கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 December, 2011

என்னது..? ஜெயலலிதாவை மக்கள் தான் காப்பாற்ற வேண்டுமா..?


ஒரு சமயம் நெப்போலியனின் வீரத்தைச் சோதிக்க விரும்பிய ஜரோப்பிய தலைவர்கள் ஒரு சோதனை செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் தேநீரை எடுத்து அருந்துவா‌ர்கள். அவ்வாறு அருந்த முற்படும்போது வெளியே காதைச் செவிடாக்கக்கூடிய பலத்த சப்தத்துடன் பீரங்கியை வெடிப்பதென முடிவு செய்தார்கள்.

அதே போல் அனைவரும் கூடியிருந்து தேநீர் அருந்தும்போது திடீரென பலத்த ஓசையுடன் பீரங்கியை வெடித்தார்கள். சப்தம் கேட்டு நடுங்கிப்போன அனைவரும் கோப்பையை கீழே போட்டு விட்டார்கள்.

ஆனால் நெப்போலியன் மட்டும் எதற்கும், அஞ்சாதவராய் மெல்ல தேநீரை அருந்தியவாறே என்ன சத்தம் அங்கே? என்று கேட்டார்.

அவருக்கு சோதனை வைத்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லையாம்.


ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அடிக்கிற கூத்து இருக்கிறதே.. அப்பப்பா... 

இவர் சரியில்லை என்று அவரை மாற்றினால், அவரும் சரியில்லை‌யென்று இவரைமாற்றுவோம் என, இப்படித்தான் 30 ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாற்றிமாற்றி வைத்துவிட்டு, தற்போதைய தமிழகத்திற்கு மாற்றுக்கு ஒரு தைரியமானத் தலைவர் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதைவிடுத்து மக்கள்தான் அரசை காப்பாற்ற வேண்டும் என்ற அறிக்கை, கேட்பதற்கே வித்தியாசமாய் இருக்கிறது. விலையேற்றம், வரிச்சுமைகளை அதிகரித்துவிட்டு மக்கள்தான் அரசை காப்பற்ற வேண்டும் என்றால் அப்போது இவர்கள் எதற்கு..? ஆட்சியாளர்கள் என்று அந்தஸ்த்து மட்டுதானா.

தலைமைபொருப்பில் இருப்பவர்கள் மக்களுக்கு எந்த இழப்பும், எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்து கொண்டு தைரியத்துடன் ஆட்சியை நடத்தவேண்டும். அதைவிடுத்து மக்கள் தான் அரசுக்கு உதவவேண்டும் என்று சொல்வது கொஞ்சம்கூட நியாயம் இல்லாதது.

இனிவரும் காலங்களிலாவது மக்களின் பிரச்சனையில் அதிகம் அக்கறை எடுத்து  நடுத்தர மற்றும், சாமானிய மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் எரிபொருட்கள், பேருந்து, பால், மின்சாரம், காய்கறிகள் போன்றவற்றின் விலைகளை அரசு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசின் வருவாயை உயர்த்த ஆயிரம் வழிகள் இருக்கிறது. அதை முறையான பொருளாதர வள்ளுநர்களை அனுகி அவர்களிடம் அறிவுரைப்பெற்று அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

தற்போதைக்கு அரசு திவாலாகும் நிலைவந்தாலும் கலங்காது இருந்து, மக்களை காக்கும், தைரியமான ஒரு அரசு வரும் என்று நம்பிக்கையை எதிர்நோக்கி காத்திருப்போம்.

34 comments:

  1. மாப்ள அரசுக்கு வருமானம் எப்பொழுதும் மக்கள் கொடுத்தா தான் உண்டு... வேறு எப்படி சம்பாதிக்க முடியும்... வேறு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க....

    ReplyDelete
  2. ///////
    சசிகுமார் said... [Reply to comment]

    மாப்ள அரசுக்கு வருமானம் எப்பொழுதும் மக்கள் கொடுத்தா தான் உண்டு... வேறு எப்படி சம்பாதிக்க முடியும்... வேறு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க....

    ////////////


    நல்லதொரு கேள்விதான்...

    மக்கள் மீது குறைந்த அளவு சுமையைத்தான் அளிக்க வேண்டும். இந்த விலையேற்றம் திவாலாகும் நிறுவனங்கள் மீட்க மட்டுமல்ல.. இலவசப்பொருட்களை கொடுக்கவும் தான்...

    அதாவது நம்மிடமே பணம் பெற்று அதை நமக்கே கொடுக்கிறார்கள்...

    ReplyDelete
  3. சசியிடம் ஒரு கேள்வி..?

    மீஞ்சூருலிருந்து கோடம்பாக்கம் செல்ல முந்தைய கட்டணம் எவ்வளவு..?

    தற்ப்போது கட்டணம் எவ்வளவு..

    ReplyDelete
  4. தெள்ளத் தெளிவாக இன்றைய
    அரசியல் நடை முறைகளைத் அலசி
    ஆய்ந்து விளக்கி யுள்ளீ்ர்!
    பாராட்டுக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள்..
    அதிகாரிகளை மாற்றுவதில் இருக்கும் வேகம் அடிப்படை வசதிகளை உயர்த்துவதில் இல்லைத்தான்

    ReplyDelete
  6. நெப்போலியனின் வரலாற்று குறிப்பு அருமை

    ReplyDelete
  7. அரசுத்துறைகளில் உள்ள ஊழல்,லஞ்சம் அரசு ஊழியர்களின் அலட்சிய போக்கு, நுகர்வோரை கேவலமாக பார்க்கும் தன்மை இதை ஒழித்தாலே எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும்

    ReplyDelete
  8. //@கவிதை வீதி... // சௌந்தர் //

    அதாவது நம்மிடமே பணம் பெற்று அதை நமக்கே கொடுக்கிறார்கள்...//

    யோவ் இங்க இல்ல உலகத்துல எந்த மூலைக்கு சென்று பார்த்தாலும் தெரியும் அரசாங்கம் நடத்துவது மக்கள் பணத்தில் தான்... மக்கள் கிட்ட வரி வாங்காம ஏதாவது நாடு இருந்தா சொல்லுங்க...

    ReplyDelete
  9. என்ன செய்ய பணம் இல்லாமல் மக்கள் வரி செலுத்த முடியாது வரி இல்லாவிட்டால் அரசை நடத்த முடியாது...

    ReplyDelete
  10. எவனும் அவன் அப்பன் வீட்டு காச செலவு பண்ண மாட்டான்... அப்படி ஒருவேளை உலக வங்கியில் கடன் வாங்கினால் கூட அந்த கடன் சுமை மக்கள் தலையில் தான்.. ஜெவோ அல்லது கலைஞரோ தர மாட்டாங்க...

    ReplyDelete
  11. நண்பா.... மறுபடியும் கலைஞரே ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்த விலையேற்றம் கண்டிப்பாக வந்திருக்கும். என்ன கொஞ்சம் கூடுதல், குறைவா இருக்கும். அவ்வளவே...


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  12. சரியா சொன்னீங்க .
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ///////
    சசிகுமார் said... [Reply to comment]

    //@கவிதை வீதி... // சௌந்தர் //

    அதாவது நம்மிடமே பணம் பெற்று அதை நமக்கே கொடுக்கிறார்கள்...//

    யோவ் இங்க இல்ல உலகத்துல எந்த மூலைக்கு சென்று பார்த்தாலும் தெரியும் அரசாங்கம் நடத்துவது மக்கள் பணத்தில் தான்... மக்கள் கிட்ட வரி வாங்காம ஏதாவது நாடு இருந்தா சொல்லுங்க...

    ///////////////


    பொதுவாக அரசாங்கம் மக்களின் முக்கிய பிரச்சனையான சாலை, மின்சாரம், சுகாதாரம், கல்வி, குடிநீர், போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது

    எந்த நாடும் மக்களிடம் அதிக வரிகள் போட்டு மக்களுக்கு இலவசப் பொருட்கள் கொடுக்கிறது என்று நான் கேள்விப்படவில்லை...

    வரிகள் இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவருக்கு தருவது...

    பஸ்ஸில் பயணிப்பதுயார்...

    கடந்த 7 ஆண்டுகளாக பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது அரசு செய்த தவறு அதற்க்காக ஒரே முறையில் கட்டணத்தை உயர்த்துவது என்பது தவறான வழி முறை...

    ReplyDelete
  14. காத்திருப்போர் பட்டியலில் நீங்களுமா மாப்ள...ஸ் ஸ் அபா என்னத்த சொல்ல!

    ReplyDelete
  15. /////
    சசிகுமார் said...

    எவனும் அவன் அப்பன் வீட்டு காச செலவு பண்ண மாட்டான்... அப்படி ஒருவேளை உலக வங்கியில் கடன் வாங்கினால் கூட அந்த கடன் சுமை மக்கள் தலையில் தான்.. ஜெவோ அல்லது கலைஞரோ தர மாட்டாங்க...
    ////////////

    கடன் பெருவதும் மக்களின் வரிப்பணங்களும் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யத்தான் இலவசப்பொருட்கள் தருவதற்கு அல்ல...

    உள்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு நிறுவனத்திடம் பெரும் கமிஷன் தொகைக்கு எலல்ா தேவையும் சரிசெய்து விடலாம் ஆனால் அந்த நிறுவனங்களுக்கு மின்சாரம், இடம், போக்கு வரத்து வசதி செய்வதாக கூறி அவர்களிடம் பெரிய தொகை அரசியல்வாதிகளின் கஜாணவையே நிரப்புகிறது...

