நம்முடைய முகவரிகள் பொய்யானவை...
நம்முடைய முகங்கள் பொய்யானவை...
நம்முடைய முகங்கள் பொய்யானவை...
நாம் யாவரும் நம்முடைய
முகங்களில் இல்லை...
அதனால் யாரும் யாரையும்
பார்க்கமுடிவதில்லை...
சமூகம் என்பது ஒரு முகமூடி
நடன அரங்கம்
நாம் எல்லோரும்
நம் முகங்கள் என்ற முகமூடிகளை
அணிந்து ஆடிக் கொண்டிருக்கிறோம்..
நம் முகமூடிகளே
நம் மகுடங்கள்..
நம் மகுடங்கள்..
அவை கழற்றப்பட்டு விட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது..
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது..
கவிக்கோ “அப்துல் ரகுமான்” அவர்கள் எழுதிய ஆலாபனை என்ற நூலில் “முகமூடி” என்ற தலைப்பி்ல் இடம் பெற்ற கவிதை.
இந்த கவிதையை படிக்கும் போதே அந்த வரிகள் அப்படியே இதயத்தில் இறங்கி என்னை குற்றவாளி கூண்டி நிறுத்தி குறுக்கு விசாரனை செய்கிறது.. நீ.. உன் முகமூடிகளை இழக்க தயாரா.. என்று..
உண்மையை சொல்லுங்கள் நாம் குற்றவாளிகளா.. அல்லது நிரபராதிகளா.. நாம் கொண்டுள்ளது முகங்களா அல்லது முகமூடிகளா... இந்த கவிதை நம்மை களங்கப்படுத்துகிறதா.. அல்லது கவலையடையச் செய்கிறதா..
ஒவ்வொறு மனிதனும் இரவில் ஒரு முகமும் பகலில் ஒரு முகமும், உள்ளே ஒரு முகமும் வெளியே ஒரு முகமும், கொண்டு இந்த உலகில் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.. பகலின் முகம் இரவுக்கு அறிமுகமாவதில்லை... உள்ளிருக்கும் முகம் வெளியில் தெரிவதில்லை அப்படி அறிமுகமாகும் போது இந்த உலகில் வாழும் தகுதியை நாம் இழந்து விடுகிறோம். (இதனால் தான் அதிகமான தற்கொலைகள் நடக்கிறது என்பதே என் தாழ்மையான கணிப்பு)
எத்தனையோ பெரும்புள்ளிகளின் அவர்கள் அணியும் இரவின் முகமுடிகளை கழட்டிப் பார்த்தால் அவர்கள் யாரும் தன்னுடைய அரியாசனத்தில் அமர்ந்திருக்க முடியாது. பிரேமானந்தாவின் முகமூடியும், நித்தியானந்தாவின் முகமூடிகள் கழட்டப்பட்டது அவரது மகுடங்கள் மண்ணிற்கு வந்தது. எத்தனையோ அரசியல் வாதிகளின் முகங்கள் முகமூடிகளில்தான் மூடிக்கிடக்கிறது. (ராஜா தற்போது குற்றவாளி கூண்டில்)
ஓ.. உலகே எண்ணிப்பாருங்கள் இந்த கவிதை நம்மைப்பார்த்து கை கொட்டி சிரிக்கிறது.. நாமெல்லாம் வேடிக்கைப் பார்ப்பதை விட பெரிதாக வேறென்ன சொல்லி விட முடியும்..
உலகம் ஒரு நாடக மேடைதான், ஆனால் அந்த நாடகத்தனத்தில் இருந்து இந்த உலகம் விடுபட மறுப்பது உண்மைதான்.. அதற்காக நாம் வாழ்க்கை முழுவதும் அப்படியே கிடந்து விடுவதுதான் கொடுமை...
நாம் நடிகர்கள்... நம்முடை குணாதிசயங்கள் என்னதன்று யார் யார் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றவாறு நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம்... அதுவும் ஒரு முகமூடிதானே.. அதனால்தான் ஒவ்வொறுவருக்கு ஒவ்வொறுவிதமாக காட்சி அளிக்கிறோம்..
என் முகங்கள்.. வீட்டில்.. நண்பரிடத்தில்.. பேருந்து பயணத்தில்.. அலுவலகத்தில்.. பள்ளியில்... இந்த வலையுலகத்தில்.. என பல்வேறு முகங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன.. என் ஒரு முகம் மற்றவர்க்கு தெரிவதில்லை அதனாலே நான் ஒவ்வொரிடத்திலும் முகமூடி அணிய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறேன்..
