வியர்வைகளால்
முத்துக்கள் செய்பவனே....
நீ விதைத்த
வியார்வைகள் தான்...
கல்லாய் கிடந்த
இந்த பூமிப்பந்து
கர்ப்பம் தரித்து
உயிர்பிடித்திருக்கிறது...!
நீ...
உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை
மிளிர செய்தவன்...
நீ...
அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன்...
நீ
உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது
சமுதாயம்...
நீ
உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது
மறுமலர்ச்சி....
உயிர்பிடித்திருக்கிறது...!
நீ...
உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை
மிளிர செய்தவன்...
நீ...
அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன்...
நீ
உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது
சமுதாயம்...
நீ
உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது
மறுமலர்ச்சி....
உன் வியர்வை
நாற்றம்...
அது உன் நாட்டை
மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...
உன் கரங்களில் ஏற்படும்
வடுக்கள்...
அது தேசத்தை
அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....
நீ
ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு
பட்டாடை ஏது...
நீ பாறைகளை
உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின்
அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!
தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க
ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்...
என் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று தான்
தாய்
ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை
வியர்வையாக்குகிறாய்...
உழைப்புக்கு
ஓய்வு கொடுத்து விட்டு...
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...
என் இனிய
வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு
வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....
நண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....
உலக தமி்ழர்கள் அனைவருக்கும்
என் மே தின நல்வாழ்த்துக்கள்...!
மே தின கவிதை
தொழிலாளர் தின வாழ்த்துக்கவிதை அருமை
ReplyDeleteதங்களுக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
மே தின நல்வாழ்த்துக்கள்
சிறப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள்
you are a poet.
ReplyDeletenice
கவிதை அருமை அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete////
ReplyDeleteRamani said... [Reply to comment]
தொழிலாளர் தின வாழ்த்துக்கவிதை அருமை
தங்களுக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
மே தின நல்வாழ்த்துக்கள்
/////
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி..!
///
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
சிறப்பு
வாழ்த்துக்கள்
////
தங்கள் வருகைக்கு நன்றி..
///
ReplyDeleteஆரூர் முனா செந்திலு said... [Reply to comment]
you are a poet.
nice
/////
நன்றி சார்..
மேதினக்கவிதைக்கு வாழ்த்து
ReplyDeleteரைட்டு........வாழ்த்துக்கள்!
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள் ...
ReplyDelete//உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு
ReplyDeleteவிடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...///
அருமை அருமை....சத்தியம்....
//என் இனிய வியர்வையாளனே..!
ReplyDeleteஉன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....///
அடடடடடா அட்டகாசமா இருக்கு....
உங்களுக்கும் என் மே'தின வாழ்த்துகள் மக்கா....
ReplyDelete///
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
கவிதை அருமை அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
////
நன்றி சசி...
This comment has been removed by the author.
ReplyDeleteகவிதை அருமை சௌந்தர்..தங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதை அருமை-உழைப்பாளர்கள் தினத்திற்கு ஏற்றது
ReplyDeleteஉழைப்பாளர் தினத்திறகு உயர்ந்த கவிதை...
ReplyDeleteகூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது
ReplyDeleteஅந்த பெண் பெயர் வலைத்தளம்
http://avanidamnaan.blogspot.com/
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுடன் நானும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteவிவசாயியின் பெருமைகளை, உழைப்பாளிகள் அனைவரையும் ஒன்றாக வாழ்த்தும் உணர்வுகள் கவிதையில் நிறைந்துள்ளன.
ReplyDeleteதாயோடு ஒப்பிட்டது மிகப்பிடித்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிலை மதிப்பில்லா முத்துக்கள்!
ReplyDeleteஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
கவிதை அருமை அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteNICE KAVITHAI.MAY THINA VALTHUKKAL.
ReplyDeleteஉழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்... உங்களோடு சேர்ந்து வாழ்த்துவது சந்தோஷமாய் இருக்கின்றது...
ReplyDeleteநல்ல கவிதை திரு சௌந்தர்,
ReplyDeleteமே தின நல்வாழ்த்துக்கள்.
ஃஃஃஃஃநீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
ReplyDeleteஇந்த உலகத்தை மிளிர செய்தவன்...ஃஃஃஃ
அருமை மிகவும் அழுத்தமான வரிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
அருமை! தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉழைப்பின் அருமைக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை படிப்பதற்க்கு அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பலர் யோசிக்க மறந்த ஒரு விஷயத்தை உணர்த்தியிருக்கிறீர்கள் நன்றி
ReplyDeleteஉங்கள் மகேஷ்.
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
ReplyDelete