கடந்த நாட்கள் திரும்புவதில்லை
முடிந்த நிமிடங்கள் முளைப்பதில்லை
தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு...
எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
பசுமையோடு மாறாமலிருக்கிறது அந்த நாட்கள...
எத்தனை மண்போட்டு மூடினாலும்
முளைத்துவிடும் விதைப்போல் - அவை
காலவோட்டத்தையும் மீறி என்னை பரவசப்படுத்துகிறது..
இழந்து விட்ட சில அதிசயங்கள்
மறைந்துவிட்ட சில ஆச்சரியங்கள்
தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு...!
அவைகள் என்னவென்று பட்டியலிடுகிறேன்
கொஞ்சம் அமைதியாகத்தான்
படித்துக்கொள்ளுங்கள்..!
தற்போது கயிற்றுகட்டிலை வாசலில்போட்டு
தென்றலில் ஆடும் தென்னை கீற்றுவழியே
அண்டத்தின் அதிசயத்தை ரசித்துக்கொண்டே உறங்குகிறேன்...!
எழிப்பி விட யாரும் தேவையில்லை
விடியப்போவதை கர்ஜனையோடு சொல்லியது
வீட்டுக்கூரையில் அமர்ந்துக்கொண்டு சேவல்..!
உள்ளாடைகளில் மணல் புகுந்து இம்சிக்க
உச்சிமுதல் பாதம் வரை புத்துணர்வுகிட்ட
ஆனந்தத்தில் மூழ்கினேன் ஆற்றுக்குளியலில்...!
இதுவரை இல்லாத சுவை இன்று இருந்தது
உப்பும் புளியும் சேர்த்து அம்மியில் அரைத்த
செலவே இல்லாத புளிமிளகாய் துவையல்..!
பச்சைமிளகாய் பெரிய வெங்காயத்துடன்
காலை சிற்றுண்டிஅமிர்தமாய் இனித்தது
கொஞ்சமாய் மோர் கலந்த பழைய கஞ்சி..!
குழவியோடு அம்மியும் அதனுடன் ஆட்டுக்கல்லும்
ஓலை கைவிசிறியும் கூடவே மரநாற்காலியும்
தன்இருப்பை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது...!
நீங்காத நினைவுகளாய் மறந்தோடிப்போனவை
தற்போது திரும்ப வந்தது எப்படி...?
எப்போதும் மின்தடை வந்தது அதனால் அப்படி..!
என் பழைய வாழ்க்கையை திரும்ப தந்த
தமிழக முதல்வருக்கும்...!
மின்சார வாரியத்திற்க்கும்...!
நான்... நன்றி சொல்லிக் கொள்கிறேன்...!
(அப்பா... நானும் மின்தடை குறித்த பதிவு போட்டுவிட்டேன்.)
(என் அலுவலக நேரமான காலை 9 - 6 மணிவரையிலான நேரத்தில் பகல் 12 முதல் 3 மணிவரை மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தில் நான் எதைச்செய்ய..? )
நக்கலும் நையாண்டியும் வேதனையும் உள்ளது.
ReplyDeleteவாங்க விச்சு சார்..!
Deleteஎனது கருத்துடன் உங்கள் கருத்தும் ஒத்து போனதில் மகிழ்ச்சி
ReplyDeleteதமிழகம் முழுவதும் அனைவரும் இந்த கருத்தில் தான் நண்பரே இருக்கிறார்கள்...
Deleteஅதில் என்ன நாம் இருவரும் பதிவுகளாக போட்டிருக்கிறேம் அவ்வளவு தான்...
நன்றி
//உள்ளாடைகளில் மணல் புகுந்து இம்சிக்க
ReplyDeleteஉச்சிமுதல் பாதம் வரை புத்துணர்வுகிட்ட
ஆனந்தத்தில் மூழ்கினேன் ஆற்றுக்குளியலில்...!
// நல்ல இம்சை இது உணர்வு பூர்வ இம்சை
உண்மைதான் இது ஆற்றில் குளிப்பவர்கள் மட்டுமே உணர்வார்கள்...
