கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 November, 2011

விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் உண்மையான பின்னணி...


விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த வெற்றிவாகை சூடி, பின் உள்ளாட்சி தேர்தலில் அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்து முதல்முறையாக பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்துகிறது. 

பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். அந்த செய்தியை மைப்படுத்திய ஒரு நகைச்சுவை உரையாடல்.

பிரேமலதா : ஏங்க எழுந்திருங்க...

விஜயகாந்த் : என்னம்மா..! விடும்மா இப்பத்தானே மணி 10 ஆகுது.


பிரேமலதா :  நைட்டுல டைட்டா சாரி லேட்டா படுத்தா இப்படிதாங்க... எந்திரிங்க சட்டசபைக்கு போகனும்...

விஜயகாந்த் : விடும்மா அது பெரிய மேட்ரே இல்லை..  நாளைக்கு பாத்துக்கலாம்

பிரேமலதா :  ஏங்க பிரஸ்-காரங்க கேட்டா என்ன சொல்லுவீங்க...
 

விஜயகாந்த் : அதுக்கும் ஐடியா இருக்கும்மா.. ”ஐயாம் சப்பரீங் பிரம் பீவர்” ...ம்... அப்படின்னு சொல்லிடலாம்.

பிரேமலதா :  ஏங்க நீங்க ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர். அதை மறந்துட்டு இப்படியிருக்கீங்க...

பாருங்க நைட்டோட நைட்டா பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், அத்த‌னையும் ஏத்திபுட்டாங்க நீங்க அதுக்கு ஏதாவது அறிக்கை விடுங்க..


விஜயகாந்த் : பொரும்மா.. ஏன் அவசறபடுற... மத்த தலைவரெல்லாம் அறிக்கை விடுவாங்கல்ல அதை எல்லாத்தையும் சேர்த்து பெரிய அறிக்கையா நம்ம கேப்டன் டீவில வாசிச்சிட சொல்லிடலாம். அப்பத்தான் நான் கரைட்டா பேசுரேனா என்ற டவுட்டு எனக்கு வராது.

பிரேமலதா :  எக்கேடாவது கெட்டுப்போகட்டும். அதுசரி இந்த விலை உயர்வை கண்டித்து வர்ற 1-ந் தேதி திமுக பார்ட்டி போரட்டங்க அறிவிச்சிருக்கு. நீங்க ஏதாவது போராட்டம் செஞ்சி மக்கள் மத்தியில நல்ல பேரு எடுங்க.

விஜயகாந்த் : அப்படியா சங்கதி.. பரவாயில்லயே எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சியிருக்கே. அப்படின்னா நாம உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவோம்.

சரி... நான் எப்போதும் வியாழக்கிழமை ஒருபொழுது இருக்கேன் இல்ல. அந்தநாள்ளே உண்ணாவிரதத்தை வச்சிக்கலாம்.


அப்ப காலையில் நல்ல ஒரு கட்டுகட்டிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே இருந்துபுட்டு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வந்திடுறேன். எப்படி என்னுடைய அரசியல் ராஜதந்திரம்.


பிரேமலதா :  இப்ப தெரியாதுங்க.. அடுத்த முறை ஓட்டுகேட்க போகும்போதுதான் தெரியும் உங்க ராஜதந்திரம்.
 

விஜயகாந்த் : விடுமா.. நாம என்ன சொன்னாலும் நம்ம புரட்சிதலைவி கேட்டுக்கமாட்டாங்க. இந்த 5 ஆண்டுக்கு அவங்க வச்சதுதான் சட்டம், நமக்கு வந்து சேர வேண்டியது எல்லாம் வந்தாச்சியில்ல. அப்புறம் நமக்கு என்ன கவலை. மக்களை நம்பவைக்கிறதுக்கு இப்படி ஏதாவது செய்யணும்மில்ல.

சரி.. சரி.. நாளைக்கு உண்ணாவிரதத்துக்கு போறேன். இன்னிக்கு நல்ல ஆட்டுக்கால் பாயாவேட டிபன் ரெடிப்பண்ணு... நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வறேன்.



அம்புட்டுதாங்க....

22 comments:

  1. ஹா.ஹா..

    நல்ல கற்பனை...

    உண்மையா இருக்க சான்ஸ் இருக்கு..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  2. சரி.. சரி.. நாளைக்கு உண்ணாவிரதத்துக்கு போறேன். இன்னிக்கு நல்ல ஆட்டுக்கால் பாயாவேட டிபன் ரெடிப்பண்ணு... ///

    கேப்டன் நினைத்தது நடக்கும்....

    ReplyDelete
  3. எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...

    ReplyDelete
  4. கேப்டன் போராட்டம் அறிவிச்சதும் நன்மைக்குத்தான்...!!!

    ReplyDelete
  5. நல்லாத்தான்யா ரோசிக்குறீங்க....!! கேப்டன்கிட்டே உதை வாங்காம இருந்தா சரிதான், நான் மக்களை சொன்னேன்...

    ReplyDelete
  6. எப்படியோ மந்திரி ஆகலன்னாலும்
    மந்திரிக்குரிய தகுதியுள்ள எதிர் கட்சித் தலைவராயிட்டார் அது போதுமில்ல!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. நல்ல கற்பனை. பார்த்து கேப்டன் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வந்துடப்போறார்.

    ReplyDelete
  8. ஹா ஹா கற்பனை என்றாலும் நல்லா இருக்கு

    ReplyDelete
  9. உண்மையாககூட இருக்கலாம்.

    ReplyDelete
  10. ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர். !!!!!????????????????????????????

    ReplyDelete
  11. இப்ப தெரியாது.. அடுத்த முறை ஓட்டுகேட்க போகும்போதுதான் தெரியும் ராஜ(அ)தந்திரம்.

    ReplyDelete
  12. கேப்டனை இப்படி கும்மிவிட்டீங்களே

    ஆஷ்சன் ஹீரோ காமடி பீஸ் ஆகிட்டாரு....அவ்......

    ReplyDelete
  13. ஒரு வேளை உண்மையிலேயே இப்படித்தான் நடந்திருக்குமோ?

    ReplyDelete
  14. உமக்கும் கேப்ட்டனுக்கும் என்ன வாய்க்கா தகறாரா?
    போதையில் இருக்கும் மனிதனை இப்படியா வறுத்து எடுப்பது .............

    ReplyDelete
  15. இவர் சாப்பிடாம ஒருநாள் இருக்கிறதால, நம்ம மக்களின் பிரச்சினை ஒன்னும் தீர்ந்துவிடாது..
    இதெல்லாம் அரசியல் டகால்டி வேலைகள்!

    ReplyDelete
  16. நமக்கு வந்து சேர வேண்டியது எல்லாம் வந்தாச்சியில்ல. அப்புறம் நமக்கு என்ன கவலை.

    ReplyDelete
  17. நல்லா சொல்லுறாங்க டீட்டயிலு,,,

    ReplyDelete
  18. ஹா ஹா! நல்ல கற்பனை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...