கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 May, 2013

இதுதாங்க என்னுடைய முழுவிவரம்..! யாராவது கிண்டல்பண்ணா அவ்வளவுதான்...!



நான் 
எட்டுமணிநேரம்
ஒரு அலுவலத்தின் 

வேலைக்காரன்...

சிலமணிநேரங்கள்
நண்பர்களோடு 

அரட்டை அடிப்பவன்...

குறைந்தது 
ஆறு மணிநேரமாவது
தூங்கிக்க‌ழிப்பவன்...


எஞ்சிய நேரங்களில்...
வலைப்பூவில் பூத்து
முகநூலில் முகம்காட்டி...


வெட்டியாய் ஊர்சுற்றி
நூலகம் நுழைந்து

புத்தகம் படிப்பது - என
பன்முகம் கொண்டவன்..!


ஆனாலும் எப்போதும்

24 மணிநேரமும்
ஒரு நொடிகுறையாது

அன்பே...
உனக்கானவன் நான்...!
அந்தரங்கம் அந்தரங்கம் அந்தரங்கம்
வாசித்த அனைவருக்கும் நன்றி..!

Related Posts Plugin for WordPress, Blogger...