ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்... இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடிவருகின்றனர்..
இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவதுமட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக இங்கு வெற்றி கொடி நாட்டலாம்...
பிரியாணி....
ஒரு படத்தின் தலைப்பு அந்த படத்தின் கதை அல்லது கதாநாயகன் அல்லது கதாநாயகி பெயரிலோ அல்லது ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது கேட்டவுடன் கவரும் வகையிலோதான் அமைக்கப்படுகிறது... இந்தபடத்தின் தலைப்பு ரசிகர்களை கவரவே...!
படத்தின் கதை...
ஒரு செல்வந்தரின் மகளை காதலித்து அந்த சொத்தை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். அந்த செல்வந்தர் மறுக்கவே அவரை கொலைசெய்து அந்த சொத்துக்களை அடைய நினைக்கிறது...
இப்படி கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிக்கள் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள்... மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை...
கதையொன்றும் புதிதில்லை.. அதலபழசுதான்.. ஆனால் திரைக்கதை சபாஷ் போடவைக்கிறது.. யூகிக்கமுடியாத காட்சி நகர்வு... விருவிருப்பான திரைக்கதை... என படத்தின் முடிவுவரை ஒரு ரசிகனை பொறுமையாக அமரவைத்ததில் கைதட்டல் வாங்கிறார்.. வெங்கட் பிரபு...
கதைப்படி கார்த்தியும் பிரேமும் நெருங்கிய நண்பர்கள்... இருவருக்கும் வேலை பெண்களை சுற்றிவருவதுதான்... ஒரு டிராக்டர் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் இவர்கள் தங்கள் இடத்தில் பிளேபாயாக வலம்வருகிறார்கள்...
கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நிகழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது... (தன் பெண்ணை மணமுடிக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு)
இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள்... அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கா-வின் (மாயா) அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்...
விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது... அங்கு ஒரு கொலை நடந்திருப்பது.. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான்... இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்...
இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார்.. இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன... அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்... என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை...
கார்த்தி....
கார்த்தி இந்த படத்தில் ப்ளேபாய் வேடம்... இதற்கு முன்னால் படங்களில் பார்த்தமாதிரியே இருக்கிறது. முதல்பாதில் பெண்களிடம் வழியும் இவர்... இடைவேளைக்குபிறகு ஓரளவுக்கு தன்னுடைய திறைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்...
சிறுவயதுமுதல் தற்போது வரை தான் செய்யும் தவறுகளுக்கு பிரேம்ஜியை மாட்டிவிடுவது இவருடைய வேலையாக இருக்கிறது... பெண்களை நம்பவைக்க இவர் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் ரசிக்க வைத்து கொஞ்சம் முகம்சுழிக்க வைக்கிறது..
கார் சேசிங்... வில்லன்களை விரட்டுவது... தன்னுடைய அக்கா கடத்தப்படும்போது துடிப்பது.. தன்மீது விழுந்த கொலை பழியை தீர்க்க குற்றவாளிகளை கண்டுபிடிக்க முனைவது... சண்டைகாட்சிகள் என ஒரு சில இடங்களில் தன் திறமையை காட்டி அசத்துகிறார்... (ஆனால் பழைய படத்தின் சாயல் அங்கங்கு வருகிறது).
ஹன்சிகா மேத்வானி... ஒரு டிவி தொகுப்பாளர்.. நேரடிக்காட்சிகளை தொகுத்து வழங்குபவர்... கார்த்தியின் காதலி... இவருக்கு படத்தின் அதிக வேலையில்லை... கார்த்தியிடம் கோபித்துகொள்வது மீண்டும் இணைவது தான் இவருடைய வேலை...
பிரேம் ஜி... என்ன கொடுமை இது... படம் முழுக்க வந்தாலும் ஏதோ ஒருசில சீன்களில்தால் சிரிக்க வைக்கிறார்... அண்ணன் இயக்குனர் என்பதால் ஒட்டிக்கொண்டாரா.. என்னவோ தெரியவில்லை... தனக்கு ஒரு பெண்ணுகூட கிடைக்கமாட்டேங்குது என்று ஏங்கும்போதம் தனக்கு கிடைக்கும் பெண்களை கார்த்தி கவர்ந்துவிடுவதும்... கார்த்தி செயும் தவறுகளுக்கு தான் பலியாடாகுவதும் ரசிக்க வைக்கிறது...
நாசர்... ஒரு பெரிய செல்வந்தராக நடித்திருக்கிறார்... தனக்கு எந்த கதாப்பாத்திரம் கெர்டுத்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் திறன்மிகுந்த நடிகர்களில் இவரும் ஒருவர்... இவர்தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்...
