தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் என்னாகும் என்று கருத்துக்கணிப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்...
இது பேஸ்புக்கில் இருந்து எடுத்தது...
*********************************************
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
(பேஸபுக்கில் நாஞ்சில் மனோ)
******************************************
பிடித்த கவிதை :
சாராயம் குடிச்சு குடிச்சு
எரிஞ்சு போச்சு புருஷன் வயிறு
பசியால துடிச்சு துடிச்சு எரிஞ்சு போச்சு
பிள்ளைங்க வயிறு
இத பார்த்து பார்த்து எரிஞ்சு போச்சு
பெத்தவளோட வயிறு.
வாழ வழி காட்டி அணைச்சிடலாம்
பெத்தவளோட நெருப்ப...
சோறு போட்டு அணைச்சிடலாம்
பிள்ளைங்களோட நெருப்ப
தண்ணீ கொண்டு அணைச்சிடலாம்
தீக்குச்சி நெருப்ப
தண்ணியால எரியற நெருப்ப
எத கொண்டு அணைக்க?
*********************************************
விழிப்புணர்வு கட்டுரை
இன்று கண்தான விழிப்புணர்வு தினம் நண்பர்களே !
நாட்டில் கண் இல்லாதவர்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாம் ஒரு புள்ளி விவரம் சொல்லி உள்ளது.........
கண் இல்லாமல் பிறந்தவன் சாகும் வரைக்கும் கண் இல்லாமல் இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.........
நாம் உயிருடன் இருக்கும் பொழுதே கண்தானம் செய்து கொள்வோம் நண்பர்களே ..........
இன்று ஒரு சில ஜென்மங்கள் நம்பிகை என்ற பெயரில் இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது கண் இல்லாமல் சென்றல் மீண்டும் மனிதனாக பிறக்கும் பொழுது கண் இல்லாமல் தான் பிறப்போம் என்ற ஒரு மூடா நம்பிகையை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது ................
இது ரொம்ப கேவலமான ஒன்று நண்பர்களே..................
ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன் நண்பர்களே மதுரை பெண்கள் கலை கல்லூரியில் நான் படித்து கொண்டு இருந்த சமயத்தில் என் ஜூனியர் ஒரு மாணவி படித்தல் அந்த கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு உடல் தான விழிப்புணர்வு பற்றி ஒரு கருத்தரங்கம் நடந்தது ..............
அந்த கருத்தரங்கம் முடிந்த வுடன் ஒரு கேள்வி கேட்டார்கள் ?
யார்?
யார்?
கண்தானம் உடல் தனம் எதிர்காலத்தில் பண்ணுவீங்க என்ற ஒரு கேள்வி கேட்டார்கள் ......
ஆனால் எல்லோரும் கொஞ்சம் யோசித்தோம் ஒரு பெண் மட்டும் நான் பண்ணுவேன் என்று கை உயர்த்தி சொன்ன அவளுக்கு கைதட்டல் அளித்தது கருத்தரங்கம்.............
அவள் அந்த மாதிரி பண்ணுனால எதிர்காலத்தில் அந்த கேள்வி எல்லாரிடமும் கண்டிப்பாக இருக்கும் .........
மறுநாளே கல்லூரிக்கு தன் அண்ணனுடன் வரும் பொழுது ஒரு விபத்தில் இறந்து விட்டால் ......
மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்கள் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டால் இறப்பதற்கு கொஞ்ச நேரம் இருக்கும் பொழுது சொல்லி விட்டு தான் சென்றால் என் உடலையும் கண்ணையும் தானம் பண்ணிவிடுங்கள் ............
கடைசியில் அவள் விருப்பதை அவர்கள் பெற்றோர்கள் நிறைவேற்றுனார்கள் நண்பர்களே இந்த நேரத்தில் அவளை நான் நினைத்து தான் பார்கிறேன் .........
அவளை எங்கள் கல்லூரியும் மறக்காது, ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அந்த பெண்ணை மறக்கமாட்டார்கள் ............
அவள் அத்மா சாந்தி தான் கண்டிப்பாக அடைத்திருக்கும் ..........
அதில் எந்த சந்தேகமும் இல்லை .......
இந்த தினத்தில் நாமும் இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது நம் உடல் ஆவி சென்றல் கூடா பரவாயில்ல என் கண் இந்த உலகத்தை பார்க்கட்டும் என்று நினைத்து விட்டு கண்தானம் செய்யுங்கள்
நண்பர்களே
நானும் இறக்கும் பொழுது கண் தானத்தை செய்து விட்டு இறக்கிறேன்
****************************************
மின்சாரம் பகல் 12 மணிக்கு வந்தது.. என்ன பதிவு போடுறதுன்னு அப்படியே பேஸ்புக்கில் ஒரு ரவுண்ட் அடித்தேன்...
அப்போது சிக்கிய எனக்கு பிடித்த தகவல்களில் சில....
நன்றி...! நன்றி..!