கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தி என்னவென்றால் டாஸ்மாக் பற்றியதுதான். தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15 அன்றோ அல்லது அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்றோ அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளையும் மற்றும் விவாதங்களும் மறைமுகமாக அரசு நடத்திக்கொண்டிருப்பாக ஊடங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விவாதம் பல்வேறு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ராம்தாஸ் அவர்களும், மதிமுக வைகோ அவர்களும் தமிழத்தில் டாஸ்மாக் கடைகளை அறவேநீக்கி மதுவிலக்கை முழுமையாக கொண்டுவரவேண்டும் என்று வலியுருத்திவருகிறார்கள்.
அண்ணாவின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் திமுக-வும், மற்றும் அதிமுக-வும்தான் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகின்றன. மதுவின் பிடியில் சிக்கி லட்சக்கனக்காக இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்..
நாட்டில் நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசுகளே, வீதிகள்தோறும் மதுபான கடைகளை திறந்து “குடி“மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது மதுவின் பிடியில் இருந்து மீள முடியாத அளவுக்கு பல இளைஞர்களை குடிகாரர்களாக்கியதுதான் தமிழகஅரசுகளின் சாதனைஇருந்து வருகிறது.
தமிழகத்தில் கிட்டதட்ட 6 ஆயிரத்திற்க்கும் இதிகமான டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கடைகளை அரசே ஏற்று நடத்துவது என்பதான் இதுவரை யாராலும் சகித்துக்கொள்ள முடியாத விஷயமாக இருந்துவருகிறது.
இன்றை அனைத்து தவறுகளுக்கும் துவக்கமாக இருக்கும் இடம் இந்த மதுபானகடைதான். கடந்த சிலவாரங்களாக கூடுதல் மதுவிற்ற பலரை காவல் துறை கைதுசெய்து வருகிறது. குடிப்பதற்கு பணத்தேவைக்காகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவருகிறது. சிறுமி, குழந்தைகளைக்கூட பலாத்காரம் செய்யும் ஈனத்தனம் இந்த குடித்தவர்களுக்கு மட்டுமே வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தை விட குடிப்பதால் ஏற்படுகின்ற விபத்துக்கள், நோய்கள், சமூக சீர்கேடுகள், சமூகக்குற்றங்கள் என இவைகளுக்கு அரசு அந்த வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறது.
கடந்த இந்த ஆறுமாதத்தில் தமிழக சாலைவிபத்துகளில் 73 சதவீத விபத்துக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்றட்டதாகும் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
தற்போது 16 வயது நிரம்பிய கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் சமூக ஆர்வளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஆகையால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வந்தால் அதை தமிழக மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி வருவேற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
ஆகையால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வந்தால் அதை தமிழக மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி வருவேற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
வணக்கம் மக்களே...! மதுபானகடை விமர்சனம் என்று உங்களை அழைத்ததின் உள்நோக்கம் ஏதோ ஹிட்ஸ் எடுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது தற்போதைக்கு தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனை இது என்பதால்தான். எனவே தங்களுடைய கருத்தை விரிவாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
டாஸமாக் விஷயத்தில்
ReplyDeleteதங்களுடைய கருத்து என்ன என்பதை கட்டாயம் பதிவு செய்யுங்கள்...
தற்போது 16 வயது நிரம்பிய கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் சமூக ஆர்வளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ReplyDeleteஅதற்கு காரணம் அரசே மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்.
கண்டிப்பாக...
Deleteஅரசு தற்போது மதுவிலக்கு பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளது. மதுவிலக்கை கொண்டுவந்தால் மிகவும் வரவேற்க்கதக்க விஷயமாக இருக்கும்...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழியாரே....
நல்ல அலசல்...
ReplyDeleteகட்டாயம் மூடப்படவேண்டிய ஒன்று...
நல்லது நண்பரே...
Deleteத.ம.2
ReplyDeleteKadaya mudina kallacharayam arampikkum.
