கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label சாதனைகள். Show all posts
Showing posts with label சாதனைகள். Show all posts

16 August, 2018

நினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்




பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் 

வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 

1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். 



காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 

‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.



குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார்.

ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.


ஆரம்பகாலப் பணிகள்


தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார்.

இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார்.

பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.




அரசியல் பிரவேசம்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார்.

சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார்.

ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார்.

அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து,

அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.



பிரதமராக வாஜ்பாய்

1996-ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார்.

இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.


ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.

இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார்.

1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது,

அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நயமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.


கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று,

அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2-ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.


மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.




எழுத்தாளராக வாஜ்பாய்

அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். 


இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.


மகத்தான சாதனைகள்



சாலை கட்டமைப்பு

நரசிம்மராவ் ஏற்படுத்திய பொருளாதார சீர்திருத்தத்தால், நாட்டில் கார்களின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், அவை செல்வதற்கான சாலைகளை பற்றி அவர் சிந்திக்கவில்லை. இதனை உணர்ந்த வாஜ்பாய், வேகமான மற்றும் நெருக்கடியில்லாத போக்குவரத்துக்கு 'தங்க நாற்கரச்சாலை' திட்டத்தை தொடங்கினார். 

இதன் மூலம், நாட்டின் முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னையை இணைத்தார். அதே போல, 'பிரதம மந்திர கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை' தொடங்கி, சாலைகள் இல்லாத கிராமங்களிலும், சாலை வசதியை உருவாக்கினார். இந்த இரண்டு திட்டங்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.


கார்கில் வெற்றி

பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் கிடைத்த வெற்றிக்கு வாஜ்பாயின் துணிச்சலான முடிவும், நடவடிக்கையும் காரணமாக அமைந்தன. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது 

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர்,அணு ஆயுத யுத்தத்துக்கு வழி வகுத்துவிடுமோ என உலக நாடுகள் அச்சமடைந்தன. தோல்வி உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் பாக்., அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப். 

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பின்வாங்க உடன்பட்டது பாகிஸ்தான். ஜூலை 26ல் கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது இந்தியா.



லாகூருக்கு பஸ்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடன், பேச்சுவார்த்தை மூலம் நல்லுறவு ஏற்பட பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் வாஜ்பாய். இவரது பதவிக்காலத்தில், பாகிஸ்தானின் லாகூருக்கு 1999 பிப்., 19ல் 'பஸ்' போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

கல்வி வளர்ச்சி

கடந்த 2001ல், சர்வ சிக் ஷா அபியான் என்ற சமூகநலத் திட்டம் தொடங்கப் பட்டது. இதன் மூலம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக 4 ஆண்டுகளில், நாட்டில் இடையிலேயே பள்ளியில் இருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் தடுக்கப்பட்டது. இவரது திட்டத்தை பின்பற்றி தான், தற்போதைய ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கு இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தொலை தொடர்பு

தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அருண் ஜோரியுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டப்பட்டது. டிராயின் பல்வேறு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொடங்கப்பட்டது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், புதிய முறை தொடங்கப்பட்டது. 

பொதுத்துறை நிறுவனங்களில் நிதிப்பற்றாக்குறையை குறைத்தார். இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றன. 

எரிபொருள் விலையில் ஒழுங்குபடுத்துதல், அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப், தொழிலாளர் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கினார். முதல்கட்ட ரயில் சேவையையும் இவரே தொடங்கி வைத்தார். 

அறிவியல் திட்டங்களுக்கு அதி நிதி ஒதுக்கினார். 2008ம் ஆண்டுக்குள், இந்தியா சார்பில் நிலவுக்கு 'சந்திராயன்-1' விண்கலம் செலுத்தப்படும் என 2003 சுதந்திர தின உரையிலேயே வாஜ்பாய் தெரிவித்தார்.



தனியார் மயம்

வியாபாரம் மற்றும் தொழிற்சாலைகளில் அரசின் முதலீடுகளை குறைக்கும் நடவடிக்கையை எடுத்தார். பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான் ஜின்க், இந்தியன் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் வி.எஸ்.என்.எல்., போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை குறைத்தார். மேலும் மாநில அரசின் நிறுவனங்களையும், தனியார் மயப்படுத்தினார். 


வெளியுறவு

அணு ஆயுத சோதனைக்குப்பின், அமெரிக்காவுடன் நிலவி வந்த பனிப்போரும், வாஜ்பாயின் அணுகுமுறையால், 2000ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வருகைக்குப்பின் தளர்த்தப்பட்டது. அதே போல, சீனாஉடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு, இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பு போன்ற வெளியுறவு கொள்கையிலும் சிறப்பாக செயல்பட்டார். 


அணு ஆயுத நாடு

கடந்த 1998 மே 11ல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதன்மூலம் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார். 

சோதனை முடிவடைந்த பின்தான், அமெரிக்காவுக்கே இவ்விஷயம் தெரிந்தது. அணு ஆயுத சோதனை, நாடு முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் சி.டி.பி.டி. விஷயத்தில் உறுதியாக நின்றதோடு, இந்தியா மீது, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையையும் துணிவுடன் எதிர்கொண்டார்.

விருதுகள் 

1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார். 

1994 – ‘லோகமான்ய திலகர் விருது’ 

1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது. 

1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார் 

மக்களுக்கு பிடிக்காத கட்சியில் இருந்த வந்து 
மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்த பிரதமர்
Related Posts Plugin for WordPress, Blogger...