கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

31 July, 2018

கருணாநிதியின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்கள்.. 1


தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை.

சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி படம்தான் என்றால் மிகையாகாது. சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி. இப்படி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத வசனங்களை வலம் வர செய்த கலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.

பராசக்தி

எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி (1952) படம்தான் என்றால் மிகையாகாது. 





மனோகரா

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

இப்படியாய் அனல் பறந்த வசனங்கள்... 




பூம்புகார்



ராஜா ராணி


19 December, 2012

வயிறு குலுங்க சிரிக்க... சன் டிவி-யின் குட்டிச் சுட்டீஸ்... காணொளிகள் இணைப்பு...


சன் டிவியில் வரும் குட்டிச் சுட்டீஸ்  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நி‌கழ்ச்சியாக வலம் வருகிறது... அவற்றின் சில பகுதிகள் இங்கு இணைக்கப்படிருக்கிறது கண்டு ரசியுங்கள்....


01 September, 2011

என்ன கொடுமை இது.. தாங்க முடியல சாமி... (நாங்களும் போடுவோம்ல)

விக்கி உலகம் அடிக்கடி வரும் இது போன்ற நகைச்சுவை வீடியோக்களை தன் பதிவில் உலவ விடுகிறார் அதுப்போன்று அவருக்கு எதிராக நீயும் போடு என அருகிலே இருக்கும் வேடந்தாங்கல்  கருணும்... உலகத்தாரும்.... உசுப்பி விட்டதின் பேரில் இந்த பதிவு... (அப்பா இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடாச்சி...)
 
இது கண்டிப்பாக விக்கி உலகம் அவர்களுக்கான எதிர்பதிவு என்று நினைக்க வேண்டாம்.... உண்மையில் அப்படித்தான்....


காட்சி - 1

காட்சி - 2

காட்சி - 3

காட்சி - 4


சிரிச்சி... சிரிச்சி.. எஞ்சாய் பண்ணியாச்சா.....


அனைவருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்....

15 June, 2011

இலங்கை எனும் கொலைக்களம் பரபரப்பு வீடியோ காட்சிகள்...


இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :




கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு... 
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...
Related Posts Plugin for WordPress, Blogger...