பேருந்தில் கலகலப்பாக பேசி.. பாட்டுப்பாடி.. சிரிக்கவைத்து என.. ஒரு ரசிகர் கூட்டமே வைத்திருக்கிறேன்.. ஆனால் மற்ற இடங்களில் இவற்றுக்கு எதிர் மறையாய்.. ஓ.. நாம் ஒவ்வொறுமுறையும் வெவ்வேறு முகமூடியை மாற்றிக் கொண்டும் இருக்கவேண்டும்.
என்னுடைய, மற்றும் நம்முடைய தவறுகள் வெளியே தெரியாத வரை நாம் முகமூடியை கழட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆதனால் தான் நாம் அணிந்துக் கொண்டிருக்கும் முகமூடிகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை.
இப்போது சொல்லுங்கள்.. நாம் முகமூடி அணிந்து இருக்கிறோமா.. இல்லையா...
இந்த முகமூடிகளை அழிவித்தெரிய
நீங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா..
அப்படி முகமூடிகள் இழந்தப்பின் தன்னுடைய மகுடங்களை என்னச் செய்வீர்கள்...
நண்பர்களே இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்..
இது என்னுடைய மற்றும் உங்களுடைய மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் யாதார்த்தத்தின் உச்சம் என்பது தான் உண்மை...
நாளை கவிதையால் தொடர்வோம்...
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முகமூடி அணிந்திருக்கிறோம்.
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
>>>நம் முகமூடிகளே
ReplyDeleteநம் மகுடங்கள்..
m m உண்மைதான்
கவிதையைப்போலவே விளக்கமும் அருமை..
ReplyDeleteநல்ல படத் தெரிவுகளுடன் பலர் மனதை புடம் போட காட்டியுள்ளீர்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
////
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... [Reply to comment]
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முகமூடி அணிந்திருக்கிறோம்.
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
////
தங்கள் வருகைக்கு நன்றி நண்பா..
தங்கள் பதிவை படித்தாயிற்று..
////////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>>நம் முகமூடிகளே
நம் மகுடங்கள்..
m m உண்மைதான்
/////
நன்றி..
//////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
கவிதையைப்போலவே விளக்கமும் அருமை..
///
நன்றி கருண்...
/////
ReplyDelete♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]
நல்ல படத் தெரிவுகளுடன் பலர் மனதை புடம் போட காட்டியுள்ளீர்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
///////
நன்றி மதி..
முகமூடி குறித்த ஒரு சரியான பதிவு.
ReplyDeleteஅப்துல் ரகுமான் கவிதைகள் (உங்க கவிதையும் தாங்க) எனக்கு பிடிக்கும்.
ReplyDeleteகவிதையும் விளக்கமும் மிக அருமை.
கவிதையின் வலிமையே அதன் விளக்கத்தில் தான் உள்ளது.
நீங்கள் இந்த கவிதைக்கு வலிமை சேர்த்து விட்டீர்கள்.
கவிஞரே உண்மையின் நிழல் எழுத்துக்களாக....................அருமை !
ReplyDeleteகவிதையும் விளக்கமும் மிக அருமை.
ReplyDeleteகருத்துகள் அருமை இருப்பினும் நிதர்ச்சன உலகம் மாற்று கோணத்திலும் பார்க்க்கப்படவேண்டும்..
ReplyDeleteசமூகம் இத்தகைய முகமுடிக்களைத்தான் எதிர்பார்க்கிறது...ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பீடு வைத்துள்ளது..
சிறைக்கு சென்று வந்த கொலைகாரனை அவன் திருந்தினாலும் ஏற்பதாயில்லை நம்மில் பலர்.. அவன் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்..
இதே பாலியல் தொழிலாளிக்கும்.. விளிம்பு நிலை மனிதருக்கும்..
ஆக முகமுடி போட்டால் மட்டுமே சமூகத்தில் ஏற்பார்கள் என்ற ஒரு பயத்தில் போலியாக வாழவேண்டிய சூழலில் பல அப்பாவிகள் என்றுதான் சொல்லணும்..
சமூகத்தை எதிர்கொள்ள சக்தியற்றவர்கள்..
This comment has been removed by the author.
