பூக்களோடு சேர்ந்து
பரவசப்படுவதை விடுத்து
முட்களோடு மட்டுமே
சமரசம் செய்து கொண்டிருக்கிறோம்...!
தென்றலோடு கைகோர்த்து
திளைத்த நாட்களை விட
புழுதிகளோடு புழுங்கிய
பொழுதுகளே இங்கு அதிகம்...!
நிகழ்கால நொடிகளுக்குள்
இருப்புக்கொள்ளாமல்
எதிர்கால இருட்டுக்குள்
பயணப்பட்டே பழகிவிட்டோம்...!
இன்பங்களை தேடுவதாக எண்ணி
நாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பது
ஆசை என்ற நதிவழியே...
துன்பம் என்ற கடலை நோக்கியே...
ஒவ்வொறு நொடியும்
நம்மைச்சுற்றியே நகர்கிறது வாழ்க்கை
நாம்தான் நம்மைச்சுற்றியே
பார்ப்பதில்லையே..!
அன்பு காட்ட
மனங்கள் இருக்கிறது நம்மில்..!
இனி இன்பம் பகிர
இன்முகம் போதுமே...
கண்களை மூடிக்கொண்டு
காய்களை பறிப்பதைவிட்டு
பழங்களோடு மட்டுமே
பரிபாஷனம் செய்வோம்..
பரவசப்படுவதை விடுத்து
முட்களோடு மட்டுமே
சமரசம் செய்து கொண்டிருக்கிறோம்...!
தென்றலோடு கைகோர்த்து
திளைத்த நாட்களை விட
புழுதிகளோடு புழுங்கிய
பொழுதுகளே இங்கு அதிகம்...!
நிகழ்கால நொடிகளுக்குள்
இருப்புக்கொள்ளாமல்
எதிர்கால இருட்டுக்குள்
பயணப்பட்டே பழகிவிட்டோம்...!
இன்பங்களை தேடுவதாக எண்ணி
நாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பது
ஆசை என்ற நதிவழியே...
துன்பம் என்ற கடலை நோக்கியே...
ஒவ்வொறு நொடியும்
நம்மைச்சுற்றியே நகர்கிறது வாழ்க்கை
நாம்தான் நம்மைச்சுற்றியே
பார்ப்பதில்லையே..!
அன்பு காட்ட
மனங்கள் இருக்கிறது நம்மில்..!
இனி இன்பம் பகிர
இன்முகம் போதுமே...
கண்களை மூடிக்கொண்டு
காய்களை பறிப்பதைவிட்டு
பழங்களோடு மட்டுமே
பரிபாஷனம் செய்வோம்..
இனி வம்பு வார்த்தைகளை
அழித்துவிட்டு
நம்மை அன்பு வார்த்தைகளால்
நம்மை அன்பு வார்த்தைகளால்
அழகுபடுத்திக்கொள்வோம்...
மையக்குறள் :
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
(அறத்துப்பால் குறள் 100 - இனியவைகூறல்)
பொருள் : இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டு, கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!
உலகில் அமைதி நிலவட்டும்!
ReplyDeleteநீங்க என்ன DMK வா....
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஇனி புரட்சிகாரன் கூட சண்டை போடமாட்டீர்தானே ஹி ஹி...
ReplyDeleteபதிவுலகிலும் அமைதி அமையட்டும்...!!!
ReplyDeleteஏதோ சண்டைன்னு வந்தேன் இதானா உங்க டக்கு ஹி ஹி
ReplyDelete''....னி வம்பு வார்த்தைகளை
ReplyDeleteஅழித்துவிட்டு
நம்மை அன்பு வார்த்தைகளால்
அழகுபடுத்திக்கொள்வோம்... '''
Vetha. Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com/2011/12/07/41-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%8b/
////நம்மை அன்பு வார்த்தைகளால்
ReplyDeleteஅழகுபடுத்திக்கொள்வோம்... ////
அழகு எல்லோறும் ஒன்றுமையாக இருப்போம்
அழகான கவிதை! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteSuper
ReplyDeleteஅன்பைத்தான் எல்லாரும் விரும்புகிறோம்...
