கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 February, 2012

எதிர்பாராமல் நிகழ்ந்து விடுகிறது இப்படியெல்லாம்...!


 
வ்வோறு நாளும் 
எதிர்பார்க்காமல் 
நிகழ்ந்து விடுகிறது இப்படி.. 

ன்னவளை
சந்திக்கலாம் என்றிருந்த 
நாட்களிலெல்லாம்...
 
சாலையோராமாய்
என்னை ஒதுங்க வைத்து விடுகிறது
திடிரென பெய்யும் மழை...

தேடும் போது 
எதிர்படும் தெரிந்தவர்களின் 
பேச்சுத் தொல்லை...
 
ன்றைக்குமே இல்லாமல்
அன்று மட்டும் அவளின்
முகம் மறைக்கும் வண்ணக்குடை...
 
துமட்டுமின்றி வேகமாய் துடிக்கும்
என் கடிகாரத்திடம்
 “நேரம் எவ்வளவு என்று”
நலம் விசாரிக்கும் யாரோ ஒருவர்..!

டிமனதில் ஒரு அதிர்ச்சி
எதிர்பாராமல் வந்துவிட்ட
கிண்டலடிக்கும் என் நண்பர் ஒருவர்...

துபோன்று பல.. பல...
 
னால்...!
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அவளின் முகம் மட்டும்
என் கண்களுக்கு அகப்படாமல்
இன்னும் தூரமாய்....!

21 comments:

 1. காதலின் தவிப்பு புரியாத மழையும் மனிதர்களும்! என்ன சொல்வது? பொருந்திவரும் நாளில் பொய்க்கோபம் கொள்ளக்கூடும் காதலியும் முகம் திருப்பி. அன்றும் கூட எழலாம் இதுபோலொரு ரசனையான இன்னொரு கவிதை. பாராட்டுகள் சௌந்தர்.

  ReplyDelete
 2. அருமையான காதல் கவிதை!

  ReplyDelete
 3. படித்தவுடன் பிடித்த கவிதை...

  ReplyDelete
 4. காதல் ஒரு கண்ணாமூச்சு விளையாட்டே
  அருமை!

  வெளியீட்டு விழாவிற்கு தாங்களும் நண்பர் கருண்
  அவர்களும் தவறாமல் வர வேண்டுகிறேன்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 5. நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
  http://kovaikkavi.wordpress.com/2012/02/08/22-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. காதலின் தவிப்புகள் மற்றவர்களுக்கு என்றுமே புரிவதில்லை தான். மனதைத் தொட்டது காதல் கவிதை. அருமை.

  ReplyDelete
 7. பதின்ம வயதின் ஒருதலைக்காதல் பரிதவிப்பு அழகாய்....

  ReplyDelete
 8. வணக்கம் பாஸ் நலமா?
  மனதை வருடும் காதல் கவிதை

  ReplyDelete
 9. நல்லா இருக்கு மச்சி...

  ReplyDelete
 10. எதிர்பாராமல் வருது உங்கள் பதிவு

  ReplyDelete
 11. காதலின் நிலை இதுதான். கடிகாரம்கூட வேகமாக துடிக்கிறது.

  ReplyDelete
 12. ம் உண்மைதான்.விருப்பமான நேரங்களில் எத்தனை தடங்கல்கள் !

  ReplyDelete
 13. நெகிழ வைத்தது கவிதை ! நன்றி சார் ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. அன்பின் சௌந்தர் - எண்ணுவது நிறைவேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. இயல்பான சூழ்நிலை, அழகான தவிப்பு!

  ReplyDelete
 16. கடிகாரம் வேகமாக துடிக்கிறது.. நல்ல காதல் உணர்வின் வெளிப்பாடு..

  ReplyDelete
 17. உங்களை ஒன்று சேர்க்க நினைத்த மழையை புரிந்துகொள்ளாமல், ஒதுங்கிவிட்டீரோ..! அழகிய தவிப்பு கவிதையில்..!:)

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...