கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 March, 2012

கோச்சடையான் -க்கு போட்டியாக, பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை...எதிர்பார்ப்பில் பதிவுலகம்..!


தமிழ் திரைவுலகமும், தமிழ் பதிவுலகமும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பவர்  ஸ்டாரின் ஆனந்த தொல்லை திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. (இதற்காக மிகவும் வருத்தப்படுபவர்கள் சிபி செந்திலும், பன்னிக்குட்டி ராமசாமியும் தான்) பதிவுலகில் பலபேர் எப்படியாவது பவர்ஸ்டார் படத்துக்கு திரைவிமர்சனம் எழுதி மிகப்பெரிய ஹிட் எடுத்துவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இப்படம் ஏன் இந்த தாமதம் என்று தனிப்பிரிவு புலனாய்வு அமைப்பை சார்ந்த சிலரை விசாரிக்க வைத்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பவர் ஸ்டாரின் முந்தையப்படமான த கிரேட் லத்திகா தமிழக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை செய்தது. அறிமுக நாயகன் நடித்து 2000 நாட்கள் (எலேய்.. அது 200 நாள்லே...) சரிங்க 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. அந்த சாதனையை தற்போதைய ஆனந்த தொல்லை படம்மூலம் முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பவர் ஸ்டார் பொறுத்திருப்பதாக தெரிகிறது.


தீபாவளி, பொங்கல், இன்னும் பல வெட்டா பீஸ் வெள்ளிக்கிழமைகள் போனப்பின்னும் படம் மட்டும் ஏன் வரவில்லை என்று சி.பி.சிஐடி போலீஸார் மிக தீவிரமான விவாசனையை முடிக்கி விட்டிருந்தார்களாம். (இதை ஏன் போலீஸ் விசாரனை செய்தார்கள் என்று தங்களுக்கு குழப்பமாக இருக்கலாம், பின்னர் திடீர்ன்னு படம் ரிலீஸ் ஆச்சன்னா பாதுகாப்பு பணியை எப்படி மேற்கொள்வது என்ற பயம் அவர்களுக்கு).


காவல்துறையினர், பவர்ஸ்டாரின் அகில உலக ரசிகர் மன்றத் தலைவரும், மிகப்பிரபல பதிவருமான ............ (பேரை நீங்களே போட்டுக்கங்க) அவரை அணுகி ஏன் இந்த தாமதம் என்று கேட்டதற்கு கடந்த நான்கு மாதங்களாக எங்கள் பவர் ஸ்டார் படமான ஆனந்த தொல்லை படத்துக்கு போட்டியாக எந்த ஒரு தகுதியான  படங்களும் வரவில்லை.  என்று கூறி திடுக்கிட வைக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என சாதாரண ஹீரோக்களின் படங்கள் மட்டுமே வந்துக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் படத்தை திரையிட்டு அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்த எங்கள் தலைவர் விரும்பவில்லை. அதனால்தான் எங்கள் படம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். (எவ்வளவு நல்ல உள்ளம் பாருங்க நம்ப பவர் ஸ்டாருக்கு).


ஆகையால் பவர் ஸ்டாருடன் போட்டி போட தகுதியான படம் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் மட்டும் தான் எனவேதான் கோச்சடையான் ரிலீஸ் ஆகும் தீபாவளி அன்று ஆனந்த தொல்லை படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


ஆகையால் பவர் ஸ்டார் அவர்கள், பதிவுலகிற்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். தயவு கூர்ந்து படம் வரும்வரை காத்திருங்கள் படம் விரைவாக வரவேண்டும் என்று யாரும் ஆர்பாட்டம், கலவரம் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடகூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஆகையால் கோச்சடையானுடன் வெளிவரும் ஆனந்ததொல்லை படத்தை அனைவரும் ரசித்து கோச்சடையான் படத்தை விட அதிக நாட்கள் ஓட வைத்து நமது பவர் ஸ்டாரின் புகழை உலகமெங்கும் பரப்புவோம்.


டிஸ்கி : எப்படி என்னோட ஆனந்த தொல்லை.

41 comments:

  1. ஆஹா ஆரம்பிச்சிடாங்கய்யா...

    ReplyDelete
  2. ஆனந்த தொல்லையா? அப்படின்னா..?

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த தொல்லை ப்பற்றி தெரியாதா...

      நம்ம பவர் ஸ்டார் படங்க...

      Delete
  3. ஏன்...ஏன்...இந்த கொலை வெறி....

    ReplyDelete
  4. நாசமாபோச்சு போங்க......

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வற்றீங்க...

      ரஜினி படத்தை அடுத்த ஆண்டு வெளியிடுங்க...


      எங்க தலைவரோட போட்டி வேண்டாம்

      Delete
  5. ஆனாலும் பவர் ஸ்டாரை பாராடனும்ய்யா ஒவ்வொரு படத்திலும் சூப்பர் ஃபிகர்களை கொண்டு வாராரு...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு ஒரு பதிவு போட்டுடுவோம்...

