கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

09 January, 2019

எந்த டாக்டராவது இப்படி செய்வாங்களா..?



வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் நண்பர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு  நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் எலியை ஒழிக்க என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த நண்பரிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி அப்படி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".

★★★★★★★★★★★★★★★★



ஒரு டாக்டர் தன் பேஷண்ட் கிட்டே, 
உங்களுக்கு மறுபடி ஆபரேஷன் செய்யணும் அப்படின்னார்.


ஏன் டாக்டர்?


மறந்தாப்ல என் க்ளவுஸை உங்க வயித்தில வைத்து தைச்சிட்டேன், அதை எடுக்க தான் மறுபடி ஆபரேஷன், அப்படின்னாரு டாக்டர்.


போங்க டாக்டர், போய் 20 ரூபாய் கொடுத்து புது க்ளவுஸ்
வாங்கிக்கோங்க-ன்னாரு பேஷண்ட்....

டாக்டர், ஙே...ஙே!

இவ்வளவு திறமையான டாக்டர் எங்க இருக்காரு பாருங்க
நமக்கு வேண்டப்படங்களை கொஞ்சம் அனுப்பி வச்சி பார்ப்போம்...

★★★★★★★★★★★★★★★★


என்ன டாக்டர், 
இந்த நடு ராத்திரியில கிளினிக்கைத் திறந்து வச்சுகிட்டு இருக்கீங்க?

தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் 
எவனாவது வருவான்னுதான்.

பகலில் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து வெறுத்துப்போன யரோ ஒரு டாக்டர்தான் இப்படி யோசிக்கிறாரு போல... 

★★★★★★★★★★★★★★★★


மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா
இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?

கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தற,
பேசாம உன் தங்கச்சியை வர சொல்லு!

மனைவி : ....

இதுக்கூட செம ஐடியாவா இருக்கே... ஆனா இப்படி கேட்டப்பிறகு அவரோ நிலைமையை நினைச்சாதான் பாவமா இருக்கு... அனேகா இப்ப அவர் மருத்துவமனையில இருந்தாலும் இருக்கலாம்... யாரு கண்டா... ஹா..ஹா....

★★★★★★★★★★★★★★★★

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

04 January, 2019

இதுதாங்க ரஜினியின் பேட்ட படத்தின் கதை



தலைவர் ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா இருக்கார். ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்ட் அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் வார்டன். பசங்க எப்படி பேஸ்புக் போஸ்ட் போடனும் எப்படி டிக்டோக் பாக்கனும்னு எல்லாத்துலயும் அவ்ளோ ஸ்ட்ரிக்டா இருப்பார். 

அவரை மீறி ஹாஸ்டல்ல ஒரு ஈ காக்கா நுழைஞ்சிட முடியாது. ஒரு நாள் ரொம்ப கம்பீரமா பெருமையா ஸ்டூடண்ட்ஸ் படை சூழ வராண்டாவுல நடந்துட்டு வந்துட்டு இருக்கார். அப்போ ஒருத்தன் தலை முழுக்க ஹெவியா பங்க் வெச்சிட்டு வராண்டாவுல நின்னு தம்மடிச்சிட்டு நிக்கிறான். 

தலைவர் பக்கத்துல வந்து கோவமா ஒரு லுக்கு விடுறார். அப்பவும் அவன் கண்டுக்காம தம்மடிச்சிட்டு நிக்கிறான். தலைவருக்கு செம கோவம் வந்து டேய் இங்க வாடானு கூப்ட்டு இந்த உன் பீசுனு கைல காச எடுத்து கொடுத்து இப்பவே நீ காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துல இருந்தும் டிஸ்மிஸ் போடா வெளியனு அடிச்சு விரட்டுறார். 


அதைப் பாத்து மத்த ஸ்டூடண்ட்ஸ்லாம் திகைச்சு போய் நிக்கிறாங்க. எல்லாரையும் பாத்து தலைவர் பாருங்க டிசிப்லின் இல்லைனா இது தான் கதினு வார்னிங் குடுக்கிறார். 

