ஒரு பள்ளத்தாக்கு முழுவதும்
பாய்விரித்த குறிஞ்சிப் பூக்கள்...!
மேகம் இல்லாத இரவு வானில்
புதியதாய் பூத்த மூன்றாம் பிறை...!
வால்பார்த்துபறந்து வானில்
ஓவியம் வரையும் பறவைகள் கூட்டம்...!
பச்சை பட்டாடை உடுத்தியமலையில்
பட்டுத்தெரித்து சிதறும் நீர்வீழ்ச்சி...!
ஒரே நாளில் பூத்த
அத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்
அவைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!
பாய்விரித்த குறிஞ்சிப் பூக்கள்...!
மேகம் இல்லாத இரவு வானில்
புதியதாய் பூத்த மூன்றாம் பிறை...!
வால்பார்த்துபறந்து வானில்
ஓவியம் வரையும் பறவைகள் கூட்டம்...!
பச்சை பட்டாடை உடுத்தியமலையில்
பட்டுத்தெரித்து சிதறும் நீர்வீழ்ச்சி...!
ஒரே நாளில் பூத்த
அத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்
அவைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!
ஒரே நாளில் பூத்த
ReplyDeleteஅத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்
அவைகள் ஈடுகொடுக்கமுடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!
புன்னகை ஆயுதம்...!
ஆஹா!
ReplyDeleteவந்துட்டாரப்பா புதுசா ஒரு பைத்தியக்காரர்.
அதுதான் சார், காதல் பைத்தியம்னு சொல்ல வந்தேன்.
நிற்க.
காதலெனும் மாய சக்திக்கு வயப்பட்ட இள மனத்தின் அற்புதத்தை அழகாக சித்தரித்து உள்ளீர்.
இருந்தாலும் கவிதை நடையில் சில முரண்கள் உள்ளதை நான் கோடிட்டு காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர் என நம்புகிறேன்.
உதாரணத்திற்கு :
இரவில் எந்த பறவைகள் வானில் கூட்டமாக ஓவியம் போடுகின்றனவோ!
என் மனதில் பட்டதை சொன்னேன். அவ்வளவுதான்.
நான் கூறியதில் தவறுகள் தெரிந்தாலோ அல்லது உங்கள் மனதை வறுத்தினாலோ இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டாம். இவ்வென் கருத்துக்கள் உங்களின் கற்பனை வளத்தையும் வேகத்தையும் தடை செய்யாது என நம்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
மிக்க நன்றி....
Deleteசுட்டி காட்டியமைக்கு நன்றி...
காதலுக்கு முரண் என்று ஒன்றும் இல்லை...
பறவைகள் உதாரணம் காலத்தை குறிப்பிடவில்லை..
பிறைக்கு மட்டும்தான் இரவு குறிப்பிட்டுள்ளேன்...
கவிதையை திரும்பவும் வாசிக்கம்...
வருத்தமில்லை...
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...!
அருமையான கவிதை! உவமைகள் அற்புதம்! ரசித்தேன்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஅன்பின் மாசிலா! நீங்கள் கவிதையை புரிந்து கொண்ட விதம் தவறு! கவிஞர் இரவில் பறவைகள் பறப்பதாய சித்தரிக்கவில்லை! மீண்டும் ஒரு முறை படியுங்கள்! பலவித காட்சிகளை உவமைப்படுத்தியுள்ளார்! மூன்றாம்பிறையோடு அடுத்த வரிகளை சேர்த்துக் கொண்டது உங்களின் தவறு! அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் நன்றி!
ReplyDeleteதிரு.சுரேஷ், இருந்தாலும் கவிதையை ஒரு கோர்வையாக படிக்கும்போது இச்சில வரிகள் என் மனதுக்கு ஏதோ ஏடா கோடமாக தெரிந்தன. அவ்வளவே. யதார்த்தமாக என் மனதுக்கு பட்ட இக்கருத்தை எழுதுவதற்கு முன் கவிஞரின் மனதை புண் படுத்திவடுவோமோ என பல தடவை தயங்கினேன். மனதில் பட்டதை சொல்லாமல் விடவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை. என் வெள்ளை மனதை கவிஞர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
Deleteஅனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது இனிய புத்தாணடு வாழ்த்துக்கள்.
அருமை அருமை
ReplyDeleteநிச்சயம் ஈடாகாதுதான்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை ,தினமும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவைகள் ஈடுகொடுக்க முடியாமல்
ReplyDeleteதோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!
mmm சூப்பர் நண்பா.
பூத்துவந்த புதுமலர்போல்
ReplyDeleteபுன்னகை நீ சிந்திவிட்டால்
என்னை உன்னவனாக்குவதற்கு....
சொல்லிற்கும்
ஆற்றலிற்கும் அடங்காத
ஆயுதம் ஏதுமுண்டோ...
ரசிகர் வாத்தியாரே நீங்க!
ReplyDelete// ஒரே நாளில் பூத்த
ReplyDeleteஅத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்
அவைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!//
நயமிகு கற்பனை! நன்று!