      Delete
  6. எனக்கும் ஒரு டிக்கட் புக் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. கவலைப்படாதீங்க அக்கா...
      உங்களுக்கு டிவிடியே அனுப்பி வைக்கிறேன்

      Delete
  7. என்னங்க சொல்றிங்க எங்க தலைவர் இந்த படத்தை அகிலமெங்கும் வெளியிட வேண்டும் என்று எங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானமே நிறைவேற்றி இருக்குறோம் .. (நாங்க மட்டும் கஷ்டபட்டா எப்புடி ..)

    ReplyDelete
    Replies
    1. அகில உலகமும் பவர்ஸ்டாரின் புகழ் ஓங்க என் வாழ்த்துக்கள்...

      Delete
  8. வேணாம் .., வலிக்குது ..., அழுதுருவேன் .., ஆமாம் சொல்லிப்புட்டேன் ...!

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருந்தாலும் நாங்க விடமாட்டோம்...

      Delete
  9. அண்ட சராசரங்கள் அனைத்தும் நித்தம் நித்தம் போற்றிப் போற்றி புகழும் பவர்ஸ்டார் வர்கள், தம் அடுத்த படத்தை வெளியிடாமலே அதை 1000 நாள்களுக்கும் மேல் ஓடவைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதை இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

    இவண்,
    பவர்ஸ்டார் இணைய பாசறை
    கூகிள் ப்ளஸ் வட்டம்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து புகழும் பவர் ஸ்டாருக்கே...

      வாங்க தலைவரே...

      Delete
  10. பவர்ஸ்டார் வாழ்க!

    ReplyDelete
  11. கோடிட்ட இடத்தை பில்கிளின்டன் என்று நிரப்பிக்கொள்ளலாமா? இல்லை அர்னால்டை போடலாமா என்று மன்றத்தில் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிறம் ஒரு முடிவுக்கு வாங்க...

      Delete
  12. ஒரு ரஜினி ரசிகர் அப்படிங்கற முறையில் சொல்கிறேன், கொச்சடையான் படத்தை இன்னும் கொஞ்ச நாள் கழித்து வெளியிடலாம். ஏனென்றால், ரஜினி படம் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பவர் ஸ்டார் மீது அவ்வளவு பயம் இருக்கட்டும்...

      Delete
  13. vaalthukal sounder...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  14. பவர் ஸ்டார் ரசிகர் மன்றத்தலைவர் சௌந்தர் வாழ்க!

    ReplyDelete
  15. சூப்பர்vs பவர்!கொண்டாட்டம்தான்!!

    ReplyDelete
  16. எது எப்படியோ, சுல்தான் தி வாரியார் என்ற டப்பா படத்தை தொடர முடியாமால், சினிமா பைத்தியங்களை ஏமாற்ற இந்த - கார்பொரேட் வியாபாரிகள் ரஜினியை வைத்து இன்னும் கொள்ளையடிக்க முயற்ச்சி செய்து - அந்த டப்பா படத்தையே "கோச்சாண்டி" ...இல்லை கோச்சடயான் என்ற பெயரில் ஏமாற்ற வருகின்றனர்..இந்த படமும் இன்னொரு பாபா , இன்னொரு குசேலந்தான்..எழுதி வைத்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. முடிவு... மக்கள் கையில்...

      திரைக்கு வரட்டும் முடிவு தெரிந்து விடும்

      Delete
  17. தொல்லையே வேண்டாம் என்கிறோம் இது என்ன ஆனந்த தொல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த தொல்லை செய்யுறதுதாங்க நம்ம வேலை...

      Delete
  18. பவர் ஸ்டாரின் வருகைக்காக காத்திருக்கிறோம்....ஹி ஹி...

    ReplyDelete
  19. எந்த வருசத்து தீபாவளி ?

    ReplyDelete
  20. என் ப்ளாக் கில் பவர் ஸ்டார் ரசிகர்மன்றம் தொடங்கி ப்ளாக்கை பிரபலப்படுத்தாலாம்னு இருக்கேன். ஹெல்ப் பண்ணுங்க பாஸ்.

    ReplyDelete
  21. Y dis கொலை வெறி...

    ReplyDelete
  22. தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
    நாங்கள் இல்லையேல் அவசரப்பட்டுஹெலிகேப்டர்
    மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம்
    இது போன்ற அதி முக்கிய தகவல்களை
    தாமதிக்காமல் கொடுத்து தமிழகத்தில்
    சட்டம் ஒழுங்கு கெடாமல் காப்பாற்றவும்
    ரசித்துப் படித்த பதிவு

    ReplyDelete
  23. நானும் நம்பி முழுசா வாசிச்சேன் சௌந்தர் !

    என்னாச்சு என் பக்கத்தில உங்களை ரொம்ப
    நாளாக் காணோமே !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...