மூடிவைத்த உள்ளங்களில்
புதிய புதிய சிந்தனைகள்
முளைக்க மறுக்கும்...
காய்ச்சிய இரும்பில் தானே
பாயும் அம்பின் கூர்மையை
அறிய முடிகிறது...!
ஓடிவரும் காற்றினத்தை
திசைத்திருப்புங்கள்
உலர்ந்துப்போன மூங்கில் கூட
ராகம் இசைக்கும்...!
நாம் என்று முயல்கிறோமோ
அன்றைய நாளில் தான்
சகதியாய் இருக்கும் நம் மனதில்
செந்தாமரைகள் முளைக்கும்..!
வீழ்கின்றபோதெல்லாம்
எழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!
உழைப்பின்றி ஓய்வெடுத்தால்
நாம் சிதைய வேண்டியிருக்கும்..
புதியதாய் வியர்வைகள் மலரும்போது
இதயத்தை ஊடுருவும் குருதியின் வாசனையை
நம் நாசி உணரும்...
தவறில்லா உறுதியோடு
ஒவ்வொறு நாளும் உழைப்போம்
நாளை வெற்றியின் மகுடங்கள்
நம் தலையை அழகுப்படுத்தும்...
பூமியில் நாம் சிந்திய வியர்வை
கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...
நாளை வெற்றியின் மகுடங்கள்
நம் தலையை அழகுப்படுத்தும்...
பூமியில் நாம் சிந்திய வியர்வை
கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...
ம்ம்ம் ...நல்ல கவிதை கவிஞரே
ReplyDeleteதஙகள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...
Delete//1996 ம் ஆண்டு//கவிதையா .
ReplyDeleteநல்லாயிருக்கு.
ஆமா தலைவரே...
Deleteபழைய டைரிகளை கிளரிக்கிட்டு இருக்கேன்...
இதைமட்டும் மாற்றம் இல்லாமல் போட்டிருக்கேன்..
மற்றகவிதைகளை இந்த காலத்துக்கும் வலைப்பதிவுக்கும் எற்றவாறு மாற்றி போடுவேன்...
கவிதை அருமை ....எல்லா வரிகளும் அருமை ..
ReplyDeleteஅட இது பிளாஷ் பேக் கவிதையா !! அருமை
நன்றி ரியாஸ்...
Deletetamil manam 3
ReplyDelete#வீழ்கின்றபோதெல்லாம்
ReplyDeleteஎழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!#
தன்னம்பிக்கையை விதைக்கும் வரிகள்...அருமை....tamilமணம் 4
நன்றி நண்பரே...
Deleteஉற்சாகமூட்டும் வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்த வரிகள் :
/// நாம் என்று முயல்கிறோமோ
அன்றைய நாளில் தான்
சகதியாய் இருக்கும் நம் மனதில்
செந்தாமரைகள் முளைக்கும்..! ///
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)
//நாம் என்று முயல்கிறோமோ
ReplyDeleteஅன்றைய நாளில் தான்
சகதியாய் இருக்கும் நம் மனதில்
செந்தாமரைகள் முளைக்கும்..!//
அருமை!முழுக்கவிதையுமே.
த.ம.6
//பூமியில் நாம் சிந்திய வியர்வை
ReplyDeleteகண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...//
அருமையான வரிகள் (TM 7)
nice
ReplyDeleteமிக அருமையான கவிதை
ReplyDeleteதவறில்லா உறுதியோடு
ReplyDeleteஒவ்வொறு நாளும் உழைப்போம்
நாளை வெற்றியின் மகுடங்கள்
நம் தலையை அழகுப்படுத்தும்...//
நிச்சயமாக
மனம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
அருமையாக இருக்கின்றது. இளமையின் துடிப்பில் எழுதப்பட்ட துள்ளல் வரிகள் அருமை! அருமை!
ReplyDeletehttp://krishnalayaravi.com
உள்ளத்தை ஊக்குவிக்கும் கவிதை அருமை
ReplyDeleteநம்பிக்கை ஊட்டும் கவிதை.
ReplyDeleteஉழைப்பின்றி ஓய்வெடுத்தால்
ReplyDeleteநாம் சிதைய வேண்டியிருக்கும்..
வீழ்கின்றபோதெல்லாம்
ReplyDeleteஎழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!
சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்
அருமை. அதுவும் அந்த வயதிலேயே...காதல் கவிதை வயதில் உழைப்பு பற்றிய கவிதை எழுதியதே பாராட்டக்கூடியது.சிறப்பான கவிதை.
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அருமை அருமை - கவிதை அருமை - உழைப்பின் பெருமை அழகாகக் காட்டப் பட்டிருக்கிறது - 12ம் வகுப்பிலேயே இவ்வளவு அருமையாகக் கவிதை எழுதினீர்களா ? பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉழைப்புதான் உயர்வு......அருமையான உழைப்பின் கவிதை...!
ReplyDeleteவீழ்கின்றபோதெல்லாம்
ReplyDeleteஎழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!
அந்த வயதில்! இந்த வரிகள்! அருமை!
என்னைக் கவர்ந்த கருத்து! சா இராமாநுசம்
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021
உழைப்பின் உன்னதத்தை
ReplyDeleteஉணர்த்திய வரிகள்
பதிவர் விழாவில்
ஓடியாடி உழைத்த
உள்ளத்திற்கு
இனிய வாழ்த்துக்கள்