கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 July, 2016

கபாலி சினிமா விமர்சனம் / kabali movie review


தமிழ் சினிமாவில... அதிரடி பாடல் காட்சியில அறிமுகமாகி... ஆரம்பத்தில வில்லனை பகைத்துக்கொண்டு... ஹீரோயினை காதல் பண்ணிகிட்டு.. நாலு பாட்டு... பாம்பு காமெடி... தனித்தனி ஸ்டைல்...  அம்மா சென்டிமென்டு... பலசில பஞ்ச் டயலாக் பேசி.. இறுதிகாட்சியில் அத்தனைபேரையும் பறக்கவிட்டு துவம்சம் செய்து, சுபம் போடுவாங்கல... அந்தமாதிரி ரஜினி படம்ன்னு நினைச்சையாடா... 

இது கபாலிடா... இது வேற மாதிரி ரஞ்சித் படம்டா...

 

மலேசியாவில் வேலை செய்துவரும் தமிழர்களுக்கு சரியான சம்பளமும், மரியாதையும் தருவதில்லை... மற்றமொழி பேசும் மக்களுக்கும் கிடைக்கும் மரியாதை போல், தமிழ் பேசும் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை... இப்படியாய் அல்லல்படும் மக்களுக்காக போராட களத்தில் குதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை.

தமிழகத்தில் இருந்து ராதிகா ஆப்தே-வை காதல் திருமணம் செய்துக்கொண்டு வேலைத்தேடி மலேசியாவுக்கு இடம் பெயர்கிறார்...  அங்கு வேலை செய்யும் இடத்தில்  பாதிக்கப்படும் தமிழர்களுக்காக துணிந்து குரல்கொடுக்கிறார் கபாலிஸ்வரன் என்கிற கபாலி.... 


எங்கெல்லாம் தமிழர்களுக்கு எதிராக, யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை எதிர்த்து நின்று கேட்கிறார்.. கடைசியில் மலேசிய தமிழ் மக்கள் மனதில் ஒரு தலைவனாக உறுவெடுத்து நியாயத்துக்காக துப்பாக்கி எடுக்கும் ஒரு கேங் லீடராகவே மாறுகிறார் ரஜினி..!மலேசியாவில் பல்வேறு சட்டவிரோதமான வேலைகளை செய்துவருகிறார் டோனி லீ.. இவருடன் கிஷோர் உள்ளிட்டோர்... போதை, கடத்தல், விபச்சாரம் என பெரிய கேங் ஸ்டாராக இருக்கிறார்கள்.... தமிழர்களை தவறான வழியில் பயன்படுத்தும் இவர்களை எதிர்த்து கேட்கிறார் கபாலி...

கபாலியை வளரவிட்டால் நமக்குதான் ஆபத்து என்று கபாலியை காலிசெய்ய முடிவெடுத்து ஒரு திருவி‌ழாவில் சுற்றி வளைக்கிறார்கள்.... இதில் கர்ப்பமான மனைவியை தன் கண்முன்னே சுடுகிறார்கள்... கோவத்தில் ரஜினியும் சில ரவுடிகளை கொன்று குவிக்கிறார் இந்த நேரத்தில் மலேசியா போலீஸ் அவரை கைது செய்து 25 ஆண்டுகள் காவலில் வைத்துவிடுகிறது.... இது பிளாஸ்பேக் கதை... 


25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார் கபாலி... மனைவி.. தன் குழந்தை இல்லாத ஏக்கம் அவரை வாட்டுகிறது... மேலும் இதற்கு காரணமானவர்கள் தீயசெயல்களில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறார்... தன் பங்குக்கு போதையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு இல்லம் நடத்துகிறார்...


தன் கண்முன்னே சுடப்பட்டாலும், தன் மனைவியும், குழந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவரின் உள்ளுணர்வு சொல்கிறது... அதன்படியே தன் குடும்பத்தை தேடும் பணியில் இறங்குகிறார்...

இப்படியாய்... தன் குடும்பத்தை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்.. அங்கு வாழும் தமிழ்களுக்கு எதிராக அராஜகம் செய்யும் சமூக விரோதிகளை எப்படி பழிவாங்குகிறார்... என்பதை கொஞ்சம் இ‌ழுத்து சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

படத்தைப்பற்றி...!

தமிழர்களுக்காக தட்டிக்கேட்கும் தைரியமான இளைஞன், சிறைச்சாலை சென்று 25 வருடங்களை கழித்து வயதான தோற்றத்தில் பெரிய கேங் லீடர்... மனைவி, மகளுக்காக உருகும் தந்தை என தான் ஏற்றுள்ள கதாப்பாத்திரத்தை திறம்பட நடித்திருக்கிறார் ரஜினி... நடிப்பில் ரஜினியின் புதிய பரிமாணம் இது... (கலகலப்பு இல்லாமல்)


ரஜினியும் தன்னுடைய பாணியை மாற்று கதைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்... தன்னுடைய முகபாவனை, சோகம், பொறுமை, ஆக்ரோஷம் என ரஜினியின் நடிப்பு பாரட்டக்குறியதாக இருக்கறிது...

