ஊருக்கு மத்தியில்
ஒய்யாரமாய் வளர்ந்து படர்ந்திருந்தது
ஒரு பெரிய வேப்பமரம்...!
சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும்
ரசித்து வளர்ந்துமரம்...
மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!
பெச்சியக்கா பொண்ணு சடங்கானதும்
மரமேறி வெட்டப்பட்டது கிளையிரண்டு
புதுப்பெண்ணை அடைகாக்கும் மகிழ்ச்சியில்
கிளைகொடுத்து சிரித்தமரம்...!
முண்டக்கன்னியம்மனுக்கு காப்புகட்டி
ஊர்முழுக்க தோரணம் கட்ட
மொத்தமாய் இலைகள் கொடுத்து
பரவசப்பட்டு மகிழ்ந்தமரம்...
மின்வயர்களை தொட்டதற்காக...
பல்லுக்குச்சிக்காக...
அம்மைபோட்டால் படுக்கைக்காக
என எவ்வளவு வெட்டியும்
இன்னும் பரந்து வளந்தது சிரித்தபடியே...!
தற்போது முதல்முதலாய்
கண்ணீர்வடித்தது அந்த வேப்பமரம்
சாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
சாலையை மறித்தபோது...!
நன்றி..!
ஒய்யாரமாய் வளர்ந்து படர்ந்திருந்தது
ஒரு பெரிய வேப்பமரம்...!
சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும்
ரசித்து வளர்ந்துமரம்...
மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!
பெச்சியக்கா பொண்ணு சடங்கானதும்
மரமேறி வெட்டப்பட்டது கிளையிரண்டு
புதுப்பெண்ணை அடைகாக்கும் மகிழ்ச்சியில்
கிளைகொடுத்து சிரித்தமரம்...!
முண்டக்கன்னியம்மனுக்கு காப்புகட்டி
ஊர்முழுக்க தோரணம் கட்ட
மொத்தமாய் இலைகள் கொடுத்து
பரவசப்பட்டு மகிழ்ந்தமரம்...
மின்வயர்களை தொட்டதற்காக...
பல்லுக்குச்சிக்காக...
அம்மைபோட்டால் படுக்கைக்காக
என எவ்வளவு வெட்டியும்
இன்னும் பரந்து வளந்தது சிரித்தபடியே...!
தற்போது முதல்முதலாய்
கண்ணீர்வடித்தது அந்த வேப்பமரம்
சாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
சாலையை மறித்தபோது...!
நன்றி..!
முடித்த விதம் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்...
DeleteNice 🙂🙂🙂
Deleteபாவந்தான் அதன் நிலை
ReplyDeleteஇறுதியில் சுட்டன வரிகள். சிறப்புங்க.
ReplyDeleteதற்போது முதல்முதலாய்
ReplyDeleteகண்ணீர்வடித்தது அந்த வேப்பமரம்
சாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
சாலையை மறித்தபோது...!
அருமை அய்யா அருமை
இறுதி வரிகள் கலக்கல்.... நன்றி...
ReplyDeleteபைக்கில் நல்ல ஸ்பீடில் சென்று இறுதியில் தீடிரென்று சடன் பிரேக் பிடித்து திருப்பியது போல இருந்தது உங்கள் கவிதையை படித்த பின் மிக அருமை இன்று நான் படித்தது மூன்று கவிதைகள் அதில் உங்களதும் ஒன்று அனைவரும் அருமையாக எழுதிவருகிறீர்கள் உங்களது திறமையை எண்ணி மனம் வியக்கிறேன் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை நண்பா...
ReplyDeleteசாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
ReplyDeleteசாலையை மறித்தபோது...!
கண்ணீர் வடித்த வேப்பமரம் ..
சிறப்பான சிந்தனை ..பாராட்டுக்கள்...
மரத்தின் கிளைகளை அல்ல மரத்தையே வெட்டினார்கள் பாவிகள் நன்றி நண்பா
ReplyDeleteவேம்பின் பயன் எல்லாம் சொல்லி முடிவில் வைத்தீர்கள் சிந்திக்க வேண்டிய விசயம்..அருமை
ReplyDeleteசாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
ReplyDeleteதமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர் - பாரதி .
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
அன்பின் சௌந்தர் - இன்றைய வலைச்சர அறிமுகம் வழியாக இங்கு வந்தேன் - அருமையான சிந்தனை - இத்தனை பலன்கள் அளிக்கும் வேப்ப மரத்தினை - பாவிகள் வெட்டிச் சாய்த்தனரே ! என்ன செய்வது ....... நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள்- நட்புடன் சீனா
ReplyDeleteஅழகான கவிதை... முடித்த விதம் சிறப்பு!
ReplyDeleteசாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
ReplyDeleteசாலையை மறித்தபோது...!///வருத்தமான விஷயம்தான்
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஉங்களை வலைச்சர அறிமுகத்தில் கண்டு வந்தேன்!
நல்லதொரு கருத்தினை நயம்படக்கவியில் உரைத்தவிதம் அருமை!
வாழ்த்துக்கள்!
வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவேப்பமரத்தின் கண்ணீர் ரொம்பவும் சுட்டது. வேதனையான உண்மையை கவிதையாக வடித்து படிப்பவர்களையும் கலங்க வைத்துவிட்டீர்கள்.
அருமையான கவிதைக்கு வாழ்த்துகள்!