கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 August, 2012

இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்...!தெரு‌வோரம் வீசிய தென்றல்
ஓலை குடிசைக்குள்ளே
ஓய்யாரமாய் புகுந்தது...
 

குறைவான எண்ணெய்யிலே
கண்சிமிட்டியது
வீட்டு மூலையில் காடை விளக்கு...
 
சிக்கு வெந்நீர் குடித்து
தாயின் பாதி மாராப்பி‌லே
தாலாட்டு கேட்டது பச்சிளங்குழந்தை...


ட்சிக்கு ஓட்டிட்டு - தன்
ஆடை ஓட்டைகளை மறைக்க வழியில்லாமல்
நாணி குனிகிறாள் இளம்தாய்...
 
வாழ்க்கை தூரத்தில்
எங்களை வாட்டிடும் ‌எல்லைகள்
வறுமை... வறட்சி... பசி... பட்டினி...
 
ந்து மாத கருவிலே
கணக்கெடுக்கப்படட நாங்கள்

மொழி்யென்று எங்களை முழம் தள்ளி
இனமென்று எங்களை இடம் தள்ளி
ஜாதி மாதமென்று எங்களை
மண்ணில் தள்ளி...

ருவம் இழந்து
எங்கள் உணர்ச்சி இழந்து
புழுவுக்கும் பூச்சிக்கும்  
இரையாகிறோம் நாங்கள்..!
 
தயம் நொந்து
எங்கள் இமைகள் நொந்து
வயிற்றுப் பசிக்கு பஞ்சணையிட்டு..
 
நாளும் காலத்தால் அழிவாகும்
எங்கள் கண்ணீரால் நனைகின்ற
எனதருமை தாய்நாடே...


நாங்கள் வாழ்வதற்காக பிறக்கவில்லை...
ஏதோ பிறந்ததற்காக வாழ்கிறோம்...

14 comments:

 1. வேதனைப்பட வைக்கும் வரிகள்...

  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்... -

  இன்றைக்கு இப்படித் தான் இருக்கிறார்கள் (சில) மனிதர்கள்...

  நன்றி...

  ReplyDelete
 2. வேதனைமிகுந்த வரிகளின் தைரியம் மிகுந்த வெளிப்பாடு

  ReplyDelete
 3. கடைசி வரிகள் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

  ReplyDelete
 4. நல்ல வரிகள் அருமை

  ReplyDelete
 5. வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் படும் பாட்டையும் இன்றைய அரசியல்வாதிகளையும் நிலைபாட்டையும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. //வாழ்வதற்காக பிறக்கவில்லை
  ஏதோ பிறந்ததற்காக //

  ReplyDelete
 7. நாங்கள் வாழ்வதற்காக பிறக்கவில்லை...
  ஏதோ பிறந்ததற்காக வாழ்கிறோம்.
  >>
  50% மக்களின் நிலைப்பாடு இது என்பதை வருத்தத்துடன் ஒப்புக்க வேண்டிய விசயம். நல்லதொரு கவிதை. நன்றி

  ReplyDelete
 8. //
  நாங்கள் வாழ்வதற்காக பிறக்கவில்லை...
  ஏதோ பிறந்ததற்காக வாழ்கிறோம்...
  //

  அருமையான வரிகள் தல (TM 3)

  ReplyDelete
 9. வறுமையை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.நெஞ்சம் கனக்கிறது.

  ReplyDelete
 10. கவிதை வலி நிறைந்ததாக இருக்கிறது என்றால் கடைசி இரண்டு வரிகள் வேதனையின் உச்சம்.

  ReplyDelete
 11. வணக்கம் சௌந்தர் அண்ணே ...
  இறுதி வரிகள் உள்ளத்தை பெரும் ஈட்டி கொண்டு குத்துகிறது ...

  ReplyDelete
 12. அடித்தட்டு மக்களை படம் பிடிக்கும் வரிகள்! சிறப்பான கவிதை!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 13. அன்பின் சௌந்தர் - ஆதங்கம் புரிகிறது - இவர்களுக்கெல்லாம் வாழ்வதென்பது எப்போது ? கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...