல்ல சற்று தாமதம் கொண்டே எழுதுகிறேன். கவிதை வீதி சௌந்தர் அவர்களின் 

"சிதறிய மனசின் சில்லுகள்"

"என் இரவுகளின் அரிதாரங்கள்" இரண்டு கவிதைதொகுப்புகளையும் பற்றி!

முதலாவது சமூக நடப்புகள் சுமந்தும், இரண்டாமாவது முழுக்க காதல் சுமந்துமாய் நம்மை கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது.

காதலற்று சமூகமும்,சமூகத்தில் காதலற்று இருப்பதும் சாத்தியமற்றது தானே,,,? ஆகவே இரண்டையும் பிசைந்து நேர்த்தி கொண்டு தந்திருக்கிறார்.

விழி இடறச்செய்யா எழுத்தும், மனம் தடுமாறச்செய்யா நடையும், இவை இரண்டுடன் கைகோர்த்து புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிற படங்களும் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே!

மனம் முழுக்கபாரம் சுமந்தலைபவனின் ஒற்றை தினத்து நகர்வையும் , அவனின் துயரத்தையும், அன்றைய தூக்க நேர இரவின் தலையணைகள் உள் வாங்கிக் கொள்கின்றன என்பதை.... //படுத்து முகம் புதைத்து கண்ணீர் வடித்து எத்தனை சோகத்தையும் சொல்லி அழுதாலும் ரக்சியமாய் வைத்துக்கொள்கின்றன தலையணைகள் //என்பதை "தலையணை ரகசியம்" கவிதையில் கோடிட்டுக்காட்டிவிட்டு...

"புரிதலின் இடைவெளியில்" கவிதையில் ஆடுகளை மேய்த்தே  அறிவு வளர்த்தோன் நம் முன்னோர் என ஆரம்பித்து...

//புரிந்தும் புரியாத இடைவெளியில் ஐந்தறிவும், ஆறறிவும்//எனமுடிக்கிறார்.  உடல் நலமில்லாததால் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்லாத மேய்ப்பவனின் நிலையைச்சொல்லி...!

வேலையில்லா பட்டதாரியை இச்சமூகம் பார்க்கிற பார்வையையும்  மதிப்பிடுகிற நிலையையும், அவனின் மன வேதனைகளையும்...

//முயன்று பார்த்து தோற்றேதான் போகிறது என் தற்கொலை. என்னை மலை போல் மனதில் வைத்து நம்பிகையோடு தவம் கிடக்கும் என் அம்மாவுக்காக// என பொறுமுகிறார். "தள்ளிப்போகிறது தற்கொலை" கவிதையில்!

பெயருக்கும் நடத்தைக்கும் காத தூரமிருப்பதை "பெயரில் என்ன இருக்கிறது" கவிதையில் //அழைக்கவும் அடையாளப்படுத்தவும் என்பதைத்தவிர்த்து// என அழுந்த ஞாபகப்படுத்துகிறார்.

கட்டப்பட்டிருக்கிற வாழைமரங்களுக்கும் இசைத்துக் கொண்டிருந்த மங்கள நாதஸ்வர இசைக்கும், அலங்கரிக்கரிக்கப்பட்டிருந்த மணடபத்திற்கும் இடையே சட்டென்று சத்தமில்லாது காணாது போய்விடுகிற மணப்பெண்ணின் தனிமையை //சட்டென கதவு தட்டிய சத்தம் கேட்டு அறை முழுவதும் தறிகெட்டு ஓடியது மணப்பெண்ணின் கடைசித்தனிமை//என பெண்ணின் நிலைபற்றிச் சொல்கிறார்  "கடைசித்தனிமை" கவிதையில்.

அலைபேசி  வந்து விட்ட பின் மனிதன் சந்திக்கிற இடர் பற்றியும் அடைகிற துயர் பற்றியும்.... "இப்படியாய் நடந்த விபரீதம்" கவிதையில் சிட்டுக்குருவி பாஷையில் வருத்தம் தெரிவிக்கிறார் //கதிர் வீச்சால் வம்சத்தை இழந்த சிட்டுக்குருவி ஒன்று//என.

புது வாசம் பூசிக்கொண்ட புத்தம் புது வீட்டின் மஞ்சத்தில் தம்பதிகள் சங்கமிக்கிற அதே வேளையில் தான் வசித்த மரங்களைத்தேடி அலைகிற பறவைகளின் நிலையை //இருந்த இடம் தெரியாமல் போன நெடும் மரங்கள் தேடி வீட்டைச்சுற்றி சோகமாய் சிறகடித்துக்கொண்டிருக்கி _றது கூட்டை இழந்த ஒரு பறவைக் குடும்பம்// என கவலை கொள்கிறார் "தேடித்திணரும் சிறகுகள்" கவிதையில்

இப்படி உயிர்ப்பாயும் தன் முனைப்புடனுமாய் "சிதறிய மனசின் சில்லுகளில்" சமூகம் பற்றியும்,

"என் இரவுகளின் அரிதாரங்களில் தொகுப்பு முழுக்க காதல் பற்றியுமாய் எழுதியிருக்கிறார்.

தனக்கு வராத கடிதத்தை தராத தபால் தபால்க்காரர் தன்னைக்கடந்து செல்கையில் காதலியை நினைத்து  //அடிப்பெண்ணே நீ கடித்தைக்கூடவா மௌளனத்தில் போடுவாய்// எனக்கேட்கிறார் மௌனத்தை மட்டுமே பாஷையாய் சுமந்து கொண்டிருக்கிற காதலியை நோக்கி! "வார்த்தைகளின் வஞ்சனைக்காரி" கவிதையில்!

மனம் தேக்கி வைத்திருந்த காதலை  அன்பும் ஆசையுமாய் சொல்ல செல்கையில் மற்றதெல்லாம் பேசிவிட்டு அவசியமானதை பேசாது விட்ட சோகத்தை //இப்படியாய் அவளிடத்தில் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தேன். இதயத்தில் தேக்கி வைத்த காதலை சொல்ல நினைத்து// என ஆதங்கம் கொள்கிறார்.

பேருந்துப்பயணத்தில் பார்த்தவளிடம் ஆசை கொண்டுஅவளின் செய்கைகள் அனைத்தையும் ரசித்தவாறே செல்கிறவன் தான் இறங்கவேண்டிய நிறுத்தம் மறந்து இயக்கமற்றுப் போனதை //என் இயக்கத்தை கொண்டு செல்கிற அவளை புள்ளியாய் மறையும்வரை பார்த்தவாறே// என்கிறார் "இறங்குமிடம் மறந்து போகிறேன்" கவிதையில்.

புவி வெப்பமயமாவதும், ஓசோனில் விழுந்து விட்ட ஓட்டையும் மங்கல்யான் பற்றியும் செய்திகள் ஆயிரம் வந்து கொண்டேயிருந்தாலும் அன்றாட நகர்வுகளில் உன் நினைப்பு தவிர்த்து வேறென்றும் கிடையாது என்னிடத்தில் என்பதை //இதையெல்லாம் விடுத்து அன்பே உன்னைப்பற்றிய கவலைதான் எனக்கு// என ஆதங்கம் கொள்கிறார். "என்னின் கவலையெல்லாம்" கவிதையில்.

வருகிறேன் எனச்சொல்லிவிட்டு வராமல் போன நாட்களில் வெறுமையாய் வெற்றாய் கடற்கரை மணலையும், ஒற்றைப்படகையும் வெற்று வெளியையும் அலைகலையும் அங்கு ரசித்து விட்டு வருகிறேன். //வருகிறேன் என்று சொல்லி அவள் வராத நாட்களில்//என வருத்தம் கொள்கிறார்  "அவள் வராத நாட்களில்" கவிதையில்.

இப்படி சொற்களாய், எழுத்துக்களாய் பரிமாறிக்கொள்ளப்பட்ட வார்த்தைகளாய்  இப்புத்தகம் முழுமைக்குமாய் பயணப்பட்டிருக்கிற கவிதை வீதி சௌந்தர் அவர்களின் கவிதைகள்...

// படர்ந்து கிடக்கும் நிசப்தப் பெருவெளியில் என் கரம் பிடித்து கரை சேர்க்கிறது உன் ஒற்றைப் புன்னகை // என முடிகிறது.

ஆரம்பத்தின் திருப்தி முடிவிலும்!

தமிழ் இலக்கியப்பரப்பில் இவ்விரு கவிதைத்தொகுப்புகளும்  பேசப்படவும், வெகுதூரம் பயணப் படவும் தமிழ் இலக்கிய வாசகனாய் வாழ்த்துகிறேன்.

