கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 January, 2013

என்னை கலங்க வைத்த பட்டாம்பூச்சி....


பூக்களை பறிக்கும் 
பொழுதுகளிலெல்லாம்
முட்களோடு வதைப்படாமல்
திரும்பியதில்லை என் கைகள்...!


ய்வைத்தேடி கயிற்றுக்கட்டிலில்
தலைச்சாயும்போதெல்லாம்
உறுத்திக்கொண்டே இருக்கும்
இன்றைய நாளைய தேவைகள்...!


றுதல் சொல்ல 
ஆளில்லாத பலதருணங்களில்
என் சோகத்தையும் சேர்த்து

பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!

 ண்ணமிகு கோலத்துடன்
வானவில் வந்தவுடன் பதறித்தான்போகிறேன்
ஒழுகும் குடிசை என்னுடையது...!


காலங்களும் தருணங்களும்
எனக்கு இப்படியாய் இருக்க...
தற்போது புதியதாய் ஒரு வேதனை
என்னை சூழ்கிறது...!


நேற்று ஒரு பயணத்தின்போது 
என் முகத்தில் பட்டுத்தெறித்து சிதறிய 
ஒரு பட்டாம்பூச்சிக்காக...!

 
வாசித்த அனைவருக்கும் நன்றி...!

9 comments:

  1. அருமையான வரிகள் .. கலக்கல் கவிதை

    ReplyDelete
  2. ஆறுதல் சொல்ல
    ஆளில்லாத பலதருணங்களில்
    என் சோகத்தையும் சேர்த்து
    பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!

    கொடுத்து வச்சவங்க நீங்க பாருங்க குயில் பாடுது.

    ReplyDelete
  3. இது பட்டாம்பூச்சிக்காக எழுதுனது போல தெரியலியே!!

    ReplyDelete
  4. //ஆறுதல் சொல்ல
    ஆளில்லாத பலதருணங்களில்
    என் சோகத்தையும் சேர்த்து
    பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!//
    கருங்குயிலின் கானமும் ஓர் தனி சுகம்தான்.அருமையான கவி வரிகள்.

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - பலவேறு பிரச்னைகளுக்கு நடுவில் பட்டாம்பூச்சி முகத்தில் பட்டுத் தெறித்துச் சிதறிய செயலுக்காக வேதனைப் ப்டுவது ஈரமுள்ள இதயத்தினைக் காட்டுகிறது. நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. கலக்கலா இருக்கு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...