கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 November, 2013

இப்படிபட்ட பெண்மணியை நாம் என்ன சொல்வது...!


ஒரு முறை அன்னை தெரசா அவர்கள் பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று ரொட்டித் துண்டுகளை வழங்கினார். 

நன்கு பசித்தவருக்கு உணவு வழங்கினால் அதை உடனே உண்ணவே ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ரொட்டித்துண்டுகளைப் பெற்ற தாயோ மிகவேகம் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட எத்தனித்தார்.

அவரை ஓடவிடாமல் தடுத்த அன்னை தெரசா, "சாப்பிடாமல் எங்கே போறீங்க...?" என்று வினவினார்,

அதற்கு அந்த தாய்... "அம்மா..! நானாச்சும் பரவாயில்லீங்க.. ரெண்டு வேளைதான் பட்டினி. ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி தன்னோட இளம் குழந்தைகளோட சேர்ந்து இரண்டு நாளா பட்டினியா கிடக்குறாங்க. எனவே இதனை சீக்கிரம் கொண்டு சென்று அவர்களுக்கு கொடுக்கனும். அதற்காகத்தான் ஓட முயன்றேன்!" என்றார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தெரசா, "மிகவும் நெகிழ்ந்து... அம்மா! கருணையிலும் சேவையிலும் என்னையே மிஞ்சிட்டீங்களே!" என்று கண்ணீர் மல்க பாராட்டினார்...!

பசியிலும் தானம் செய்வது என்பது... சொல்ல வார்த்தைகள் இல்லை...

******************************** 

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

17 comments:

  1. வணக்கம்
    உலகம் போற்றும் மாபெரும் அன்னை திரெசா அவர்களைப்பற்றிய பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சேவை என்ற புனிதமான செயலை மதமாற்றத்திற்காக உபயோகப் படுத்திய சூனியக்கார கிழவி ,இந்த அந்நிய கிழவி.இந்த கேடுகேட்டக் கிழவி அன்னையா?யாருக்கு?துத் தேறி.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலேயர்கள் அடித்து துன்புறுத்தி மதமாற்றம் செய்தார்கள்...

      இவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை...
      தன்னுடைய சேவை மூலமாக மதமாற்றம் செய்தார் அவ்வளவுதான்...

      Delete
    2. மதவாதிகளாக இருந்துகொண்டு நாட்டை அசிங்கம் படுத்தும் மனிதர்களுக்கு இடையே நல்ல மனிஷியாக இருந்தவர் இவர்...

      மதமாற்றம் என்பது ஒரு தனிமனித சுதந்திரம் அதை யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி திணித்துவிடமுடியாது... அப்படி திணிப்பதினாலும் ஒரு மதம் வளர்ந்து விடாது...


      இன்றைக்கும் மதமாற்றங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு எதிராக என்ன செய்துவிட்டீர்கள்...

      Delete
  3. சகிப்பு தன்மை குறைந்து இந்த நாளில் அவசியம் நினைவில் நிறுத்த வேண்டியது இன்றைய நாளை !
    த.ம 2

    ReplyDelete
  4. இளம்பரிதி ஏன் இப்படி கோபப்படுகிறார்
    மதமாற்றத்திற்காக சேவை செய்தார்
    என்றால் கூட அது கூட சிறப்பு இல்லையா
    வெறுமனே மதத்தைக் கட்டிக் கொண்டு
    அழுபவர்கள் அதிகம் நிறந்த நாட்டில்...
    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நான் முன்மொழிகிறேன்....

      நன்றி ஐயா..!

      Delete
  5. அந்த பெண்மணியின் பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும்! என்ன ஒரு கருணை உணர்வு! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இவர்கள் தனி பிறவிகள்தான்
      தங்கள் கருத்துக்கு மிக்க. நன்றி.

      Delete
  6. பசிநேரத்தில் கூட பிறர் பசி போக்க நினைத்த அந்தப் பெண்மணி போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  7. தன் பசி மறந்து மற்றவரின் பசியை நினைத்த அந்த அன்னை போற்றப்பட வேண்டியவர்.

    ReplyDelete
  8. நீதி போதனை ! அருமை!

    ReplyDelete
  9. வணக்கம்! மதர் தெரஸா போண்ற்வர்கள் ஆங்கிலேயர்களை விட நம் நாட்டிற்கு ஆதிக சேதாரம் செய்தவர்கள். மதர் தெரஸா செய்த அயோக்கித்தனங்கள் குறித்த சில தகவல்கள்;

    http://www.patheos.com/blogs/daylightatheism/2008/05/mother-teresa/
    http://whyevolutionistrue.wordpress.com/2013/03/05/a-new-expose-on-mother-teresa-shows-that-she-and-the-vatican-were-even-worse-than-we-thought/
    http://knowledgenuts.com/2013/09/27/mother-teresa-was-a-crook-and-a-fraud/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...