கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 February, 2015

இப்படியும் நடந்த செல்போன் விபரீதம்....!


“அலைபேசியில் பேசியபடியே
வேகமாய் வாகனம் ஓட்டிய நபர்
விபத்தில் சிக்கி உயிரிழந்தார்“...!

“காதலில் ஏற்பட்ட பிரச்சனையால்
அலைபேசிக் கோபுரம் மீதேறி
பட்டதாரி வாலிபர் தற்கொலை“...!

“மின் இணைப்போடு பேசியபோது
கைப்பேசி வெடித்து சிதறியது
இளம் பெண் பலத்த காயம்“...!

“அலைபேசியில் ஆபாசப்படம் பரவியது
அவமானம் தாங்க முடியமல்
ஒரு குடும்பமே தற்கொலை''...!

“ராங் காலில் ஏற்பட்ட பழக்கம்
கற்பும் பணமும் இழந்த பெண்
வீட்டைவிட்டு விரட்டியடிப்பு''...!

“பரிசு விழுந்ததாக குறுந்தகவல்
 
நூதன முறையில் கொள்ளை
பணத்தை பரிகொடுத்த வியாபாரி“...!

“2ஜி... 3ஜி... ஏலம் விட்டதில்
பல்லாயிரம்கோடி மோசடியாம்
செய்திகேட்ட மக்கள் அதிர்ச்சி''...!

இப்படியாய் வந்த செய்திகளைகேட்டு
 
உச்சிக்கிளையில் அமர்ந்து
 புலம்பிக்கொண்டிருந்தது
நேற்று நாங்கள் ... இன்று நீங்கள்...!

அலைப்பேசி கதிர்வீச்சால்
தன் வம்சத்தையே இழந்த 
சிட்டுக்குருவி ஒன்று...!

பல்லுயிர் வேற்றுமைய‌ை காப்போம்...!

8 comments:

 1. வணக்கம்
  நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சொல்லிய பின் இறுதில் சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம2
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இன்னும் என்னென்ன சீரழிவுகள் நடக்கப் போகிறதோ...?

  ReplyDelete
 3. புன்னகைத்து என்ற வார்த்தை மட்டும் நெருடுகிறது

  ReplyDelete
  Replies
  1. தற்போது கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்...

   கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 4. சிட்டுக்குருவி தொடக்கம்தான்....
  தம +

  ReplyDelete
 5. நானும் படித்தேன்!வேதனைதான்!

  ReplyDelete
 6. வேதனையான கவிதை...
  சிட்டுக்குருவியையே இழந்து விட்டோமே...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...