அன்புடன்

விமலன்.

http://vimalann.blogspot.com/

 

நன்றி ஐயா தங்களின் விமர்சனத்திற்கு.....

13 March, 2024

இன்னும் ஒரு அடி முன்னே...


வணக்கம் நண்பர்களே...

2004 ஆம் ஆண்டில் தூங்காத விழிகளோடு.... என்ற கவிதை நூலும், 2006-ஆம் ஆண்டு என் பேர் பிரம்மன்... என்ற கவிதை நூலும் வெளியிட்டு மகிழ்ந்த நான் 2010 முதல் இத்தளத்தில் எழுதி வருகிறேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு என் கவிதை தொகுப்பை வெளிவர முயற்சித்ததின் விளைவாக....

 "சிதறிய மனசின் சில்லுகள்"

"என் இரவுகளின் அரிதாரங்கள்"
என்ற இரு கவிதை நூல்களை கடந்தஆண்டு 2024 டிசம்பர் 3-ம் தேதியன்று திருவள்ளுர் மைய நூலகத்தில் சான்றோர் பெருமக்களால் வெளியிடப்பட்டது.
அன்று முதல் ஆன்றோர் மற்றும் சான்றோர் பெருமக்களாலும் , நண்பர்கள் மற்றும் ஆசிரிய சகோதர சகோதரிகளாலும் அளித்த வரும் ஆதரவில், அவர்களால் வழங்கி வரும் பாராட்டு மழையில் நெகிழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்.
மாவட்டம் தாண்டி என் நூல் பயணித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. முன்பின் தெரியாத வாசகர்களின் பாராட்டு தான் எனக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெகுமதியாய் கருதுகிறேன்.
மகிழ்வுடன்... நன்றிகள்...

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க...


இலக்கிய உலகில் இன்னும் ஒரு அடி முன்னோக்கிய நகர காலம் கொடுத்த இந்த ஆசீர்வாதத்திற்கு தலைவணங்குகிறேன்...

நன்றி வணக்கம்...

10 January, 2019

உன் பசிக்கு இரையாகிறேன்...


*******************************


*******************************


*******************************


*******************************


*******************************

சும்மா ஒரு ஜோக்...
------------------------------------

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவிய கண்காட்சில உங்க ஓவியந்தான் பாக்கற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமாம்.. மத்த ஓவியங்கள சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல..

ஓவியர் : ....!!!!!

*******************************

ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும். 
இது இறந்த காலமா? எதிர் காலமா? 

மாணவன் : அய்யோ சார், சூரியன் மறஞ்சா 
அது சாயுங்காலம் சார்...

ஆசிரியர் : 😐😐

*******************************

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

28 August, 2018

இப்படி செய்யலாமா பெண்களே...


 
அவசர அவசரமாக ஓடி
ஒதுங்கி நின்றேன்
அடை மழையை
பார்த்தவுடன்...!


நின்று..
நிதானமாக...
நனைந்து...
நீர் சொட்டச் சொட்ட
பொறுமையாக
வந்தடைந்தது...

என்
பால்ய மனசு...!

*************************


சப்தமின்றி 
உடைப்படும்
ஒரு நீர்குமிழிபோல்....

என் 
கனவுகளில்
கல் எறிந்துவிட்டுப் 
போகிறாய்....

அர்த்தமற்றதாகி விட்டது
என் அத்தனை 
இரவுகளும்...!

******************************


சந்திக்கும் தருவாயில்
அவளிடம்
இப்படியாய்
பேசவேண்டும் என...

மேறுகேற்றி 
வைந்திருந்த
அத்தனை
வார்த்தைகளும்....

மனசெனும்
பெருவெயியில்
சிக்கி சிதைந்து
போகிறது...

பேசாமல்
திரும்பிய
சந்திப்புகளின் முடிவில்...!

***************************
பேசும் படம்....

வாசித்தமைக்கு மிக்க நன்றி..! 


20 August, 2018

என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க..!



என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க...
உங்க மனசுல...

என்ன பார்த்த
உங்களுக்கு எப்படி தெரியுது...!

உங்க பகுதிகெல்லாம்
வரலன்னா...
ஏன் வர்லேன்னு தவியா தவிக்கிறது...

சரி போனாபோகுதுன்னு வந்தா
வா.. வான்னு பல்லகாட்றது
கவிதையா எழுதி கொல்றது...

