நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக வந்து அஜித் ஆடியிருக்கும் ஆட்டம்தான் மங்காத்தா... இன்றுமுதல் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டது. இதன் மூலம் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் அஜித்.
நாட்டில் பரவலாக எல்லா நிலையிலும் இருக்கும் ஒரு விஷயம் சூதாட்டம். மும்பை தாராவியில் இருக்கும் ஒரு சூதாட்ட கிளப்பில் புழக்கத்தில் இருக்கும் பணத்தை குறிவைத்து நடக்கும் கடத்தல் சம்பவம்தான் கதை. படத்தின் பெரும்பாலன காட்சிகள் இரவிலே எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை தாராவியில் ஜெயபிரகாஷ் தன்னுடைய சினிமா தியாட்டரில் ஒரு சூதாட்ட கிளம் நடத்திவருகிறார். அதில் சேர்ந்துள்ள சூதாட்ட பணம் மற்றும் அவருடைய பாட்னர்கள் பணமான ரூபாய் 500 கோடி ரூபாயைபற்றி போலீசுக்கு தகவல் தெரிய அதை அங்கிருந்து வேருஇடத்திற்க்கு மாற்றி மும்பையில் நடக்கும் ஒரு IPL போட்டி அன்று பிரித்துக் கொள்ள திட்டமிட்டுகிறார்கள்.
ஹைதராபாத்தில் அதிரடியாக சூதாட்டங்களை ஒழித்துவிட்டு தாராவியை மையப்படுத்தி மும்பைக்கு மாற்றப்படுகிறார் சிபிஐ அதிகாரியான அர்ஜூன். இவருடைய ஓப்பனிங் அசத்தலாக இருக்கிறது.
போலிஸிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அஜித் சூதாட்ட கிளம்புகளை சுற்றிக்கொண்டு ஜாலியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறார். ஜெயபிரகாஷின் மகளான திரிஷா தன்னுடைய காதல்வலையில் விழவைத்து அந்த குடும்பத்தில் நல்லவர்போன்று நாடகமாடுகிறார். இறுதியில் இதெல்லாம் சூதாட்ட கிளப்பில் இருக்கும் பணத்தை திருடத்தான் என்று தெரிய வரும்போது படம் சூடுப்பிடிக்கிறது.
அதேவேலையி்ல் ஜெயபிரகாஷிடம் வேலை செய்யும் வைபவ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவியாக சென்னையிலிருந்து பிரேம்ஜி வரழைக்கப்படுகிறார். அந்தப்பணத்தை இடம் மாற்றும் போது இந்த நால்வரும் சேர்ந்து கொள்ளையடித்து பின் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுகிறார்கள்.
அஜித் பிரேம்ஜியிடமிருந்து அவர்களின் பிளானை தெரிந்துக் கொண்டு அந்த நால்வருடம் தாமும் இணைத்துக் கொள்கிறார். அஜித்தும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டு அதன்படியே கொள்ளையடிக்கிறார்கள்.
இந்த பணத்தை பிடிக்க வந்திருக்கும் சிபிஐ அதிகாரியான அர்ஜூன் இந்த குருப்பை சுற்றி வலைக்க, மற்றொறுபக்கம் ஜெயபிரகாசின் ஆட்கள் சுற்றி வலைக்க அதற்கடுத்து இந்த 5 பேர்களுக்குள் தனித்தனி திட்டம் தீட்டி பணைத்தை கைமாற்றி என இடைவேளைக்கு பரபரப்புடன் நகருகிறது.
இறுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சிபிஐ வசம் வந்ததா அல்லது அஜித் அந்தப்பணத்தை கூட்டாளிகளுடன் பிரித்துக் கொண்டார்களா... என்று கடைசி அரைமணிநேர படத்தில் வெங்கட்பிரபு அசத்தியிருக்கும் படம்தான் மங்காத்தா.
கலக்கல் பாணியில் தல...