ReplyDeleteகள்ளச்சாராயம் ஒழிக்க முடியாத விஷயம் அல்ல தலைவரே.. காவல் துறை நினைத்தால் அதை கட்டுப்பாட்டுக்கள் வந்துவிடும்.
Deleteஅரசு மதுவிலக்கு என்ற கொள்கை முடிவு எடுத்தால் அதை மீறி கள்ளச்சாராயம் தலைதூக்காது...
மூடப்பட வேண்டியது என்று கருதுகிறேன்! (TM 3)
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...!
Deleteகண்டிப்பாக மதுவிலக்கு வரவேண்டும்...அல்லது குறைந்தபட்சமாக கடைகளின் எண்ணிக்கையை, விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்... அல்லது அரசே ஏற்று நடத்துவதயாச்சும் கைவிட வேண்டும்...
ReplyDeleteகுறைப்பது என்பதும் நல்லதுதான்...
Deleteஒரேடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குறைத்தாலும் நல்ல முடிவை எட்டலாம்...
thoooooooo
ReplyDeleteநீங்கள் இந்திய குடிமகனோ....
Deleteவாழ்க ஜனநாயகம்...
மதுவிலக்கை என்றோ அமல் படுத்தியிருக்க வேண்டும்! இப்போதாவது யோசிக்கிறார்களே! மது விலக்கு வரின் பாதிக் குற்றங்கள் குறையும் என்பது என் அனுமானம்! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சுரேஷ்...
Deleteவிளையாட்டுத்தனமாக பீரில் ஆரம்பித்து... மூன்று வேளையும் குடிக்கும் அளவிற்கு போய் விடுகிறார்கள்... இன்று அதை விட முடியாமல் இன்று தத்தளித்துக் கொண்டு இருப்போர் பலர்...
ReplyDeleteபல குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டன... சிறு சந்தோசமோ, சிறு சோகமோ முதலில் போவது இங்கே தான். பிறகு இவர்கள் மதுவை விட நினைத்தாலும், மது இவர்களை விடுவதில்லை...
மது விலக்கு வந்து விட்டால் கள்ளச்சந்தை களை கட்டி விடுமே...
குடிப்பவர்களின் மனது முதலில் மாற வேண்டும்... அது தான் உண்மையான மதுவிலக்கு...
(த.ம. 5) நன்றி.
கள்ளச்சாராயம் என்பது அரசு நினைத்தால் முடிவுக்கு கொண்டுவந்துவிடும்...
Deleteதாங்கள் சொன்னதுபோல் குடிப்பவர்களை நல்ல படுத்திவிட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்...
ஆனால் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அவர்களை திருத்துவது என்பது முடியாத காரியம்...
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
டாஸ்மாக் தரும் வருமானத்தை வேறு எந்த வகையில் ஈட்ட முடியும்? அரசு இது பற்றி தெளிவாக அறிந்த பின்னரே டாஸ்மாக்கை மூடும் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது..
ReplyDeleteஅதுவும் உண்மைதான்...
Deleteவருமானத்தை ஈட்ட அரசு நினைத்தால் ஆயிரம் வழியிருக்கிறது...
பாவங்களின் தாய் மதுபானம் என்கிறது திருக்குரான். உண்மைதான்
ReplyDeleteவாஙக தலைவரே...
Deleteஅனைந்து மதத்தினரும் அவர்கது வேத நூல்களில் சொல்லிவுள்ளபடி நடந்துக்கொண்டால் இந்த உலகில் பிரச்சனைகளே எழாது....
மதுபானக் கடைய மூடிவிட்டால் குற்றம் குறைந்து விடுமா..?
ReplyDeleteமூடிய பிறகு குற்றம் நடந்தால் என்ன சொல்வீங்க.?
இவ்வளவு ஏன்..? நாங்க எல்லாம் குடிக்கும் போது நீங்க வேடிக்கை மட்டும்தானே பார்த்திங்க...நீங்க ஏன் குடிக்கல..? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்!