அப்படியும் கொஞ்ச நாள்
தொடர்ந்து வந்தா
ஏன்டா வந்தேன்னு சபிக்கிறது...

இதுல என்னவச்சி
ஆளாளுக்கு சண்டவேற....
இப்ப போடுங்கடா சண்ட பார்க்கலாம்...

நான் வந்து கொஞ்சம் ஓவராத்தான்
பண்ணியிருக்கேன்...
அதற்கு காரணம் யாரு..!
நீங்க பண்ண அட்டகாசம்தான்ட...

என்னுடைய நண்பர்களை
நீங்க பழிவாங்குறீங்க...
அத பார்த்துகிட்டு நான் சும்மா
இருப்பேன்னு நினைச்சிங்களா..?

ஒரு பகுதிக்கு வந்தா
என்னை அங்கேயே
தங்க வைக்கனும்....

அதசெய்யாம
அப்படியே போக விட்றீங்க
அப்புறம் வந்து... ஐய்யோ
போய்ட்டானேன்னு கவலை படுறீங்க...

இப்படி இருந்தா எப்படிடா
நன்னாரி பயலுகளா...

சரி சரி இனிமேலாவது
பார்த்து நடந்துக்கங்க...

உங்க பகுதிக்கு
நான் வந்த தங்குறதுக்கு
சரியான ஏற்பாடு பண்ணிவைங்க....

நான் வந்து தங்குற
இடத்திலெல்லாம் நீங்க
உட்கார்ந்துகிட்டு
என்ன இம்ச பண்ணாதிங்க...

நான் வாழுற இடத்தை
ஏங்கிட்ட கொடுத்துடுங்க

என் இடம் தேடி நான் வரும்போது
ஒரு பய நிக்ககூடாது...
அப்படி நின்னா
நான் நானா இருக்கமாட்டேன்...

உங்களுக்கு புரிய
வைக்கிறதுக்குதான் நான்
இப்படி கோவமா
நடந்துக்க வேண்டி இருக்குது....

என்ன புரிஞ்தா...!

இந்த முறை என் கோவத்தை
கொஞ்சம் அதிகதமாகத்தான்
காட்டிட்டேன்
என்னை மன்னிச்சிடுங்க...

என்னை எப்படி நாசம் பன்றீங்கன்னு...
நீங்களே பாருங்க... ( கீழ்படம்)

அரசாங்கம் பண்ற தப்புக்கு
அப்பாவி பொதுமக்களுக்கு
நீங்கதான் மாட்டிக்கீறீங்க...

இப்படிக்கு...
தண்ணீர்

குறிப்பு

நண்பர்கள் - மரங்கள்
தங்குமிடம் - ஏரி, குளம், அணை.

கவிதைவீதி சௌந்தர்
20-08-2018



இது கவிதை பதிவல்ல...
ஒரு விழிப்புணர்வு பதிவு

14 August, 2018

இந்த ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறது..!






கோடி 
பட்டாம்பூச்சிகள்
பறந்து வருவதை போல்
இருக்கும்..

என் 
மூன்று வயது
குட்டி தேவதை 
நடந்துவருவது...!


தத்திவந்து
என்னை 
தவழுகையில்...

குற்றால
சாரலின் சுகம்
அத்தனையும்
என்னை சுற்றி கிடக்கும்...!


சுண்டு விரல்
என் தேகம்
தொடுகையில்...

அமைதிக்கடலை
தாலாட்டும்
தென்றல் போல்
இருக்கும்...!


என்னை 
கட்டியணைத்து
முத்தமிட்டால்...

எனை ஒட்டிக்கொள்ளும்
துருவப்பகுதியின்
அத்தனை 
குளிரும்...!


எங்கள்
இருவருக்கான
புரிதல் என்பது....

இரண்டு
அன்னப்பறவைகள்
மௌனத்தால்
பேசிகொள்வதுபோல்...


இறுதியாய்....

மெல்லிய 
தென்றல் வந்து
படர்கையில்...

காம்பிடம் 
சொல்லாமலே
விடைப்பெற்றுப் 
கொள்ளுமே
பூக்கள்...


அப்படியாகத்தான்
நிகழவேண்டும்
என் 
மரணமும்..!


இது...
யாராவது என்னிடம்
“உன் மரணம் எப்படி நிகழவேண்டும்“ 
என  கேட்டால் 
அதற்கான பதில்...