போலீஸில் இருந்து சஸ்பென்ட் ஆனபிறகு 40 வயது ஆள் என தன்னைக்காட்டிக் கொண்டு மிக ஜாலி பேர்வழியாக வலம்வருகிறார். திரிஷாவுடன் சுற்றிவிட்டு அவருடைய அப்பாவை நோட்டமிட்டு அதன் பிறகு ஐவராக சேர்ந்து 500 கோடடியை கொள்ளையடிக்க படம் முழுக்க ஓடியிருக்கிறார்.
பணம் கொள்ளையடிக்கப்படும் காட்சிகளில் அஜித் பைக் ஓட்டி அசத்தும் காட்சியும் இருதி காட்சிகளில் கார் ஓட்டி செய்யும் சாகசமும் அட்டகாசம்தான். மணி.. மணி... மணி.. என தல சொல்லும் வசனம் நச்...
பணத்தை நண்பருடன் சேர்ந்து பிரேம் அங்கிருந்து அபகரிக்க அஜித்தின் வில்ல முகம் விஸ்வரூபம் எடுக்கிறது. அந்த பணத்தை கண்டுபிடிக்க அஜித் செய்யும் அட்டகாசங்கள் படம் முழுக்க பார்க்க முடிகிறது. சிபிஐயிடம் மாட்டிக் கொண்ட தன்னுடைய கூட்டாளியை விடுவிக்க அஜித் விடும் மிரட்டல் காட்சிகள் சூப்பர்.
இறுதி காட்சிகளில் ஆக்சன் கிங்குடன் தல மோதும் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது. அர்ஜூனால் சுட்டுக்கொள்ளப்பட்டு அஜித் இறக்க என்று எழுந்தால் அடுத்த கதைக்கு ரெடியாகி அத்தனைப்பேரையும் சீட்டின் நுனிக்கு கொண்டுவந்து சபாஷ் வாங்குகிறார் இயக்குனர். அஜித் இதில் முழுக்க முழுக்க வில்லத்தனத்தில் கூடவே மேலோட்டமான நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்.
திரிஷா அஜித் ஜோடியா ஒரிரு காட்சிகள் மட்டும் வந்து போகிறார். ஏற்கனவே இந்த ஜோடி நிறைய படம் நடித்திருப்பதால் இயக்குனர் மாத்தியோசித்திருக்கலாம்.
பணத்தை கொள்ளையடிக்க முடிவெடுத்து அதைகொள்ளையடித்து அவர்களுக்குள்ளே மாற்றி மாற்றி அபகரிக்க நினைத்து அத்தனைபேரும் மாண்டுப்போகிறார்கள். இன்னும் இறுதி காட்சிகளில் இருக்கும் அத்தனை நடிகர்களும் சுட்டு கொல்லப்படுகிறார்கள்.
திரிஷா மட்டுமில்லாமல் லட்சுமிராய், அஞ்சலி என நாயகிகள் படத்தில் உள்ளனர். நகைச்சுவையை ராம்ஜியோடு முடித்துக்கொண்டார்கள். சென்னை 28, சரோஜா படத்தில் நடித்த முகங்கள் இதிலும் அதிகஅலவில் தெரிகிறது.
இசையால் அத்தனைப்பாடல்களையும் அசத்தியிருக்கிறார் யுவன். விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது. ஆடாமல் ஜெயிச்சோமடா என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை.
வெகு நாளைக்குபிறகு அஜித் தன்னுடைய பழைய பாணியில் படம் பண்ணியிருக்கிறார். படம் முழுக்க வெங்கட் பிரபுவின் டீம் ஆக்கிரமித்துள்ளது. அர்ஜூன் தன்னுடைய இமேஜை விட்டு இந்த படத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குறியது அத்துடன் அவருடைய சண்டைக்காட்சிகள் மற்றும் நடிப்பு சூப்பர்.
ஒரு மசாலா கதையை எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் விருவிருப்பாக படத்தை நகர்த்தி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.
