கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பெண்கள் நலன். Show all posts
Showing posts with label பெண்கள் நலன். Show all posts

20 March, 2018

ஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...


ஆபாசம் என்பது உடையில் உள்ளதா...? பார்க்கும் பார்வையில் உள்ளதா..? நம் நடவடிக்கைகளில் உள்ளதா? என்பது குறித்து இன்று வரை பல்வேறு விவாதங்கள் நடந்தவண்ணமே உள்ளது.

ஆபாசம் என்பது என்னை பொறுத்தவரையில் ஆடைதான் முக்கியபங்கு வகிக்கிறது என்று கருதுகிறேன்... ஒருவருடைய மனதில் சட்டென மரியாதையையோ.. அல்லது காமத்தையோ உண்டுப்பண்ணுகிற சக்தி ஆடைக்கு உள்ளது.... நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் புத்திதான் சரியில்லை என்று மற்றவர்களை குறைச்சொல்லும் சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஆடைச்சுதந்திரம் என்பது நமக்கும் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் எற்படுத்தகூடியதாக இருக்கக்கூடாது. ஆடைதான் ஒருவர் மீது நல்ல அபிப்ராயத்தையும்.. தீய எண்ணத்தையும் ஏற்படுத்துவதான உள்ளது... நம்முடைய சுதந்திரம் நமக்கே பாதிப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் ஏன் அது கிரிடமாக இருந்தால் கூட தூக்கியெறியகூடாது.


உடனே ஒரு கேள்வி எழும்... அது உன் வீட்டில் உள்ள பெண்கள் இப்படி இருந்தால் என்னச்செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அல்ல... மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி அவர்களின் மகள் சொல்வதை கேளுங்கள்...

முஹம்மது அலி ஒருமுற‌ை தன் மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்....

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். 

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, "ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. 


வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. 

முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன. 

தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். 

"என்னை உற்று நோக்கியவராக, "உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"....

இதற்குமேல் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை... ஆடைச்சுதந்திரம் என்பது ஆடையை அழகுப்படுத்துவதில் இருக்கட்டும்... அதை குறைப்பதில் வேண்டாமே...!

03 January, 2013

இதுவா பெண்களுக்கான ஆயுதம்...!


 
ரு பள்ளத்தாக்கு முழுவதும் 
பாய்விரித்த குறிஞ்சிப் பூக்கள்...!
 

மேகம் இல்லாத இரவு வானில்
புதியதாய் பூத்த மூன்றாம் பிறை...!
 

வால்பார்த்துபறந்து வானில் 
ஓவியம் வரையும் பறவைகள் கூட்டம்...!  

ச்சை பட்டாடை உடுத்தியமலையில்
பட்டுத்தெரித்து சிதறும் நீர்வீழ்ச்சி...!


ரே நாளில் பூத்த
அத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்



வைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!

08 July, 2011

பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்! அதிர்ச்சி தகவல்...


தூக்கம் என்பது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் ஓடிக் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!. அதுபோலத்தான் தூக்கமும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்கள்

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதயக் கோளாறு

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நான் தட்ஸ் தமிழில் வாசித்தேன் அதை தங்களோடு: பகிர்ந்துக் கொள்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...