ராம்கி.. நாசரின் மருமகன்... சபாஷ்... வில்லன்போல் தெரிந்தாலும் வில்லனில்லாத கேரட்டர்... இப்படம் கண்டிப்பாக அவருக்கு நிறைய வாய்ப்புளை பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.. நல்லதொரு நடிப்பு.. கார்த்தியுடன் வரும் ஒரு சண்டைகாட்சி நன்றாகவே வந்திருக்கிறது.
மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை உமா ரியாஸ்கான்... கடைசி அரைமணிநேர படத்தை தனதாக்கிவிட்டார்... வில்லி கேரட்டர்... கார்த்தியுடன் ஒரு சண்டைக்காட்சியில் அசத்தல்.. நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்...
மேலும் படத்தில் கார்த்தியின் மாமாவாக சுப்பு பஞ்சு.. போலீஸ் ஆபிராக ஜெயபிரகாஷ், சிபிஐ-யாக சம்பத், என நிறைய நடிகர் பட்டாளம் படத்தில் இருக்கிறது...
யுவன்சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை... அவ்வளவு ஒன்றும் பிரமாதம் இல்லை... ஓரளவுக்கு பரவாயில்லை.... 100-வது படம் என்ற பெருமையை தக்கவைக்க பாடலுக்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார்... பிண்ணனி இசை பராயில்லை... புரியும்படியான பாடல்கள் இல்லாதது தோய்வுதான்...
பாடல்கள் சுமார்... இரண்டு பாடல்கள் செம கிளாமர்... மாண்டி தாக்கா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.. அரைமணிநேரம் மக்களை கவர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார்... படம் முழுக்க தண்ணியடிக்கும் காட்சி நிறைந்திருக்கிறது.. இவைளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வெங்கட்பிரபு... புதுசாக ஏதோ சொல்லவந்து கொஞ்சம் சொதப்பி சில இடங்களில் இவரின் பழைய படங்களை ஞாபகப்படுத்தி பின் தன்னுடைய திறமையான திரைக்கதையினால் பிற்பாதியில் சபாஷ் பெறுகிறார்... ஒரு சில குறைகளை தவிர்த்து இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்திருக்கும்...
படத்தை குழப்பத்தோடு முடிக்கிறார் என்று எழுந்தால் இன்னும் கொஞ்சுநேரம் உட்கார வைத்து குழப்பங்களை தீர்த்துவிடுகிறார்... இரண்டாது கிளைமேக்ஸ்போல...
நாசர் கொலை எப்படி நடக்கிறது.. உண்மையில் குற்றவாளி யார்... ராம்கி நல்லவரா கெட்டவரா... கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க...
பிரியாணி.... இன்னும் மசாலாவை சேர்த்திருக்கலாம்...!
Nice Review. Keep it up...
ReplyDeleteவாங்க பிரசாத்...
Deleteரொம்பநாளைக்குபிறகு வந்திருக்கீங்க..
தங்கள் வருகை இனிதாகட்டும்
"என்ன கொடுமை இது...!" என்பதை வாழ்நாள் முழுவதும் விட மாட்டார் போலிருக்கே பிரேம் ஜி...
ReplyDeleteஎன்ன கொடுமை இது - சொல்லுங்க சௌந்தர்ஜி...? ம்....
படத்திலும் இப்படி ஒரு காட்சி வருகிறது...
Deleteஒரு காட்சியில் என்ன கொடுமை என்று ஆரம்பிப்பார்... அப்போது கேமரா திசைியில் இருந்து ஒரு விரல்மட்டும் வந்து..
இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லிகிட்டு இருப்பே... என்று சொல்லி.. இனிமே இத சொன்ன அவ்வளவுதான் என்று மிரட்டி விட்டுப்போகும்...
அதையும் மீறி இரண்டு இடங்களில் இந்த டயலாக்கை சொல்லிவிடுகிறார்...
அருமை நண்பரே நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கார்த்தி தப்பி விட்டாரா?படம் ஓகேவா
ReplyDeleteபோதைப் பார்டியில் மட்டையாகி இருக்கும் பொழுது நடக்கும் கொலை... ஹாங்கோவர் படத்தை நினைவுபடுத்துகிறது..
ReplyDeleteபை..
பிரியாணி சுவையா இருக்கா....
ReplyDeleteகார்த்தியை காப்பாத்திவிட்டதா?
மாயா
ReplyDeleteஉமா ரியாஸ்கான்
இரண்டாவது கிளைமேக்ஸ்
இதெல்லாம் சுப்பர்
மத்தபடி படம் மொக்க