மதிப்பெண் மற்றும் எத்தனை நாட்கள் ஓடும் என்று கூற விரும்பவில்லை. ஒரு அஜித் ரசிகனாக இப்படம் வெற்றிப்பெறவே விரும்புகிறேன்.
//மதிப்பெண் மற்றும் எத்தனை நாட்கள் ஓடும் என்று கூற விரும்பவில்லை. ஒரு அஜித் ரசிகனாக இப்படம் வெற்றிப்பெறவே விரும்புகிறேன்.//
ReplyDeleteஅதே அதேதான்..
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
ReplyDeleteநம்ம தலயோட படம் பத்தி அலசியிருக்கீங்க! ரொம்ப நன்றி! நான் இன்னிக்கெ படம்பார்க்கலாம்னு இருக்கேன்!ரொம்ப நன்றி் சார்!
உங்கள் விமர்சனமும் விறுவிறுப்பாகவே இருக்கு
ReplyDeleteரைட்டு.. படம் பார்த்திர வேண்டியதுதான்..
ReplyDeletesuper
ReplyDeleteநீண்ட நாள்களுக்கு பிறகு அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி... விமர்சனத்துக்கு நன்றிகள்..
ReplyDeleteஓக்கே பாத்துடுவோம்!
ReplyDeleteரைட்டு .
ReplyDeleteவிமர்சனம் விறுவிறுப்பா இருக்கு நண்பரே..
ReplyDeleteஆஹா விமர்சனம் சூப்பர் ஆனா இடைவேளைக்கு என்ன வாங்கி சாப்டிங்கன்னு சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்திர்க்கும் ஹீ ஹீ
ReplyDeleteவெற்றி வெற்றி தல ஆட்டம் superbbbbbb. . . .
ReplyDeleteதலயின் மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeletePADAM SUPER IRUKU BOSS...........
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteமங்காத்தா பற்றி அருமையான அலசல் ..சும்மா பூந்து விளையாடுறீங்க
ReplyDeleteதமிழ் மணம் 11 & all voted
ReplyDeleteபாஸ்,
ReplyDeleteசுடச் சுட விமர்சனமா..
இருங்க பாஸ்,
படிச்சிட்டு வாரேன்
சூப்பர் விமர்சனம் பாஸ்..
ReplyDeleteஇப்பவே மங்காத்தா பார்க்கனும் போல இருக்கு.
இது ஒலக சினிமாவின் காப்பி!!
ReplyDeleteசரியான மொக்க படம்!!(நான் விசை டுபுக்கு பினும் இல்லை கவனிக்க!!)
ReplyDeleteநல்லதொரு அலசல், விரிவான விமர்சனம்.
ReplyDeleteநல்ல விமர்சனம் அருமை
ReplyDeleteபாஸ் இதைப் பற்றி நான் ஒன்னும் சொல்லுவதற்கில்லை நீங்கள் சொன்னால் சரிதான்...
ReplyDeleteதமிழ் மணம் போட்டாச்சு.
thala rocks!
ReplyDeleteவிமர்சனம் சூப்பரு
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - விம்ர்சனம் அருமை - நிச்சயம் வெற்றி பெறும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅஜித் ரசிகரிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறது..
ReplyDeleteமங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteமங்காத்தா!நல்ல எதிர்பார்ப்பு!வெற்றி உண்டு!
ReplyDeleteகுட்
ReplyDeleteமதிப்பெண் மற்றும் எத்தனை நாட்கள் ஓடும் என்று கூற விரும்பவில்லை
ReplyDeleteகுட் Keep it up
"ல”கரம், “ள”கரம்” உங்க தமிழில் மாறியிருக்கிறது. முடிந்தவரை சரியாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதை தமிழ் படுத்துவதால் ஏற்பட்ட குழப்பமோ ! ! விமர்சனம் நன்றாகவே உள்ளது. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது
ReplyDeletemankatha supera eruku.
ReplyDeletethala acting super