ReplyDeleteதொடர்ச்சி .....
ReplyDeleteஒருவன் நல்லவனா கெட்டவனா என தீர்ப்பிட தயாராய்யிருக்கும் சமூகம் அவனுடைய காரண காரியங்களை சூழலை பார்க்க தவறுக்கின்றது..
அப்படி நிதானித்து பொறுமையோடும் அன்போடும் பார்க்கக்கூடிய சமூகமாக இருக்கும்பட்சத்தில் பலருமே முகமுடி அணியவேண்டிய அவசியமேற்படாது என்பதே நிதர்சனம்..
நாம் அணிந்துக் கொண்டிருக்கும் முகமூடிகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை.
ReplyDelete.....பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் பதிவு.
உண்மை தான் பாஸ்..நாம முகமூடி அணிந்து தான் இருக்கிறோம்..நல்ல முயற்சி..
ReplyDeletehttp://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html
நல்ல பதிவு
ReplyDeleteநாம் அனைவருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு முகமூடி தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது
ReplyDeleteஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை..
வீட்டில் இருப்பது போல் அலுவலக்த்தில் இருக்க முடியாது;அங்கிருப்பது போல் நண்பர்கள் கூட்டத்தில் இருக்க முடியாது!எனவே முகமூடிகள் தவிர்க்க முடியாதவை!முகமூடிக்குப் பின் இருக்கும் உண்மையான முகம் நல்லதாக இருக்க வேண்டும்!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன்னை சொல்லலியே இந்த பதிவில்?
ReplyDeleteமனதை கேட்கும் கேள்விகள்
ReplyDeleteமுகமூடி அணியாதவர்களுக்கு சமூக நடன அரங்கத்தில் வாய்ப்புகள் இல்லை தோழரே...!! நம் ஆதங்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.கழட்டி எறிந்த மறுகணமே சமூகம் நம்மை ஏளனமாக பார்க்கும். ஆடை இல்லாதவர் மத்தியில் ஆடை கட்டியவன் முட்டாள் என்பது போல. அதற்கு தயார் எனில் முகமூடியை கழற்றலாம்.. நீங்கள் தயாரா தோழரே..!!?
ReplyDeleteகவிதைக்குப் பொய் அழகு:)உடலின் தோலே முகமூடிதான்.அதையெல்லாம் கழட்டினா நல்லாவா இருக்கும்.இயல்பாய் இருக்கும் முகமூடி அவசியமான ஒன்றே.ஆனால் அதற்கும் மேல் முகப்பூச்சு பூசிகிட்டி ஏமாற்று,சித்துவேலை,கொள்ளைக்கார முகங்கள விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
ReplyDeleteமனிதன் இன்னும் மிருகம்தான். தான் மிருகத்தனத்தை மறைக்க அவனுக்கு இந்த சமூகத்தில் பல்வேறு முகமூடிகள் தேவைபடுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாவிட்டால் யாரையுமே மனிதராக பார்க்க இயலாது. முகமூடி அவசியமே
ReplyDeleteநல்ல கருத்துக்கள்.
@தமிழ் ஈட்டி!
ReplyDeleteவணக்கம் நண்பரே...
தாஙகள் சுட்டிக் காட்டிய பிழைகளை சரிசெய்து விட்டேன்...
அடுத்த முறை.. என்று ஆரம்பிப்பது சரியில்லைதான்..
இன்றைய பதிவு கொஞ்சம் வேலைபலு காரணமாக சரியாக கவணிக்க தவறிவிட்டேன்..
மேலும் தமிழை பிழையில்லாமல் தரமுடியவில்லையே என்ற குற்ற உணர்வும் என்னை அதிகம் வேதனையடையச் செய்கிறது..
இனி பதிவில் அவசரத்தன்னையை பின்பற்ற மாட்டேன்
மற்றும்..
நான் ஒரு வரலாற்று ஆசிரியர்..
இதைகாரணம் காட்டி என் தவற்றை நியாயப்படுத்த விரும்பவில்லை..
தொடர்ந்து வாருங்கள்..
சிந்தித்த விதம் அருமை. நிறைய முடிவில்லா கேள்விகளை எழுப்புகிறது உங்களின் பதிவு..
ReplyDelete//நான் ஒரு வரலாற்று ஆசிரியர்..//
ReplyDeleteஎனினும் இன்றைய நிலைக்கேற்ப சிந்திப்பதால் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்..
