கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பிரிவு. Show all posts
Showing posts with label பிரிவு. Show all posts

02 August, 2012

வறண்டு கிடக்கிறது என் கவிதைகள்... நீயின்றி..!


 
சிரித்து சிரித்து பேசிய
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
 

 ஒவ்வொறு மழைத்துளியும்
அ‌ழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...! 


கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
 

 நீ இல்லாத நேரத்தில்‌
 நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!


ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த 
அந்த கடற்கரை மணற்வெளி...
 

நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!


காதலோடு காதல் கலந்து

எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...

தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்

பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!



05 January, 2012

சுத்தமும், அமைதியுமே எனக்கு நரகம்...!



வாசல் முழுக்க சிதறிக்கிடந்தது
ஒடித்து எறியப்பட்ட 
செடிக்கொடிகள்...!

சுண்ணாம்பு பூசிய வீட்டுச்சுவரில்
அடுப்புக்கரியால்  அழகற்ற
கிறுக்கல்கள்...!

வீட்டின் கூடம், முற்றம் என
எங்குபார்ப்பினும் கிழித்து எறியப்பட்ட 
புத்தகக் கிழிசல்கள்...!

மூக்கை உறிஞ்சி... 
சிரித்து... அழுது....
சண்டையிட்டு விளையாடிய
குழந்தைகளை பார்க்க சகியாமல் திரும்பினேன்....

வீடுமுழுக்க சுத்தமும்
அறைகள் தோறும் அமைதியுமே...
நரகமாய் இருந்தது...!

குழந்தைகள் இல்லாத 
என்வீடு...!

 தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!

29 November, 2011

அதெப்படி... ? பெண்களுக்கு இந்த இரண்டு மட்டும் பிடித்திருக்கிறது...?




நான் சொல்லும்
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!

கலை விட 
இருளில்தான்  உன்
வெட்கங்களை கழட்டி வைக்கிறாய்...!

து எப்படி...!
உனக்கு பொய்யும் இருட்டும் மட்டுமே
பிடித்திருக்கிறது...

ரியென்று சொல் 
என் அன்பே...
 
னக்காக
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....

கலில் கூட 
இராத்திரி செய்கிறேன்... 

தங்கள் வருகைக்காக பெருமையடைகிறது கவிதை வீதி...

Related Posts Plugin for WordPress, Blogger...