ReplyDeleteவம்பு வந்தா ரௌத்திரமும் பழகனும்..
எதாவது சந்தேகம்னா மனோ..கிட்ட கேளுங்க...
சௌந்தர்,
ReplyDeleteநல்ல கவிதை.
ஆனாலும்,
நிகழ்காலத்தில் வாழ நினைத்தாலும், எதிர்க்காலம் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது.
மனிதன், சிந்திக்கும் திறன் கொண்டவன்.
நாளையைப் பற்றிய எண்ணம் இயல்பாகவே வந்துவிடும்.
அதெல்லாம் சரி. இந்த கவிதை 'எந்த பதிவருக்கு' சமர்ப்பணம்'ன்னு சொல்லலியே?
ReplyDeleteசூப்பருங்கோ! :-)
ReplyDeletepadhivu nandru aanaal idhellam indhdha kaalaththirkku erpudayadhu allave
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் நண்பா..
ReplyDelete"காய்களை பறிப்பதைவிட்டு
ReplyDeleteபழங்களோடு மட்டுமே
பரிபாஷனம் செய்வோம்.."
குறளை விளக்கும் அருமையான வரிகள்
அருமை நண்பரே
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteகுறளுக்கு அருமையான விளக்கம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 11
திருக்குறளை கவிதையாக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteமென்மையான ஒரு பகிர்வு...'வெள்ளை பூக்கள்' பாடல் கேட்டது போல இருந்தது...அமைதியான அழகு...
ReplyDeleteஐந்தாம் பத்தியில் தாங்கள் கவனிக்காமல் விட்ட அந்த ஒரு சிறு எழுத்து பிழையை மட்டும் சரி செய்து விடுங்கள்..
இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!
அன்பும் நட்பும் என்றும் அழிவில்லாதது. நட்பையே நாடுவோம். கவிதை அருமை செளந்தர் சார்! மனமார்ந்த வாழ்த்துக்கள்! (என் மேல கோபமில்லைதானே?)
ReplyDelete:)
ReplyDeleteஉங்களுக்கே நீங்க சொல்லிக்கிற மாதிரி கவிதை இருந்தாலும், மத்தவங்களுக்கும் பயன்படும் தான்.
"அன்பு வார்த்தைகளால்
ReplyDeleteஅழகுபடுத்திக்கொள்வோம்..." கவிதை அருமை.
அருமையான அர்த்தம் தாங்கிய கவிதை அருமை நண்பரே
ReplyDeleteஅருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துக்கள் சவுந்தர்... குறள் விளக்கமும் அருமை..
ReplyDeleteஅன்பிற்கு முக்கியத்துவமும் கொடுக்கும் கவிவரிகள்
ReplyDeleteஇனி வம்பு வார்த்தைகளை
ReplyDeleteஅழித்துவிட்டு
நம்மை அன்பு வார்த்தைகளால்
அழகுபடுத்திக்கொள்வோம்...
ஆமா. சரியா சொல்லி இருக்கீங்க.
நல்லதே நினைப்போம்
ReplyDeleteநல்லதே நடக்ககும்
நல்லதே சொன்னீர்!
புலவர் சா இராமாநுசம்
அன்புக்கு நல்ல விளக்கம் சௌந்தர்.ஆனாலும் சில விஷயங்களுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.விலகுவது கஸ்டம் !
ReplyDeleteஅன்பின் சௌந்தர்
ReplyDeleteஅருமையான சிந்தனை - ஒன்றரை அடிக் குறளை வைத்து ஒரு கவிதை. நன்று நன்று - அத்தனை வரிகளுமே அருமை. படங்களும் நன்று.
சிறு சிறு தட்டச்சுப்பிழைகள் தவிர்க்கலாமே !
செய்துக்கொண்டிருக்கிறோம் - செய்து கொண்டிருக்கிறோம்
ஒவ்வோறு - ஒவ்வொரு
பரிபாஷனம் - தமிழ்ச் சொல்லா - தவிர்க்கலாமே
நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டீர்கள். இனி மேல் எல்லாமே ஜெயம் தான். பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஇதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
சிறப்பான கவிதை.
ReplyDelete