வாசல் முழுக்க சிதறிக்கிடந்தது
ஒடித்து எறியப்பட்ட
செடிக்கொடிகள்...!
சுண்ணாம்பு பூசிய வீட்டுச்சுவரில்
அடுப்புக்கரியால் அழகற்ற
கிறுக்கல்கள்...!
வீட்டின் கூடம், முற்றம் என
எங்குபார்ப்பினும் கிழித்து எறியப்பட்ட
புத்தகக் கிழிசல்கள்...!
மூக்கை உறிஞ்சி...
சிரித்து... அழுது....
சண்டையிட்டு விளையாடிய
குழந்தைகளை பார்க்க சகியாமல் திரும்பினேன்....
வீடுமுழுக்க சுத்தமும்
அறைகள் தோறும் அமைதியுமே...
நரகமாய் இருந்தது...!
குழந்தைகள் இல்லாத
என்வீடு...!
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!
குழந்தைகள் இருக்கும் வீட்டைக் காட்சிப்படுத்தியவிதமும் கடைசியில் ஏக்கத்துடன் முடித்தவிதமும் அருமை.
ReplyDeleteகுழந்தை செல்வத்தை மேம்படுத்தி சொன்ன கவிதை அருமை..
ReplyDeleteவாழ்த்துகள்..
அப்படியே வந்துட்டு போலாமே..
சரணடைகிறேன்
யோவ் மாப்ள எங்கய்யா போன இவ்ளோ நாளா..... கமென்ட் மட்டும் போட்டுட்டு இருந்த... இனிமேலாவது தொடர்ந்து எழுது....
ReplyDeleteயோவ் மாப்ள எங்கய்யா போன இவ்ளோ நாளா..... கமென்ட் மட்டும் போட்டுட்டு இருந்த... இனிமேலாவது தொடர்ந்து எழுது.... ///
ReplyDeleteரிப்பீட்டு
குழந்தையின் மேன்மையை அழகாய் வெளிப்படுத்திய கவிதை ... வாழ்த்துக்கள்
ReplyDeleteரசிக்கவைக்கும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
ReplyDeleteசொல்லிய விதம் அழகு அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறுகை அளாவிய கூழ் என வள்ளுவன் சொல்வதைப் போல
சிறு குழந்தைகள் அசிங்கப்படுத்திய வீடுதான் அழகானது
வித்தியாசமாக சிந்தித்து அருமையான கவிதை கொடுத்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
உன்மையிலேயே அது நரகம்தான்.அருமை சௌந்தர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteகுழந்தை இல்லாதவர்களின் மனவேதனை சொல்லி மாளாது, அருமையான வலிகளின் கவிதை....!!!
ReplyDeleteஅருமை சௌந்தர்.
ReplyDeleteKuzhainthai illaa veedu sooniyam than. Arumai.
ReplyDeleteTM 8.
குழந்தை இல்லாதவர்களின் ஏக்கம் வலிமிக்கது.....
ReplyDeleteமெயில் கிடைத்ததா?
ReplyDeleteஎன்னுடைய வீடிளிருள்ளும் போது என்னை ஏசுவதும் விடுதி வந்ததும் தொலைபேசியில் அழைத்து என்னிடம் உருகுவதும் நினைவில் வந்து போகிறது...அருமையான கவிதை அண்ணா...
ReplyDelete///////
ReplyDeleteveedu said... [Reply to comment]
மெயில் கிடைத்ததா?
//////////
மெயில் கிடைக்க வில்லை சுரேஷ்..
ஒரு வேளை தெரியாமல் நான் அழித்துவிட்டேன என்று தெரியவில்லை.. திரும்ப அனுப்புங்கள்
மழலை இல்லாத இல்லம்
ReplyDeleteகருத்தும், கவிதையும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்!
ReplyDelete//குழந்தைகள் இல்லாத
என் வீடு //
நெஞ்சில் ஒரு முள்! கனத்த இதயத்தோடு ஒரு கவிதை!
அருமை நண்பரே..
ReplyDeleteஅனுபவத்தில் இதன் வலி தெரியும் செளந்தர்..!
ReplyDeleteஅருமை! பாராட்டுக்கள்!
வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதை ஒன்று.. குழந்தைகள் வீட்டில் இருந்தால் உண்மையிலேயே அது ஒரு சொர்க்கம் தான்.
ReplyDelete//வீடுமுழுக்க சுத்தமும்
அறைகள் தோறும் அமைதியுமே...
நரகமாய் இருந்தது...!
குழந்தைகள் இல்லாத
என்வீடு...!//
அருமையான முடிவு.வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு உங்கள் வீட்டில் குழந்தை தவழ எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கவிதை..... எங்கப்பா ஒரு வாரமா ஆள காணோம்?
ReplyDeleteமழலை செல்வம் அமையாத வீட்டை பற்றி சொன்ன வரிகள் நெஞ்சை கனக்க வைத்துவிட்டது சகோ
ReplyDeleteஏக்கம் நிறைந்த வரிகள் நெஞ்சை கனக்க செய்துட்டுது சகோ
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - மழலைச் செல்வம் இல்லாத வீடுகள் சிறக்காது. கவிதை அருமை. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகுழந்தைகள் கலைத்து போதும் பொருட்களே மிக அழகு. கடைசி வரிகள் ஏக்கத்தின் வெளிப்பாடு.
ReplyDeleteவணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு