கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 January, 2019

இதுதாங்க ரஜினியின் பேட்ட படத்தின் கதை



தலைவர் ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா இருக்கார். ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்ட் அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் வார்டன். பசங்க எப்படி பேஸ்புக் போஸ்ட் போடனும் எப்படி டிக்டோக் பாக்கனும்னு எல்லாத்துலயும் அவ்ளோ ஸ்ட்ரிக்டா இருப்பார். 

அவரை மீறி ஹாஸ்டல்ல ஒரு ஈ காக்கா நுழைஞ்சிட முடியாது. ஒரு நாள் ரொம்ப கம்பீரமா பெருமையா ஸ்டூடண்ட்ஸ் படை சூழ வராண்டாவுல நடந்துட்டு வந்துட்டு இருக்கார். அப்போ ஒருத்தன் தலை முழுக்க ஹெவியா பங்க் வெச்சிட்டு வராண்டாவுல நின்னு தம்மடிச்சிட்டு நிக்கிறான். 

தலைவர் பக்கத்துல வந்து கோவமா ஒரு லுக்கு விடுறார். அப்பவும் அவன் கண்டுக்காம தம்மடிச்சிட்டு நிக்கிறான். தலைவருக்கு செம கோவம் வந்து டேய் இங்க வாடானு கூப்ட்டு இந்த உன் பீசுனு கைல காச எடுத்து கொடுத்து இப்பவே நீ காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துல இருந்தும் டிஸ்மிஸ் போடா வெளியனு அடிச்சு விரட்டுறார். 


அதைப் பாத்து மத்த ஸ்டூடண்ட்ஸ்லாம் திகைச்சு போய் நிக்கிறாங்க. எல்லாரையும் பாத்து தலைவர் பாருங்க டிசிப்லின் இல்லைனா இது தான் கதினு வார்னிங் குடுக்கிறார். 

அதைக்கேட்ட ஒரு ஸ்டூடண்ட் சார் அவன் நம்ம ஸ்டூடண்ட் இல்லை கூரியர் கொடுக்க வந்தவன் சார்னு சொல்றான். தலைவருக்கு உடனே கடுமையான கோவம் வருது. அந்த கூரியர் பாயை தேடிக்கண்டு பிடித்து அடிக்கிறார். 

அவன் பணத்தை கொடுக்க முடியாது என்று சவால் விட்டு 20 அடியாட்களை அனுப்பி வைக்கிறான். அனவைரையும் வெளுத்து அனுப்புகிறார். யார் இவன் என்று ரவுடிகள் அனைவரும் குழம்புகின்றனர். கடைசியில் அது ஒரு ஹாஸ்டல் வார்டன் என்று கண்டுபுடிக்கின்றனர். 

இதற்கிடையில் ஹாஸ்டல் பணத்தை யாருக்கோ கொடுத்து விட்டார் என்று ஹாஸ்டலில் இருந்து தலைவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அதை அறிந்த சிம்ரனுக்கு தலைவர் மேல் காதல் வருகிறது. 



தலைவருக்கும் சிம்ரனுடன் டூயட் பாட 20 வருடங்களுக்குப் பின்னர் வாய்ப்பு வந்திருப்பதை அறிந்து தவறவிடாமல் டூயட்டை முடிக்கிறார். வில்லன்கள் ஒருவழியாக பெரிய பவர்புல் வில்லனை மும்பையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து கூட்டி வருகிறார்கள். 

தலைவரும் அவர்களை கண்டுபிடிக்க ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றுகிறார். சைடு வில்லனுக்கு ஸ்வீட் பிடிக்கும் என்று கண்டுபிடித்து ஸ்வீட் சாப்பிடலாம் என்று கூட்டிக்கொண்டு போய் வில்லன்கள் கூட்டத்தை மொத்தமாக பிடிக்கிறார். 

அனைவரையும் அடித்து உதைத்து அந்த கூரியர் பாயை கண்டுபிடித்து அவனிடம் கொடுத்த பணத்தை மீட்டு மீண்டும் வார்டன் பதவியை அடைவதே மீதிக்கதை.

இந்த பேட்ட கதையின் ஆசிரியர் #பன்னிக்குட்டி ராமசாமி தானுங்கே...

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...