அதைக்கேட்ட ஒரு ஸ்டூடண்ட் சார் அவன் நம்ம ஸ்டூடண்ட் இல்லை கூரியர் கொடுக்க வந்தவன் சார்னு சொல்றான். தலைவருக்கு உடனே கடுமையான கோவம் வருது. அந்த கூரியர் பாயை தேடிக்கண்டு பிடித்து அடிக்கிறார். 

அவன் பணத்தை கொடுக்க முடியாது என்று சவால் விட்டு 20 அடியாட்களை அனுப்பி வைக்கிறான். அனவைரையும் வெளுத்து அனுப்புகிறார். யார் இவன் என்று ரவுடிகள் அனைவரும் குழம்புகின்றனர். கடைசியில் அது ஒரு ஹாஸ்டல் வார்டன் என்று கண்டுபுடிக்கின்றனர். 

இதற்கிடையில் ஹாஸ்டல் பணத்தை யாருக்கோ கொடுத்து விட்டார் என்று ஹாஸ்டலில் இருந்து தலைவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அதை அறிந்த சிம்ரனுக்கு தலைவர் மேல் காதல் வருகிறது. 



தலைவருக்கும் சிம்ரனுடன் டூயட் பாட 20 வருடங்களுக்குப் பின்னர் வாய்ப்பு வந்திருப்பதை அறிந்து தவறவிடாமல் டூயட்டை முடிக்கிறார். வில்லன்கள் ஒருவழியாக பெரிய பவர்புல் வில்லனை மும்பையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து கூட்டி வருகிறார்கள். 

தலைவரும் அவர்களை கண்டுபிடிக்க ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றுகிறார். சைடு வில்லனுக்கு ஸ்வீட் பிடிக்கும் என்று கண்டுபிடித்து ஸ்வீட் சாப்பிடலாம் என்று கூட்டிக்கொண்டு போய் வில்லன்கள் கூட்டத்தை மொத்தமாக பிடிக்கிறார். 

அனைவரையும் அடித்து உதைத்து அந்த கூரியர் பாயை கண்டுபிடித்து அவனிடம் கொடுத்த பணத்தை மீட்டு மீண்டும் வார்டன் பதவியை அடைவதே மீதிக்கதை.

இந்த பேட்ட கதையின் ஆசிரியர் #பன்னிக்குட்டி ராமசாமி தானுங்கே...

21 August, 2018

ராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..?





ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??


ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? 
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??

********************************



சிரித்தபின் சிந்திக்க வைக்கிற கேள்வி...


பெருசு கேட்டாரே, ஒரு கேள்வி!


விஞ்ஞானிகள் ரொம்ப நாளா ஆய்வு பண்ணிகிட்டு இருந்த ஒரு ஆய்வு கூடத்தில் வயசான வாட்ச்மேன் ஒருவர் இருந்துருக்காரு. அவுங்க இவரை கண்டுக்க கூட மாட்டாங்க. ஒரு நாள் விஞ்ஞானிகள் ரொம்ப ஜாலியா ஆடி பாடிக்கிட்டு இருக்கவும் "என்ன விசயம்"ன்னு கேட்டிருக்கார்.


அவங்களும் "எங்க ஆய்வு முடிய போகுது அதான்"னு சொல்ல இவரு "அப்படி என்ன ஆய்வு பண்ணுனீங்க"ன்னு கேட்டிருக்கார். "எந்த பொருளையும் கரைக்கிற திரவத்தை கண்டுபுடிக்கிற ஆய்வு" ன்னு சொல்லவும். உடனே இவரு ஒரே கேள்விதான் கேட்டாராம். அந்த விஞ்ஞானிகள் அந்த ஆய்வையே கைவிட்டுடாங்களாம்.


அது என்னான்னா?"


அத கண்டுபுடிச்சி எதுல சார் ஊத்தி வைப்பிங்க"ன்னு கேட்டாராம்.


********************************



நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..


நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?


நண்பர் 1 : .....


********************************


நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.


டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...


நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...


டாக்டர் : ..........

********************************



நபர் 1 : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?


நபர் 2 : அதெல்லாம் இல்ல... சீரியல் பார்க்கும் நேரத்துல பொண்ணு பார்க்க வந்துருக்கீங்கல்ல... அதான்..


நபர் 1 : ........