    ReplyDelete
  16. //கடன் பெருவதும் மக்களின் வரிப்பணங்களும் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யத்தான் இலவசப்பொருட்கள் தருவதற்கு அல்ல...//

    மாப்ள நீ சொல்றது உண்மை தான். ஆனால் மக்கள் இலவசங்களை வெறுத்து ஒதுக்காதவரை இப்படி தான் நடக்கும். இலவசமாக கொடுப்பதும் நமது வரிப்பணத்தில் தான் என ஞாபகம் மக்களுக்கு வர வேண்டும்.

    மாப்ள ஒன்னே ஒன்னு உங்க ஊரில் இருக்கும் ஒருவரை இலவசங்கள் வாங்காமல் உங்களால் தடுக்க முடியுமா?

    உன் மேல சண்டைக்கு வருவாங்க...

    ReplyDelete
  17. ///திவாலாகும் நிலைவந்தாலும் கலங்காது இருந்து, மக்களை காக்கும், தைரியமான ஒரு அரசு வரும் என்று நம்பிக்கையை எதிர்நோக்கி காத்திருப்போம்.///
    நம்பிக்கையிருக்கா....உங்களுக்கு?

    ReplyDelete
  18. நன்றாக சொன்னீர்கள் மக்கள்தான் அரசை காப்பாற்ற வேண்டும் என்று..

    ReplyDelete
  19. அரசின் வருவாயை உயர்த்த ஆயிரம் வழி இருக்கிறது. சரியாக சொன்னீர்கள். இப்போது எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்க்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப்பட்டதே இதற்கு காரணம்.

    ReplyDelete
  20. சரியாகச்சொன்னீங்க பாஸ்

    நெப்போலியன் வரலாற்று குறிப்பு சிறப்பு

    ReplyDelete
  21. இன்றைய நாட்டு நடப்பைப் பற்றி நல்ல அலசல். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  22. உங்களின் வாதத்துடன் நான் உடன்படுகிறேன். சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதுசரி.. நெப்போலியனுக்கு நன்றாக காது கேட்கும் தானே-? அழகான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. நம்பிக்கைதான் வாழ்க்கை...!!!

    ReplyDelete
  24. இந்த ரெண்டு கட்சிக்கு மாற்று ஒரு கட்சியும் இல்லாமல் போனது ஆசார்யம்தான், கேரளாவிலும் இதே நிலைதான்!!!!

    ReplyDelete
  25. வரலாற்று குறிப்போடு, இன்றைய அரசியலையும் சேர்த்து எழுதினது சூப்பர்.

    ReplyDelete
  26. Sorry Friends

    I am C.Pradeep Kuamr from chennai i am also tamil But i didnt know how to type in tamil So i commend here in English

    Instead of increase the rate of Bus Fare and Milk Fare

    Increase the rate of Tasmac Items this lead the government to earn more money and also reduce teh amount of people addiction to drugs..........

    Its just my opinion may be government think this and do the good to peoples

    ReplyDelete
  27. என்னடா அங்கே சத்தம்?
    பேசிக்கிட்டு இருந்தேன் மாமா?

    அய்யய்யோ கோவபட்டுட்டமே
    ஏதாவது விலை ஏத்திடுவாங்களோ?

    ReplyDelete
  28. எதிர் நோக்கி காத்திருபவர்களில் நானும் ஒருவனாய்/

    ReplyDelete
  29. நம்பிக்கையில்தான் காலம் ஓடுகிறது.

    ReplyDelete
  30. காத்திருப்புதான் நம் தலையெழுத்தா சகோ?

    ReplyDelete
  31. "மாப்ள அரசுக்கு வருமானம் எப்பொழுதும் மக்கள் கொடுத்தா தான் உண்டு... வேறு எப்படி சம்பாதிக்க முடியும்... வேறு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...."
    உண்மைதான். இருப்பினும் நாம் கொடுப்பதைத் தான் நம்மிடம் அரசாங்கம் சரியாகத் திருப்பிக் கொடுக்க மறுக்கிறதே....
    அரசாங்க உத்தியோகத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகையை கணக்கிட்டுப் பாருங்கள். இன்னும் நிறைய சலுகைகள் நம் பணத்தில் செய்துவிட்டு, நம் தலை மேலே அவர்களின் ஆடம்பர செலவை ஏற்றி வைப்பது என்ன நியாயம்
    நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  32. நமது சமூகமும் நாமும் ஒருவிதமாய் வடிவமைக்கப்பட்ட்டு வந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  33. சரியாக சொன்னீர்கள் சகோ .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...