கண்டிப்பாக நாம் முகமூடி அணிந்து கொண்டு தான் இருக்கிறோம்.... நம் சுயம் நாமே அறியாமல் பிறருக்காய் ஒப்பனை இட்ட முகமூடி தரித்து இயங்கி கொண்டு இருக்கிறோம்... சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை பகிர்வு..அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவார்த்தைகள் உண்மையான உண்மை.
ReplyDeleteமனச்சாட்சியோடு இல்லை என்று யாராவது ஒருவர் சொல்வார்களா பாருங்கள் சௌந்தர் !
/////
ReplyDeleteஉலகம் ஒரு நாடக மேடைதான், ஆனால் அந்த நாடகத்தனத்தில் இருந்து இந்த உலகம் விடுபட மறுப்பது உண்மைதான்.. அதற்காக நாம் வாழ்க்கை முழுவதும் அப்படியே கிடந்து விடுவதுதான் கொடுமை.../////
உண்மையான வரிகள்..
உண்மையா நெஞசை நெகிழ வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான கவிதையும் அதற்கான விளக்கமும், இதை வைத்து ஒரு படம் வந்த ஞாபகம் உள்ளது, நாசர் நடித்த படம்!
ReplyDeleteநல்ல பதிவு!
ReplyDeleteஇறைவன் போட்டு அனுப்பிய முகமூடிகள் இல்லாமல் மனிதன் வேறு ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு முகமூடி அணிந்து கொண்டு திரிகிறான்.
ம் இதே போன்றா ஒரு பதிவு ட்ராஃப்டில் தூங்குகிறது!
ReplyDeleteபூங்கொத்து!
//நாம் யாவரும் நம்முடைய
ReplyDeleteமுகங்களில் இல்லை...//
சரியாக சொன்னீர்கள்....
//அவை கழற்றப்பட்டு விட்டால்
ReplyDeleteயாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது..//
இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்....
//பிரேமானந்தாவின் முகமூடியும், நித்தியானந்தாவின் முகமூடிகள் கழட்டப்பட்டது அவரது மகுடங்கள் மண்ணிற்கு வந்தது.//
ReplyDeleteகரெக்ட்டு மக்கா....
//அப்படி முகமூடிகள் இழந்தப்பின் தன்னுடைய மகுடங்களை என்னச் செய்வீர்கள்//
ReplyDeleteசரியான அலசல்....
முதல்ல வரலாற்று ஆசிரியர் என்கிற முகமூடிய கழட்டுங்க......:))))))
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கருத்தைச் சொன்னமைக்கு நன்றி
////////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
ஓ.. உலகே எண்ணிப்பாருங்கள் இந்த கவிதை நம்மைப்பார்த்து கை கொட்டி சிரிக்கிறது.. நாமெல்லாம் வேடிக்கைப்பார்பதை விட பெரிதாக வேறென்ன சொல்லி விட முடியும்..//
நச்சென்ற நாலு வரிகள்
////
நன்றி நண்பரே..
////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
முகமூடி குறித்த ஒரு சரியான பதிவு.
///
நன்றி உதயம்..
//
ReplyDeleteதமிழ் 007 said... [Reply to comment]
அப்துல் ரகுமான் கவிதைகள் (உங்க கவிதையும் தாங்க) எனக்கு பிடிக்கும்.
கவிதையும் விளக்கமும் மிக அருமை.
கவிதையின் வலிமையே அதன் விளக்கத்தில் தான் உள்ளது.
நீங்கள் இந்த கவிதைக்கு வலிமை சேர்த்து விட்டீர்கள்.
///
நன்றி தமிழ்..
/
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
கவிஞரே உண்மையின் நிழல் எழுத்துக்களாக....................அருமை !
///
நன்றி விக்கி
/////////
ReplyDeleteஆயிஷா said... [Reply to comment]
கவிதையும் விளக்கமும் மிக அருமை.
////
நன்றி ஆயிஷா..
@பயணமும் எண்ணங்களும்
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி..
பயணமும் எண்ணங்களும் said... [Reply to comment]
ReplyDeleteதொடர்ச்சி .....
ஒருவன் நல்லவனா கெட்டவனா என தீர்ப்பிட தயாராய்யிருக்கும் சமூகம் அவனுடைய காரண காரியங்களை சூழலை பார்க்க தவறுக்கின்றது..
