கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 December, 2011

பொதுஇடத்தில் கமிஷ்னர், கலெக்டரை மிரட்டிய விஜயகாந்த்... மதுரையில் நடந்த நிஜசம்பவம்

தேமுதிக-வை கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமணத்தில் கலந்துகொள்ள மதுரை சென்ற விஜயகாந்த், திருமணத்திற்கு வந்த கட்சியின் பிளெக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி மறுத்த காரணத்திற்காக, மணமேடையில் வைத்தே மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும், கொஞ்சம் கூட நாகரிகமற்ற முறையில் பெயர்களை உச்சரித்து, மிரட்டலோடு பேசியிருக்கிறார். 

கடந்த காலங்களில் மதுரையும், அங்கு வாழும் மக்களும் நிம்மதியற்று இருந்த நிலையில், ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களின் சுவாசக்காற்றை சுகமான, சுதந்திரத்துடன் பரவச்செய்த பெருமை, இப்போதுள்ள கலெக்டரையும், கமிஷனரையும் மட்டுமே சேரும்.

மக்கள் நன்மைக்காக வேலை செய்து வருபவர்களை, எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், விமர்சனப்படுத்தியுள்ளது அவருக்கும் சரி, அவரது கட்சிக்கும் அழகல்ல. பிளெக்ஸ் போர்டுகள் நகரெங்கும் ஆக்கிரமித்தால், போக்குவரத்தில் எவ்வளவு பிரச்னை ஏற்படும் என மதுரைக்காரரான விஜயகாந்துக்கு ஏன் புரியவில்லை. 

சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, 8 கி.மீ., தூரத்திற்கு பிளெக்ஸ் மற்றும் டியூப் லைட் அலங்காரம் செய்திருந்த அமைச்சர் உதயகுமாரை, முதல்வர் அழைத்து கண்டித்ததோடு, அவரையும் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். மக்களை பாதிக்கும் வீண் ஆடம்பரங்களை அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு திருமண நிகழ்வுக்காக வரும் தலைவரை வரவேற்க, நகர் முழுக்க பிளெக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததில் என்ன அநியாயம் நடந்துவிட்டது? தங்கள் தலைவர் வருகையை முன்னிட்டு, கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யுங்கள் அனுமதி கொடுப்பர்; ஏழை மக்களுக்காக மருத்துவமுகாம் நடத்துங்கள், அனுமதி கொடுப்பர்; ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் முகாம் நடத்துங்கள்; அனுமதி கொடுப்பர். வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யுங்கள்; அனுமதி கொடுப்பர். அதைவிடுத்து, 

நகரையும், நகர் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு ஆடம்பர ஆர்ப்பாட்டத்திற்கும் இவர்களிடம் அனுமதி கிடையாது என்பதே உண்மை. 

கலெக்டரையும், கமிஷனரையும் கண்டித்துள்ள விஜயகாந்த், "ஆயிரம் கைகள் சேர்ந்தாலும், ஆதவனை மறைக்க முடியாது' எனக் கூறியுள்ளார். உண்மை தான்; ஆனால், இருள் சூழ ஆரம்பித்து விட்டால், அந்த ஆதவன், தானாகவே மறைந்துவிடுவான் என்பதையும் விஜயகாந்த் அறியவேண்டும். அடுத்த முதல்வராக ஆசைப்படும் விஜயகாந்த், எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் நல்லது.

பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ளும்
மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும் இந்த நேரத்தில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

25 comments:

  1. ஆரம்பிச்சுட்டார்யா ஆரம்பிச்சுட்டார்யா....

    ReplyDelete
  2. //////////
    தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply to comment]

    ஆரம்பிச்சுட்டார்யா ஆரம்பிச்சுட்டார்யா....
    ///////


    யோவ்.. மதுரையில் இருந்துகிட்டு என்னய்யா பண்ற..

    இதையெல்லாம் தட்டிகேட்ககூடாதா?

    ReplyDelete
  3. அடடா.. போதை கொஞ்சம் தலைக்கு ஏறுனா இப்படிதான் ஏதாவது கிறுக்கு பிடிச்ச மாதிரி பேசுவாரு..

    ReplyDelete
  4. @கவிதை வீதி... // சௌந்தர் //
    யோவ்.. மதுரையில் இருந்துகிட்டு என்னய்யா பண்ற..

    இதையெல்லாம் தட்டிகேட்ககூடாதா?///


    அவர தட்டி கேட்கணும்னா அவர் லெவலுக்கு போகனும்யா.... அதெல்லாம் சரிபட்டு வராது... ஹி ஹி,,..

    ReplyDelete
  5. you tubeல இந்த மாதிரி காமெடிய போட மாட்டாங்களா?

    ReplyDelete
  6. ///
    கோவி said... [Reply to comment]

    you tubeல இந்த மாதிரி காமெடிய போட மாட்டாங்களா?

    ////////


    அப்படி வேணாங்க...
    அப்புறம் உண்மையான காமெடி பண்றவங்க பொழப்பு போயிடும்...

    ReplyDelete
  7. @கவிதை வீதி... // சௌந்தர் //

    you tubeல கொலைவெறி கொடுத்த ஹிட்ட இன்னொரு தமிழன் முறியடுச்சா நம்பளுக்கு பெருமையா இருக்கும்னு நெனச்சு சொன்னேன்..

    ReplyDelete
  8. செளந்தர் ஸார்... தலைப்பைப் படிச்சதும் ஏதோ அநியாயத்துக்கு எதிராக் குரல் கொடுத்திருப்பாருன்னு மனசுல நெனச்சுக்கிட்டு உள்ளே வந்த எனக்கு சுவத்துல முட்டிக்கணும் போல இருக்கு... சினிமா ஷுட்டிங்னு நெனச்சிட்டு இப்படி எகிறியிருப்பாரோ..?

    ReplyDelete
  9. ///பொருப்புணர்வுடன் நடந்துக்கொள்ளும் மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும் இந்த நேரத்தில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.///

    ரிப்ப்ப்பீட்டே... நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. ///////
    கணேஷ் said... [Reply to comment]

    செளந்தர் ஸார்... தலைப்பைப் படிச்சதும் ஏதோ அநியாயத்துக்கு எதிராக் குரல் கொடுத்திருப்பாருன்னு மனசுல நெனச்சுக்கிட்டு உள்ளே வந்த எனக்கு சுவத்துல முட்டிக்கணும் போல இருக்கு... சினிமா ஷுட்டிங்னு நெனச்சிட்டு இப்படி எகிறியிருப்பாரோ..?

    //////////

    அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தால் எப்படிங்க..

    அப்புறம் நம்மநாடு வல்லரசாகிடாது...

    அரசியல்வாதிகளை பொருத்தவரை நாடும் நாட்டுமக்களும் இப்படியேத்தான் இருக்கனும்...

    ReplyDelete
  11. ஹா.ஹா.ஹா.ஹா.கேப்டன் சினிமா சூட்டிங் என்ற நினைப்பில் பொங்கி இருக்கார் போல

    ReplyDelete
  12. இதுக்குதான் எங்கள மாதிரி ப்ளெக்ஸ் வைக்கணும்..தக்காளி ஒரு பய ஒன்னு பேசமுடியாது...:)

    ReplyDelete
  13. ஆளும்கட்சியில் இல்லாமலே இந்த அலப்பரை இருந்தா...நாடு தாங்காது சாமி.

    ReplyDelete
  14. ////////
    மயிலன் said... [Reply to comment]

    இன்று என் வலையில்...அவள் அதுவாம்...!...

    ////////

    நான்தான் முதல் ஆள் பாருங்க தல...

    ReplyDelete
  15. இப்ப தமிழ் நாட்டு பாடரை சுற்றி காம்பௌண்ட் போட சொல்லி இருக்காரு கேப்டன். இது தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete
  16. //////
    * வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    இப்ப தமிழ் நாட்டு பாடரை சுற்றி காம்பௌண்ட் போட சொல்லி இருக்காரு கேப்டன். இது தெரியுமா உங்களுக்கு?

    ////////////


    இருக்கிறதிலேயே காமெடி பீஸ் நான்தான்னு நிறுபிக்கிறாறு போல...

    ReplyDelete
  17. கேவலம் தான்..என்ன செய்வது?

    ReplyDelete
  18. என்னத்த சொல்ல ....?

    ReplyDelete
  19. அடுத்த முதல்வராக ஆசைப்படும் விஜயகாந்த், எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் நல்லது.
    >>
    கரெக்ட் சகோ

    ReplyDelete
  20. அடுத்த முதல்வராக ஆசைப்படும் விஜயகாந்த், எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் நல்லது.

    //

    அட நீங்க வேற நிதானமா இருந்தா தான யோசிச்சு செயல் படுத்தறத்துக்கு.....

    ReplyDelete
  21. எப்பொழுதும் மப்பில் இருப்பவரிடம் நாகரீக பேச்சை எதிர் பார்ப்பது நம் குற்றம்.

    ReplyDelete
  22. சகா, முதல்வருக்கென்று சில தகுதிகளும், திறமைகளும் தேவைப்படுகின்றன. பிரபலம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு போராடும் சிலர் கொஞ்சம் நன்நெறி நடத்தைகளை பின் பற்றுவது நல்லது. . .

    ReplyDelete
  23. பொறுமைதான் தலைவனுக்கு அழகு, இங்கே அது தலைகீழா இருக்கு...!!!

    ReplyDelete
  24. கலெக்டருக்கும், கமிஷனருக்கும் சல்யூட்.

    ReplyDelete
  25. "அடுத்த முதல்வராக ஆசைப்படும் விஜயகாந்த், எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் நல்லது"

    என்ன பாஸ் திடீர்னு இப்படியொரு வாக்கியத்தை அமைச்சுட்டிங்க!
    இவரு ஒரு பேக்குங்க, வென்னவெட்டி, ஏதோ அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தஜாமத்துல குடை பிடிப்பானாம்.
    சுத்தமான டுபாக்கூர்...
    ப்ளீஸ் வாக்கியத்தமாத்துங்க பாஸ்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...