********************************


யாருகிட்ட...

சமிபத்தில் ரசித்த நகைச்சுவை துணுக்குகள்....

18 August, 2018

எங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...


 சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை

எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க...

சரி 5000 செலவாகுங்க பரவாயில்லையா..

இவ்வளவா...! எனக்கு கல்யான செலவே 500 தாங்க ஆச்சி...!

எப்பவுமே சுதந்திரம் சும்மா கிடைக்காது தம்பி...


********************************



மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

********************************



ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா... அப்புறம் ?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

சோமு : அடப்பாவி...!!!!!!

********************************


கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை 
ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு ?

மற்றவர் : ஏன்?

கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் 
மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான்..

********************************


ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி 
இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர் : ஏன்?

ஒருவர் : என் மனைவியை திட்ட 
வேற வழி தெரியலை டாக்டர்...

டாக்டர் : !!!!!!!!!!!!

********************************

பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என்பது இதுதானோ..!!!
பார்த்து சூதானா இரும்மா...!

17 August, 2018

சீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...



சமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்கு போகும்போது அந்த 60 ஆயிரம் யானைகளையும் ஒரே கப்பலில் கொண்டுப்போவார்கள் என்றும்.... யானைகள் மட்டுமன்றி அதனுடன் பாகன்கள் போர் கருவிகள் யானைக்கான உணவுகள் மற்ற படை வீரர்கள் என அத்தனையும் கப்பலில் செல்லும்... கப்பல்கள் அப்படியிருந்தது என்றும்  இந்த யானைப்படையை பார்த்தே எதிரிபடை சரண்அடைந்துவிடும் என்று பேசியிருந்தார்...

என்ன கப்பலில் 60 ஆயிரம் யானைகளை ஏற்றினார்களா என்று முகநூலில் பாகுபாடின்றி வறுத்தெடுத்துகொண்டு இருக்கிறார்கள்....

அதுபோக இதற்கு முன்னர் மறைந்த கலைஞர் பற்றி இரங்கல் தெரிவிக்கும் போது நான் கலைஞர் சட்டைப்பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கம் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்...

இதற்கும் பல்வேரு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது மட்டுமின்றி என்ன கலைஞர் பேனா எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கமா என்று மீம்ஸ்க்கள் முகவுநூல் டிவிட்டர் பதிவுகள் வறுத்தெடுத்தன.. 

சீமான் சொல்வது அத்தனையும் கட்டுகதைகளே என்று ஆளாளுக்கு நகைச்சுவை பதிவிட்டு கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்...

சீமான் அவர்கள் பிரபாகரன் சந்திப்பைப்பற்றி அவர் இருக்கும் போது ஏதும் வாய்திறக்காது அவரது மரணத்துக்கு பிறகு... நானும் அவரும் அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்... போர் பயிற்சி... குண்டு விழுந்தது... ஆமைக்கறி சாப்பிட்டோம் என்று வந்ததை சொல்வதை கண்டு சோசியல் மீடியாவில் அவர்குறித்து நகைச்சுவை பதிவுகள் அறங்கேறி வருகிறது....

அவர் எப்பவும் இப்படிதான்.. தலைவர்கள் இருக்கும் போது அவர்கள் பற்றி குறிப்பிடாமல் அவர் இறந்த பிறகு வந்து எனக்கு இப்படி பழக்கம் அப்படி பழக்கம் என்று அளந்துவிடுவார் என்று கற்பனையோடு எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..



தற்போது வாஜ்பாய் இறப்பை ஒடடி சீமான் எப்படி பேட்டிக் கொடுப்பார் என்று முகநூலில் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய பதிவு இது.. (Maram r)

(சீமான் சொல்வது போல்) திடீர்னு ஒருநாள் நடுராத்திரி ஒரு போன் கால்.. அதுவும் இந்தில வருது.. என்ன பேசுறதுன்னே புரியல.. அப்புறம் ஒருத்தர் பிஎம் உங்க கிட்ட பேசனுமாம் பேசுங்கனு சொல்றார்.. எனக்கு இந்த ஏஎம், பிஎம் தான் தெரியும் இது எந்த பிஎம்னு கேக்கிறேன்.. அதுக்குள்ள மே வாஜ்பாயி போல்ரஹாஹூனு கணீர்னு நம்ம வாஜ்பாயி குரல் கேக்குது.. 

