கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 November, 2013

குழந்தைகளே ஜாக்கிரதை...


 

கோடி அணுக்களிலிருந்து பிரிந்து
ஒற்றை அணுவாய் உயிர்வளர்த்த
கர்ப்பத்திலிருந்து தப்பியதற்கு ஆச்சரியமா..?

ஆனந்தமா...!
பத்துமாதம் ஓய்வெடுத்த
கர்ப்பத் தடையை உடைத்ததற்கு...

இந்த பூமியில் மையம் கொள்ள வந்த
புத்தம்புது இளம் புயலே
ஒரு சேதி தெரியுமா உனக்கு..?

மூடிக்கிடந்த ஓட்டை உடைத்து
புதிதாய் உயிர்பித்து விட்டாய்
பசியோடு இருக்கின்றன பருத்துகள்...

உனக்கு வித்தியாசமான
தூண்டில்கள் தொட்டில்களாக இங்கு
அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன

உனக்கொரு தாலாட்டு 
சினிமா பாட்டில் மட்டுமே...
 

ஒவ்வொரு கனமும் உன் நம்பிக்கை
கூண்டில் நிறுத்தப்படும் கலங்காதே...

புகழாரங்கள் கேட்டு 
வீண் கனவு வளர்க்காதே...
 

மீனுக்காக வலை விரித்து
கானலில் காத்திருக்காதே...

வளரும்போதே வளர்க்கப்பார்
 வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையை...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

8 comments:

  1. வாவ்! குழந்தைக்கு அழகான ஒரு அறிவுரை!
    //வளரும்போதே வளர்க்கப்பார்
    வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையை...!// அருமை!

    ReplyDelete
  2. பாப்பாக்கு சொல்ல வேண்டிய அறிவுரைதான்!!

    ReplyDelete
  3. அற்புதமான இன்றைய சூழலை
    விவரிக்கும் எச்சரிக்கைப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பாப்பாக்கு நல்ல அறிவுரை

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை கவிதை அருமை சௌந்தர்!

    ReplyDelete
  6. நன்னம்பிக்கை ஊட்டும் நல்ல கவிதை!

    ReplyDelete
  7. அருமையான கவிதை சகோ ....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...