நன்றிகள்...
வருகைக்கும்... வாசித்தமைக்கு


07 August, 2018

ஒரு தாயின் தாலாட்டு...! கலைஞரின் தமிழோவியம்


ஒரு தாயின் தாலாட்டு..  எனற தலைப்பில் தமிழின தலைவர்  டாக்டர் கலைஞர் எழுதிய அழகு கவிதை....


* "பால்கொண்டு மடுப்பவும் 
உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும்மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அண லோனே."

(புறநானூறு பாடல் : 310 பாடியவர் : பொன்முடியார்)

பொருள் விளக்கம்:

மடுப்ப = உண்ணுமாறு செய்ய. செறாஅது = செல்லமாகக் கோபித்து. உயவொடு = கவலையுடன். மனனே = மனமே.

களிறட்டு ஆனான் = களிறுகளைக் கொன்றவனானான்.

உரவோர் = மூத்தோர் (தந்தை). உன்னி = கவனித்தல்.

மான் உளை அன்ன குடுமி = குதிரை மயிர் போன்ற அடர்த்தியான குடுமி.

தோல் = கேடயம். புல் = புல்லிய. அணலோன் = தாடியுடையவன்.

இப்பாடலுக்கு கலைஞரின் விளக்கம்

பகைவெல்லச் 
சென்றிருக்கும் கணவனது
பனைவைர நெஞ்சத்தின்
வீரத்தை நினைத்தவாறு


பகல்முழுதும் குடும்பத்தின்
பணிமுடித்துச் சற்றுப்
படுத்துறக்கம் கொள்வதற்குச்
செல்லும் முன்னர்


பாசமுடன் மகனைக் 
கூவியழைத்துக் "கண்ணா!
பாலமுதம் இதோ பருகிட வாடா;" என்பேன்!


"வரமாட்டேன் போ" என்று 
நிலாவெள்ளி ஒளியினிலே
வட்டமிட்டு விளையாட 
ஓடிடுவான் எதிர்வீட்டுப் பிள்ளையுடன்!


வந்துவிடும் எனக்குக் கோபம் - கோலொன்றை எடுத்தோங்கி
"வரமாட்டேன் என்றா 
சொன்னாய்? இதோ 
வந்துவிட்டேன்" எனத்


துரத்திடுவேன்; 
அடிக்கமாட்டேன்! 
ஆனாலும் என்
தூயமகன் அஞ்சி 
நடுங்கிப் பதுங்கிடுவான்!


கோலுக்கே இந்த பயம் 
கொள்கின்ற பிள்ளாய்; 
நீ - நாளை
வேலுக்குப் போர்முனையில் 
என்ன பதில் சொல்வாய் 
என்பேன்!


இழுத்து வந்து செல்லமாய்க் 
கன்னம் கிள்ளிப்
பழுத்திருக்கும் 
கோவைக்கனியாம் அவன் இதழில்;


தேன்கலந்த பாலின் 
கிண்ணம் மெல்லக் கவிழ்த்து
தெம்பாக இருப்பதற்கு 
முழுவதையும் 
அருந்தென்பேன்!


அழகுதமிழ் மழலைச்செல்வன் 
அதனை மறுக்காமல்
அச்சத்தின் காரணமாய் 
அனைத்தும் பருகிடுவான்!


பிறைபோல இருந்த பிள்ளை 
முழுநிலவாக உருவெடுத்து
குறையில்லாத் தோற்றமுடன் 
குன்றம் போல் வளர்ந்து விட்டான்!


தாலாட்டப் 
பிள்ளையொன்றைத் 
தந்துவிட்டுப்
போராட்டக்களம் சென்ற 
என்னவரோ;


தமிழ் மண்ணின் 
பண்பாட்டுக் கேற்றவாறு
தட மார்பில் வேல்தாங்கி 
நடுகல்லாய் நின்றுவிட்டார்!


நானும் கல்லாக மனத்தை 
ஆக்கிக்கொண்டு
வானதிரப் புவி 
வாழ்த்துகின்ற மானத்தை


ஊனமின்றிக் காப்பதற்கு 
உறுதிபூண்டு
உயர் வீரக்குடிமகனாய்ப் 
பிள்ளைதனை வளர்த்தேன்!


