கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 November, 2013

இதெல்லாம் கலக்கலான தீபாவளி ரவுசுகள்..



விலையுயர்ந்ந பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருக்கிறேன்...

அப்படி என்ன விலை உயர்ந்த பட்டாசுன்னு பார்க்கிறீங்கிளா...

அட... வெங்காய வெடிங்க...

தற்போதைக்கு அதுதான் விலையுயர்ந்த வெடி....!

 
******************************



டேய் கமலா நீ செஞ்ச அந்த மைசூர்பாகு ஒரு அஞ்சாறு எடுத்துகிட்டு வா?

நான் சொன்னேன் இல்லை அது நல்லாத்தான் பண்ணியிருக்கேன்னு இப்ப பாருங்க நீங்களே கேக்கறீங்க!

அடச் சீ! இங்க எறும்புப் புத்து ஒண்ணு இருக்கு உன் மைசூர்பாகை அங்க போட்டா எறுமெல்லாம் ஓடிப்போயிடும்னுதான் கேட்டேன்.



******************************


என்னடா உங்க வீட்டுல தீபாவளியும் அதுவுமா டிவி கேமரா, டைரக்டர், ஒளிப்பதிவாளர் எல்லாம் வந்து ஏதோ ஷூட் செஞ்சாங்க?

அதுவா என் ஒய்ஃபுக்கும் என் அம்மாவுக்கு நடக்கற சண்டை டிவி சீரியலையே தூக்கி சாப்பிடற மாதிரி இருக்குன்னு எவனோ போட்டுக் கொடுத்துட்டான்,

உடனே தீபாவளி ஸ்பெஷல்னு காண்பிக்க லைவ் ரிலேக்கு வந்துட்டாங்க.

******************************



தீபாவளி அன்னிக்கு இப்படி குடிச்சுட்டு வர்றியே நல்லாவா இருக்கு !

என்ன பண்றது நரகாசுரன் இறந்த துக்கம் தாங்கலே !

******************************

இந்த வருஷம் தீபாவளிக்கு மூத்த மருமகனைத் தவிர மத்த மூணு மருமகன்களையும் வீட்டு விருந்துக்கு அழைச்சுட்டேன் என்றார்.

அந்த நண்பர் கோபமாகி, என்ன இது.. நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா? என்ன இருந்தாலும் அவர் உன் மூத்த மருமகன். அவருக்காக இல்லாவிட்டாலும் மகளுக்காகவாவது உன் மருமகனை நீ தீபாவளிக்கு கூப்பிட்டிருக்கனும் என்றார்.

அவரை ஏற, இறங்க பார்த்த பெண்ணின் தந்தை சொன்னார், மூத்த மருமகன் போன வருஷம் தீபாவளிக்கு வந்தவர். திரும்பிப்போனாத்தானே கூப்பிடுறதுக்கு...

***********************************


மனைவி: என்னங்க தீபாவளிக்கு ஒண்ணுமே எடுக்காம எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?

கணவன்: "நான் சிரிச்சா தீபாவளி ஹோய்..."

**************************
 அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

7 comments:

  1. வணக்கம்
    ரசிக்கும் படி அழகாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நான் உண்ணத் தக்க இனிப்பு! (சிரிப்பு)

    ReplyDelete
  3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  5. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. முதல் படம் (இந்தியா) உண்மையில்லை; அது இந்தியப்புளுகு! ஏற்கனேவே அலசிப் போட்டாச்சு.!

    திருநள்ளார் மேலே சனிக்கு பயனது சாட்லைட் 3 வினாடி நின்று பிறகு பயணிக்கும் டூப்பு மாதிரி தான்!

    தமிழ்மணம் வோட்டு +9

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...