நான் அப்படியே திகைச்சுப் போயிட்டேன்.. சீட்டுல இருந்து எந்திரிச்சி என்ன சார் வேணும்னு கேட்டேன்.. அதுக்கு அவரு பாகிஸ்தான் எந்த நேரத்துலயும் போர் தொடுக்குற மாதிரி இருக்கு.. அத எப்படி தடுக்குறதுனு தெரியல ரொம்ப கவலையா இருக்குன்னாரு.

 நான் உடனே இதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க. அணுகுண்டு இருக்கானு கேட்டேன்... இருக்குன்னு சொன்னார்.. அத தூக்கி போட்ருங்கன்னு சொல்லிட்டேன்.. அவரு பதறிப்போய் அது ரொம்ப ஆபத்து, அணு ஆயுத போர் வந்துடும்னாரு..


நான் அதுக்கு அட அந்த குண்ட நம்ம ஊரு மேல போடுங்க சார்னு சொன்னேன்.. அத கேட்டு அவரு மிரண்டுட்டாரு.. என்னங்க சொல்றீங்கனு கேட்டார்.. ஆமா நம்மூர்லயே ஆள் இல்லாத இடமா பாத்து போடுங்க.. அது வெடிக்கிறத நாலு பக்கமும் இருந்து போட்டோ புடிச்சி பத்திரிக்கைல போடுங்க அத பாத்துட்டு பாக்கிஸ்தான்காரன் பயந்து ஓடிருவான் பாருங்கன்னு சொன்னேன்.. 

அத கேட்டு அப்படியே அசந்துபோய்ட்டார்.. சீமான் ஜீ.. பகூத் அச்சா ஐடியா ஜீ னு திரும்ப திரும்ப சொல்லி சந்தோசப்பட்டார்.. அடுத்த நாள் காலைல பேப்பர்ல நியூஸ் போடுறான்.. இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததுன்னு... பாருங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்.. சிந்திக்கனும்...

சிரிச்சி வயிறு வலிக்குது...

10 August, 2018

உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறது...



மனைவி தன் கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள். போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள்...


இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள். "இன்னிக்கு காலையில உன் பூனை மாடியிலருந்து விழுந்து செத்துப் போச்சு" என்றான் கணவன். 

அழுது புலம்பிய மனைவி, எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம்.


இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுதுன்னு சொல்லி இருக்கணும்".


நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு"ன்னு சொல்லணும்.


அதுக்கு அடுத்த நாள் "அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் ".


அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு சாகடிச்சிட்டிங்களே?"


"சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?

"மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க...

**************************************



மனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!


கணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத.


மனைவி : ஏன் அப்படி சொல்றீங்க?


கணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு.


மனைவி : ..........

**************************************


கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?


மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?


கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்...!!


**************************************



டாக்டர் : என்னப்பா... நான்

ஆப்ரேஷன் பண்ணனுன்னு ஒத்த கால்ல நிக்கிறெ?


வந்தவர் : வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.....
சாகலான்னு இருக்கேன்.....


தற்கொலை பண்றது கோழைத்தனம்ன்னு தெரியும்...

அதனாலதான் உங்களை தேடிவந்தேன் .

**************************************

21 May, 2018

சாமிக்கு மொட்டை போட்டா தப்பா...?



மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு...
எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க?

கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா
ரெண்டு கோட் போடணும்னு பெயிண்டர்தான் சொன்னார்.

மனைவி : ???????????????

இது மாதிரி கிறுக்குத்தனாமா இருந்தாதான் மனைவிக்கு ரொம்ப பிடிக்குது... மத்தவங்ககிட்ட பேசும்போது அவருக்கு ஒன்னும் தெரியாதுங்க.. அப்படின்னு சொல்றதுல அவங்களுக்கு அப்படி ஒரு பெருமை... 

ஆண்களும் எனக்கு எல்லாம் தெரியும்ன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிக்கிறத விட இது மாதிரி இன்னசென்டா நடந்துகிட்ட குடும்பம் குதுகளமா இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்... 