கட்டியணைத்துக் களித்த என் 
கணவனது நெஞ்சகத்தை
வெட்டிப்பிளந்து வீழ்த்திவிட்ட 
பகைப்புலத்தை;


எட்டியுதைத்துத் துரத்தி 
ஏற்றிடுக வெற்றிக்கொடி யென்றும்,
எதிரிகளின் கோட்டையிலே 
நம் முரசு முழங்கிடுமென்றும்,


உச்சிமோந்து திலகமிட்டுக் 
குடுமிதனைக் கோதிவிட்டு
உடைவாளைக் கையில்தந்து, 
"சென்றுவா மகனே" என 
அனுப்பி வைத்தேன் அவனோ:


கொடுவாளால் களிறுகளைக் 
கொன்றுபோட்டுக்
குன்றுகளைப் பந்தாடுதல் 
போல் அவற்றை 
உருட்டிவிட்டுப்


படுகளத்தில் விளையாடி 
வினை முடிக்கின்றான் என்றும்,
நெடுமரம் போல் பகைப்படை 
வீழ்கின்றதென்றும்,


அடுக்கடுக்காய்த் தித்திப்புச் 
செய்திகள் வந்திடவே
அடக்கவொண்ணா ஆவலுடன் அது காணக் களம் புகுந்தேன்!


ஐயத்திற் கிடமேயில்லை 
வெற்றி நமக்கேதான்...
ஆனால் ஒன்று; அங்கே என் 
மகனைத்தான் காணவில்லை!


குருதி மணம் கமழுகின்ற 
போர்க்களத்தில்
குமுத மலர் மொட்டுக்களாய் 
முளைக்கும் தலைகள்!


வீழ்ந்துள்ள வீரர்தம் 
உடல்களோக கவிழ்ந்துவிட்ட 
படகுகளாம்!
வெட்டுண்ட கைகால்கள் 
வேலையின்றி மிதக்கின்ற 
துடுப்புகளாம்!


சூழ்ந்துள்ள பிணக்குவியல் 
நடுவில் சென்றேன்.
"ஆழ்ந்துள்ளேன் 
கவலையினில்; அருமை 
மகனே! நீ


போர்க்களத்துப் பிணமாகி 
வாழ்கின்றாயா? அன்றி
புறமுதுகிட்டோடிச் செத்துத் 
தொலைந்தாயா? எனக்கேட்டுத் துடித்திட்டேன்!


"வாழ்கின்றேனம்மா வீரனாக!" என்றொரு குரல்
தாழ்கின்ற என் தலையை 
நிமிர்த்திற்றாங்கே!


குரல் வந்த திசைநோக்கிப் 
பறந்துபோனேன்! - "உள்ள
உரம் வாய்ந்த மகனே! நீ 
எங்கே?" என்றேன்.


"இங்கே" என்றான்; கண்டு 
கொண்டேன்! ளவலம்புரிச்
சங்கே!" என்றவாறு 
தழுவிக்கொண்டேன்! கையில்;


தாங்கிப் போரிட்ட கேடயம் 
தரையில் கிடக்க; அதில்,
தங்கமகன் மார்பில் 
அம்புதாங்கி வீழ்ந்து கிடந்தான்!


"வெற்றியம்மா வெற்றி" 
என்றான் - அவன்
நெற்றியிலே முத்தமிட்டு, "
என் நித்திலமே!


போர்முனையில் உயிர்விட்டு 
மானம் காத்த தந்தைக்கு
நேர்வழித் தோன்றலாய் 
வந்துதித்தாய் வாழ்க!" என்றேன்!


"ஊடுருவியிருக்கின்றதே 
மார்பில் அம்பு - வலி
உனக்குத் தாங்காதே மகனே!" 
என்றேன்; அழுதுவிட்டேன்!


"உண்மையா அம்மா? உன் 
கண்ணால் கண்டு நீ எனக்கு;
உரைக்கும் வரை நான் 
உணரவில்லையம்மா!" என்றான்!


உயிர்விட்டான் மடிமீது! 
போய்விட்டான்;
உயிரோடு எனைமட்டும் 
விட்டுவிட்டு!


ஊர்ப்பிள்ளைகளுடன் 
விளையாடிக்கொண்டு
உண்பதற்குப் பிடிவாதம் 
பிடித்தபோது - நான்


ஓங்கிய கோல் கண்டு ஓடிய 
என் மகனா; மார்பில்
தாங்கிய கணையுடனே 
தாயகத்தை மீட்கும் போரில்


தன்னுயிரைத் தருவதற்கும் 
துணிந்து நின்றான்!
என்னுயிரே! என்மகனே! நீ 
வாழ்க என வாழ்த்துகின்றேன்!

