கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 February, 2015

இப்படி கூடவா ஜோக் சொல்லுவாங்க...!


மாணவர் 1 : பிராட்டிகல் எக்ஸாம்ல .. .. நாலு பரிசோதனை செய்யச் சொன்னாங்க .. ..

 மாணவர் 2 : நீ என்ன சோதனை செஞ்சே ?

 மாணவர் 1 : எனக்கு எதுவும் தெரியலை அதனால சோதனைமேல் சொதனை போதுமடா சாமின்னு எழுதினேன் .. 

******************************* 


எனக்கப்புறம் என்னோட அரசியல் வாரிசு நீதான்னு 
உங்க பையன்கிட்ட நீங்க சொன்னீங்களா..?

ஆமா... சொன்னேன்..!
அரசியல்ல இறங்கி மந்திரியாக் போற எனக்கப் 
படிப்பு எதுக்கு-ன்னு சரியாப் படிக்க மாட்டேங்கிறான...!

******************************* 

அடுத்தவங்க ஆயிரந்தான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணினாலும், நீங்க கொஞ்சம்கூட காதுல வாங்கிக்க மாட்டிங்களாமே...!
உண்மையா .. .. ?

ஆமா .. .. இப்ப நீங்க என்ன சொன்னீங்க 

******************************* 

டாக்டர்: நர்ஸ்!  க்ளினி வாசல்ல என்ன இன்னிக்கு நிறைய பூக்கடைபோட்டுருக்கானுங்க?

நர்ஸ்:  நீங்க இன்னிக்கு நாலு ஆபரேஷன் பண்ணப்போறதா கேள்விப்பட்டாங்களாம் டாக்டர்!
  ******************************* 

நீதிபதி : நீங்கள் குறுக்குவிசாரணை செய்யலாம்..!

வக்கீல் : இந்த ஆள் ஒரு பைத்தியம், மை லார்ட்

நீதிபதி : அப்போ கிறுக்கு விசாரணை பண்ணுங்க

******************************* 

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!"

எப்படி?

"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

******************************* 

"டார்லிங்! உனக்காக, என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தர நான் தயாரா இருக்கிறேன்."

"நீங்க என்ன தர்றது, கல்யாணத்துக்கப்புறம் நானே எடுத்துக்குவேன்"

******************************* 

7 comments:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கு உரையாடல்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அனைத்தும் ஸூப்பர் நண்பரே..
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 3. ஹா... ஹா... ஆமா... நீங்க ஜோக்கா சொன்னீங்க...? ஹா... ஹா...

  ReplyDelete
 4. நீங்க என்ன கேட்குறது..நானே வாக்கு போட்டுட்டேன்..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...