சிறுமிகளை கற்பழிக்கும் வழக்குகளில் அதிக பட்சமான குற்றவாளிகள் குடிப்பழக்கம் இல்லாதவர்கள்...!இதுக்கு என்ன சொல்றீங்க..?
அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராத குடிமகன்கள் பிரச்சனையில்லை மதுபானக்கடை மூடிவிட்டால் கள்ளச்சாரயச்சாவு தொடரும்! காவல் துறையில் லஞ்சம் லாவண்யம் இன்னும் பெருகும்!
நான் குடிய ஆதரிக்கல....மதுபாணக்கடை என்பது புலிவால் புடிச்ச கதைன்னு சொல்றேன்!
///////
Deleteமதுபானக் கடைய மூடிவிட்டால் குற்றம் குறைந்து விடுமா..?
மூடிய பிறகு குற்றம் நடந்தால் என்ன சொல்வீங்க.?
///////////////
ஒருவர் சாதாரன மனநிலையில் தவறு செய்வதற்கும், போதையில் தவறு செய்வதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது நண்பரே...
சாராயக்கடைகளை மூடிவிட்டால் தவறுகள் நடக்காது என்று நான் சொல்லவில்லை.. கண்டிப்பாக குறைந்துவிடும். சென்னை மற்றும் புறநகர்பகுதிகளிலும் திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக திருட்டுவழக்குகளில் மாட்டியவர்கள் கூறும் வாக்குமூலம் குடியை மறக்க முடியவில்லை குடிப்பதற்கு காசு இல்லை அதனாலே திருடினோம் என்பதுதான்...
/////
Deleteஇவ்வளவு ஏன்..? நாங்க எல்லாம் குடிக்கும் போது நீங்க வேடிக்கை மட்டும்தானே பார்த்திங்க...நீங்க ஏன் குடிக்கல..? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்!
////////
தற்கால இளைஞர்களின் மனநிலை அதுபோன்று இல்லை நண்பரே...
இன்று துவங்கி மறுநாளே குடியில் மேதையாகிவிடுகிறார்கள்...
குடியினால் எப்படி இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று சென்னை புறநகர்பகுதிகளில் ஒரு நாள் பார்த்தால் போதும் தாங்கள் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்..
தென் மாவட்டங்களில் குடித்தாலும் அதற்கான நாகரீகத்தோடு நடந்துக்கொள்ளலாம் ஆனால் வடதமிழகத்தில் நான் பார்த்த வரையில் அப்படி இல்லை.
நேற்று கூட குடித்துவிட்டு வேகமாக வானம் ஓட்டிய இரு வாலிபர்கள் லாரியில் அடிப்பட்டடு மரணம் அடைந்தார்கள்...
இடம் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை.
///////
Deleteசிறுமிகளை கற்பழிக்கும் வழக்குகளில் அதிக பட்சமான குற்றவாளிகள் குடிப்பழக்கம் இல்லாதவர்கள்...!இதுக்கு என்ன சொல்றீங்க..?
////////
அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்...
வெங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆறுமாதத்தில் மூன்று கற்பழிப்பு வழக்குகள் பதிவாகிவுள்ளது மூன்றும் பேதையில் இருக்கும்போது நடந்த சம்பவங்கள் தான்...
அதற்க்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளது.
///////
Deleteநான் குடிய ஆதரிக்கல....மதுபாணக்கடை என்பது புலிவால் புடிச்ச கதைன்னு சொல்றேன்!/
///////
இந்த டயலாக்கை மறந்தால்தான் இன்று குஜராத் தொழில் வளர்ச்சியில் முதல்இடத்தை பிடித்திருக்கிறது....
போதை ஒழிப்போம்... கைசேருங்கள் நண்பரே...