26 July, 2018

உயிர் பயம் பொதுதானே...!





காலை நேர
பயிற்சிக்காக
நடந்துக்கொண்டிருந்தேன்
சாலையேரம்...


மரச்செடி நட
தோண்டப்பட்டிருந்த
குழிவொன்றை
எட்டிப்பார்த்தேன்
ஏதேச்சையாக...


முன்தினம் பேய்ந்த
கோடைமழை
தேங்கிக்கிடந்தது
கொஞ்சம் குழியினுள்...


அந்த மூன்றடி
குழியினுள்
தவறிவிழுந்து
வட்டத்துக்குள்ளே
வட்டமடித்துக்கொண்டிருந்தது...

ஓரடி 
நீளமுள்ள
குட்டி பாம்பு ஒன்று...


எப்படி 
வெளியேறுவது
என்ற தவிப்பில் 
பாம்பும்...

எப்படி 
விழுந்திருக்கும்
என்ற தர்க்கத்தில் 
நானும்...


பயத்தோடு
அமைதியாய் 
சந்தித்துக்கொண்டது
இருவரது பார்வைகளும்...


அருகில் கிடந்த 
கொம்பெடுத்து 
பாம்பு வெளியேற
சாத்தி வைக்கிறேன்...

தாக்கவரும் 
ஆயுதமென
தலைதெறிக்க 
ஓடுகிறது
வட்டத்திற்குள்ளே..


மேலே வரும்போது
தீண்டிவிடுமோ என்ற பயத்தில்

நகர்கிறேன்
என் வழியை நோக்கி...

 
வெளியில் சென்றால்
என்னாகுமோ
என்று எண்ணி
தொட மறுக்கிறது 
கொம்பின் நுனியை...!


இருவருக்குமான
உயிர்வாழ்தலின்
நீளத்தை

நீட்டிக்க வைக்கிறது
பயம்...!




எல்லா 
உயிர்களுக்கும்
பொதுதானே
உயிர் பயம்....!



( நன்றி...
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...)

11 May, 2018

படுக்கையறை சம்பவங்கள்...!





கனவுகளின் 
தொழிற்சாலை...


ஏக்கங்களின் 
உற்பத்திக்கூடம்...


ஓடிய படகுகள் 
ஒதுங்கும் கறை...


பாடும் பறவைகளின் 
பல்லவி தேசம்...


வாழ்க்கை தேசத்து 
வசந்த மண்டபம்...


இளைய தலைமுறையின் 
அந்தப்புறம்...


பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் 
அவஸ்தைகள்...


ஏழை வாசிக்கு
இங்கு சொர்கத்தின் 
சுகங்கள்...


நாணம் கொள்ள 
இது நாடகமேடை...


மோகம் கொள்ள 
இது பள்ளியறை...


குடுமபத் தலைவிக்கு 
இது விண்ணப்ப மையம்...


பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...


சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் 
இங்குதான்...


மோங்களை அள்ளி அனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் 
இங்குதான்...


சீறும் சிங்கங்களை
பாயும் காளைகளை
சீறிய ரத்தத்தை 
சிறுக வைத்து
கால் கட்டு போட்டு 
கவிழ்த்தி கிடப்பதும் இங்குதான்..


கட்டில் வெறுத்து 
தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை 
முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் 
இங்குதான்...


காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் 
முட்களை விதைக்கிறது...


காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் 
மலர்களை விதைக்கிறது...


இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...


நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை 
மலர வைக்கும்...
வாலிப மனதை 
வாட வைக்கும்...

பல்லவி வரும்
அதை பாடித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை
பாடாய் படுத்தும்...


கவிதை வரும்
அதை எழுதித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை 
எதிரியாய் நடத்தும்....


ஜீவன் சுமந்து 
ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை 
ஒரு சுதந்திரசிறை...


படுக்கை அறையில் 
சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் 
வென்றவர் தோற்பார்


படுக்கை அறையில் 
மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம்... 
மயக்கத்தில் கொஞ்சம்...


இறுதியாய்...


படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...


படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது... 




03 May, 2018

இரவுக்குள் தான் இப்படி நடக்கிறது...


ஒவ்வொறு இரவும்
கனவுகளாலே நிறைகிறது...

அழகிய
சோலையாக இருக்கும்
ஆபத்தான
சாலையாக இருக்கும்...

