கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 November, 2013

என்னச் சொல்லி தேற்றிக்கொள்வது...!



வேலை தேடி அலுத்தபின்
பேருந்துக்காக காத்திருக்கிறேன்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

அய்யா கொய்யா வேண்டுமா
என்று எதுகையோடு கேட்டவனிடம்
நான் சாப்பிடுவதில்லை என்று மறுத்தேன்...!


மதுர மல்லி.. மதுர மல்லி...
என்று கேட்டுவந்த சிறுமியிடம்
தலையாட்டி  வேண்டாம் என்றேன்..!


தம்பி...  டவுன் பஸ் 57 போய்விட்டதா 

என்று கேட்ட பெரியவருக்கு
இன்னும் இல்லை என்று ஆற்றுப்படுத்தினேன்...!


 ஐயா... சாமி...  என்று
பிச்சைக்காரன் கை நீட்ட
பக்கத்தில் இருந்தவன்
தர்மம்  செய்தான்...

இல்லையென்று 
தலையாட்டவுமில்லை...
எடுத்துக்கொடுக்க
கையில் காசுகளும் இல்லை...


செய்தித்தாளில் ஆழ்ந்தவன்  போல்
குனிந்த தலை நிமிராது இருந்தேன்
என்ன சொல்லி தேற்ற
என் இயலாமையை...!
வாசித்தமைக்கு நன்றி

11 comments:

  1. வணக்கம்
    அருமையான கவிதை.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. "இயலாமை" கொடுமை. யாருக்கும் வரவேண்டாம்.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  3. கையில் காசு இல்லாத போது தர்மம் செய்யாதது குற்றமில்லை.

    இருந்தாலும் இளகிய உங்கள் ’கலையுள்ளம்’ வருந்திக் கவி பாடுகிறது,

    மனதை உருக்கும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. யாவருக்கும் இயலாமை என்பது எதாவது ஒரு ரூபத்தில் சந்தித்தே ஆகவேண்டும்..

      இயலமை என்பது மனிதனின் இயப்பு...

      அந்த இயல்பின் வடிவம் என் கவிதையில்

      Delete
  4. நெஞ்சைச் தொ(சு)ட்டது!

    ReplyDelete
  5. திடீரென்று சோகமான கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஒரு உண்மை அனுபவத்தின் வலி இந்த கவிதையில் காட்டியிருக்கிறேன்...

      Delete
  6. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...