கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 February, 2012

ஏங்க காதலிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கு...? நிசப்தமான வேளைகளில்
வெயிற்கால மூங்கில்கள் போல்..

என்னை கேட்காமலே பற்றிக் கொள்கிறது
அவளின் நினைவுகள்...!

***********************************************************


வ்வொறு முறையும்
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!

காதல் என்பது
அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்று அறியாமல்...!

***********************************************************


புரிதலின் இடைவெளியில்
நீயும் நானும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!

இன்னும் பூப்பெய்தாமல் இருக்கிறது
உன்னை தரிசிக்காத
என் கவிதைகள்...!

***********************************************************


கைகளில் நடுக்கம்
மனதில் ஒரு தயக்கம்
கண்களில் ஒரு கலக்கம்
 
காதலிக்கு
ஒரு கடிதம் எழுத
இவ்வளவு வேதனையா..?

ஏங்க காதலிக்கிறது 
இவ்வளவு கடினமாக இருக்குது..

***********************************************************

 
ன்னும் எத்தனை நாட்களுக்கு
என்னை ஏமாற்றப் போகிறாய்...

உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்
எனக்கான உன் காதலை
முன்பாக சொல்லிவிடுகிறது
உன் க‌ண்கள்...!

***********************************************************

 
காற்று இல்லாமல் சுவாசிக்க 
பழகிக்கொண்டேன்...!

காதல் இல்லாமல் சுவாசிக்க
எப்போது பழகப்போகிறேனோ..!

***********************************************************

நண்பர்களுக்கு வணக்கம்...!
இந்த தினத்தை மகிழ்ச்சியை காதலில் இருந்து விலக்கி
அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.

42 comments:

 1. பாராட்டுக்கள் மிகவும் அருமையான பதிவு

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 2. காற்று இல்லாமல் சுவாசிக்க
  பழகிக்கொண்டேன்...!

  காதல் இல்லாமல் சுவாசிக்க
  எப்போது பழகப்போகிறேனோ..!
  அது எப்படிங்க காற்று இல்லாமல் .
  அருமைங்க .

  ReplyDelete
  Replies
  1. காற்று இல்லாமலும் சுவாசிக்கலாம்
   உணவின்றியும் உயிர் வாழலாம்
   சிறகுகள் இன்றியும் பறக்கலாம்
   பாதங்கள் இன்றியும் பயணப்படலாம்...

   காதலித்து பார்த்தால்....

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
   தோழி...!

   Delete
 3. மகிழ்ச்சியை அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. //இன்னும் எத்தனை நாட்களுக்கு
  என்னை ஏமாற்றப் போகிறாய்...

  உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்
  எனக்கான உன் காதலை
  முன்பாக சொல்லிவிடுகிறது
  உன் க‌ண்கள்...!//

  //காற்று இல்லாமல் சுவாசிக்க
  பழகிக்கொண்டேன்...!

  காதல் இல்லாமல் சுவாசிக்க
  எப்போது பழகப்போகிறேனோ..!//

  காதல் கவிதை ம்ம்ம் அருமை கவிஞரே


  காதலர் தினத்தில்
  அன்புத் தோழமைகளின்
  வலைப் பூக்களில்
  நிரம்பி வழிந்தொழுகுகிறது
  காதல் கவிதைகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா..!

   Delete
 5. அன்பைத் தெரிவிக்கும் நாளிது. நன்று.

  ReplyDelete
  Replies
  1. கவிதைகள் அருமை. எங்கே போனீங்க?... அவ்வப்போது மின்சாரம் போல வருகிறீர்கள்...

   Delete
  2. அன்பை மறிமாறிக் கொண்டால் அகிலமும் காதல் மலரும்....

   தங்கள் வருகைக்கு நன்றி ஆபீஷர் சார்...

   Delete
 6. ''..எனக்கான உன் காதலை
  முன்பாக சொல்லிவிடுகிறது
  உன் க‌ண்கள்...!..''
  காதல் வழிகிறது!..கவிதை நன்று. நானும் காதலர் தினம் போதாது என்று போட்டுள்ளேன் வந்து பார்க்கத் தடையிடவில்லையே!..இனிய காதலர் தின வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 7. சிறப்பானதொரு கவிதை வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. கவிதை வீதியெங்கும் காதலால் கமழ்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரசிகன்...

   வணக்கம் மற்றும் நன்றிகள்..

   Delete
 9. யோவ் எவ்ளோ நாள் தான் காதலிச்சுகிட்டு இருப்ப சீக்கிரம் கல்யாணத்த பண்ணுப்பா....

  ReplyDelete
  Replies
  1. சீக்கிறம் பொண்ணு பாருங்கய்யா...

   Delete
 10. காதலில் நனைந்த கவிதைகள் அருமை. அதிலும் உன் வாய் பேசாததை கண் பேசி விடுகிறது என்று பொருள் சொன்ன கவிதை வெகு அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!

   Delete
 11. ரசித்தேன்...

  இனிய காதலர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ரெவெரி

   Delete
 12. காதலில் உருகும் உள்ளத்தில் வடிந்த கவிதைத் துளிகள் யாவும் பிரமாதம். வாழ்த்துக்கள் சௌந்தர்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி..

   Delete
 13. சும்மாவே கலக்குவீங்க. இதுல காதலர் தினம்னா கேட்கவா வேண்டும்? கடைசியில் சொன்னீர்களே, ரொம்ப சந்தோஷம் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. காதல் என்றாலே எனக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் கவிதை வந்து விடும்...

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

   Delete
 14. //நிசப்தமான வேளைகளில்
  வெயிற்கால மூங்கில்கள் போல்..

  என்னை கேட்காமலே பற்றிக் கொள்கிறது
  அவளின் நினைவுகள்...!//

  அருமையான உவமை!
  தங்கள் கற்பனைத் திறனுக்கு நல்ல எடுத்துக் காட்டு!

  வாழ்த்துக்கள்!

  சாஇராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா..!

   Delete
 15. காதலில்லாமல் வாழப் பழகுவதா..! நடக்குற கதைய பேசுங்க தோழரே..! வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொறு மனிதருக்குள்ளும் கண்டிப்பாக காதல் ஒளிந்துக்கொண்டுருக்கும்...

   தங்கள் வருகைக்கு நன்றி தேன்மொழி...

   Delete
 16. அன்பைப் பற்றி அருமைப் பதிவு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 17. சௌந்தர் உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html ஏற்றுக்கொள்ளவும்.

  ReplyDelete
 18. வணக்கம் சார்,திரு அட்சயா அவர்களால் எனக்கு அளிக்கப்பட்ட versatileBlogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெரு மகிழ்சி அடைகிறேன்.தாங்களும் இதை ஐவருக்கு பரிந்துரைக்கவும்.நன்றி.

  ReplyDelete
 19. காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...