கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 November, 2013

விஜயகாந்தின் குடி பழக்கம் அவர் சொந்த விஷயமா..?



'விஜயகாந்த், மதுப் பழக்கம் உடையவர்' என்று, ஆளும் கட்சியினர் கூறுவது, சிலருக்கு, எரிச்சலைக் கிளப்புகிறது. 'அவருடைய தனிப்பட்ட பழக்கம் எதுவும், தமிழர்களைப் பாதிக்காது' என்கின்றனர்.

இப்படிச் சொல்வது அபத்தம்; அறிவீனம். ஏனெனில், விஜயகாந்த், டாஸ்மாக்கே கதி என்று விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் 'குடிமகன்' அல்ல. அவர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் கூட.

முதல்வர் நாற்காலி மீது, தீரா மோகம் கொண்டிருப்பவர். அவர் கனவு காண்பதைப் போல, 2016-ல், முதல்வராகி விட்டால் (தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!), முக்கியமான முடிவுகளை எடுக்கையில், நிதானத்தில்' தான் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அவர், நிதானம் இழந்து நடந்து கொண்டதால் தான், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தியாளர்களாக மாறி விட்டனரா என்பது தெரியவில்லை.

ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணா துரை மற்றும் (எனக்குத் தெரிந்த வரையில்) கருணாநிதிக்கு, இந்தப் பழக்கம் இருந்ததாக, யாருமே சொன்னதில்லை. சில மாதங்களுக்கு முன், திருமதி விஜயகாந்த் தலைமையில், தே.மு.தி.க.,வினர், மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் தலைவருக்கே, 'பழக்கம்' உண்டு என்பது, பகிரங்க ரகசியம். ஆகையால், மக்கள், அதை ஒரு வேடிக்கையாகத் தான் பார்த்தனர்.

நல்லதொரு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், சிகிச்சை பெற்று, இப்பழக்கத்தை விட்டொழிப்பது, அவருக்கும், கட்சிக்கும் நல்லது. அவருடைய ஆதரவாளர்கள், இதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சியினர், திட்டமிட்டு அவமானப்படுத்துவதால் தான், அவர், சட்டசபைக்கு வருவதில்லை என்று சொல்கின்றனர். நாக்கைத் துருத்தி, விரலை நீட்டி, ஆளுங்கட்சியினருக்கு, அவர் சவால் விட்டது தவறில்லையா? சரியான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன், கோர்வையாகப் பேச, அவரால் முடியவில்லை.

எனவே தான், அவைக்குப் போவதில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து. இதை எல்லாம் நினைவில் கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டால் தான், விஜயகாந்த், அரசியலில் நிலைக்க முடியும். இல்லையென்றால், அதோகதி தான்!

7 comments:

  1. வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் அருகில் உள்ளன என்றும் பாராமல் எல்லா இடங்களிலும் சாராயக் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறது, நாள் பூராவும் வாங்கி குடிக்கலாம் தடையேதும் இல்லை. ஆகா விஜயகாந்த் சட்டப் படி தவறேதும் இழைக்கவில்லை. அவர் குடிப்பது தவறு என்றும் அதனால் அவர் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதும் உங்கள் சொந்தக் கருத்து. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
    Replies
    1. தனிமனிதனாக இருக்கும் பட்சத்தில் யாரும் விஜயகாந்த்தை குறைச்சொல்லபோவதில்லை..

      பொதுவாழ்க்கையில் வந்தப்பிறகு பல்லாயிரக்கனக்காக மக்கள் அவரை பின்தொடரும்போது சில தியாகங்களை அவர் செய்துதான் ஆகவேண்டும்...

      தமிழகத்தை மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவேன் என்று சொல்லும் தகுதி அவருக்கு இருக்கிறதா...

      நாளை முதல்வராக ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள்...

      அப்போதும் குடிப்பது என் சொந்த விஷயம் என்று சொல்லமுடியுமா...

      Delete
    2. அவர் மட்டுமல்ல யாராகினும் போதையில் எடுக்கும் முடிவு தவறாகத்தான் இருக்கும்...

      இதே விஜயகாந்த அவர்கள் கட்சி ஆரம்பித்ததிலிருந்து எத்தனை முறை வார்த்தை தவறி பேசியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா...?

      Delete
    3. ஒரு பொதுகூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்து விஜயகாந்த் கடைசியாக தன்னுடைய உரையை இப்படி முடிக்கிறார்...

      ”சரி இத்தோட என் பேச்சை முடிச்சிக்கிறேன்... மணி வேற 10 ஆகாப்போகுது.. கடையை மூடிடுவாங்க.. அப்புறம் உங்களுக்கு கஷ்டமாயிடும்... அப்படியென்று டாஸ்மாக் முடிவிடுவார்கள் என்று தன்னுடைய தொண்டர்களுக்கு கூறுகிறார்...

      இதை எப்படி எடுத்துக்கொள்வது... இவரோடு சேர்த்து தொண்டர்களையும் குடிக்கசொல்கிறாறா...?

      Delete
    4. ஒரு தனிமனிதரை அவரது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க என்னோடு சேர்த்து யாருக்கும் உரிமைக்கிடையாது....

      ஆனால் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது...

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...