கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 October, 2013

மருமகன்களை மாமியார்கள் கவனிப்பது ஏன் தெரியுமா....?



(கவிதை)

 நேற்று
கடற்கரையோரம்
நடந்து சென்றாய‌ாமே...
இனி வேண்டாம்
இந்த விபரீதம்...
 நேற்று முழுவதும்
இன்று பௌர்ணமியோ என்று
அலைகள் குழம்பிக்கொண்டிருந்தது...

கடல் தேவதை எப்படி 
கடலுக்கு வெளியில் என்று
கலங்கிக் கொண்டிருந்தது
கடல்...! 

**********************************

(நகைச்சுவை)

ஒரு மருமகன்,

எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும், அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்.

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…

”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்

 ***************************************


(சிந்தனை)

ஒருவனுக்கு வெற்றி மயக்கம் ஏற ஏற தடுமாறி முட்டாள்தனமான தைரியம் தோன்றி எல்லாம் நாமே என்ற எண்ணம் பிறந்து தடுமாறி காரியம் செய்யத் தொடங்கியதும்...

ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து அந்த ஆவணக்காரனைக் கூனிக் குறுகச் செய்கிறது...

அதனால் ஆணவம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

-கண்ணதாசன்...


**************************************


(தெரிந்துக் கொள்ளுங்கள் - இன்று)

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.

******************************************************8


பார்க்க சிரிக்க...



10 comments:

  1. ரசிக்க வைக்கும் கவிதை... சிந்தனைக்கும் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையான கவிதையுடன்
    பயனுள்ள தகவல்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாப்பிள்ளை விருந்து பற்றி புது தகவல்

    ReplyDelete
  4. மாமியார் தன் சமையலைப் போன்றே ... 'நீங்களும் ருசியாய் சமைத்து , மகளை கவனிச்சுக்கணும் 'னு மருமகனிடம் கூறவில்லையா சௌந்தர் ஜி ?
    த,ம,4

    ReplyDelete
  5. வாவ் கவிதை அருமையோ அருமை! புல்லரித்து விட்டது..
    சிந்தனை மற்றும் தகவலும் அருமை, நன்றி!

    ReplyDelete
  6. கவிதையும் சிந்தனையும் அருமை....

    ReplyDelete
  7. சுவையான பகிர்வுகள்! நன்றி!

    ReplyDelete
  8. கவிதையும் சிந்தனையும் அருமை

    ReplyDelete
  9. கவிஞரின் சிந்தனை அருமை...
    கவிதை கலக்கல்...
    மாமியார் கதை அட போட வைத்தது...
    அனைத்தும் அருமை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...