சிலசமயம்
சோகமானதாக இருக்கும்
சொர்கமாகவும் இருக்கும்...

வானத்தில் பறப்பது
ஆகாயத்தில் குதிப்பது
இப்படியாய் ஒவ்வொறு கனவும்...

அழகிய வேடங்களை 
தரித்து வருகிறது
தினம்... தினம்...

விடிந்தவுடன் 
முடிந்துவிடுகிறது
இரவில் வரும் கனவுகள்...

கற்பனைக்கு 
எட்டாத காட்சிகள்...
திகைப்பூட்டும் 
சம்பவங்கள்...

காதல் பரவசங்கள்...
காம களியாட்டங்கள்...

ஆனால்
இறுதியில் ஏதும்
நினைவில் நிற்பதில்லை
விடிந்தவுடன்...!

இதில் ஒன்று மட்டுமே உண்மை
எல்லா கனவுகளிலும்
பிரிதிபலிப்பது

நம்மால் வாழ முடியாத
வாழ்க்கையையும்...!

நாம் வேண்டாம் என்கிற
வாழ்க்கையையுமே...!

இரவுக்கே தெரியாமல்
விழிகளுக்குள்
விடிந்து மறையும்
இந்த கனவுகள்...

கனவுகளாகவே
இருந்துவிட்டுப்
போகட்டும்...!


19 April, 2018

பயப்பட வச்சிட்டோம்ல...



பாலுக்காகவே
காலம் காலமாய்
கட்டிவைத்து
வஞ்சிக்கிறோம்
மாடுகளை...

அழகெனவே
சூடிக்கொள்ள...
கண்ணீர்  சிந்த
வைத்துவிடுகிறோம்
மலர் செடிகளை...

சாமரம்வீச
சிறகு வேண்டின்
சட்டென
உயிரறுத்து விடுகிறோம்
மயில்களை...

 கருணையின்றி
கல்லெறிந்து
காயப்படுத்துகிறோம்
காய்த்து கொடுக்கும்
கனிமரங்களை....

மகிழ்வென
உடுத்திகொள்வதற்காக
மொத்தமாய்
மாய்ந்துபோகிறது
பட்டுபுழு....

உயிர்கொண்டு
உயிர் கொள்கிறோம்...
மீனெனும் சுவைக்காக
கழுவேற்றுகிறோம்
புழுக்களை....

உள்ளிருக்கும்
ஆதிமனிதனை
இன்றளவும்
அமைதி படுத்துவது
ஆடும்  கோழியும்...

வாழ்வென
விரிவுபடுத்திக்கொள்ள
உயிர் அகற்றி
காயப்படுத்தி விடுகிறோம்
காடுகளை....

பல்லுயிர்
வேற்றுமை பாராது
காரணமின்றியே
அறுக்கிறோம்
உணவு சங்கிலியை

உண்மையில்
இன்றளவும்

நம்மை
சுற்றி வாழவே
பயந்துக் கொண்டுதான்
இருக்கிறது
சுற்றமும்.... சூழலும்....


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

18 April, 2018

வாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...



*********************************


உலகப் பாரம்பரிய நாள்

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என அறிவிப்பது பற்றி ஆலோசிக்கும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

*********************************



கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை 
தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் 
வந்திருந்தார். 

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண 
பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான 
கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, 
ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? 
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் 
வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். 
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் 
கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து 
அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” 

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை 
வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். 
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். 
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச 
இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் 
அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். 
அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு 
நேரம் ஏது?” என்றார். 

********************************* 


வாக்கியம் தேவையில்லை...

16 April, 2018

இனம் இனத்தோடுதானே சேரும்...



அளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகவே
 இருக்கிறது...
உன்னோடான 
உரையாடல்கள்...

விலக விலக 
மறைவதில்லை நீ...
அப்போதுதான் 
எனக்குள் 
விஸ்வரூபம் 
எடுக்கிறாய்...!

இனம் 
இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் 
உன் காதலும் 
என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் 
சம்மதம் தானே
இந்த நாள்வரை 
அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் 
சம்மதம் மட்டுதான் 
கிடைக்க வில்லை..!

காதலை 
நம்பினோர் 
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை 
எழுதுவோம்
அன்பே...! 
கைகொடுத்து விடு...!


Related Posts Plugin for WordPress, Blogger...