அன்பின் சௌந்தர் - சிந்தனை நன்று - மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் - மாற்றுக் கருத்தில்லை- ஆனால் அரசு கணிசமான வருவாயினை இழக்க வேண்டி வரும். எந்த ஒரு அரசும் இவ்விழப்பினை ஏற்கத் தயாராக இருக்காது. ஆகவே இப்போதைக்கு மூடப்படாது என்பதே என் கருத்து. எப்படியாயினும் விரைவினில் மூடப்பட பிரார்த்தனைகள் - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
ReplyDeleteஐயா..!
Deleteதாங்கள் சொல்வது போல் மதுபான படைகள் மூலம் அதிக வருவாய் வருகிறதுதான் ஆனால் அதை விட அதிக இழப்பு இந்த மதுவினால் தான் என்று அறவியலும், தமிழக அரசும் கூறுகிறது.
அரசு லாபம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இரு்க்கிறது...
ஒரு சமுகத்தை நல்ல சமூதாயத்தை அழித்துதான் ஒரு அரசு லாபம் சம்பாதிக்ம் வேண்டும் என்ற நிலை நிகவும் மோசமானது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!
மதுவிளக்கா...... அப்போ மது ஊத்தினா விளக்கு எரியுமா...?
ReplyDeleteஎல்லாம் அவனவன் கடைகளில் வியாபாரம் நடப்பதற்காக செய்கிற வேலைகள் இது...
பொது மக்கள பத்தி யாரு கவணிக்கிறாங்க
இந்தியாவுல நடு ராத்திரில குடிச்சிட்டு வீதிகள்ல கும்மாளமடிக்கும் இளம் பெண்களின் கூட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்.....
அவசியம் மூட வேண்டும்
இந்த நிலைமாறத்தான் இந்த கோரிக்கை...
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
மதுவிலக்கு எல்லாம் ஓகே தான்!! ஆனா மதுபான கடை விமர்சனம் என்று போட்டுவிட்டு எதற்கு இந்த கட்டுரை? அதற்க்கு பதிலாக நேரடியாக மதுவிலக்கு பற்றிய உங்கள் கருத்தை வேறு ஒரு தலைப்பில் எழுதலாமே?
ReplyDeleteதவறுதான் நண்பரே...
Deleteநேரடியாக தலைப்பிடும்பேர்து அந்த கருத்துபோய் சேரும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடுகிறது...
கருத்து அனைவரையும் சென்றடைய இதுபோன்று தலைப்பில் கொஞ்சம் மாறுதல் செய்துவது அவசியமாகிறது...
அதற்காக பதிவிலேயே மன்னிப்பு கோரியிருக்கிறேன்...
நல்ல தலைப்பிட்டு தவறான கருத்தை சொல்வதைவிட
தவரான தலைப்பிட்டு நல்ல கருத்தை சொல்லலாம்...
இது என்னுடைய கருத்து...
உண்மையான திரைப்பட விமர்சனம் என்றால் படித்திருக்க மாட்டேன் (கதையை எழுதி இருப்பீர்களோ என்று பயந்து). ஆனால் இதை முழுவதும் படித்தேன். நன்றி
ReplyDeleteஉண்மைதான்...
ReplyDeleteஅரசு இநத விஷ்யடத்தில் கண்டிப்பாக செய்ய நினைப்படதை செய்து முடிக்க வேண்டு்ம்.
மதுபான கடையைப் பற்றிய நல்ல விமர்சனம்..
ReplyDeleteஇன்று ஒருவனை teetotalar என்று சொன்னாலே அவனை வேற்றுகிரக ஜந்து போல பார்க்கும் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் மது தான்!!
//நாட்டில் நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசுகளே, வீதிகள்தோறும் மதுபான கடைகளை திறந்து “குடி“மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.//
அவர்கள் நல்ல 'குடி'மகன்களைத் தானே உருவாக்குகிறார்கள்?
(அரசுக்கு வருமானம் தேடித் தருபவர்கள் தானே நல்ல குடிமகன்கள்?)