கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 December, 2011

தமிழக மக்களை காக்க எளிய வழிகள்.. விஜயகாந்த் அதிரடி பேட்டி...


முல்லைபெரியாறு அணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்‌வேறு போராட்டங்களை அறிவித்து அ‌தனைநடத்தியும் வருகிறது. மறியல்கள், பேரணிகள், ஆர்பாட்டங்கள், ரகளைகள் என அவரவர் தன்பங்குக்கு போராட்டங்களை செய்து வருகிறார்கள். அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, என அனைத்து கட்சிகளும் ஒரு சேர குரல் கொடுத்து வருகிறது.

தேமுதிக சார்பில் கடந்த வாரம் ஒரு பேரணியை வெற்றிகரமாக நடத்திய விஜயகாந்த், அன்று  பத்திரிக்கையாளர்களுக்கு  அளித்த பேட்டியில் ஒரு விஷயம் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது ‌ஐயப்பனை தரிசிக்க நாம் சபரிமலைக்குதான் செல்ல வேண்டுமா.. நாமே தமிழ்நாட்டிலே ஒரு ஐயப்ப கோயிலைக்கட்டி நாம் தரிசிக்க கூடாதா என்று கேட்டிருந்தார்.

பொதுவாக சில சமய நம்பிக்கைளை, புராதன ஸ்தலங்களை, தேசிய சின்னங்களை, பாரம்பரியங்களை நாம் எளிதில் விட்டு விடமுடியாது. அவைகள் தற்போதை பிரச்சனைகளுக்காக பலநூறு ஆண்டுகள் கொண்டுள்ள சம்பிரதாயங்களை மாற்றுக்கொள்வது என்பது கொஞ்சமும் ஆகாத செயல்.

விஜயகாந்த் இதுபோன்ற பாணியில் வேறு என்னன்ன சொல்வார் என்ற நகைச்சுவை கலந்த  பதிவு...


நிருபர் : ஆந்திராவில் அடிக்கடி தமிழர்கள் தாக்கபடுகிறார்கள் அது குறித்து தாங்கள் என்ன சொல்கிறீர்கள்.

விஜயகாந்த் : இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான் ஒண்ணு சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். தமிழன் பொறுமையை இழந்தால் அவ்வளவுதான்.

ஆந்திராவுக்கு நாம போனாதானுங்க அடிக்கிறாங்க.. திருத்தணியிலே ஒரு வெங்கடாசலபதி கோயிலை கட்டிடலாம். அப்படியே பக்கத்திலே முருகன் இருக்காரு இரண்டு போரும் ஒரே நேரத்தில் பிரபரமாயிடுவாங்க இல்ல..!

நிருபர் : பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தங்கள் கருத்து.

விஜயகாந்த் : ஏங்க நாம அங்க போகனும் அப்புறம் அடிப்படனும். மைசூரும் ஏறக்குறைய பெங்களூர் மாதிரித்தான் இருக்குது அதனாலே மைசூரையே பெங்களூருன்னு பெயர் மாத்திட வேண்டியதுதான்.

நிருபர் : இலங்கை கடற்படை அடிக்கடி நம்ம மீனவர்களை தாக்குவது குறித்து என்ன சொல்ல வர்றீங்க.

விஜயகாந்த் :  அது ஒண்ணும் இல்லிங்க.. நான் மாத்திமாத்தியெல்லாம் பேச மாட்டேன். இப்பவும் இதான் சொல்றேன். ஏன் நாம கடல்ல மீன் பிடிக்க போகணும் அப்புறம் அவங்க கிட்ட அடிவாங்கனும். தமிழ்நாட்டிலேயே நிறைய மீன்பிடிக்க வசதிகள் இருக்கு. அதை சொல்றேன் கேளுங்க... மொத்தம் 22,287 குளங்கள், 10,297 ஏரிகள், 5,398 கம்மாய்கள், 3097 கிணறுகள், 356 நதிகள், 205 ஆறுகள் இருக்கு இங்கயே நமக்கு தேவையான மீன்களை பிடிச்சிக்கிடலாம் இல்லையா..? அதை விட்டுட்டு அங்க போய் அவங்க அடிக்கிறாங்க இவங்க அடிக்கிறாங்கன்னா எப்படி...?