இங்க பாருங்க நம்ம ராஜி அக்கா இருக்காங்க... மாமாவுக்கும் எல்லாம் தெரிஞ்சாலும் அவருக்கு எதுவும் தெரியாதுன்னு ஓட்டறது தான் அவங்களுக்கு வேலையே.... என்ன நான் சொல்றது...!

**************************************


மகன் : அப்பா படிப்புக்கு முதல் எதிரி டிவி தான்னு நீங்க
அடிக்கடி சொல்வீங்க இல்லையா?

அப்பா : அதுக்கென்ன இப்போ?

மகன் : அந்த எதிரியை கிரிக்கெட் பாலால ஓங்கி
ஒரு தட்டுத்தட்டினேன் டிவி உடைஞ்சுபோச்சு...

அப்பா : ?!!!!!!!!!

இது எல்லாம்  வீட்லையும் நடக்கிறதுதான்.... ஆன என்ன நாம செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு தண்டனை வாக்கிறது ஒரு வகை... இது மாதிரி புத்திசாலிதனமா சமாளிக்கிறது ஒரு வகை... எப்படியிருந்தாலும் அடி கன்பார்ம்தான்...

**************************************



வருண் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும்போது
மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மதன் : பொங்கலில் இருந்த முந்திரியை
எடுத்து திண்ணுட்டேன். அதான்..

வருண் :.........

பாருங்க பக்கி மாட்டுக்கு வச்ச பொங்கல்ல இருந்து எடுத்திருக்கு... பின்ன மாட்டுக்கு கோவம் வராது....

சிலப்பேர் இருக்காங்ப காக்கைக்கு வைக்கிறத எடுத்து சாப்பிடுவாங்க...

**************************************



மன்னர் : மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்...

மகாராணி : இது மரபு இல்லையே?

மன்னர் : உனக்கு சமைச்சுப் போடுறேன்,
துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?

மகாராணி :?????

நாட்டுக்கு வேண்டுமானால் மன்னனாக இருக்கலாம் வீட்டுக்குள் அவர் ஒரு பெண்ணின் கணவர் தானே... கணவர் என்ற ஸ்தானம் வந்தப்பிறகு எப்படியாவது வீட்டு வேலையை வாங்கி விடுவதுதான் பெண்களின் புத்திசாலிதனம்...

கொஞ்சம் ஏமாந்தால் மொத்த வேலைகளையும் ஆண்கள் தலையில் கட்டிவிடும் பெண்கள் ஏராளம்...

முடிந்தவரை வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வேலையில் பங்கெடுத்துக்கொள்வதில் தப்பில்லைதானே..

**************************************



நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான்.. சாமிக்கு மொட்டை போடுறதா
வேண்டிகிட்டேன். அதான்.

நீதிபதி : 😌😌

நாமதாம்பா சரியா செய்யறதில்லை... சாமிக்கு மொட்டை பொடுறதாகத்தானே வேண்டிக்கிறோம்... ஆனா நமக்கு மொட்டை போட்டுக்கிறோம்... இவர்தான் சரியா செஞ்சிருக்கார... அவரை குற்றவாளின்னு சொல்றீங்களே....

**************************************

02 May, 2018

மனைவியுடன் தனியாக செல்லும் ஆண்களே உஷார்...!


"சார், கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?"

"உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா???"

"நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்....!"

"ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"

"சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்.... தாங்க மாட்டீங்க..!"

"பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம், அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!

இப்ப சொல்லு பணம் பெருசா?? அறிவு பெருசா???" :)

******************************


ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.

5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,

அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு

\"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.

லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.

வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.

நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..) மகிழ்ச்சி 😂

இந்த கதையின் நீதி.
ஒரு கண்ணால் இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......

உஷாரய்யா .... உஷாரய்யா....

******************************



( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்...
எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.

அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்.....

******************************


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

******************************


19 April, 2018

நீங்க இப்படி யோசிப்பிங்களா...?













பார்க்க... ரசிக்க...
சிரிக்க... சிந்திக்க...

Related Posts Plugin for WordPress, Blogger...