(சில காட்சிகளிலும் அவருக்கு வயதாகிவிட்டது என்று தெளிவாக காட்டுகிறது... இந்த வயசிலும் இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறார் என்று என்னும் போது அது பெரிதாக தெரியவில்லை...!  இன்னும் அந்த ஈர்ப்பு அப்படியே இருக்கிறது..) 
‌தொலைந்த குடும்பத்தை தேடும் ரஜினி.. தன் மகள் கிடைக்கும் போது பாசத்தால் அனைவரையும் நெகிழவைக்கிறார்... தன் மனைவியை கண்டுபிடிக்கும்போது அனைவரையும் அழவும் வைக்கிறார்...

கதாநாயகி ராதிகா ஆப்தே... பெரிய அளவுக்கு காட்சிகள் இல்லை எளிமையான தோற்றம் கவர்கிறார்...


ஒரு வசனத்தை இங்கு சொல்லியே ஆகணும்...

ரஜினி : நீ செத்துட்டேன்னு நினைச்சிட்டேன்...

ராதிகா ஆப்தே : ஆமாம் செத்துதான் போயிருந்தேன்... இப்போ உன்னை பாக்குறவரைக்கும்...
 

ரஜினி மகளாக தன்ஷிகா... அப்பாவுடன் இணைந்து அதிரடி காட்டும் ஆன்ஷன் ரோல் நன்றாகவே வந்திருக்கிறது...

ரஜினியுடன் கேங்கில் இருக்கும் அட்டக்கத்தி தினேஷ் தன் துருதுரு அழகிய நடிப்பால் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார்...

இன்னும் படத்தில் கலையரசன், கிஷோர், நாசர் என அனைவரும் அளவோடு வந்துப்போகிறார்கள்..
பாடல்கள் எல்லாம் தனித்தின்றி படத்தோடே கலந்து வருகிறது... நெருப்புடா பாடல் அதிக ஆரவாரப்படுத்துகிறது...! சந்தோஷ் சுப்பிரமணியத்தின் பின்னணி இசை பரவாயில்லை...

ரவுடி கேங் லீடராக டோனி லீ என்ற கதாபாத்திரத்தில் இருக்கும் வில்லன் மிகவும் கொடுரத்தனம்... உடனிருக்கும் கிஷோர் உள்ளிட்ட வில்லன்கள் பட்டாளம் தன் பங்குக்கு வேலை செய்திருக்கிறது...!

ரஜினி படம் என்றால் இளசுகள் முதல்  பெரிசுகள் வரை மிகவும் ஆரவாரத்துடன் தான் பார்த்து பழகியிருக்கிறது. ஆட்டம் பாட்டம், நகைச்சுவை.. அதிரடி என அத்தனையும் இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்... அவைகள் இந்த படத்தில் மிஸ்ஸிங் அது இந்த படத்துக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்...

அட்டக்கத்தி, ‌மெட்ராஸ் என இரண்டு படங்களுக்கு பிறகு மூன்றாவது படமே ரஜினி படம் என்ற பெரிய அதிஷ்டம் ரஞ்சித்தை வந்தடைந்திருக்கிறது. இதை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மெட்ராஸ் படம்போல் தன்னுடைய பாணி படம் என்று இயக்குனர் கதையை கையாண்டிருக்கிறார். அது ரஜினிக்கு ஒரளவுதான் பொறுந்தியிருக்கிறது.


ரஜினி தன் குடும்பத்தை தேடுகின்ற காட்சிகளின் நீளத்தை குறைத்துக்கொண்டு இன்னும் அதிரடிகளையும்.. இன்னும் வசனங்களையும் கையாண்டிருந்தால் படம் இன்னும் சக்கைப்போடு போட்டிருக்கும்...
படம் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகும் வரை பல்வேறு எதிர்பார்ப்புகள் இந்த படத்துக்கு இருந்துவந்தது. நெருப்புடா... என ஒரு உசுப்புகிற பாடல் வரிகள் படம் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ என நினைக்க வைத்துவிட்டது... ஆனால் செண்டிமென்ட் கலவை அதிகமாகிவிடவே கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது... மற்றப்படி ரசிக்கும் படமே கபாலி...


மகிழ்ச்சி...!

5 comments:

 1. Kabali is fantastic movie. Watch more!

  ReplyDelete
 2. balanced comments.
  well done.

  subbu thatha.

  ReplyDelete
 3. கபாலி கொடுக்கப்பட்ட ஓவரான விளம்பரங்களுக்கு நிகரான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை....
  ரஜினி நடிக்கவில்லை என்றால் தாதா படம் டாக்குமெண்டரி ஆகியிருக்கும்...
  ரஜினி மட்டுமே படத்தை தூக்கி நிறுத்தும் ஆயுதம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை... ரஜினியின் நடிப்பு அசாத்தியம்....

   Delete
 4. Kabali is fantastic movie. Who needs ur stupid renark. Go and watch more to understand the concept. U guys needs only useless masaala!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...