நிருபர் : நம்ம தமிழர்கள் வெளிநாட்டுக்கு சொன்று கஷ்டப்படுறதா ‌தகவல்கள் வருது.. அதைப்பத்தி என்ன ‌நினைக்கிறீங்க.. நமக்கு தெரிந்த மனோ கூட பஹ்ரைன்ல ரொம்ப வறுத்தெடுக்கிறாங்கலாம்.

விஜயகாந்த் : அந்த பரதேசிக்கு நான் அப்பவே சொன்னேன். நம்ம நாட்டைவிட்டு வேற எங்கும் போகாதேயான்னு கேட்கல...

நிருபர் : சரிங்க தலைவரே முடிவாக என்ன சொல்ல வறீங்க...

விஜயகாந்த் : எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கு. அது நம்ம தமிழகத்தை சுத்தி நல்ல பெரிய மதில்சுவர் எழுப்பி நம்மதமிழர்களை காக்க வேண்டும் என்று நான் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்தமுறை என்னை முதல்வராக்கினால் மேற்கண்ட அனைத்தையும் செய்து முடித்து, தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.

வரட்டா..!

17 comments:

  1. சௌந்தர் கேப்டன் பதில்கள் அருமை.

    ReplyDelete
  2. முன்பெல்லாம் சுப்ரமண்ய சுவாமிதான் இப்படிலாம் பேசுவார். இப்போ அவரையும் மிஞ்சுட்டார் கேப்டன்

    ReplyDelete
  3. நண்பா, உனக்கு இருக்குலேய்? போனா பண்ற போன்.... இரும்லேய் அருவாள தீட்டிட்டு இருக்கேன்....


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

    ReplyDelete
  4. சினிமாவுல கதாநாயகனா வலம் வந்தவர், அரசியலில் காமெடியனா இருக்கார். அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. சீனப் பெருஞ்சுவர் மாதிரி தமிழகப் பெருஞ்சுவர் கட்டிடலாம்னு கேப்டருக்கே உங்க பேட்டியப் படிச்சா தோணும் சௌந்தர் சார்... கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  6. அவர் அப்படித்தான் கணக்குல வச்சுக்க வேண்டாம்..

    ReplyDelete
  7. ரொம்பவே மாத்தி யோசிச்ச??

    ReplyDelete
  8. ஏய்ய்ய்ய்ய் ன்னு சொல்லல...

    ReplyDelete
  9. கலக்கல் பேட்டி சௌந்தர்!
    த,.ம.4

    ReplyDelete
  10. ஹா.ஹா.ஹா.ஹா

    கேப்டன் காமடி பீஸ் ஆகிட்டார்

    அருமை

    ReplyDelete
  11. தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க தெய்வமே....!!!

    ReplyDelete
  12. நம்ம தமிழர்கள் வெளிநாட்டுக்கு சொன்று கஷ்டப்படுறதா ‌தகவல்கள் வருது.. அதைப்பத்தி என்ன ‌நினைக்கிறீங்க.. நமக்கு தெரிந்த மனோ கூட பஹ்ரைன்ல ரொம்ப வறுத்தெடுக்கிறாங்கலாம்.//

    வறுத்தெடுக்க மனோ என்ன கடலையா ஹி ஹி...

    ReplyDelete
  13. அந்த பரதேசிக்கு நான் அப்பவே சொன்னேன். நம்ம நாட்டைவிட்டு வேற எங்கும் போகாதேயான்னு கேட்கல...//

    அண்ணே அம்பதாயிரம் ரூபாய் சம்பளத்துல ஒரு வேலை வாங்கி தாங்கன்னே உடனே வந்துர்றேன்...

    ReplyDelete
  14. என்னது தமிழ் நாட்ட சுத்தி காம்பௌண்டா.. விளங்கிடும்..

    ReplyDelete
  15. ஆஹா.. பார்டர்ல படம் எடுக்குற கனவுலேயே இருப்பாரு போல..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...