கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 December, 2011

குடும்ப அட்டை தாமதத்திற்கு உண்மையான காரணம்.. பிண்ணனியில் ஜெயலலிதா..?


தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டையின் காலம், இம்மாதம் 31, 2011 உடன் முடிவடைகிறது. அதன்பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தக் காலக் கெடுவை, அடுத்த ஆண்டு டிசம்பர் 31, (2012) வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. நாட்டில் உள்ள போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து, உண்மையான பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்க வேண்டுமென்பதே நோக்கம் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றி, தனித்தன்மை கொண்ட பிரத்யேகமான அடையாள அட்டையை, ஒவ்வொரு குடிமக்களுக்கும் வழங்கும் பணியை, "தனித்தன்மை அடையாள அட்டை ஆணையம்' அமைத்ததன் மூலம், மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. 

ஆதார் அடையாள அட்டைகள் வழங்கும் பணியை மேற்கண்ட ஆணையம், தபால் துறையிடமும், வேறு சில தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைத்துள்ளது. ஆனால் ஆதார் அடையாள அட்டை வழங்க, ஒவ்வொரு குடிமகனது, விரல் ரேகை மற்றும் அவரது கண்களின் கருவிழிகள் ஆகியவற்றை பதிவு செய்து, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கும் பணி, முழு வீச்சில் நடந்து வந்தது. 

இதுவரை நாடு முழுவதும், 20 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவை செய்து கொண்டுள்ளனர். இதில் யார் கண் பட்டதோ? தெரியவில்லை! உருப்படியாக நடந்து கொண்டிருந்த பணியில், பூஜை வேளையில் கரடி புகுந்தது போல, தடை ஏற்பட்டது! "தனித்தன்மை அடையாள அட்டை வழங்கும் ஆணையம்' கேட்டிருந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்வு செய்த எம்.பி.,க்கள் குழு, அதற்கான அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையம், தன் பணியைத் தொடர முடியாமல், நிறுத்தி வைத்துள்ளதால், 


ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகளை மேற்கொண்டிருந்த தபால் துறையும், வேறு சில தனியார் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் யோசிக்க ஆரம்பித்துள்ளன. அந்தப் பணிக்கான நிதி கிடைக்க வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மும்முரமாக நடந்து கொண்டிருந்த பதிவுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 
 

அந்தப் பணிகளை நிறுத்தி விடக் கூடிய சூழ்நிலையும், உருவாகி உள்ளது. "மேற்கண்ட பணியைத் தொடர வேண்டாம்' என்று தபால் அலுவலகங்களுக்கு, தபால் துறை இயக்குனர் ஆணை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க, "ஆதார்' அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, புது குடும்ப அட்டைகள் வழங்குவதை, தமிழக அரசு டிச., 31, 2012 வரை தள்ளிப் போட்டுள்ளது. 
 

அஸ்திவாரமே ஆடிப் போயுள்ளபோது கட்டடம் கட்ட முடியுமா? இது பற்றி தெரியாமலா அல்லது யோசிக்காமலா தமிழக அரசு முடிவு எடுத்திருக்கும்? சந்தேகமாகவே உள்ளது. "ஆதார்' அட்டை இந்திய குடிமக்களுக்கு வழங்கப் படுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் புது குடும்ப அட்டைகளும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆக மொத்தத்தில், புதிய குடும்ப அட்டை வருமா; அல்லது வராதா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர் மக்கள்.

13 comments:

  1. வரும் ஆனால் வராது கதையா ஆகிருமோ...?

    ReplyDelete
  2. ஏற்கனவே கலர் கலரா குடும்ப அட்டை வழன்கி சொதப்பினாரே அதுப்போல இதுவும் இருக்குமா?

    ReplyDelete
  3. பொறுத்திருந்து பார்ப்போம்..

    செய்திக்கு நன்றி..

    அன்போடு அழைக்கிறேன்..

    வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  4. அரசுக்கு மக்கள் நலனில் அவ்வளவு அக்கறை!

    ReplyDelete
  5. நல்ல அரசு ... இன்னும் என்ன கொடுமைஎல்லாம் அரங்கேற போகுதோ ...
    பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  6. Ithula ivvalo arasiyal irukka?. Pakirvukku Nanri.

    TM 4.

    ReplyDelete
  7. கவலையே படாதீங்க நம்ம பேரன் பேத்திக்கு கண்டிப்பா கிடைசிரும்..

    ReplyDelete
  8. கொக்கு மீனுக்காக காத்திருந்தது போலதான்...

    ReplyDelete
  9. அடையாளஅட்டை என்பது நம்மை அடிமைகள் ஆக்குவதன் முதல் படி !வாக்காளர் அட்டை இருக்கும் பொது புதிய அட்டைக்கு அவசியம் என்ன ?மேலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயிரம்கோடி லட்சம் கோடி என கொள்ளை அடிப்பதை தடுக்க முடியாத அரசு ரேஷன் அட்டை மூலம் மக்களை திருடர்களாக சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம் ?

    ReplyDelete
  10. பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  11. Wishing you a fabulous 2012
    with full of great achievements and experiences. A meaningful chapter waiting to be written HAPPY NEW YEAR!

    Greet with trees on this New Year

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...