Deleteஇதுதான் நம் நடைமுறை வாழ்வாய் இருக்கிறது.கயிற்றுக்கட்டிலும் ஆகாசம் பார்க்க தென்னை கீற்றும் இல்லாத ஒண்டுக்குடித்தனக்காரர்கள் எங்கே போவார்கள்?ஆற்றுக்குளியல் அற்ற ஊர்களில்ம் அம்மியை இழுத்து அரைக்க முடியாத தாய் மார்களினது நிலையும்,இன்னும் இன்னுமாய் கேட்டாலும் காணக்கிடைக்காத பழைய பொருட்களின் இருப்பும்,வாழ்வும் எங்கே என தெரியாத நிலையில்,,,,,,,,,,, நன்றிகள்?????யாகவே/
ReplyDeleteரொம்ம அடிபட்டீரு போல.....
ReplyDeleteசொம்பு பலமாதான் நசுங்கி இருக்கு போல.....?
ReplyDeleteஎல்லாரும் அடிபட்டு வேதனைப்பட்டது போல நீங்களும் பட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நாமே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteஉறைப்பில் கொட்டிவிடீர்கள்
சிறு சோகத்தை
நிலை மாறும் என்று நன்புவோம் கவிஞரே
Support to open koodankulam
ReplyDeleteதற்போது கயிற்றுகட்டிலை வாசலில்போட்டு
ReplyDeleteதென்றலில் ஆடும் தென்னை கீற்றுவழியே
அண்டத்தின் அதிசயத்தை ரசித்துக்கொண்டே உறங்குகிறேன்...! //
இன்பமாய்தான் இருக்கும் .
என் அலுவலக நேரமான காலை 9 - 6 மணிவரையிலான நேரத்தில் பகல் 12 முதல் 3 மணிவரை மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தில் நான் எதைச்செய்ய..? )
ReplyDelete>>>
ஒரு போஸ்ட் போட்டு எல்லா பிளாக்கும் போய் மொய் வைக்கனும் சகோ
என் நன்றியை சேர்த்துக்கோங்க சகோ
ReplyDelete//////////பச்சைமிளகாய் பெரிய வெங்காயத்துடன்
ReplyDeleteகாலை சிற்றுண்டிஅமிர்தமாய் இனித்தது
கொஞ்சமாய் மோர் கலந்த பழைய கஞ்சி..!//////////
சூப்பரு ..!
அதெப்படி எல்லா விஷயத்தையும் கவிதை வடிவிலேயே சொல்றீங்க.. நைஸ்....
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
இது, வேதனையா! சோதனையா! அல்லது
ReplyDeleteஅரசின் சாதனையா?
நையாண்டி பதிவு நன்றே!
சா இராமாநுசம்
நினைவுகளை மீட்டும் அழகிய பதிவு... எனது நன்றிகளையும் சேர்த்துவிடுங்கள் முதல்வரிடம்...
ReplyDeleteAwesome bro...அழகு...
ReplyDeleteவணக்கம்! கயிற்றுக் கட்டிலில், ஆற்றுக் குளியலில், பழைய கஞ்சியில், பழைய வாழ்க்கையே புதுமையாய் அமைய ரசித்துப் பிறந்த கவிதை! நானும் ரசித்துப் படித்தேன்!
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அருமையான கவிதை - அனைத்து இன்பங்களையும் அனுபவித்து மகிழ அருமையான சந்தர்ப்பம். மகிழ்வுடன் வாழ்வினைக் கழிக்கலாம். நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நடபுடன் சீனா
ReplyDeleteகவிதை சூப்பர். என் ப்ளாக்குக்கும் வந்து கமெண்ட் போட்டதுக்கு நன்றி தலைவா!
ReplyDeleteஎள்ளல் சுவையோடு கூடிய கவிதை. ஆனால் உண்மையும் கூட.
ReplyDeleteதமஓ 8.
ReplyDeleteநகச்சுவைதான் என்றாலும் ஆதங்கமும் இன்றைய நிலைமையும் கவிதையில் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்விக்டனில் பிரசுரிக்கப் பட்டதற்கு பாராட்டுகள் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDelete