கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 January, 2013

உண்மையில் ரஜினியா இப்படி சொன்னது...! நம்பமுடியவில்லை...!


புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது.

கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.


சைதாப்பேட்டையில் சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து ரசிகர்களை நேற்று சந்தித்து புகை பழக்கத்தை விட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறினர். ரஜினியிடம் ரசிகர்கள் கூறும்போது, தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள் என்றனர்.


இதற்கு ரஜினி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் மேலும் நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர்.
 
 

உண்மையில் கொண்டாட வேண்டிய செய்திதான் இது. இன்னும் இருக்கும் அனைத்து பிரபலங்களும் சமூதாயத்தில் சில தீய பழக்கங்களை மக்களிடம் இருந்து அறவே ஒழிக்க முன்வரவேண்டும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள். இவரே மரணத்தின் தருவாய்வரை சென்று வந்தவர். இவருடைய அறிவுரை என்பது அனுபவத்தினால் வந்தது. 


கோடிகோடியாய் பணம்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியே இந்தபழக்கத்தை விட்டுவிட்டார் என்றால் சாமானியர்களுக்கு இந்த பழக்கம் எதற்கு...

புகையில்லா இந்தியா செய்வோம்...!

15 comments:

 1. பிரபலங்கள் இப்படி முன்னுதாரணமானால் விரைவில் தமிழகம் திருந்தும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 2. ரஜினி இதை முன்பே சொல்லிருக்க வேண்டும்

  ReplyDelete
 3. நல்ல நடவடிக்கை

  ReplyDelete
 4. அவர் புகைப்பதை 100% விட்டுவிட்டதாக சொல்லவில்லை. நான் மாட்டிக் கொண்டேன், உடலைக் கெடுத்துக் கொண்டேன், நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று மட்டும் தான் சொன்னார். மீண்டும் அவர் பிறந்த நாள் வீடியோவைப் பாருங்கள் புரியும்.

  ReplyDelete
 5. நல்ல விஷயம் பாராட்டத்தான் வேண்டும்

  ReplyDelete
 6. ரஜினியோட வாய்ஸ் இனி எதுக்குமே எடுபடாது சகோ

  ReplyDelete

 7. Semma comedy ponga......
  "உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். "


  but nalla iruntha sari...

  ReplyDelete
 8. அன்பின் சௌந்தர் - நல்ல செயல்கள் - யார் கூறிச் செய்தால் என்ன ? ரஜினி கூறி பல இரசிகர்கள் கெட்ட பழக்கத்தினைக் கை விட்டார்கள் எனில் பாராட்டுக்குரிய் செயல் தான் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. நல்லவிடயம் பாராட்டுக்குறியது

  ReplyDelete
 10. அம்மா அப்பா மனைவி நண்பர்கள் சொல்லியும் கேட்காதவர்கள் ரஜினி கூறியதால் பல இரசிகர்கள் கெட்ட பழக்கத்தினைக் கை விட்டார்கள் எனில் இவர்களின் "புத்தியை" எண்ணி வியந்தாலும்(ஹீ.ஹீ ) பாராட்டுக்குரிய செயல் தான் .

  ReplyDelete
 11. இப்படியும் நாட்டில் நல்ல லூசுங்க இருக்குது.. அதனால்தான் ரஜினி வாய்ஸ் தமிழ் மக்களுக்கு தேவைபடுதோ என்னவோ

  ReplyDelete
 12. நன்று. மிகவும் அருமையான தகவலை கூறியிருக்கிறீர்கள்.
  ஒருசிலராவது இதனை கடைபிடித்தாலே போதும். பெரிய விஷயம்.

  ReplyDelete
 13. நல்ல முயற்சி.

  ReplyDelete
 14. Rajini Kanth is Always The Great.............

  ReplyDelete
 15. தாஸ், ராஜி, அவர்கள் உண்மைகள் சொன்னது சரி...ரஜினியும் சிகரெட்டை விட மாட்டார்; அவர் ரசிகர்களும் photo opportunity - க்காக சிகரெட்டை விட்டேன் என்பார்கள்!

  குடியை விடுவது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக எளிது...ஆனால்,

  சிகரெட்டை விடுவது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கடினம். அதனால், சிகரெட்டை தொடவே தொடாதீர்கள்...எக்காரணத்தைக் கொண்டும் தொடவே தொடாதீர்கள்.

  நான் சிகரெட் குடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்; தொட்டால், நீங்கள் காலி, நாயர் பிடித்த புலிவால் தான்...

  அதுவும், நான் சிகரெட் குடிக்க ஆரம்பித்ததே...மூன்றாவது வருடம் மருத்துவம் படிக்கும்போது...

  சிகரெட் மதத்தை விட அதிக போதை தரும்....இந்த கருமத்தை விட நான் பட்ட கஷ்டம் என் எதிரி கூட படக்கூடாது...

  Say NO to tobacco!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...