அப்படி நிதானித்து பொறுமையோடும் அன்போடும் பார்க்கக்கூடிய சமூகமாக இருக்கும்பட்சத்தில் பலருமே முகமுடி அணியவேண்டிய அவசியமேற்படாது என்பதே நிதர்சனம்..
தங்கள் கருத்துக்கு நன்றி..!
////
ReplyDeleteChitra said... [Reply to comment]
நாம் அணிந்துக் கொண்டிருக்கும் முகமூடிகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை.
.....பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் பதிவு.
//////
நன்றி..
///////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
உண்மை தான் பாஸ்..நாம முகமூடி அணிந்து தான் இருக்கிறோம்..நல்ல முயற்சி..
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html
////
நன்றி..
/////
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
நல்ல பதிவு
/////
அவ்வளவுதானா..
////////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
நாம் அனைவருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு முகமூடி தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை..
////////
தங்கள் வருகைக்கு நன்றி..
////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
வீட்டில் இருப்பது போல் அலுவலக்த்தில் இருக்க முடியாது;அங்கிருப்பது போல் நண்பர்கள் கூட்டத்தில் இருக்க முடியாது!எனவே முகமூடிகள் தவிர்க்க முடியாதவை!முகமூடிக்குப் பின் இருக்கும் உண்மையான முகம் நல்லதாக இருக்க வேண்டும்!
//////
தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..
//
ReplyDeleteமுகமூடி said... [Reply to comment]
என்னை சொல்லலியே இந்த பதிவில்?
//
எல்லோருக்கும் தான் இந்த பதிவு..
/////
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
மனதை கேட்கும் கேள்விகள்
/////
அவ்வளவு தானா..
//////
ReplyDeleteதேகா said... [Reply to comment]
முகமூடி அணியாதவர்களுக்கு சமூக நடன அரங்கத்தில் வாய்ப்புகள் இல்லை தோழரே...!! நம் ஆதங்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.கழட்டி எறிந்த மறுகணமே சமூகம் நம்மை ஏளனமாக பார்க்கும். ஆடை இல்லாதவர் மத்தியில் ஆடை கட்டியவன் முட்டாள் என்பது போல. அதற்கு தயார் எனில் முகமூடியை கழற்றலாம்.. நீங்கள் தயாரா தோழரே..!!?
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
////
ReplyDeleteராஜ நடராஜன் said... [Reply to comment]
கவிதைக்குப் பொய் அழகு:)உடலின் தோலே முகமூடிதான்.அதையெல்லாம் கழட்டினா நல்லாவா இருக்கும்.இயல்பாய் இருக்கும் முகமூடி அவசியமான ஒன்றே.ஆனால் அதற்கும் மேல் முகப்பூச்சு பூசிகிட்டி ஏமாற்று,சித்துவேலை,கொள்ளைக்கார முகங்கள விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
//////
தங்கள் வருகைக்கு நன்றி..
///////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
மனிதன் இன்னும் மிருகம்தான். தான் மிருகத்தனத்தை மறைக்க அவனுக்கு இந்த சமூகத்தில் பல்வேறு முகமூடிகள் தேவைபடுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாவிட்டால் யாரையுமே மனிதராக பார்க்க இயலாது. முகமூடி அவசியமே
நல்ல கருத்துக்கள்.
/////
நன்றி.ஃ..
//
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
சிந்தித்த விதம் அருமை. நிறைய முடிவில்லா கேள்விகளை எழுப்புகிறது உங்களின் பதிவு..
//////
பாரத்... பாரதி... said... [Reply to comment]
//நான் ஒரு வரலாற்று ஆசிரியர்..//
எனினும் இன்றைய நிலைக்கேற்ப சிந்திப்பதால் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்..
///////
நன்றி பாரதி..
////////
ReplyDeleteரேவா said... [Reply to comment]
கண்டிப்பாக நாம் முகமூடி அணிந்து கொண்டு தான் இருக்கிறோம்.... நம் சுயம் நாமே அறியாமல் பிறருக்காய் ஒப்பனை இட்ட முகமூடி தரித்து இயங்கி கொண்டு இருக்கிறோம்... சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை பகிர்வு..அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
/////
நன்றி ரேவா..
ஹேமா said... [Reply to comment]
ReplyDeleteவார்த்தைகள் உண்மையான உண்மை.
மனச்சாட்சியோடு இல்லை என்று யாராவது ஒருவர் சொல்வார்களா பாருங்கள் சௌந்தர் !ஃஃ
நனறி..
/////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
/////
உலகம் ஒரு நாடக மேடைதான், ஆனால் அந்த நாடகத்தனத்தில் இருந்து இந்த உலகம் விடுபட மறுப்பது உண்மைதான்.. அதற்காக நாம் வாழ்க்கை முழுவதும் அப்படியே கிடந்து விடுவதுதான் கொடுமை.../////
உண்மையான வரிகள்..
//////
நன்றி பாட்டு ரசிகன்..
/////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
அருமையான கவிதையும் அதற்கான விளக்கமும், இதை வைத்து ஒரு படம் வந்த ஞாபகம் உள்ளது, நாசர் நடித்த படம்!
/////
என்ன அதோடு முடிச்சிட்டிங்க..
/////
ReplyDeleteஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]
நல்ல பதிவு!
இறைவன் போட்டு அனுப்பிய முகமூடிகள் இல்லாமல் மனிதன் வேறு ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு முகமூடி அணிந்து கொண்டு திரிகிறான்.
//////
நன்றி தலைவா..
//
ReplyDeleteஅன்புடன் அருணா said... [Reply to comment]
ம் இதே போன்றா ஒரு பதிவு ட்ராஃப்டில் தூங்குகிறது!
பூங்கொத்து!
/
புரிய வில்லை.. நன்றி..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//அவை கழற்றப்பட்டு விட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது..//
இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்....
///////
தங்களின் அனைத்து பின்னுட்டத்திற்கும் நன்றி..
முக மூடிகள் கண்டிப்பாக அவிழ்க்ப்பட வேண்டும்..
ReplyDeleteகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் கணினிபக்கமே வரமுடியவில்லை. இன்று கணிணி தொட்டவுடன் நான் வாசித்தது உங்களின் முகமுடியைதான் . நாம் எல்லோரும் விருப்புகள், ஆசைகள், வெறுப்புகள் , எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தும் நிறைந்த சாதாரண மனிதர்கள் தானே. இடம் , பொருள் , ஏவல் அறிந்து அவற்றிற்கேற்ப நடக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இதில் இடத்திற்கும், மனிதர்களுக்கும் தகுந்தபடி முகமுடி அணியவில்லைஎனில் நீங்களும் நானும் ஒரு கேலிப்பொருளாக இந்த சமுதாயத்தால் பார்கப்படுவோம் என்பதே உண்மை. இதில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நமக்கு நாமே நேர்மையாக யாருக்கும் கெடுதல், அநியாயம் செய்யாமல் முகமூடியின் பின் மறைந்துகொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.
ReplyDelete////////
ReplyDeletebharath said... [Reply to comment]
முக மூடிகள் கண்டிப்பாக அவிழ்க்ப்பட வேண்டும்..
///////
நன்றி..
//////
ReplyDeleteKADAMBAVANA KUYIL said... [Reply to comment]
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் கணினிபக்கமே வரமுடியவில்லை. இன்று கணிணி தொட்டவுடன் நான் வாசித்தது உங்களின் முகமுடியைதான் . நாம் எல்லோரும் விருப்புகள், ஆசைகள், வெறுப்புகள் , எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தும் நிறைந்த சாதாரண மனிதர்கள் தானே. இடம் , பொருள் , ஏவல் அறிந்து அவற்றிற்கேற்ப நடக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இதில் இடத்திற்கும், மனிதர்களுக்கும் தகுந்தபடி முகமுடி அணியவில்லைஎனில் நீங்களும் நானும் ஒரு கேலிப்பொருளாக இந்த சமுதாயத்தால் பார்கப்படுவோம் என்பதே உண்மை. இதில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நமக்கு நாமே நேர்மையாக யாருக்கும் கெடுதல், அநியாயம் செய்யாமல் முகமூடியின் பின் மறைந்துகொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.
/////
நன்றி..
அன்பின் சௌந்தர் - உண்மை உண்மை - நாம் ஒருவர் கூட நம் முகமூடியைக் கழட்டத் தயாராய் இல்லை = அவ்வளவுதான் - நட்புடன் சீனா
ReplyDeleteசிந்தித்த விதம் அருமை.
ReplyDelete